Friday 17 April 2020

ஜோதிட பயிற்சி தளம் [ பகுதி 7]

சந்திரனின் தன்மைகள் ஜோதிட பயிற்சி தளம் பகுதி [7]


அனைவருக்கும் வணக்கம் நான் பெருந்துறையில் இருந்து Ask எனும்
Astro Senthil Kumar எழுதுகிறேன்.

அடிப்படையில் ஜோதிடத்தில் ஒன்றும் தெரியாது என்பவர்களுக்கு என இந்த தளம் 
https://www.youtube.com/channel/UCgkT8E50F8EbZfT0yOIT45A?view_as=subscriber
யூடியூப்பில் எனது சேனல் லிங்கில் உங்களுக்கு என ஜோதிட பதிவுகளை பதிகிறேன்.. அதையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...



சந்திரனின் தன்மைகள்

ஆட்சி :-கடகம்

உச்சம் :- ரிஷபம்

நீசம் :- விருட்சிகம் 

மூலத்திரிகோணம் :- ரிஷபம்


நட்சத்திர அதிபதி :- ரோஹிணி,அஸ்தம் , திருவோணம்.,

நிறம்:- வெண்மை


குணம் :- வளர்பிரையிலும் தேய்பிறை சஷ்டி வரை சாத்வீகம் [ தேய்பிறை சஷ்டிக்கு பின் குரூரன்] 


மலர் :- மல்லிகை 


ரத்தினம் :- முத்து


மரம் : முருங்கை 


கிழமை :- திங்கள்


தேவதை :- பார்வதி தேவி


இலக்கு :- தென் கிழக்கு


ஆசான வடிவம் :- சதுர வடிவம் 


வாகனம் :- நரி


தானியம் :- பச்சரிசி 


உலோகம்: - ஈயம்


நோய் :- சீதளம் 


சுவை :- இனிப்பு


பால் :- பெண்


கால் :- பலகால் 


ஜாதி :- பிராமணர்


இயக்கம் :- தவழும்


மச்சம் :- இடது


தழும்பு :- தலை


இடம் :- நீர்த்துறை


தாது :- தாது, சரம் 


தாவரம் :- கொடி


தாவரத்தின் ஆளுமை :- கிழங்கு


பஞ்ச பூதம்:- தாய்


திசை :- தென் கிழக்கு 


உறுப்பு :- முகம் 


ஆளுமை :- நீர்பரப்பு 


தோற்றம் :- குழப்பம்


உடலின் ஆதிக்கம் :-  இரத்தம்  


செயல் :- நிலையற்ற 

மாற்று பெயர்கள் :- அமுதகதிரோன், அம்புலி, அரி, அரிச்சகன், அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன், இராக்கதிர், இனன், உடுபதி, உடுவின் வேந்தன்,கலாநிதி, கலையினன், களங்கன், குபேரன், குமுத நண்பன், குரங்கி, குழவி, சசி, சீதன், சுதாகரன், சோமன், தண்சுடர், தண்ணவன், தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நிசகரன், நிசாபதி, நிலவு, பசுங்கதிர்த்தே, மதி, மதியம், மரனேந்தி,  முயலின் கூடு, விது, வீபத்து, வெண்கதிரோன், வேந்தன், பிறை, குழவி,. 


வழிபாட்டு ஸ்தலம் :- திருப்பதி 

சந்திரன் குறித்த கூடுதல் தகவல்


சூர்ய குடும்பத்தில் உள்ள சந்திரன் பூமியின் துணைக்கோள் ஆகும். பூமியை சந்திரன் 29 1/2 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. சந்திரனில் இருந்து ஏற்படும் அதிர்வலைகள் மூலமாக கடல் கொந்தளிப்பும் மற்றும் கடல் உள்வாங்குதலும் நிகழ்கிறது. 



ஜோதிடத்தில் சந்திரன் ஒருவருடைய ஜென்ம ராசி மற்றும் ஜென்ம நட்சத்திரத்தையும் அடையாளம் காட்டுகிறார். சந்திரன் நின்ற ராசியை ஜென்ம ராசி என்கிறோம். ஜாதகரின் தொடக்க கால திசா காலத்தை அறிவிப்பவர் சந்திரனே ஆவார், [உதாரணம் ] சதயம் ஜென்ம நடசத்திரம் எனில் ராகு திசை ஆரம்பம் ஆகும்.. அதில் கர்ப்ப செல் போக இருப்பை ஜெனனத்தை வைத்து கணிக்கப்பது ஆகும்,, விசாகம் எனில் குருதிசை ஆரம்பிக்கும், சந்திரன் ஒரு ராசியை 2 1/4 நாட்கள் கடந்து செல்வார்..


கோட்சார ரீதியாக சந்திரன் ஜென்ம நட்சத்திரத்திற்கு 8ல் மறையக்கூடாது. அவ்வாறு மறையும் பொழுது மனநிலை ஒருநிலை இல்லாமல் மனநிலை மாற்றமும், ஞாபகமறதி, உடல் ரீதியாக தொல்லைகளை ஏற்படுத்தும்.. 


வளர்பிறையில் பெளர்ணமி வரை சந்திரன் சுபராகவும் தேய்பிறையில் சஷ்டி வரை சுபராகவும் தேய்பிறை சஷ்டிக்கு பின்னர் பாவராகவும் செயல் படுவார். 

சூர்யன் செவ்வாய்-புதன் -குரு -சுக்கிரன் சனி என ஐந்து கிரகங்களுக்கு மட்டுமே ஒளியை தரும்,, சூர்யன் எப்பொழுதும் சந்திரனுக்கு ஒளியை தருவதில்லை,மாறாக அமாவாசை 1]முதல் நாள் தேய்பிறை சதுர்தசி 2]அமாவாசை அதற்கு 3]மறுநாள் பிரதமை ஆகிய மூன்று நாட்களும் மற்ற கிரகங்களுக்கு செல்லும் ஒளியை திருடி கொள்கிறது ஆகையால் சந்திரனுக்கு திருடன் என ஒரு பெயரும் உண்டு, சந்திரன் தாயை குறிப்பதால் மாதுர்காரகன் எனவும் பெயருண்டு..

சந்திரனை வைத்தே திதிகள் கணக்கீடு செய்யப்படுகிறது, சூர்யன் இடத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் 12 பாகை விலகி செல்ல செல்ல ஒவ்வொரு திதியும் கூடுதல் ஆகி 15நாளில் 15x12+180 என சூர்யனுக்கு நேர் எதிர்கோட்டில் வரும்பொழுது பெளர்ணமி ஆகிறது . சூர்யன் சந்திரன் சேர்க்கை அமாவாசை ஆகும்..                                


விண்வெளி பகுதியில் பூமிக்கு 2,48,250மைல்களுக்கு அப்பால் சந்திரன் பூமியை சுற்றி வருகிறது,,இதன் சுற்றளவு 6,800 மைல்கள், குறுக்களவு 2,162 மைல்கள் ஆகும், சந்திரன் 28 நாட்களும் 8மணி நேரமும் எடுத்து தன்னை தானே சுற்றி வரும், இது பூமியை ஒரு மாதம் எனும் அளவில் 29 நாட்கள் 12 மணி நேரமும் 44 விநாடிகளில்   சுற்றி வரும்., 


சந்திரனின் காரகத்துவம் /தொழில்



புகழ், புக்தி, கற்பனை, சலன புக்தி, அமைதி, கொள்கை, பிழைப்பு, சகிப்பு தன்மை, கலையுணர்வு, தாய்மை குணம், பிடிவாதம், தைரியம்,வைராக்கியம், அஞ்சா நெஞ்சம், மனித நேயம், தலைக்கனம், ஆணவம்,  


காரகத்துவம் 

தாய் , மாமியார், உணவுப்பொருட்கள், இடது கண், மார்பு, இதயம், குங்குமம், வீட்டின் இடது ஜன்னல்,  



தொழில்

நீர் தொடர்ப்பான தொழில், கடல் கடந்து சென்று வாழ்வது, பால்,தயிர்,வெண்ணை போன்ற வியாபாரங்கள், விவசாயம், உணவுப்பொருள் விற்பனையாளர், கவிதை எழுதுபவர், மளிகை கடை, நெல் வியாபாரம், பிறருக்கு வழிகாட்டும் தொழில் உயர்ந்த பதவிகள், மேலாண்மை தொழில், முக்கிய உயர்ந்த பதவிகள், தலைமைப் பொறுப்பு போன்றவைகள்


சந்திரன் + பாவத்தொடர்பு :- 

1ம் பாவம்


வேகமான சிந்தனை ,விரைவான செயல்பாடுகள், புத்திக்கூர்மை, ஞாபகசக்தி, சுறுசுறுப்பு, மனோதிடம், மனசஞ்சலம், தாயுடன் பற்று, நீர்பாங்கான அழகான உடல்வாகு


2ம் பாவம் 

அழகான புன்னகை முகம், மென்மையான பொறுமையான குணம், நீர்த்துறை மூலம் வருமானம் , உணவுப்பொருட்களால் வருமானம், தாயார் மூலம் தாய் வழி சொத்தின் மூலமாக வருமானம், தாய்மொழி சார்ந்த கல்வி மூலமாக செல்வாக்கு அடைதல், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, மனோதத்துவ கல்வி பயிலுதல் 


3ம் பாவம் 



அதிகமான சஞ்சலங்கள், அதிக மனக்குழப்பம், வேகமான தகவல் தொடர்புகள், ஒப்பந்தங்களால் சுறுசுறுப்பு, கலை நுட்பமான செயல்களில் ஈடுபாடு , தெளிவான வேகமான பேச்சாற்றல் , தாய் மீது அதிகபாசம், மன மகிழ்ச்சி , சபல எண்ணங்கள், 



4ம் பாவம்


தாயிடம் அதிக பாசம், தாய்வழி நன்மைகள், தாய் வழி உறவினர் தொடர்பு, நீர்வழி சார்ந்த தொழிலில் மேன்மை அடைதல், உணவு பொருட்கள் சார்ந்த தொழிலில் மேன்மை, கலைகளில் அதிக நாட்டம் , தாய்மொழியில் உயர்கல்வி, நீர்வழி சார்ந்த உயர்கல்வி, [கடல் சார்ந்த கல்வி] சுற்றுப்புற சூழல்கள் மீதான அக்கறை., 

5ம் பாவம்


அதிவேகமான சிந்தனை, நல்ல நினைவாற்றல், ஞாபக சக்தி அதிகம் இருப்பதல், காதல் உறவுகள் , சஞ்சல புக்தி , கலையாற்றல், வேகமான பிறருக்காக இறைவழி நடத்துதல், முடிவுகளில்  தடுமாற்றம், நீர்வழிப்பயணம் , ஏற்றுமதி-இறக்குமதியில் ஆதாயங்கள் காணல், பெண் குழந்தைகள் மட்டுமே அமைதல், அறிவாற்றல் நிறைந்த குழந்தைகள், பாசத்துடன் அனைவரிடத்தில் இருத்தல், பெண் தெய்வ வழிபாடு - பார்வதி  

6ம் பாவம்


தாயார் நோயினால் அவதி அடைதல், தாயாரிடம் விரோதம் ,தாய் வழி தொல்லைகள், அவமானங்கள், தாயார் வழி சொத்து வழக்குகள், கடன் உபாதை அடைதல், உடலில் நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் அடைதல், பருமான தடித்த உடல், அகால போஜனம் , தெளிவற்ற மனநிலை , மன அழுத்தம், பைத்தியம் பிடித்தல், தாய் வழியில் விரையங்கள் மற்றும் இழப்புகள், அயல்நாட்டு வியாபார தொடர்புகள், 


7ம் பாவம்




மென்மையான குணங்கள், அழகான தோற்றம் , அழகான மென்மையான பேச்சு பழக்கம், களத்திர நாட்டம் விருப்பம், அதிக நண்பர்கள் வட்டம், பெண் தோழியர் தேடி வந்து அமைவது, சலனபுக்தி மிகுந்து இருத்தல், சபல குணத்தால் காதல் வயப்படுதல், கள்ள காதல் தொடர்பு [ஏழாம் அதிபர் கெட்டு இருந்தால் மட்டும்] , குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள், தாயார் வழி ஆதரவுகள் அதிகம் பெறுதல், 

8ம் பாவம்


தாய் வழி பிரச்சனை, திருப்தியின்மை, அவமானங்கள், தாய் வழி தீராத பகை, பிரிவினைகள், புத்தியின் வேகம் குறைதல், அதிக ஞாபக மறதி , நீரினால் ஆபத்து அடைதல், கண்டம் பீடித்தல், உடல் நலம் பாதிப்படைந்து அதிக நாட்கள் சிகிச்சை பெறுதல், மன அழுத்தம் , வசீகரமான முக அமைப்பு, பாவ பரிவர்த்தனைகள், கள்ள உறவால் பெயர் கெடுதல், கற்பனை சக்திகளை தவறுதலாக பயன்படுத்துதல், மண வாழ்க்கையில் திருப்தியின்மையால் மண முறிவுகள் ,,

9ம் பாவம்



வேகமான சிந்தனைகள், தாய் வழி நன்மைகள்., மதிப்பு மரியாதை பெற்று வாழ்தல், கவுரவம் அடைதல், அதிர்ஷ்டகரமான தாயாரை பெறுதல், பேச்சாற்றல் , மிகுந்த ஞாபக சக்தி, வேகமான தகவல் தொடர்பை நடைமுறை படுத்துதல் மற்றும் கையாளுதல், அடிக்கடி மனமாற்றம் அடைதல், ஆராய்ச்சிகளால் கேள்வி ஞானம் அடைதல்,.

10 ம் பாவம்



தொழில் மூலம் வேகமான இயக்கங்கள் கூடிய தொழில்களை செய்தல், கூர்மையான புத்தியுடன் கூடிய தொழில் செய்தல் , வேகமான பண புழக்கம் கொண்ட தொழிலை அமைத்து கொள்ளுதல், நீர் தொடர்பான தொழில்கள் செய்தல், உணவு பொருட்கள் வியாபாரம் அமைதல், தாய்வழி தொழிலில் ஈடுபடுதல் ,,

11ம் பாவம் 



தாய் வழி நன்மைகள் ஆதாயங்களை அடைதல், வேகமான சிந்தனை, திறன் கூர்மையான புக்தி ,ஞாபக சக்தி, விரைவான தன வரவு , கடல்வழி வியாபாரத்தினால் ஆதாயங்களை அடைதல், உணவுப்பொருள் வழி ஆதாயங்களை அடைதல், திரவப்பொருள் ஆதாயங்கள் , மறைமுக நண்பர்கள் அமைதல் , வேகமான விருப்பங்களை நிறைவேற்றி கொள்ளுதல், 




12ம் பாவம்



தாய் வழி பயனற்ற நிலை, ஞாபக மறதி, சபலபுத்தி, வேகவுணர்வு, கள்ளத்தனம் , கடல் தாண்டிய வாழ்க்கை, வெளிநாட்டு வர்த்தகம் மூலமாக ஆதாயங்கள் அடைதல், அயல்நாட்டின் தொடர்பு, திரவப்பொருள் வழி இழப்பை சந்தித்தல், உணவுப்பொருள் வழி இழப்பை அடைதல் போன்றவை அமையும்



ஜோதிட பயிற்சி தளம் 8 ல் பேசுவோம் எல்லாம் ஒரு நோட்டில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள்..

மேலும் தொழில் முறை ஜோதிடர்கள் ஆக தனி பயிற்சி உண்டு வாட்ஸ் அப் எண் 9843469404 மூலமாக அணுகவும்..

தனி நபர் ஜாதக ஆலோசனைகள் பெறWhat's App 9843469404 

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 

பெருந்துறை
Astro Senthil Kumar.




No comments:

Post a Comment