Sunday 5 April 2020

ஜோதிட பயணம் [ பகுதி -8]

ஜோதிட பிரயாணம் பாகம்-8

கோச்சாரம் சந்திரனுக்கு
சந்திரன் நின்ற ராசிக்கு ராகு வரும் போது அதாவது சந்திர லக்னத்தில் ராகு சஞ்சரிக்கும் போது உறவினருடன் சச்சரவு வீண் முயற்சி செய் தொழிலில் கெட்ட பெயர் மேலதிகாரிகளின் பிடிப்பு முதலியன ஏற்படும் தொடங்கும் எந்தக் காரியமும் தடை படும் வீண் அலைச்சலும் வெளியூர் பிரயாணங்கள் பொருள் நஷ்டமும் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு தரமான சம்பவங்கள் நடைபெறும் சாப்பாட்டிற்கே கூட கஷ்டம் வரலாம் ஆனால் சரியான சமயத்தில் உதவியும் மன ஆறுதலும் கிடைக்கும் மனைவி மக்கள் ஆதரவும் உதவியும் இருக்கும்


ராகு 2-ம் இடத்திற்கு வரும்போது புகழ் செல்வம் செல்வாக்கு பொன் பொருள் வரவு ஆகியவை கிட்டும் வீட்டிலும் வெளியிலும் கௌரவமும் பாராட்டும் கிடைக்கும் தான தர்மங்களில் மனம் செல்லும் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும் கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் திவ்ய தேசங்களுக்கு செல்லுதல் தெய்வ பக்தியில் மனதை ஈடுபடுத்த ஆகியவை உத்தமம்


ராகு மூன்றாம் இடத்துக்கு வரும்போது சகோதரர்களால் தொல்லையும் பொருள் இழப்பும் ஏற்படும் வீண் அலைச்சலும் கவலையும் இருந்துவரும் செய்தொழிலில் நல்ல ஆதாயம் இருக்காது பணத்தட்டுப்பாடு தலைக்கு மேலே போகும் மனைவியின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கடிதங்களுக்கு பயனுள்ள பதில்கள் கிடைக்கும்


ராகு 4-ஆம் இடத்திற்கு வரும்போது மனைவி சகோதரர்களின் ஆகியோர்களுக்கு செலவு ஏற்படும் பணம் எதிர்பாராத வகையில் கிடைத்தாலும் கையில் தங்குவது இல்லை வெளியூர் பிரயாணம் ஏற்படும் போது மனிதர் சந்திப்பு கிடைக்கவும் நல்ல யாத்திரை செய்யவும் வாய்ப்புண்டு பெரியோர் ஆதரவும் உதவியும் கிடைக்கும் கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும்


ராகு பகவான் ஐந்தாம் இடத்திற்கு வரும்போது உறவினருடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் அகலும் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் செய்தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்கும் பொருள் சேர்க்கையும் பந்தயம் லாட்டரி ஆகியவற்றில் நல்ல பலன்கள் கைகூடும் ஆனால் வீன் கவலையும் வீண் அலைச்சலும் ஏற்படும் சில மாறுதல்கள் ஏற்படலாம் முடிவுகள் நல்லவிதமாக இருந்தாலும் பலன் நினைத்ததைப் போல் இருக்காது வேலை கவலை காரணமாக வேளைக்கு சாப்பாடு உண்ண முடியாமல் போகலாம் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்காது


ராகு பகவான் ஆறாம் இடத்திற்கு வரும்போது சிறந்த மாற்றம் ஏற்படும் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் ஆடல் பாடல் கேளிக்கைகளில் மனம் ஈடுபடும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மனைவி மக்கள் ஆதரவாக இருப்பார்கள் பெரியோர்கள் சந்திப்பு உதவியும் கிடைக்கும் வெளியூர் பிரயாணங்கள் வெற்றியும் ஆதாயத்தையும் தேடி தரும் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்


ராகு பகவான் ஏழாம் இடத்திற்கு வரும்போது மனைவி மக்கள் பற்றிய கவலை ஏற்படும் அவர்களில் சிலரை நோய் பிடித்து வாட்டும் மருத்துவச் செலவு அதிகப்படும் மேலதிகாரிகளின் சீற்றத்துக்கு ஆளாக எப்போதும் வீண் செலவு வீண் அலைச்சலும் ஆகவே இருக்கும் மனதை தெய்வபக்தி செலவிட்டு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுதல் வேண்டும் அதனால் நமக்கு வரவிருக்கும் நோய் விபத்துக்கள் விரோதம் பணவிரயம் முதலியவை தவிர்க்கலாம் கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் பிரயாணங்கள் சில நன்மைகள் ஏற்படும் எச்சரிக்கையாக பிரயாணங்கள் செய்வது நன்மையை தரும்


ராகு பகவான் எட்டாம் இடத்திற்கு வரும்போது பண விரயம் வீண் அலைச்சல் எதிரிகளின் சூழ்ச்சிகள் முதலியவற்றை எதிர்நோக்க வேண்டியிருக்கும் தீயவர்கள் நட்பு பெண்களால் அவமானம் உண்டாகும் எட்டாம் இடம் என்பது சுக்கிரனை தவிர மற்ற கிரகங்கள் அனைத்திற்கும் அந்த வீட்டிற்கான தீமை செய்யும் சக்தியை மேலோங்கியிருக்கும் நல்ல தசை அல்லது நல்ல புத்தி நடந்தால் ஒழிய கெட்ட காரியங்கள் நடப்பதை தடுக்கவே முடியாது ஆனால் இந்த நாட்கள் தெய்வ பக்தியில் மனதை செலுத்துவதக இருந்தால் வரும் தொல்லைகள் ஓரளவு தவிர்க்கலாம்


ராகு பகவான் 9-ம் இடத்திற்கு வரும்போது குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் ஆகியோருக்கு ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் போக்க உதவி புரிய வேண்டி இருக்கலாம் வீண் அலைச்சல்களும் ஏற்படும் மேலதிகாரிகள் சீற்றத்திற்கு ஆளாக நேரிடும் பெற்றோர் உடல்நிலையை எச்சரிக்கையுடன் கவனித்து வரவேண்டும் சரியான தருணத்தில் மருத்துவ உதவி அளிக்க விட்டால் பிறகு வருத்தப்பட வேண்டியதாக இருக்கும் ஆனால் கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும் மக்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்


ராகு பகவான் 10-ம் இடத்திற்கு வரும்போது பல பெரியோர்களின் சந்திப்போம் நண்பர்கள் உறவினர்கள் உதவியும் ஆதாரமும் கிடைக்கும் ஆடம்பர செலவு செய்தாலும் விருதுகள் பெறுவதும் பல தீய காரியங்கள் செய்து வைப்பதும் ஏற்படலாம் மேல் அதிகாரிகளின் ஆதரவும் செய்தொழிலில் மகிழ்ச்சியும் ஆதாயமும் கிடைக்கும் தாம்பத்திய உறவில் அதிக நாட்டம் ஏற்படலாம் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் வெளியூர் பிரயாணங்கள் நல்ல பலனைத் தரும் அனுகூலமான கடிதங்கள் எதிர்பார்க்கலாம்


ராகு 11-ஆம் இடத்திற்கு வரும்போது ஜாதகருக்கு மிகச் சிறந்த பலனை அளிக்கும் நினைத்ததெல்லாம் தலை நடைபெறும் மேலதிகாரிகள் உதவியும் பதவி உயர்வும் கிடைக்கும் செய்தொழிலில் அபிவிருத்தியும் மாற்றமும் ஏற்படலாம் மாற்றம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவியாக அமையும் தொழிலில் முழுக்கவனத்தையும் செலுத்தி வந்தால் அதிக நன்மை அடையலாம் கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும் மக்களால் மகிழ்ச்சியும் ஆதரவும் கிடைக்கும் பந்தயம் லாட்டரி முதலியவற்றில் அதிக நன்மைகள் ஏற்படும்


ராகு பகவான் 12ம் இடத்தில் வரும்போது வீண் செலவு வீண் அலைச்சல் வீண் அபவாதம் மேலதிகாரிகள் சீற்றம் கணவன்-மனைவி மனஸ்தாபங்கள் ஆகியவை அனைத்தும் ஏற்படும் எச்சரிக்கையுடன் பொறுமையுடனும் இல்லாவிட்டால் விபரீதமான நிகழ்ச்சிகளுக்கு நடக்கலாம் மக்களையும் ஏற்படும் அடுத்த வீட்டிற்கு வருவதற்கு இரண்டு மாதம் முன்னதாக நன்மை உண்டாகும் துன்பங்கள் அகலும் செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும்


ஜோதிட பிரயாணம் தொடரும்
ஜோதிடக் கலை ஞானி பூ .சி பெரியசாமி கோவை

No comments:

Post a Comment