Wednesday 1 April 2020

ஜோதிட பயணம் [பகுதி -3]

ஜோதிட பயணம் பாகம் 3

12 வீடுகளின் தன்மைகள்

முதல் வீடு அல்லது லக்ன பாவம்
இதுவே லக்னம் எனப்படும் ஜாதகருடைய வாழ்க்கை முழுவதையும் நிர்ணயிக்கக் கூடியது இலக்கணமே ஆகும் குணாதிசயங்கள் உடல்நலம் உடல்வலிமை வாய்மை நிறம் ஆகிய அனைத்தையும் அறியவே லக்னமே உதவிசெய்கிறது லக்னத்தின் பயனடைய மற்ற கிரகங்களின் அமைப்பும் அவற்றின் உதவியும் தேவை ஆனால் ஒருவருடைய லக்னத்தை மாத்திரம் கொண்டு பலன்களை கூறி விடக்கூடாது மற்ற கிரகங்களின் தன்மையையும் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்து பிறகே பலன் கூற வேண்டும் மேலும் ஒருவருக்கு லக்னம் பலவீனமாக இருந்த போதிலும் மற்ற கிரகங்கள் சொந்த வீடு அமைந்து நட்பு வலிமையுடன் நல்ல பலனைக் கொடுக்கக் கூடியவராக இருந்து விட்டால் ஜாதகர் ராஜயோகத்தை அடையலாம் அதுபோல லக்னம் நல்ல விதமாக அமைந்து விட்டால் பலனும் மிக மென்மையானதாக இருக்கும் அதனால் லக்னம் மற்ற பாவங்களில் கிரகங்களின் நிலை ஆகிய அனைத்தையும் பார்த்து ஆராய்ந்த பிறகே பலன்களை அறிய வேண்டும்


இரண்டாம் பாவம் அல்லது இரண்டாம் வீடு
இதுவே தன ஸ்தானம் குடும்ப ஸ்தானம் வாக்கு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது இது தனம் கல்வி குடும்பம் ஆகியவற்றைக் குறிப்பதாகவும் ஜாதகத்திற்கு இரண்டாவது வீடு மிக முக்கியமானது இரண்டாவது வீடு கல்வி முதலியவற்றை அறிய உதவுவதோடு பொன் பொருள் உள்நாட்டு வெளிநாட்டு பிரயாணங்கள் கண் சம்பந்தமான விஷயங்கள் ஆகியவற்றை பற்றி அறியவும் உதவுகிறது ஆனால் ஒரு ஜாதகத்திற்கு இரண்டாவது வீடு முக்கியமானதாக கருதப்படுகிறது இது தன ஸ்தானம் என்றும் லட்சுமி ஸ்தானம் என்றும் அல்லது அதிர்ஷ்ட ஸ்தானம் என்றும் கூட கூறலாம்


மூன்றாவது வீடு அல்லது மூன்றாம் பாவம்
இதுவே சகோதர ஸ்தானமாகும் ஜாதகரின் குணாதிசயங்கள் மனவலிமை சிறு பிரயாணம் செய்ய துணிவு ஆயுள் காது சம்பந்தமான நோய்கள் அணிகலன்கள் ஆகியவற்றை அறிய உதவுவதாகும் ஜாதகருடைய இளைய சகோதரர்கள் பற்றி இந்த மூன்றாம் பாவத்தை வைத்து அறியலாம் லக்னத்திற்கு மூன்றாவது வீடு சுத்தமாகவும் நல்ல கிரகத்தை உடையதாகவும் இருந்தால் ஜாதகர் ஒரு குறையுமின்றி நலமாக வாழ்வார் அப்படி இல்லாவிட்டால் பலன்கள் மாறுபடும்

நான்காம் வீடு அல்லது நான்காம் பாவம்
இதுவே மாத்ரு ஸ்தானம் சுகஸ்தானம் ஆகும் இந்த நான்காம் வீடு ஜாதகரின் சொந்த நலன்களுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியதாய் இருக்கும் தாய் சம்பந்தப்பட்ட விஷயங்களை இந்த நான்காம் பாதத்தில் நாம் அறியலாம் ஆக நம் உறவினர் இன்பங்கள் சொத்து பயிர் நிலங்கள் கால்நடைகள் வீடு பூமி அறிவதற்கு ம் கிணறு போர்வெல் நீர்நிலைகள் போன்ற விஷயங்களை நான்காம் வீட்டின் வலிமையையும் அதில் இருக்கின்ற கிரகத்தின் தன்மையையும் பொறுத்தே அமையும்


ஐந்தாம் வீடு அல்லது ஐந்தாம் பாவம்
ஐந்தாம் வீடு பூர்வ புண்ணியஸ்தானம் புத்திரஸ்தானம் ஆகும் இந்த இந்த பாவம் மக்கள் செல்வங்களைப் பற்றியும் அதன் வலிமையையும் இதில் தங்கியிருக்கும் கிரகம் அல்லது இந்த வீட்டின் மீது விழுகின்ற வேறு கிரகங்களின் பார்வை ஆகியவற்றைக் கொண்டு குழந்தைச் செல்வத்தைப் பற்றி அறிய வேண்டும் மேலும் அவருடைய திறமை மதிநுட்பம் தகப்பனார் வழி சொத்து அரசாங்க மூலம் உடல் நலம் ஆகிய அனைத்து நலன்களையும் இந்த பாவத்தின் தன்மைக்கு ஏற்பவே அமையும் இதை புத்தி ஸ்தானம் என்றும் நாம் கூறலாம்

ஆறாம் வீடு அல்லது ஆறாம் பாவம்
இந்த பாவத்தைக் கொண்டு எதிரிகளையும் உடல் நோய் அச்சம் கடன் தொல்லைகள் ஆகியவற்றை அனைத்தையும் அளிக்கக் கூடியது இந்த வீட்டில் ஏதாவது ஒரு நல்ல கிரகம் தங்கினால் அல்லது நல்ல கிரகத்தின் பார்வை ஏற்பட்டாலோ தொல்லைகள் குறைய வாய்ப்பு உண்டு ஆனால் எந்த ஒரு வீட்டையும் கெட்டதாகவோ நல்லதாகவோ குறிப்பிட்டு சொல்லக் கூடாது ஜாதகரின் லக்கினம் மற்றும் கிரகங்களின் அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் அப்படியின்றி ஆறாவது வீடு கெட்டது என்றோ அதில் தங்கியுள்ள கிரகம் கெட்டது என்றோ ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது கெட்ட கிரகங்களும் கூட சில பாவங்கள் காரணமாக ராஜயோகத்தையும் எதிர்பாராத பலன்களையும் கொடுத்துவிடலாம் உதாரணமாக இயற்கையாக கெட்ட வீட்டில் அமைந்துள்ள ஒரு கொடிய ஜாதகரின் ஜாதகப்படி கிரகங்கள் ஜாதகருக்கு கட்டாயம் பலன்கள் மாறுபடும் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பதை மறந்து விடக்கூடாது இந்த ஆறாம் பாவம் என்பது இன்னும் பல விஷயங்கள் இருப்பினும் குறிப்பாக வெற்றி ஸ்தானம் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்


ஏழாம் வீடு அல்லது ஏழாம் பாவம்
இந்த பாவத்தில் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கணவன் அல்லது மனைவியை பற்றிய விஷயங்களை நாம் இதில் தெரிந்து கொள்ளலாம் தாம்பத்திய உறவு எண்ணங்கள் ஆகியவற்றையும் குறிப்பதாகும் திருமணம் வாழ்க்கை துணைவி சௌபாக்கிய வாழ்வு மனைவி மூலம் சொத்து லாட்டரி பந்தயம் சூதாட்டம் முதலியவற்றில் வெற்றி ஆகியவற்றையும் இந்த வீடு இரண்டு நான்கு போன்ற ஏழாம் வீடும் மிகவும் முக்கியமானது ஜாதகரின் வாழ்க்கை மிகவும் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய ஏழாவது வீடு நல்லதாகவும் நல்ல கிரகம் தங்கி இருக்கக் கூடிய தாகவும் அல்லது நல்ல கிரகங்களின் பார்வை பெற்று இருக்க வேண்டும் மிகவும் அவசியமாகும் ஒரு மனிதன் நினைக்கும் எண்ணங்கள் இந்த வீட்டின் அதிபரின் நிலையை பொறுத்தே நிறைவேறும்


எட்டாம் வீடு அல்லது எட்டாம் பாவம்
இந்த பாவத்தைக் கொண்டு ஜாதகரின் ஆயுள் பற்றி தெரிந்து கொள்ளலாம் இந்த எட்டாம் பாவம் நன்கு அமையப் பெற்று இருந்தால் ஜாதகர் ஆரோக்கியமான நீண்ட ஆயுளை பெறுவார் ஆனால் இந்த ஒரு வீட்டின் தன்மையை மாத்திரம் வைத்துக்கொண்டு பலனை அறிய முற்படக்கூடாது ஜாதகரின் வாழ்நாள் நீண்டதாக அமைய ராகு மேஷம் ரிஷபம் கடகம் சிம்மம் அல்லது மகரம் ஆகிய ராசிகளில் தங்கிய இருந்தாலே போதுமானது மற்றும் குரு நல்ல இடத்தில் தான் சொந்த வீட்டிலோ அல்லது கேந்திரங்களில் தங்கினாலும் நீண்ட ஆயுள் கிடைக்கும் மற்ற எல்லா பாவங்களும் கேட்டு இருந்தாலும் சனி செவ்வாய் இருவரும் சொந்த வீட்டிலோ உச்சமாகவோ இருந்தால் ஜாதகர் ஆயுளைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட ஆயுள் நீடிப்பு மிக முக்கியமானவர்கள் அவர்கள் சொந்த இடங்களில் தங்கினாள் நல்ல இடத்தில் அமர்ந்தாலும் கூட ஆயுளைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை ஆயுள் பாவத்தைப் பற்றி பூரணமாக அறிய அனுபவமும் ஆராய்ச்சியும் தேவை ஆனால் ஆயுள் பங்கம் இல்லாதவர்கள் தீர்க்காயுள் உள்ளவர்கள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை

ஒன்பதாம் பாவம் அல்லது ஒன்பதாவது வீடு
இதுவே பித்ரு ஸ்தானம் பாக்கிய ஸ்தானம் இது அதிர்ஷ்டம் தர்மம் கர்மம் ஆகியவற்றைப் பற்றியும் தந்தையின் நலம் பற்றியும் குறிக்கும் பாவமாகும் சொந்தம் சுகம் தந்தையாரின் உடல் நலம் அவருடைய நன்மை தீமைகள் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறைகள் பாசம் ஆகியவற்றையும் இந்த பாவமே நினைக்கிறது ஒன்பதாம் வீடு நல்லதாகவும் நல்ல கிரகங்கள் தங்கள் பெற்றதாகவும் அல்லது அவற்றின் பார்வை பெற்றிருந்தால் ஜாதகர் அவருடைய தகப்பனார் உடல் நலம் உறவுமுறை ஆகிய எதற்கும் கவலைப்பட வேண்டியது இல்லை மேலும் ஒன்பதாவது வீடு நன்கு அமைவதே பொறுத்தே அமையும் ஆனால் மற்ற கிரகங்களின் தன்மையை அறியாமல் ஒன்பதாவது வீட்டை மாத்திரம் வைத்துக்கொண்டு தீர்மானித்து விடக்கூடாது

பத்தாம் வீடு அல்லது பத்தாம் பாவம்
இதுவே கர்ம ஸ்தானம் தொழில் ஸ்தானம் ஆகும் தொழில் வாழ்க்கை நிலை கருமம் ஆகியவற்றிற்கு பத்தாவது வீடு முக்கியமானது பத்தாவது பாவமே அவற்றுக்கு உரியதாகும் பத்தாம் வீட்டில் ஒரு பாவியாவது அமர வேண்டும் என்று கூறுவார்கள் பத்தாவது வீடு காலியாக இல்லாமல் ஏதாவது ஒரு கிரகம் அமர்ந்து இருந்தால் மிகவும் நலமாக இருக்கும் பத்தாம் வீட்டில் குரு அமர்ந்தால் ஜாதகனுக்கு சாப்பாட்டுக்கு பிரச்சனையே இருக்காது அவர் செய்யும் தொழிலும் அவருக்கு ஓரளவு உதவியாக இருக்கும் சூரியன் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்கள் தங்கினார் மிகவும் நல்லது பொதுவாகவே பத்தாம் பாவத்தில் பாம்பாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பழமொழி ஆனால் மற்ற கிரக நிலையை பொருத்தும் நாம் பார்க்க வேண்டும்


பதினொன்றாவது வீடு அல்லது பதினொன்றாம் பாவம்
பதினொன்றாம் பாவம் லாப ஸ்தானம் என்றும் மூத்த சகோதர ஸ்தானம் ஆகும் அழைப்பார்கள் செய்தொழிலில் நன்மை நண்பர்கள் சுற்றத்தார் ஆகியோர் ஆதரவு வாழ்க்கையின் ஆசாபாசங்கள் நிறைவேறுதல் சொத்து சுகம் முதலியவற்றுக்கு இந்த வீட்டையே கொள்ளலாம் ஜாதகர் பெரும்புகழ் இந்த வீடு வெளிநாட்டுப் பயணத்தை இந்த வீட்டை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும் ஒருவர் தூர பிரயானம் செய்வதற்கும் இந்த பதினொன்றாம் இடமே முக்கியமான காரணமாகும் எல்லாவகையான லாப ஸ்தானத்தை இந்த பாவத்தைக் கொண்டு நாம் அறியலாம்


பன்னிரண்டாம் பாவம் அல்லது பன்னிரண்டாம் வீடு
ஸ்தானம் விரைய ஸ்தானம் இந்த வீடு விரையம் பனிரெண்டாவது வீடு பொருள் இழப்பையும் தொல்லைகளையும் மற்றும் உறவினர்களையும் நண்பர்களையும் பகைமை உண்டாகும் பாவம் பகைவர்களை உண்டாக்கும் வீண் வழக்கினால் பொருள் செலவையும் உண்டாக்கும் எல்லா தீமைகளுக்கும் காரணமாக இந்த பாவம் அமையும் அதற்காக இந்த பாவத்தை மட்டும் வைத்துக்கொண்டு நாம் விரயம் என்று சொல்லக்கூடாது மற்ற பாவங்களையும் இந்த 12ஆம் இடத்து அதிபதியும் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகங்களையும் பார்த்து ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்துவிடவேண்டும் மற்ற கிரகங்களின் நிலையையும் தசாபுத்தி களையும் கவனிக்கவேண்டும் நல்ல தசாபுத்தி உடையவர்களுக்கு அதிக தொல்லைகள் இருக்காது


ஜோதிட பயணம் தொடரும்

No comments:

Post a Comment