Wednesday 22 April 2020

ஜோதிட பயணம் (பகுதி -12)

ஜோதிட பயணம் பாகம் 12

 சந்திர பகவான் நின்ற ராசிக்கு கேது பகவான் வரும்போது நன்மையும் தீமையும் கலந்தே நடைபெறும் ஆரம்ப காலத்தில் குடும்பத்தில் வறுமையும் துன்பமும் கவலையும் நிலவும் குடும்பத்தினரின் ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு அல்லது ஏதாவது விபத்துக்கு உள்ளாகி உயிர் தப்புவது தொழிலில் மந்த நிலை நிலவும் கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்காது.. நண்பர்கள் உதவி புரிவார்கள் உறவினர்கள் ஆதரவு கொடுக்க மாட்டார்கள் உறவினர்களுடன் விரோதம் ஏற்படாமல் இருந்தாலே போதும் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் நல்ல ஆதாயம் அதிகாரிகள் உதவி புரிவார் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் உறவினர் நண்பர்கள் ஆதரவு உதவி செய்பவராக இருப்பார்..


கேது பகவான் இரண்டாம் இடத்திற்கு வரும்போது பணத்தட்டுப்பாடு வீண் செலவுகளும் ஏற்படும் குடும்பத்தில் உற்சாகம் இன்மையும் கவலையும் நிலவும் செய் தொழிலில் ஓரளவு ஆதாயம் கிடைக்கும் மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருந்தாலும் அதிக நன்மை ஏற்படாது வெளியூர்களிலும் தொழிலும் மாற்றமும் ஏற்படும் தொழிலில் மாற்றம் ஏற்பட்டால் கட்டாயம் வாழ்க்கையில் முன்னேற்றம் நல்ல ஆதாயம் கிடைக்கும் கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும் புது நண்பர்களை நம்பி மோசம் போக வேண்டும் பழைய நண்பர்கள் உதவியாக இருப்பார்கள் உதவியை எதிர்பார்க்க வேண்டாம் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் அதனால் பல நன்மைகளும் ஏற்படும்..



கேது பகவான் மூன்றாம் இடத்திற்கு வரும்போது நல்ல காலம் உதயமாகும் அவருடைய துன்பங்கள் துயரங்கள் வறுமை ஆகியவை அகலும் நோய்கள் அகன்று குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் ஆனால் வரவுக்கு மேல் செலவு இருக்கும் பணத்தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க செலவை கட்டுப்படுத்த வரவேண்டும் மிக எச்சரிக்கையுடன் பணவிஷயத்தில் இருந்தால் பல நன்மைகள் ஏற்படும் மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பார்கள் நண்பர்கள் உறவினர்கள் தக்க தருணத்தில் ஆலோசனை கூறி முன்னேற்றத்திற்கான வழிகளை துணை புரிவார்கள் கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும்



கேது பகவான் நான்காம் இடத்திற்கு வரும்போது பெற்றோர்கள் உடல்நிலை பாதிக்கப்படும் அவர்கள் மூலம் பணவிரயம் ஏற்படும் செய்தொழிலில் எதிர்பாராத தளங்கள் தோன்றும் பொருளாதாரத்தில் கட்டுப்பாடும் கடன் தொல்லையும் தலைக்குமேல் போகும் வீண் அலைச்சலும் தேவையில்லாத வாக்குவாதங்களும் உண்டாகும் குடும்ப கவலை எல்லைமீறி இருக்கும் ஆனால் குடும்பத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்



கேது பகவான் ஐந்தாம் இடத்திற்கு வரும்போது பெரியோர்கள் சந்திப்போம் அவர்கள் ஆதரவும் கிடைக்கும் செய்தொழிலில் பல தொல்லைகள் கவலைகள் இருந்தாலும் ஆதாயம் இல்லாமல் போகாது முன்னேற்றம் இருக்கும் சொத்து நிலம் சம்பந்தமான வழக்குகள் ஏற்படும் உறவினர்களிடையே சச்சரவு உண்டாகும் வீண் அலைச்சலும் வேலைக்கு உணவு உண்ண முடியாமல் பணச்செலவும் ஏற்படும் எதிர்பாராத வகையில் புதிய நட்பு ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் கிடைக்கும் பெண் அன்பர்களால் சொத்து கிடைக்கும் கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும்...




கேது பகவான் 6-ஆம் இடத்துக்கு வரும்போது அசாத்தியமான துணிவு பிறக்கும் இசைத் துறையில் பல முன்னேற்றங்கள் உண்டாகும் விரோதிகள் எதிர்பாராத வகையில் தக்க தருணத்தில் உதவுவார்கள் ஏற்பட்டு அதில் வெற்றியும் கிடைக்கும் மேலதிகாரிகள் தொழிலில் உற்சாகம் ஊட்டுவார்கள் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அதில் நல்ல பலன் கிடைக்கும் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவு உதவி பெரும் அளவில் கிடைக்கும் மக்களால் நன்மை ஏற்படும்..



கேது பகவான் ஏழாம் இடத்திற்கு வரும்போது மற்றவர்களுக்கு உதவி செய்த செய்தவன் மூலம் அவமானம் பொருள் இழப்பு வீண் விரோதம் முதலியவை ஏற்படும் மந்தம் ஆதாயம் இன்மையும் இருந்து வரும் ஒரு வியாதியும் விஷ ஜந்துக்கள் தீண்டும் குடும்பத்தில் வறுமை நோய் தோல்வியும் நிலவும் உறவினர்கள் பல விதமான விரையுங்கள் பல செலவுகள் ஏற்படும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே உதவுவார்கள் புதிய நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக் கொள்வது ஆபத்தானது உதவி இருக்காது அவர்களால் துன்பம் ஏற்படும்



கேது பகவான் எட்டாம் இடத்திற்கு வரும்போது பெண்களால் கெட்ட பெயரும் பொருள் நஷ்டமும் ஏற்படும் மனைவியின் உறவினர்களிடம் விரோதம் உண்டாகும் மக்களால் பணச் செலவு ஏற்படும் செய்தொழிலில் மன அமைதியும் உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்கும் வெளியூர் பிரயாணங்கள் ஏற்படும் ஆனால் பெரிய நன்மைகள் எதுவும் இருக்காது எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படலாம் மிகவும் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு வகையில் அங்ககீனம் கூட ஏற்படலாம் பல துன்பங்கள் நேரினும் தெய்வ வழிபாடும் ஆன்மா விசாரணையிலும் ஈடுபாடு அதன் மூலம் அமைதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்...



கேது பகவான் ஒன்பதாம் இடத்திற்கு வரும்போது செய்தொழிலில் நல்ல நன்மையும் ஏற்படும் பொருள் வரவும் குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் எதிர்பாராத வகையில் உறவினர் ஒருவரின் சொத்து பணம் கிடைக்கலாம் வெளியூர் பிரயாணங்கள் சிறந்த பலனைத்தரும் ஆனால் பெற்றோர் உடல்நிலை பாதிக்கப்படும் அவர் மருத்துவச் செலவுகள் ஏற்படும் மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும் பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும் மனம் திருப்தி அடையும் வண்ணம் இருந்து கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்



கேது பகவான் பத்தாம் இடத்திற்கு வரும்போது பெரிய மனிதர்கள் சந்திப்போம் பெரியோர்கள் ஆதரவும் ஆத்ம சிந்தனையில் மனம் ஈடுபடுதல் தெய்வீக சுற்றுலா செல்லுதல் ஆகியவை நிகழும் அதுவரை முற்றுப்பெறாத இருந்த பல காரியங்கள் முடிவடையும் பல நன்மைகள் ஏற்படும் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் சொத்து வாங்குதல் சேமித்தவை ஏற்படும் செய்தொழிலில் நல்ல ஆதாயமும் மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும் குடும்பத்தில் பிள்ளைகளால் நல்ல பலன்கள் ஏற்படும்



கேது பகவான் 11-ம் இடத்திற்கு வரும்போது நினைத்த காரியங்கள் நடைபெறும் தொட்டது பொன்னாகும் ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும் நோய்களும் செய்தொழிலில் முன்னேற்றம் நல்ல ஆதாயமும் இருக்கும் மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும் அரசாங்கத்தில் நல்ல புகழ் பல நன்மைகள் ஏற்படும் குடும்பத்தில் ஒரு புதிய ஜீவன் உதயமாகும் பிரயாணங்கள் நல்ல பலனை தரும் புதிய வீடு மனை பயிர் நிலம் ஆடை ஆபரணங்கள் வாங்கலாம் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்கும் மக்களால் சிறப்பு உண்டாகும்



கேது பகவான் 12-ஆம் இடத்திற்கு வரும்போது உறவினர்களால் தொல்லையும் கவலையும் இருந்துவரும் வழக்குகளால் தொல்லைகளும் வீண் அலைச்சலும் வேலைக்கு உணவு உண்ண முடியாமல் கெட்ட பெயரும் ஏற்படும் நோய்கள் வேறு மனதை வேதனைப் படுத்தும் குடும்பத்தின் பணத் தட்டுப்பாடும் வீண் மனஸ்தாபங்களும் அதிகரிக்கும் செய்தொழிலில் ஒன்றில்தான் மனம் அமைதியடையும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதன் மூலம்தான் கிடைக்கும் ஆனால் ஆதாயம் சிறிது தான் கிடைக்கும் குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கும் உறவினர்களால் சிறுசிறு தொல்லைகள் ஏற்படும் மக்களிடத்தில் நன்மதிப்பு பெறுவது சிரமம்


சுக்கிரன்

சந்திரன் நின்ற ராசிக்கு சுக்கிரன் வரும்போது செல்வம் செல்வாக்கு எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றியும் நல்ல ஆதாயம் கிடைக்கும் மேல் அதிகாரிகளின் ஆதரவும் உயர்வும் செய்தொழில் மனமகிழ்ச்சியும் நல்ல ஆதாயம் கிடைக்கும் புது வீடு நிலம் வாங்குதல் அமையும் புத்தாடையும் புது நகைகள் வாங்கலாம் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் பெரியோர் ஆதரவு இருக்கும் பெற்றோர் ஆரோக்கியமாக இருப்பார்கள் அவர்களால் பொன் பொருள் சேரும் வாகனங்களில் நல்ல ஆதாயம் ஏற்படும்



சுக்கிரன் இரண்டாம் இடத்திற்கு வரும்போது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உடல் ஆரோக்கியம் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும் நினைத்தவை நடைபெறும் பெரியவர்கள் சந்திப்போம் தொழில் முன்னேற்றம் ஆகவே நடைபெறும் செய்தொழிலில் நல்ல பலன் கிடைக்கும்



சுக்கிரன் மூன்றாம் இடத்துக்கு வரும்போது செய்தொழிலில் பாராட்டும் பதவி உயர்வு ஏற்படும் எதிரிகள் பணிவார்கள் அவர்கள் உதவியும் நன்மையும் ஏற்படும் கூட்டு வியாபாரத்துக்கு வலி ஏற்படும் சிலருக்கு மனம் ஆகலாம் குழந்தை பிறக்கலாம் புதிய தொடர்புகள் தீமை ஏற்படுத்தும்



சுக்கிர பகவான் நான்காம் இடத்திற்கு வரும்போது நண்பர்களால் நன்மை உண்டாகும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் குடும்பத்தில் மங்களகரமான காரியங்கள் நடைபெறும் புதுமனை நிலம் வீடு வாங்க சந்தர்ப்பம் ஏற்படும் மற்றும் சுபநிகழ்ச்சிகள் செய்யலாம்



சுக்கிர பகவான் ஐந்தாம் இடத்திற்கு வரும்போது எடுத்த காரியங்கள் யாவிலும் வெற்றியும் நல்ல பலனும் கிடைக்கும் பிறர் தயவை நாட வேண்டிய அவசியம் இருக்காது மற்றவர்களுக்கு உதவி செய்யும் சந்தர்ப்பம் ஏற்படும் நண்பர்கள் உறவினர்கள் மக்கள் ஆகியோர் நன்மை உண்டாகும் எதிரிகள் மறைவர் கடவுள் பக்தி அதிகரிக்கும்..




சுக்கிர பகவான் 6-ஆம் இடத்திற்கு வரும்போது எதிர்பாராத வகையில் நண்பர்கள் உறவினர்களிடம் விரோதம் ஏற்படும் குடும்பத்தினரை தவிர மற்றவர்கள் உதவி புரிவார்கள் ஆக இருக்க மாட்டார்கள் கடன் தொல்லை உடல்நலக் குறைவுகள் மனக்கவலை ஆகியவை ஏற்படும் அதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..



சுக்கிரன் ஏழாம் இடத்திற்கு வரும்போது வீன் ஆத்திரம் ஏற்படும் நல்லவர்களையும் விரோதி ஆக்கிக் கொள்ளும் நேரிடும் மனைவி மக்களிடம் அதிக ஈடுபாடு இருக்காது சுயநலம் அதிகரிக்கும் கூட்டு தொழில் செய்தல் அதிக நன்மை ஏற்படுத்தும் அதற்கான வாய்ப்புகளும் உண்டாகும் சந்தர்ப்பத்தை நழுவ விடாது முன்னெச்சரிக்கை நடந்து கொண்டால் வாழ்க்கை முழுவதும் ஒரு குறைவின்றி வாழலாம்



சுக்கிரன் எட்டாம் இடத்திற்கு வரும்போது நம்பிக்கையுடன் செய்யும் காரியம் ஏமாற்றத்தை அளிக்கும் வேண்டாவெறுப்புடன் செய்யும் காரியங்கள் அதிக நன்மையை தரும் உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் நண்பர்கள் உறவினர் எப்போதும் உங்களுடனேயே இருந்து வருவார்கள் ஆனாலும் சில நேரங்களில் அவர்களால் மனசஞ்சலங்கள் ஏற்படும்


சுக்கிர பகவான் ஒன்பதாம் இடத்திற்கு வரும்போது மனநிம்மதி ஏற்படும் தொட்டதெல்லாம் பொன்னாகும் செய் தொழிலில் உயர்வு ஏற்படும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும் புகழ் ஏற்படும் மனைவி மக்களால் நன்மை உண்டாகும்


க்கிரன் பத்தாம் இடத்திற்கு வரும்போது பிடிவாதம் நிரம்பி நிற்கும் அப்படி பிடிவாதம் ஒன்றை செய்யும் போது எதிர்பாராத விதத்தில் நல்ல வெற்றியும் அடைந்து விடலாம் நண்பர்கள் உதவுவார்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் விரோதிகள் சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வார்கள் அவர்கள் செய்யும் இடையூறுகள் கூட நன்மையாகவே முடியும்



சுக்கிர பகவான் 11-ஆம் இடத்திற்கு வரும்போது நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினர் ஆகிறது நன்மையே உண்டாகும் மனைவி மக்கள் உறவு கொள்வார்கள் அவர்கள் நல்ல காரியத்தை கைகூடும் புது தொழில் தொடங்க வாய்ப்புண்டு பிரயாணம் செய்வதில் சிறப்பாக இருக்கும் குறிப்பாக கப்பல் பிரயாணம் செய்வதில் நன்மை உண்டாகும்,,




சுக்கிர பகவான் 12-ஆம் இடத்திற்கு வரும்போது முன் எச்சரிக்கையுடன் காரியங்கள் செய்வதில் வீன் கெட்ட பெயர் நேரிடும் வீட்டிலும் வெளியிலும் எதிர்ப்பு வலுத்து வரும் துணிவுடன் நடந்து காரியங்களை செய்தால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் மனைவி மக்கள் அடங்கி நடப்பார்கள் மனமாக வேண்டியவர்களுக்கு திருமணப் பேச்சுக்கள் நடைபெறலாம் ஒரு சிலருக்கு திருமணமும் நடைபெறும் வெளிநாட்டு பெண்கள் பேச்சுவார்த்தை பழக்கவழக்கங்கள் சினிமா சங்கீதம் போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது




 கேந்திரம்


லக்னம் முதல் 4 7 10 என்பது கேந்திர ஸ்தானம் ஆகும்
1 4 7 10 கேந்திர ஸ்தானம் என்று பெயர்


இது பொதுவாகவே எல்லோரும் ஜாதகத்தில் சொல்லுகின்ற வார்த்தை தான் இந்த கேந்திர ஸ்தானம் ஆனால் அங்கே நாம் முக்கியமாக பார்க்கவேண்டியது ஒரு கிரகம் கேந்திர ஸ்தானத்தில் இருக்கிறதா அல்லது 3ஆம்இடம் 5-ஆம் இடம் 6-ஆம் இடம் 8-ஆம் இடம் 9ஆம் இடம்  11-ஆம் இடத்தில் இருக்கிறதா என்பதை நாம் நுட்பமாக கவனிக்க வேண்டும் ( பார்க்க வேண்டும்)

இதை நாம் ஒரு உதாரண ஜாதகத்தின் மூலம் பார்க்கலாம்
உதாரணமாக
24-2-1948 
2. மணி.   34. நிமிடம்
மைசூர் பிறந்த இடம்
 நமது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஜாதகத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்
அவருடைய லக்னம் மிதுன லக்னம் இது ஒரு கேந்திரம் ஸ்தானம்
நான்காம் இடம் கன்னி ராசி அதுவும் ஒரு கேந்திரம்
 ஏழாம் இடம் தனுசு ராசி அதுவும் ஒரு கேந்திரம்
பத்தாமிடம் மீனராசி அதுவும் ஒரு கேந்திரம்
லக்னம் 17° பாகை 06°கலை 24° விகைகளில் இருக்கிறது
மேஷம் முதல் ரிஷபம் வரை அறுபது பாகைகள் உள்ளது மீதம் 17 பாகை06 கலை 24 விலையை கூட்ட வேண்டும்
60° 02-24 +17°-06-24=77°-06-24 லக்கண மையப்புள்ளி ஆகும்
லக்ன மையப்புள்ளி  77 பாகை 06கலை 24 விகலை ஆகும்  இதிலிருந்து லிருந்து 15 பாகையை கழிக்க 62 பாகை 06கலை 24 விலையாகும் இதுவே லக்ன ஆரம்ப பாகையாகும்
லக்ன பாகை மத்திமம் ஆகும்
77-06-24- மத்திம  பாகை
ஆரம்ப பாகையில் இருந்து 30 பாகையை கூட்ட 92 பாகை 06கலை 24 விகைகளை இதுவே லக்ன பாவம் அல்லது 1 ஆம் பாவத்தின் முடிவு
நான்காம் பாவத்தின் ஆரம்பம் 152 பாகை 06கலை 24 விகலைமுதல்182 பாகை  06கலை 24 விகலை வரை நான்காம் பாவம் ஆகும்
ஏழாம் பாவத்தில் ஆரம்பம் 242 பாகை 06கலை 24  விகலை முதல் 272 பாகை முதல் 96 கலை 24 விகலை வரை ஏழாம் பாவம் ஆகும்
குருபகவான் 242 பாகை 00 கலை 45 விகலையில் இருக்கிறார் குருபகவான் பாவ சந்தியில் உள்ளார்
 பத்தாம் பாவத்தின் ஆரம்பம் 332 பாகை  06கலை 24 விகலை முதல்
02 பாகை 06கலை 24விகலை வரை உள்ளது
சுக்கிர பகவான்351பாகை50கலை53விகலையில் இருக்கிறார்
பத்தாம் பாவம் 332 பாகை 06கலை24விகலைமுதல் 02 பாகை 06கலை24விகலை வரை உள்ளதால் சுக்கிர பகவான் பத்தாம் பாவத்தில் இருக்கிறார்
இந்த கணிதத்தின் படி கிரகங்கள் கேந்திரத்தில் இருக்கிறதா அல்லது திரிகோணத்தில் இருக்கிறதா என்று இந்த பாவ கணிதத்தின் மூலம் நாம் தெரிந்து கொண்டால் மட்டுமே ஜோதிட பலன்கள் சிறப்பாக இருக்கும்
லக்னம் கேந்திரத்தில் இயங்குமா திரிகோணத்தில் இயங்குமா என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்

No comments:

Post a Comment