Thursday 16 April 2020

ஜோதிட பயிற்சி தளம் [பகுதி 6]

சூர்யனின் தன்மைகள் ஜோதிட பயிற்சி தளம் பகுதி [6]


அனைவருக்கும் வணக்கம் நான் பெருந்துறையில் இருந்து Ask எனும்
Astro Senthil Kumar எழுதுகிறேன்.

அடிப்படையில் ஜோதிடத்தில் ஒன்றும் தெரியாது என்பவர்களுக்கு என இந்த தளம் 
https://www.youtube.com/channel/UCgkT8E50F8EbZfT0yOIT45A?view_as=subscriber
யூடியூப்பில் எனது சேனல் லிங்கில் உங்களுக்கு என ஜோதிட பதிவுகளை பதிகிறேன்.. அதையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...



சூர்யனின் தன்மைகள்

ஆட்சி :-சிம்மம் 

உச்சம் :- மேஷம் 

நீசம் :- துலாம் 

மூலத்திரிகோணம் :- சிம்மம் 


நட்சத்திர அதிபதி :- கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 

நிறம்:- சிகப்பு 


குணம் :- தாமஸம் [ குரூரன்] 


மலர் :- செந்தாமரை 


ரத்தினம் :- மாணிக்கம் 


மரம் : எருக்கு 


கிழமை :- ஞாயிறு


தேவதை :- அக்னி , சிவன் 


இலக்கு :- நடு 


ஆசான வடிவம் :- வட்ட வடிவம் 


வாகனம் :- தேர் , மயில், 


தானியம் :- கோதுமை 


உலோகம்: - தாமிரம் 


நோய் :- பித்தம் 


சுவை :- காரம் 


பால் :- ஆண் 


கால் :- நான்கு 


ஜாதி :- சத்திரியன் 


இயக்கம் :- நடப்பவை 


மச்சம் :- வலது 


தழும்பு :- இடுப்பு


இடம் :- கோயில் 


தாது :- மூலம், ஸ்திரம் 


தாவரம் :- பெருமரங்கள் 


தாவரத்தின் ஆளுமை :- தோல் 


பஞ்ச பூதம்:- தந்தை , உயிர் 


திசை :- கிழக்கு 


உறுப்பு :- தலை 


ஆளுமை :- காடு 


தோற்றம் :- அதிகாரம் 


உடலின் ஆதிக்கம் :-  எலும்பு 


செயல் :- விசுவாசம் 

மாற்று பெயர்கள் :- அண்டயோனி , அருக்கன், அலரி, அழலவன், அனலி, ஆதவன், ஆதித்தன், இரவி, உதயம், எல், ஏழ்பரியோன், ஒளி, ஒளியோன், ஒற்றையாழியோன், கதிரவன், சண்டன், சித்திரபானு, சுடரோன், செங்கதிரோன், சோதி, ஞாயிறு, திவாகரன், தினகரன், தினமணி, பகலோன், பரிதி, பார்க்கவன், பானு, மார்த்தாண்டன், விண்மீன் , வெஞ்சுடர், மற்றும் வெய்யோன் 


வழிபாட்டு ஸ்தலம் :- ஆடுதுறை 

சூர்யன் குறித்த கூடுதல் தகவல்


பிரபஞ்சத்தில் ஒளி மற்றும் ஒலியுடன் கூடிய மிகப்பெரியக்கோளம் சுற்றிக் கொண்டு இருந்தபோது அதன் அழுத்தமும் உந்து சக்தியாலும் வெடித்து சிதறியது ..



வெடித்து சிதறிய பெரும் எடை கொண்ட ஒவ்வொரு காந்தப்பாறையும் அதன் வேகத்தில் தனக்கென ஒரு பாதையை வகுத்து கொண்டு சுழல ஆரம்பித்தன ...


இந்த வேக வேறுபாட்டின் காரணத்தால் பல்வேறுபட்ட அண்டங்கள் உருவாகின.. அவ்வாறு ஏற்பட்டது தான் நமது சூர்ய மண்டலம் ஆகும்..     


பிரபஞ்சத்தில் 8 மில்லியனுக்கு மேலான அண்டங்கள் உள்ளதாகவும் ஒவ்வொரு அண்டத்திலும் சுமார் 15,000 கோடி விண்மீன்கள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது 



பிரபஞ்சம் மூன்று விதமாக குறிப்பிடப்படுகிறது.. 

அவை         


1] மூடிய பிரபஞ்சம் ,    2] சமதள பிரபஞ்சம்  3] பரவளை பிரபஞ்சம் 


விண்வெளி என்பது அனைத்து திசைகளில் அளக்க முடியாத அளவில் விரிவடைந்து இருக்கும் வெற்றிடம் ஆகும்..                                   


விண்வெளி பகுதியில் விண்மீன்கள் , விண்கற்கள் , கிரகங்கள், சூர்ய மண்டலங்கள் , நட்சத்திரங்கள் ஆகியன உள்ளடங்கியது .           


பூமிக்கு மேலே உள்ள அண்டத்தின் விட்டம் 1 லட்சம் ஒளி ஆண்டுகள் அளவிற்க்கு பரந்து பிரிந்து அமைந்துள்ளது ,, இதன் நடுப்பகுதி சூர்யனில் இருந்து சுமார் 32,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது,.                


ஒளி துல்லியமாக ஒரு விநாடிக்கு 2,99,76,260 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது .,           


 ஒளி ஆண்டுக்கு எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அதுவே ஒளி ஆண்டு ஆகும்.,                    


விண்வெளியில் உள்ள  கிரகங்கள் மற்றும் விண்மீன்கள்   தூரத்தை அளவிட இந்த ஒளியாண்டு பயன்படுகிறது.,        சூர்ய மண்டலத்தில் அமைந்து இருக்கும் முக்கிய கிரங்களில் பூமிக்கு கதிர் வீச்சுக்களை அனுப்பும் கிரகங்கள் 


 1] சூர்யன். 2] சந்திரன்.  3] செவ்வாய்.,  4] புதன்., 5] குரு., 6] சுக்கிரன்., 7] சனி .,   



சூர்யனின் ஆதாரமாக கொண்டு அனைத்து கோள்களும் இயங்குகிறது. சூர்யன் பூமிக்கு அதிக கதிர் வீச்சுக்களை கொடுப்பவர் .,            


சூர்யன் நொடிக்கு 1,80,000 மைல்கள் வேகத்தில் ஒளியை வெளிப்படுத்துகிறது.  அதாவது ஒளிக்கதிர்கள் சூர்யனை விட்டு நம்மை நோக்கி பூமியை வந்து அடைய 8 நிமிடங்கள் ஆகிறது .....    

ஜோதிடத்தில் சூர்யன் உதயத்தில் இருந்து புறப்பட்டு பயணிக்கும் லக்னம் மறு அடையாளம் காட்டப்படுவதால் சூர்யன் ஜோதிடத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது ..       


சூர்யன் ராசி மண்டத்தில் ஒரு ராசியை கடக்க ஒரு மாதமும் 12 ராசிகளை கடக்க 1 ஆண்டும் எடுத்து கொள்கிறது.. 

சூர்யன் ஒரு நாளில் 0 பாகை 59 கலை என டிகிரியை கடக்கிறது .,     

 

சூர்யனின்  நகர்வை வைத்து உத்திராயணம் [ தை 1 முதல் ஆனி 30 வரை] , தட்சிணாயணம் [ ஆடி 1 முதல் மார்கழி 30 வரை ] என  இரு அயன காலம் ஆகும்.,,                    


ஆறுவிதமான ருதுக்கள் அவை 1] வசந்த ருது 2] கிரிஷ்ம ருது 3] வருஷ ருது. 4] சரத் ருது 5] ஹேமந்த ருது 6] சிசிர ருது       என கணிக்கிடப்பட்டுள்ளது., 

                                                              

 சூர்யன் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலத்தை தான் தமிழ் மாதங்களில் கணக்கிடப்பட்டுள்ளது.,                     


சூர்யனில் இருந்து சந்திரன்  ஏற்படுத்தும் நகர்வை கொண்டே அமாவாசை பெளர்ணமி மற்றும் திதிகளும் ஏற்படுகிறது..,                              


சூர்ய கிரகணமும் சூர்யன் சந்திரன் மூலமாக ஏற்படுகிறது., 

ஒன்பது கோள்களில் சூர்யன் முதன்மையானது ஆகும். ஒளிகளின் தலைவன் ஆவார்., ஆதிகாவியம் ஆன இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தில் விண்மீன்களுக்கும் ., கோள்களும் நாட்களுக்கும் தலைவன் என கொண்டாடப்படுகிறார்.               

சூர்யனின் காரகத்துவம் /தொழில்




தன்னம்பிக்கை, சுய மரியாதை, நிர்வாகத்திறமை, பெறும் தொழில், தெய்வபக்தி, புகழ், செய்யும் தொழிலில் தாராள தன்மை, மருத்துவர், இரக்கம், கருணை, தொழில் பொருட்கள், மதிப்பு, மரியாதை, தியாக மனபான்மை, பிடிவாதம், . 

காரகத்துவம் 

தந்தை, மூத்த மகன் , வலது கண் , அரசன், கெளரவம், மாநகரம், பிரகாசமான வீட்டின் வலது ஜன்னல் , முக்கியமான தலைமை பொறுப்பு, 



தொழில் 



அரசு உத்தியோகம், அரசியல், அரசின் மூலமாக அனுகூலம் , தந்தை செய்யும் தொழில் , அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் , மூக்குக்கண்ணாடி சார்ந்த தொழில் , பிறருக்கு வழிகாட்டுதல், மேலாண்மை தொழில், உயர்ந்த பதவிகள் போன்றவைகள் 




சூர்யன் + பாவத்தொடர்பு :- 

1ம் பாவம்


மதிப்பு, மரியாதை, கெளரவமான வாழ்க்கை, சுயநல எண்ணங்கள், திட்டமிட்ட செயல்பாடுகள், பணியின் மூலமாக அந்தஸ்து பெறுவது, முதன்மையாக இருத்தல்., தலைமை பண்பு., நிர்வாக திறமை., கட்டளை இடும் தோரணை., தன்னம்பிக்கை , ஆத்ம பலம்


2ம் பாவம் 

திட்டமிட்ட குடும்ப வாழ்க்கை [ இரண்டாம் இடத்தில் தனி சூர்யன் குடும்பத்தில் பிரச்சனை தரும்],  சொன்னதை செய்யும் குணம், சமுதாய பயன் உள்ள கல்வி , மருத்துவ கல்வி பயிலல் , நிர்வாக கல்வி பயிலுதல், சமூக கல்வி பயிலுதல், சமூகத்தில் செல்வாக்கை பெறுதல், தகப்பனின் செல்வத்தை அடைதல்        


3ம் பாவம் 



அரசு சார்ந்த வரிப்பணம் வசூலித்தல் செலுத்துதல் , அரசு ஆணை இடுதல், தன்னம்பிக்கையோடு இருத்தல், அரசு  மூலமாக உபரி வருமானம் பெறுதல், தகப்பனார் மூலமாக கூடுதல் லாபங்களை பெறுதல், சுறுசுறுப்புடன் இருத்தல், குறிக்கோளை நிலை நாட்டுதல், அரசு தொடர்புடைய நபர்களை நண்பர்களாக பெறுதல் .,,



4ம் பாவம்

அரசு சார்ந்த வீட்டு வசதி மற்றும்அரசு சார்ந்த வாகன வசதி , அரசின் சொத்துக்களை பராமரிப்பு செய்தல் , அரசு மூலமாக பொருளாதாரம் பெறுதல், தகப்பன் சார்ந்த வாழ்க்கை வசதி, தகப்பன் வழி சார்ந்த நிலம் மனைகள் அடைதல், அரசியல் தொடர்பு, சிறந்த நிர்வாக பொறுப்பு மேலாண்மை செயல் விருத்தி  அடைதல் ,..



5ம் பாவம்


பாரம்பரிய புகழ் அடைதல், அறிவாற்றல் , குறிக்கோள் உடன் செயல்களை செய்தல், ஸ்திரமான புக்தி, கூர்மையான ஒழுக்கத்துடன் வாழ்தல், சாஸ்திர சம்பிரதாயங்களை மதித்தல், அரசு சமுதாயங்களை மதித்து நடத்தல், அரசாங்க ஆதாயங்களை அடைதல், குழந்தைகளால் புகழ் இயற்கை தெய்வ வழிபாடு , [சிவனின் வழிபாடு] 



6ம் பாவம் 


தகப்பனும் தகப்பன் வர்க்கத்தை எதிரியாக பாவித்தல், தகப்பன் வழி பிரச்சனைகளில் சிக்கி தவித்தல், கருத்துவேறுபாடுகள் , அரசுக்கு எதிராக செயல்படுதல், அரசு மூலமாக கடன் பெறுதல்., குற்றம் புரிதல், தண்டனை ,வழக்கு போன்றவைகளை சந்தித்தல், நெருப்பினால் காயம் அடைதல், வெப்ப நோயால் பாதிப்பை அடைதல், தன் சுயநலத்தால் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்தல், சிறுநீரக வெப்ப நீயினால் பாதிப்பு அடைதல்,   



7ம் பாவம்


ஆளுமை திறன்மிக்க களத்திரம், சுயநலமாக சிந்திக்கும் வண்ணம், சட்ட ரீதியான பிரிவினைகள் [7ல் லக்ன பாவி ஆவதாலும் தனித்த சூர்யனும் ] கூட்டு சேரும் கூட்டாளியாக இருத்தல், அன்பு பாசம் இல்லாத சூழ்நிலை , நண்பர்கள் இடத்தில் செல்வாக்கு, அதிகாரம் ஆளுமை திறன் , காம உணர்வுகள் நசுங்கி [ நபுஞ்சகம் என துல்லிய தமிழில் சொல்வது ] நண்பர்கள் களத்திரம் வழி அரசாங்க தொடர்புகள், தகப்பனால் ஆதரவு 



8ம் பாவம்


தகப்பன் வழி பிரச்சனைகள் , திருப்தியின்மை, அவமானங்கள், அரசாங்க வழி பிரச்சனைகள், வழக்குகள், தன்னம்பிக்கை இல்லாமை, சுயமரியாதை பாதிக்கப்படுதல், புகழ் பாதிக்கப்படுதல், கெட்ட பெயர் எடுத்தல், அரசு வழி மறைமுக வருமானங்கள் , மின்னனுவியல் , வெப்ப சம்பந்தமான தீராத நோய்களும் அதன் வழி மரணம் ., உயர் அழுத்த வெப்பம் போன்றவற்றால் மரணம் ...



9ம் பாவம்


பணி செயல் வழி மதிப்பு. மரியாதை கெளரவமான அடைதல், தகப்பன் வழி நன்மைகள் மதிப்பை அடைதல், நிர்வாக திறன் உடன் செயல்படுதல், அரசாணை பிறப்பித்தல் , அரசு பிரதநிதியாக செயல்படுதல், பதவிகள் அடைதல், அரசு வட்டார நண்பர்கள் வழி நன்மைகளை அடைதல், மருத்துவ கல்வி பெறுதல், சமூகம் சார்ந்த ஆராய்ச்சி கல்வி பெறுதல், மருத்துவ பட்டங்கள் [ முனைவர் பட்டமும் ] பெறுதல், குழந்தைகளால் கெளரவம் அடைதல்., சமுதாய பொறுப்புள்ள செயல்கள் மூலமாக நற்பெயர் அடைதல்., 



10 ம் பாவம்



தொழில் வழி மதிப்பு மரியாதை கெளரவம் அடைதல், பணியின் அடிப்படையில் அந்தஸ்து பெறுதல், அரசு சார்பான பணிகள், நிர்வாக தனி திறமை உடன் இருத்தல், அரசின் வழி ஆதரவுகள் பெறுதல் மற்றும் அரசியல் , அரசு சார்பில் கட்டளை பிறப்பித்தல் ., ஒப்பந்த பணிகள், பிறருக்கு வழிகாட்டும் செயல்கள் செய்தல்., தந்தை வழி தொழிலில் ஈடுபடுதல், பொன் ஆபரண தொழில்கள் , 




11ம் பாவம் 



அரசாங்க ஆதாயங்கள் பெறுதல், [ தன லாபம் ] அரசாங்க தொடர்புகள், அரசு ஒப்பந்த ஆதரவு, மூத்த சகோதர ஆதரவு , புகழ் உயர் மட்ட தொடர்பு பெறுதல் , தான் வெல்ல வேண்டும் என எண்ணம் , தகப்பன் வழி நன்மைகள் ஆதாயங்களை பெறுதல், 




12ம் பாவம்




தகப்பன் வழி பயனற்ற நிலை, அந்தஸ்து, கெளரவம், உயர்பதவி, வெகுமதி இழப்பு, ஜீவனம் நடத்துவதில் சிரமங்கள் நிர்வாக திறன் பாழ்படுதல், அரசு வழி செயல், பொருளாதார இழப்பு [ வரிச்சுமை] தொல்லைகள் , அரசு மூலமாக தண்டனை அடைதல், அரசியலில் பிரபலமின்மை , புகழற்ற வாழ்க்கை , படுக்கை சுக நாட்டமின்மை , தன்னம்பிக்கை அற்ற பய உணர்வு போன்ரவை பாவத்தின் தொடர்புகள் ஆகும் .....



ஜோதிட பயிற்சி தளம் 6ல் பேசுவோம் எல்லாம் ஒரு நோட்டில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள்..



தனி ஆலோசனைகள் போன்றவை பெறWhat's App 9843469404 

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 

பெருந்துறை
Astro Senthil Kumar.



No comments:

Post a Comment