Saturday 28 March 2020

ஜோதிட பயணம் [பகுதி -2]



ஜோதிட பயணம். பாகம் 2
நடத்துனர் :-பூ.சி பெரியசாமி ஜோதிடர் கோவை9842616578


ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு கிரகத்திற்கு நட்பு பகை உச்சம் நீச்சம் ஆட்சி சமம் மூலத்திரிகோணம் ஆக. இருக்கும் இதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம் இப்பொழுது அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்


மேஷ ராசி
செவ்வாய்க்கு இந்த வீடு சொந்தமானது இதனால் அவனே இதற்கு அதிபதி அவன் ஆட்சி வீடாகும் குருவுக்கு இது நட்பு வீடு ராகு கேதுவுக்கு பகை வீடு செவ்வாய்க்கு மூலத்திரிகோண வீடு இந்த ராசியில் சூரியன் உச்சம் சந்திரன் சுக்கிரன் புதன் சமம் சனி நீச்சம்


ரிஷப ராசி
சுக்கிரனுக்கு இந்த வீடு சொந்தம் அதனால் அவனுக்கு இந்த வீடு ஆட்சி வீடாகும் புதன் சனி இருவருக்கும் இது நட்பு வீடு சூரியன் குரு இரண்டிற்கும் இது பகை வீடு சந்திரனுக்கு மூலத்திரிகோணம் ராசி இது சந்திரன் உச்சம் வீடு ராகு கேது நீச்சம் செவ்வாய்க்கு சமம் வீடு ஆகும்
(சந்திரனுக்கு இந்த ராசியில் 4 பாகையில் இருந்து 30 பாகைக்குள் இருக்கும்போது மூலத்திரிகோண ம்)


மிதுன ராசி
மிதுனம் புதனுக்குரிய வீடு ஆட்சி வீடு சந்திரன் சுக்கிரன் சனி ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு இது நட்பு வீடு குரு செவ்வாய் இரண்டிற்கும் பகை வீடு சூரியனுக்கு சம வீடு


கடக ராசி
இது சந்திரபகவான் வீடு சந்திரனுக்கு ஆட்சி வீடு சூரியன் நட்பு செவ்வாய் நீச்சம் புதன் பகை குரு உச்சம் சுக்கிரன் பகை சனி ராகு கேது பகை


சிம்ம ராசி
இது சூரிய பகவானுக்கு சொந்த வீடு அதனால் அவருக்கு ஆட்சி வீடு சந்திரன் செவ்வாய் புதன் குரு ஆகிய கிரகங்களுக்கு இது நட்பு வீடு சுக்கிரன் சனி ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு பகை வீடு சூரியனுக்கு மூலத்திரிகோண வீடு இந்த ராசியில் 21 பாகையில் இருந்து 30பாகைக்குள் சூரியனுக்கு மூலத்திரிகோணம் ஆகும்


கன்னிராசி
புதனுக்குரிய மற்றொரு ராசியான இந்த வீடு அவருக்கு ஆட்சி வீடு உச்சமாகவும் எங்கே இருக்கிறார் சந்திரன் குரு சனி ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு இது நட்பு வீடு செவ்வாய்க்கு பகை வீடு புதனுக்கு மூலத்திரிகோணம் இந்த ராசியில் சூரியன் சமம் சுக்கிரன் நீச்சம்
இந்த ராசியில் புதன் பகவானுக்கு 11 பாகையில் இருந்து 15 பாகைக்குள் இருக்கும்போது மூலத்திரிகோணம் என்க


துலாம் ராசி
சுக்கிரனுக்கு சொந்தமான வீடு அவன் ஆட்சி வீடு புதன் ராகு கேதுவுக்கு இது நட்பு வீடு குருவுக்கு பகை வீடு சுக்கிர பகவானுக்கு மூலத்திரிகோண வீடு சந்திரன் செவ்வாய் சமம் சனி உச்சம் ஆகிறார் சூரியன் நீச்சம் ஆகிறார் சுக்கிர பகவானுக்கு 28 பாகையில் இருந்து 30 பாகைகள் மூலத்திரிகோணம் என்க


விருச்சக ராசி (விருச்சகம்)
செவ்வாயின் ஆட்சி வீடு சூரியனுக்கு குருவுக்கும் இது நட்பு வீடு சனி பகை வீடு புதன் சுக்கிரனுக்கு சம வீடு ராகுவும் கேதுவும் உச்ச வீடு சந்திர பகவானுக்கு நீச்ச வீடு


தனுசு ராசி
இது குரு பகவானின் சொந்த வீடு ஆட்சி சூரியன் செவ்வாய் ராகு கேதுவுக்கு நட்பு வீடு சந்திரன் புதன் சுக்கிரன் சனி இவர்களுக்கு சம வீடு குரு பகவானுக்கு இது மூலத்திரிகோண ராசி ஒரு பாகையில் இருந்து பத்து பாகைக்குள் மூலத்திரிகோணம் என்று அறிக


மகர ராசி
சனிபகவானுக்கு சொந்த வீடு ஆட்சி சுக்கிரன் நட்பு சூரியன் ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு பகை சந்திரன் புதன் சமம் செவ்வாய்க்கு உச்ச வீடு


கும்பராசி
இதுவும் சனி பகவான் ராசியில் சனி ஆட்சி வீடு சனி பகவானுக்கு இந்த வீடு மூலத்திரிகோணம் சூரியன் பகை சந்திரன் சமம் செவ்வாய் சமம் புதன் சமம் குரு சமம் ராகு கேது பகை சுக்கிரன் நட்பு


மீன ராசி
குரு பகவானுடைய வீடு குருவுக்கு ஆட்சி சூரியன் நட்பு சந்திரன் சமம் செவ்வாய் நட்பு புதன் நீச்சம் குரு ஆட்சி சுக்கிரன் உச்சம் சனி பகவான் ராகு கேதுக்களுக்கு நட்பு வீடு


நட்சத்திரங்களையும் அவற்றுக்குரிய ராசிகளையும் இப்போது பார்ப்போம் நட்சத்திரம் தங்கிய ராசியே சந்திரா லக்னம் அல்லது ராசி என்று அழைப்பார்கள் ஒருவருடைய ராசியை அவர் பிறந்த நட்சத்திரத்தை கொண்டே கூறிவிடலாம்


அசுவினி
பரணி
கார்த்திகை
ரோகிணி
மிருகசீரிஷம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
ஹஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி
நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் 4 பாதங்கள் ஆகின்றன 

அதனால் 27×4=108 பாதங்கள்
108 பாதங்களை 12 ராசிக்கு பக்கிர்ந்தால் 108 ÷12=9 பாதங்கள் ஆகும்
ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரங்கள் கிடைக்கும்


அசுவினி பரணி கார்த்திகை 1-ஆம் பாதம் மேஷ ராசியில் அடங்கும்
கார்த்திகை 2 3 4 ரோகிணி மிருகசீரிஷம் 1 2 ரிஷப ராசியில் அடங்கும்
மிதுன ராசியில் மிருகசீரிஷம் 3 4 திருவாதிரை புனர்பூசம் 1 2 3 ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும்


கடக ராசியில் புனர்பூசம் நான்காம் பாதம் பூசம் ஆயில்யம் அடங்கும்
சிம்ம ராசி மகம் பூரம் உத்திரம் 1ஆம் பாதம் அடங்கும்


கன்னி ராசியில் உத்திரம் 2 3 4 பாதங்கள் ஹஸ்தம் சித்திரை 1 2 பாதங்கள் அடங்கும்


துலாம் ராசியில் சித்திரை 3 4 பாதங்கள் சுவாதி விசாகம் 1 2 3 பாதங்கள் அடங்கும்


விருச்சிக ராசியில் விசாகம் 4-ம் பாதம் அனுஷம் கேட்டை அடங்கும்


தனுசு ராசியில் மூலம் பூராடம் உத்திராடம் 1ஆம் பாதம் அடங்கும்


மகர ராசியில் உத்திராடம் 2 3 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1 2 பாதங்கள் அடங்கும்


கும்பராசியில் அவிட்டம் 3 4 பாதங்கள் சதயம் பூரட்டாதி 1 2 3 பாதங்கள் அடங்கும்


மீன ராசியில் பூரட்டாதி 4-ஆம் பாதம் உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரங்கள் அடங்கும்

ஆகிய 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் அடங்கும்


நட்சத்திரங்களும் அதன் அதிபதிகளும் திசையின் கால அளவு

அசுவினி மகம் மூலம் கேது மகாதிசை 7 ஆண்டுகள்


பரணி பூரம் பூராடம் சுக்கிரன் மகாதிசை 20 ஆண்டுகள்


கார்த்திகை உத்திரம் உத்திராடம் சூரியன் மகாதிசை 6 ஆண்டுகள்


ரோகிணி அஸ்தம் திருவோணம் சந்திரன் மகாதசை பத்தாண்டுகள்


மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம் செவ்வாய் பகவான் திசை ஏழு ஆண்டுகள்


திருவாதிரை சுவாதி சதயம் ராகு மகா திசை 18 ஆண்டுகள்


புனர்பூசம் விசாகம் பூரட்டாதி குரு பகவான் திசை 16 ஆண்டுகள்


பூசம் அனுசம் உத்திரட்டாதி சனி பகவான் திசை 19 ஆண்டுகள்


ஆயில்யம் கேட்டை ரேவதி புதன் பகவான் திசை 17 ஆண்டுகள்

அனைவரும் அகத் தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் இறைவனை வழிபாடு செய்து இல்லத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்


மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம் நட்சத்திர காரர்களும் திருவாதிரை சுவாதி சதயம் நட்சத்திரக்காரர்கள்

வருகின்ற 48 நாட்களுக்கு வீட்டிலேயே நவகிரக துதி காலையில் நெய் தீபம் ஏற்றி பாராயணம் செய்யவும்

நவகிரக ஸ்ருதியை மூன்று முறை அல்லது பன்னிரண்டு முறை அல்லது 108 முறை பாராயணம் செய்தால் சிறப்பு நவகிரகத்தின் அனைத்து தோஷங்களும் நிவர்த்தி அடைந்து சுகம் பெறுவது திண்ணம்
பின்பு இந்த நவகிரக ஸ்துதி பாராயணம் செய்தவர்கள் உங்கள் அனுபவத்தை எனக்கு பதியுங்கள்
நீங்களும் உங்கள் குடும்பமும் குழந்தைகளும் நோய்நொடியின்றி தீர்க்காயுளுடன் வாழ நான் வணங்கும் ஈசன் சிவபெருமான் உங்களை காப்பாற்றுவார்


ஜோதிட பயணம் தொடரும்🌷🌿🌻🌻🌻🌻🌾🙏🙏

Friday 27 March 2020

ஜோதிட பயணம் [ பகுதி-1]



ஜோதிட பயணம் 1

நடத்துனர்:-பூ.சி. பெரியசாமி ஜோதிடர்கோவை9842616578


ஜோதிடக் கலை என்பது சமுத்திரத்தை போன்றது அதை பெரியோர்களும் ரிஷிகளும் ஆராய்ந்து பல நூல்கள் எழுதி உள்ளனர் எல்லோரும் எல்லாவற்றையும் கற்று உணர்ந்து கொள்வது என்பது இயலாத காரியம்

சோதிட பயணம் என்ற இந்த தலைப்பில் ஜோதிடம் பார்ப்பது எப்படி என்ற முறையில் எழுதுகிறேன்தொழில்முறை ஜோதிடர்களுக்கும் இது ஆரம்ப கால ஜோதிடர்களுக்கும் ஜோதிடம் கற்பவர்களுக்கு உண்டான ஜோதிட பயணம் ஜோதிடத்தில் நன்கு தெரிந்த ஜோதிட மேதைகளுக்கு இங்கு இடம் இல்லை

ஜோதிட பயணத்தில் நம்முடன் சேர்ந்து பயணிக்கக்கூடிய அனைத்து ஜோதிடர்களும் நன்றியை தெரிவித்துக் கொண்டு இந்த ஜோதிட பயணத்தில் கலந்துகொண்டவர்கள் ஓரளவு தெரிந்து கொண்டு மேலும் ஆர்வமுடன் பல நூல்களைப் படித்து அறிய இது முன்னோடியாக இருக்கும்ஜாதகம் எழுதும் முறையும் கோச்சார பலன்கள் பலனும் கிரகங்களின் தன்மை நட்சத்திரங்களின் தன்மையும் ராசிகளின் தன்மை மிக நன்றாக விளக்கி கூறப்படும்இந்த ஜோதிட பயணத்தில் விவாகப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறதுஉங்கள் ஜாதகங்கள் கிரகங்கள் எப்படி அமைந்தால் நல்லது என்பது பற்றியும் எந்த தன்மையில் இருக்கும் என்பது பற்றியும் ஜோதிட பயணத்தில் நாம் சிறிது சிறிதாக தெரிந்துகொள்ளலாம்எனக்கு கிடைத்து இருக்கக்கூடிய இந்த இருபது நாட்களுக்குள் என்னால் எவ்வளவு எழுத முடியுமோ அத்தனையும் எழுதலாம் என்று இருக்கிறேன் நீங்கள் விருப்பமுள்ளவர்கள் பின் தொடரலாம்ஜோதிட விஷயங்களை முழுவதுமாக கூறவேண்டுமானால் இதைப்போல பல ஜோதிட பிரயாணம் நீங்கள் செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியும்அனைவரும் வாருங்கள் மகிழ்ச்சியாக நாம் 20 நாட்கள் ஜோதிட பயணம் செய்வோம்ஜாதகர் பிறந்த லக்னத்தையும் அக்காலத்தில் அமைந்துள்ள கிரக நிலையையும் நவாம்ச நிலையையும் அறிந்து ஜனன காலத்தில் இந்த திசையில் எவ்வளவு இருப்பு என கண்டறிந்து கொள்வதே ஜாதகத்தில் ஆரம்ப நிலை ஆகும்ஜாதகம் எழுதுவது எப்படி என்ற அத்தியாயத்தில் ஜாதகம் எழுதும் முறை கூறப்பட்டுள்ளது ஜாதகம் பார்க்கத் துவங்கும் போது முதலில் அந்த காலங்களில் தசாபுத்தி என்ன நடக்கிறது என அறிந்து கொள்ள வேண்டும் ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடத்திற்கு ராசி என்று பெயர் சந்திரன் நின்ற வீட்டிலிருந்து கிரகங்கள் தற்போது இருக்கும் இடங்களை அறிந்து கொள்வது கோட்சாரப் பலன் ஆகும் தசாபுத்தி ரீதியாக நடைபெறும் பலன்களையும் கோச்சார ரீதியாக உள்ள பலன்களையும் அறிந்தால்தான் ஜாதகரின் பலன்களை பூரணமாக அறியமுடியும் சந்திரன் நின்ற வீட்டிலிருந்து தற்கால கிரக நிலை மாறுதல்களையும் கோச்சார பலனை ஓரளவு அறிய முடியும் தசாபுத்திகள் நல்ல முறையில் இருந்தால் கோட்சார ஏற்படவிருக்கும் கெடுதல்கள் ஜாதகரை அதிகமாக பாதிப்பு இல்லைபலாபலன்களை அறிய முதலில் கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் எவ்வளவு காலம் தங்கி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும் கிரகங்களிலேயே சந்திரன் ஒன்றுதான் 12 ராசிகளையும் 30 நாட்கள் சுற்றி வருகிறார் அவர் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை நாட்கள் தங்கியிருப்பார் சந்திரனுக்கு அடுத்தபடியாக சூரியனை கூறலாம் அவர் 12 ராசிகளையும் ஓராண்டில் சுற்றி வருகிறார் அதாவது ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் தங்கி இருக்கிறார்சுக்கிரபகவான் புதபகவான் செவ்வாய் பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றரை ஆண்டுகளில் 12 ராசிகளையும் கடக்கின்றார்கள் இவை ஒவ்வொரு ராசியில் சராசரி 45 நாட்கள் தங்கி இருக்கின்றனர் ஆனால் செவ்வாய் மாத்திரம் சில சமயங்களில் ஒரு ராசியில் ஆறு மாதம் கூட தங்கியிருக்கும் இது எப்போதாவது தான் நிகழும் அவ்விதம் செவ்வாய் ஒரு ராசியில் தங்கியிருந்தால் அந்த ஆண்டு உலகத்தில் பல அதிசயங்கள் நடைபெறும் சில சமயங்களில் பெரிய தீமைகளும் நிகழும் அது செவ்வாய் நின்ற ராசியின் தன்மையை பொறுத்து அமையும்

கன்னியா ராசியில் செவ்வாய் அளவுக்கு மீறிய காலம் தங்கினாள் நாட்டில் மழை பொழியாது பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் போய்விடும் கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும் என்று ஒரு பழமொழி உண்டு
அடுத்து குரு பகவான் 12 ராசிகளை கடந்து செல்வதற்கு இவர் 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார் ஒரு ராசியை கடப்பதற்கு ஓராண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்
ராகு கேது இரு கிரகங்களும் 18 ஆண்டுகளில் 12 ராசிகளை கடக்கின்றனர் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் வீதம் தங்கியிருப்பார்


மிகவும் மந்தமான நிலையில் செல்லக்கூடிய கிரகம் சனிபகவான் தான் இவர் 12 ராசிகளையும் கடந்து வர 30 ஆண்டுகள் பிடிக்கின்றன ஒரு ராசியில் இவர் இரண்டரை ஆண்டுகள் பிரயாணம் செய்வார்
ராகு கேதுக்களை தவிர மற்ற கிரகங்கள் முறைப்படி 12 ராசிகளையும் வலம் வருகின்றன ராகு-கேது மாற்றும் எதிர்திசையில் செல்கின்றன மேலும் இரண்டு கிரகங்களும் ஒரே சமயத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்கின்றன இதுபோல் மற்ற கிரகங்கள் சேர்ந்து செல்வது இல்லை எப்பொழுதும் ராகுவும் கேதுவும் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் ஒருவருக்கு ஒருவர் ஏழாம் இடத்திலும் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள் இதில் எவ்வித மாறுதலும் ஏற்படாது பலனை பார்க்கும்போது கிரகங்கள் அப்போது தங்கியிருக்கும் ராசிகளை மாத்திரம் வைத்து பல அறிய முற்படக்கூடாது அந்தந்த ராசியில் அந்தந்த கிரகங்களுக்கு சாதகமாக அமைகின்றன பாதகமாக அமைகிறது அதை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் முதலில் ஒவ்வொரு ராசிக்குரிய சொந்த வீடுகளை அறிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்வோம்


ஒன்பது கிரகங்களில் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கு சொந்த வீடுகள் ராசிகள் உண்டு ராகுவுக்கும் கேதுவுக்கும் சொந்தமாக எந்த இடமும் ராசிக்கும் இல்லை அவர்கள் எந்த ராசியில் தங்கி இருக்கிறார்களோ அதையே அவருடைய சொந்த வீடாக கருதவேண்டும்


மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ஆகிய 12 ராசிகளாகும்


மேஷம் விருச்சிக ராசிக்கு செவ்வாய் பகவானுக்கு சொந்தமானவை
ரிஷப ராசிக்கும் துலா ராசிக்கும் சுக்கிர பகவானுக்கு சொந்தமானவை
மிதுன ராசிக்கும் கன்னி ராசிக்கும் புத பகவானுக்கு சொந்தமானவை
தனுசு ராசிக்கும் மீன ராசிக்கும் குரு பகவானுக்கு சொந்தமானவை
மகர ராசிக்கும் கும்ப ராசிக்கும் சனி பகவானுக்கு சொந்தமான ராசி வீடுகள் ஆகும்கும் சொந்தமான ராசிகளாகும்


கடக ராசிக்கு சந்திர பகவானும்
சிம்ம ராசிக்கு சூரிய பகவான்
இக் கிரகங்கள் தங்கி இருப்பதையே சொந்த இடங்களில் தங்கி இருக்கிறார்கள் என்று கூற வேண்டும்
ஒன்பது கிரகங்களும் ஒன்றுக்கு மற்றொன்று நட்பாகவும் பகையாகவும் சமமானதாக இருக்கும் பலனை அறிய இவற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும் ஜனன காலத்தில் கிரகங்கள் நின்ற ராசிகளை ஆராய்ந்து அவை சொந்த வீட்டில் இருக்கின்றனவா நட்பு வீட்டில் இருக்கின்றனவா பகை வீட்டில் அமர்ந்து இருக்கின்றனவா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் பிறகு கோச்சாரத்தில் அவை எப்படி இருக்கின்றன என்பதையும் அறிந்து பலனை ஆராய வேண்டும் நட்பு கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் பலன் நல்லதாக அமையும் பகை வீட்டில் இருந்தால் பலன் மாறுபடும் அதுவே இயற்கையில் பகை கிரகமாக இருந்து பகை வீட்டில் அமர்ந்து இருந்தால் பலன் அடியோடு மாறிவிடும் பெரும்பாலும் இவை நல்ல பலனை ராஜயோகத்தை கூட அளிக்கும்


இப்போது கிரகங்களின் தன்மைகளைப் பற்றி அறிவோம் கிரகங்கள் தங்கும் ராசிகள் அவற்றிற்கு நட்பானது பகையான சமமானது என்பதை பார்ப்போம்


சூரியனுக்கும் சந்திரன் குரு செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் நட்பான வை புதன் சமமானது சுக்கிரன் சனி ராகு கேது ஆகிய கிரகங்கள் பகையானவை


செவ்வாய்க்கு சூரியன் சந்திரன் குரு ஆகிய மூன்று கிரகங்களும் நட்பான வை சுக்கிரனும் சனியும் சமமானவை புதன் ராகு கேது ஆகியவை பகையானவை


புதனுக்கு சூரியன் சுக்கிரனும் நட்பான வை குரு செவ்வாய் சனி ராகு கேது ஆகியவை சமமானவை சந்திரன் மட்டுமே பகையானது


. குருவுக்கு சந்திரன் சூரியன் செவ்வாய் ஆகியவை நட்பான வை சனி ராகு-கேது சமமானவை புதன் சுக்கிரன் இரண்டும் பகை பகையானவை


சுக்கிரனுக்கு புதன் சனி ராகு கேது ஆகியவை நட்பு கிரகங்களான குரு செவ்வாய் இரண்டும் சமமானவை சூரியன் சந்திரன் இரண்டும் பகை கிரகங்கள் ஆகும்


சனிக்கு புதன் சுக்கிரன் ராகு கேது ஆகிய கிரகங்கள் நட்புறவை குரு சமமான கிரகமாகும் சூரியன் சந்திரன் செவ்வாய் இம்மூன்றும் பகைக் கிரகங்கள் ஆகும்


ராகு-கேது இருவருக்கும் சனி சுக்கிரனும் நட்பு கிரகங்கள் புதன் குருவும் சமக் கிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய் இம்மூன்றும் பகைக் கிரகங்கள்
என்றும் உங்கள் அன்பு ஜோதிடர் பூச்சியூர் பெரியசாமி

ஜோதிட பயணம் தொடரும்

Thursday 26 March 2020

சார்வரி ஆண்டில் தீராத நோய் தீர்க்கும் “உக்ர யோகம்”


சார்வரி ஆண்டில் நோயை தீர்க்க “உத்ரயோகங்கள்”

அன்பு ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்,,,
வாசித்த பின்னர் உங்கள் கருத்துக்களை எமக்கு தட்சிணையாக வைத்து விட்டு செல்லுங்கள்...

இந்தியவேத ஜோதிடம் பல பிரிவுகளை கொண்ட அமைப்பு ஆகும்!!!நான்கு வேதத்தில் உட்பிரிவாக “கல்பம்” [மருத்துவம்] “ஜோதிஷ்” [ஜோதிடம்] கொண்ட தளம் நம் வேதங்கள்
நோய்க்கு தீர்வு ஜோதிடத்தில் பண்டய காலத்திலேயே எழுதப்பட்டு இருக்கிறது என்பதை பற்றிய பதிவு இது!!


[இன்று பல்கலைகழகத்தில் எடுக்கும் மருத்துவ ஜோதிட படிப்பில் இவை இருக்கிறதா என்பது நான் அறியவில்லை இருந்தால் சந்தோசமே இல்லையெனில் இனி இதையும் சேர்த்து படியுங்கள் ]

கடந்த காலத்தில் “காலப்ரகாசிகை”
[ புத்தக அன்பளிப்பு  தஞ்சை பவளக்கண்ணன் ]
எனும் ஜோதிடநூலில் இருந்த சில நுட்பங்களை எம்முடைய கோணத்தில்  
பதியப்பட்ட்து அதன் சாராம்சம்
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகள் பல எடுத்தும் பயனில்லை என்று சொல்வோர்களை தான் இப்போதெல்லாம் அதிகமாக காண முடிகிறது !!!!!
மருந்துகள் சரியில்லையா ????*?*
மருத்துவர் சரியில்லையா ???****
நோய் தீரும் எனும் நம்பிக்கை இல்லாமல் போகும் காரணம் தான் என்ன எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கவலையோடு இருப்போர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும் பதிவு இது !!!!
(
நாள் செய்யாதை நல்லாரும் செய்யார் )
காலப்ரகாசிகை எனும் அற்புதமான நூலை புரட்டிய போது சிக்கிய தகவல்களை கொஞ்சம் நீங்களும் வாசியுங்கள் !!!!!
"உக்ர யோகங்கள் "
(
தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள் )
திருதியை அல்லது அஷ்டமி உடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் நாள் !!!!
சதுர்த்தி அல்லது அஷ்டமி உடன் கூடிய உத்திர நட்சத்திரம் நாள்
பஞ்சமி திதியும் திருவோணம் கூடிய நாள்
சஷ்டி திதியுடன் மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள்
சப்தமி திதியுடன் ரேவதி நட்சத்திரம் கூடிய நாள்
நவமி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாள்
தசமி திதியுடன் பூசம் நட்சத்திரம் கூடிய நாள்
திருதியை அல்லது துவாதசி திதியுடன் அனுஷம் நட்சத்திரம் கூடிய நாள்
ஏகாதசி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் அல்லது மகம் நட்சத்திரம் கூடிய நாள்
தசமி திதியுடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாள்
திரயோதசி திதியுடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய நாள்
போன்றவை "உக்ர யோகங்கள் "என்ற பெயரில் அழைக்கப்படுகிறது !!!
"
உக்ர யோகங்கள் "நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள் எடுத்தால் 
"
நோய் தீரும் "என்கிறது 
"
காலப்ரகாசிகை "ஜோதிட நூல் 
எதை செய்தாலும் முதலில் அதன்மேல் நம்பிக்கையை வைத்து முயற்சி செய்யுங்கள் !!!
"
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் """
எல்லோரும் இன்புற்று இருக்க !!!!!!
எல்லாம் வல்ல "தன்வந்திரி பகவான் "அருள்புரியட்டும் !!!!!!
” “”

 இந்த தீராதநோய்க்கு அறுவை சிகிச்சை போன்றவை செய்ய 

உகந்த நாட்களை பட்டியல் செய்யுங்கள் என தொடர்ந்து 

கோரியதாலும் ஜோதிடத்தை வைத்து வாழும் நம்மால் மக்களுக்கு 

உதவ வேண்டும் எனும் எண்ணத்துடன் வரும்


சார்வரி ஆண்டில் மருத்துவர்கள் “மிகவும் முற்றியநோய் அறுவை

 சிகிச்சை செய்தாலும் காப்பாற்ற இயலாது “என்று கைவிடப்பட்ட 

நோயாளிகள் யாரேனும் இந்த “உக்ரயோகநாளில்” தக்கதொரு அறுவை

 சிகிச்சை செய்து “உயிர் மீண்டார்கள்”என்றால் அதை பின்னிட்டு 

இங்கே தகவல்கள் செய்யுங்கள் …இப்பதிவின் நோக்கமே 

“ஜோதிடத்தில் இல்லாதது ஒன்றுமே இல்லை “

என்பதே !!!

வரும் சார்வரி ஆண்டு தீராத நோய்க்கு சிகிச்சைகள் எடுத்து நோய் தீர்த்து வாழ சில நாட்கள் எம்முடைய தேடலில் சிக்கியது அதன் பட்டியல் பின்வருமாறு::----

1] சித்திரை மாதம் 12 ம் தேதி [ 25-04-2020] சனிக்கிழமை இரவு 8.57 நிமிடங்கள் முதல் மறுநாள் சித்திரை 13ம் தேதி ஞாயிறு பகல் 01-23 வரை திருதியை திதியும் ரோஹிணி நட்சத்திரமும் கூடிய 16மணி 26நிமிடங்கள்
2] வைகாசி மாதம் 27ம் தேதி [09-06-2020] செவ்வாய்க்கிழமை இரவு 07-36 முதல் மறுநாள் புதன்கிழமை மதியம் 02-57 வரை பஞ்சமி திதியும் திருவோணம் நட்சத்திரமும் கூடிய 19மணி 21நிமிடங்கள்
3] ஆனி மாதம் 13ம்/14ம்  தேதி பின்னிரவு  [27/28-06-2020] நள்ளிரவு [விடிந்தால் ஞாயிறு] 02-54 முதல் காலை 08-46 வரை அஷ்டமி திதியும் உத்திர நட்சத்திரமும் கூடி  5மணி 52 நிமிடங்கள்
4] ஆனி மாதம் 17/18 ம் தேதி பின்னிரவு [ 01/02-07-2020] [விடிந்தால் வியாழன் ] அதிகாலை 02-34 முதல் வியாழன் மதியம் 03-17 வரை துவாதசி திதியும் அனுஷமும்  13மணி 13நிமிடங்கள்
5] ஆனி மாதம் 28ம் தேதி [ 12-07-2020] ஞாயிறு காலை 08-18 முதல்  மாலை 03-48 வரை சப்தமி திதியும் ரேவதி நட்சத்திரமும் 7மணி 30நிமிடங்கள்6] ஆனி 31ம் தேதி [ 15-07-2020] புதன் இரவு 10-20 முதல்
மறுநாள் ஆடி-1 [ 16-07-2020] வியாழன் மாலை 06-53 வரை ஏகாதசி திதியும் கிருத்திகை நட்சத்திரமும் 12மணி 57நிமிடங்கள்  7] ஆடி 28ம் தேதி [ 11-08-2020 ] புதன் காலை 11-17 முதல்
[12-08-202] அதிகாலை 03-26 வரை நவமி திதியும் கிருத்திகை நட்சத்திரமும் 16மணி 09நிமிடங்கள்
8] ஆவணி 24ம் தேதி [9/10-09-20202] புதன் இரவு விடிந்தால் வியாழன் 02-06 முதல் மதியம் 01-39 வரை அஷ்டமி திதி ரோஹிணி நட்சத்திரமும் 11மணி 23நிமிடங்கள்  9] புரட்டாசி 21ம் தேதி [ 07-10-2020] புதன் இரவு 08-35 முதல்
மறுநாள் புரட்டாசி 22ம் தேதி [08-10-2020] வியாழன் மாலை 04-39 வரை சஷ்டி திதியும் மிருகசீர்ஷம் நட்சத்திரமும் 20மணி 04நிமிடங்கள்10] புரட்டாசி 26ம் தேதி  [ 12/13-10-2020 ] புதன் இரவு  விடிந்தால் விடிந்தால் வியாழன் நள்ளிரவு 12-29 முதல் வியாழன் மதியம் 02-36 வரை ஏகாதசி திதியும் மகம் நட்சத்திரமும் 14மணி 07நிமிடங்கள்11] புரட்டாசி 28ம் தேதி [14-10-2020] புதன் இரவு 08-41 முதல் மறுநாள் புரட்டாசி 29 [15-10-2020] வியாழன் காலை 08-33 வரை திரயோதசி திதியும் உத்திர நட்சத்திரமும் 11மணி 52நிமிடங்கள்12] ஐப்பசி 17ம் தேதி [2/3-10-2020] திங்கள் நள்ளிரவு [விடிந்தால் செவ்வாய்] 01-14 முதல்  மறுநாள் ஐப்பசி [ 3/4-10-2020] செவ்வாய் இரவு [விடிந்தால் புதன்] 02-30 வரை திருதியை திதியும் ரோஹிணி நட்சத்திரமும் மணி நேரம்
13]மார்கழி 25 [09-01-2021] சனிக்கிழமை இரவு 07-17 முதல் மறுநாள் மார்கழி 26 [10-01-2021] ஞாயிறு காலை 10-49 வரை துவாதசி திதியும் அனுஷம் நட்சத்திரமும் 25மணி 16நிமிடங்கள்
14]தை 6ம் தேதி [19-01-2021] சனிக்கிழமை 07-17 முதல் மறுநாள் மார்கழி 27 [ 20-01-2021] ஞாயிறு காலை 10-49 வரை துவாதசி திதியும் அனுஷம் நட்சத்திரமும் 15மணி 37நிமிடங்கள் 

 15] தை 18ம் [ 31-01-2021/ 01-02-2021 ] செவ்வாய் பின்னிரவு 01-18 முதல் [விடிந்தால் புதன்]  மறுநாள் மாலை 06-25 வரை சதுர்த்தி திதியும் உத்திர நட்சத்திரமும் 17மணி 07நிமிடங்கள்


16] மாசி 7ம் [19/20-01-2021] வெள்ளி பின்னிரவு [விடிந்தால் சனி] 05-57 முதல்  01-32 வரை சப்தமி திதியும் ரோஹிணி நட்சத்திரமும் 7மணி 35நேரம்  

இந்த நாடகள் எல்லாம் தீராத வியாதி என கருதுவதற்க்கு “சிகிச்சை “எடுக்க உகந்த நாட்கள் ஆகும்..

இவையெல்லாம் சாத்தியமா என கருத வேண்டாம் …

மகாபாரதம் அறிவீர் அதில் “கெளரவர்கள் “ 100 பேர் கருக்கலைந்தபோது 100 குடுவையில் பிடிக்கப்பட்டு 100 சகோதர்கள் உருவானார்கள் ..முதல் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது விநாயகப்பெருமானுக்கு நடந்த்து.. இன்று மருத்துவத்தில் அதையெல்லாம் சாத்தியம் ஆக்கி இருக்கிறது….

“உத்ரயோகம்” இனி வரும் காலகட்டத்தில் ஒவ்வொரு மருத்துவரும் சிகிச்சை பலன் அளிக்காத நோயாளிகளுக்கு “சோதித்து பார்த்து” அதில் “மருத்துவ வெற்றி” அடைய அதிக நாட்கள் இல்லை !!!

இதோ 

தமிழ் 60 ஆண்டில் 34வது ஆண்டு ஆகிய சார்வரி  ஆண்டு நெருங்கி

 விட்ட்து!!!

மக்களின் நலன் கருதி வெளியிடுவது!!!

ஜோதிட பிரம்மஸ்ரீ C.G.ராஜன் ஜோதிட நற்பணி மன்றம்
என்றும் ஜோதிடப்பணியில்!!!
எனது யூடியூப் சேனலில் வந்து எமது ஜோதிட கருத்துக்களை அறிந்து 
கொள்ளுங்கள் :- 

Astro Senthil Kumar

 ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்
புதுபஸ் நிலையம் பின்புறம்
 பெருந்துறை   -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார் 
Whats App:- செல்: +91 98434 69404    
[ புதியதாக ஜோதிடம் பயில்வோர் அணுகவும்]
பாரம்பரிய அடிப்படையில் பயம் இல்லாமல் ஜோதிட பலாபலனை சொல்ல இயலும் 
அனைவரும் ஷேர் செய்யுங்கள்..
நன்றி வணக்கம்..


Tuesday 24 March 2020

வாடகை வீட்டில் உள்ள நபர்கள் படிக்கவும்

தற்போதைய நிலை
எங்கும் செல்ல முடியாத நிலை...
நாம் உண்ணும் உணவுக்கு ஏங்கும் நிலை என இருக்கும் பொழுது 
கடை வாடகை வட்டி தவணை 
சீட்டு பணம் என எதையும் உங்களால் செலுத்த இயலாத போது உங்களுக்கு
மனிதாபிமானம் இல்லாமல் நெருக்கடி கொடுத்தால் அதை நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள
வட்ட ஆட்சியாளர
எனும் தாசில்தார் இடத்தில் கொண்டு செல்லுங்கள்....
உங்கள் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை எதிர் வரும்
01-07-2020 வரை தீர்க்கவே இயலாத போது நீங்கள் எப்படி
ஏப்ரல மாதம்
மே மாதம்
ஜூன்மாதம் என வாடகை கொடுத்து வாழ இயலும்...
இவைகள எல்லாம்
ஜோதிட ரீதியாக 
இப்படி நிகழும் என மார்கழி மாதத்தில் கணித்தேன்..
அதை வெளியிட்டு மக்களை குழப்பம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் செய்யக்கூடாது என நினைத்தேன்...
25-12-2019
முதல்
இன்று வரை ஒரு 90 நாட்கள் கடந்து வந்து விட்டோம்...
இன்னொரு 90 நாட்கள் முட்கள் நிறைந்த பாதையில் பயணித்து தான் வர வேண்டும்.. வைரஸ் நோய் எதிர்ப்பு என்பதை விட
நீங்கள் பொருளாதார ரீதியாக ஒரு போரை துவங்கி தான் தீர வேண்டும்...
பெருந்துறையில் இருந்து
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம்
Ask
எனும்
Astro Senthil Kumar
What's App 9843469404