Saturday, 27 June 2015

மாசியில் மனை கோள் செய்யலாமா???

வாஸ்து நித்திரை விட்டு எழும் காலம் !!!!!
பொதுவாக அனைத்து ஜோதிடர்களும் வாஸ்து பூஜைக்கு நேரத்தை எப்படி கணக்கீடு பஞ்சாங்களின் எழுதி கொண்டுள்ளன என்பதை பற்றி அறிந்து இருக்கிறார்களா எனில் கொஞ்சம் சந்தேகமே ….அதை எப்படி கணக்கியல் செய்யலாம் என்பதை பற்றிய இப்பதிவு !!!!!!
“சித்திரைமா தம்பத்துத் தேதிதன்னிற் சிறந்த நாழிகையைந்திற் றெளிவதாகும் .
மத்ததொரு வைகாசி யிருபத்தொன்றில் வருமெட்டு நாழிகையில் விழிப்பதாகும்
சத்தியா யாடியைப் பசியிலுந்தான் தக்க பன்னோர் தேதியில் நாழிகையிரண்டாம் பத்தியா யாவணியி லாறாந்தேதி பகரிருபத் தொன்றின்மேல் விழிப்பான்
கார்த்திகைமா தந்தனிலே யெட்டாந்தேதி கருத்தாய் பார் நாழிகையும் பத்தாகும் சீர்த்தியுள்ள தைமாதம் பன்னிரண்டாந் தேதியதில் நாழிகையு மெட்டின்மேலாம் ஆர்த்தியுள்ள கணிதவிதி மாசிமாதம் அறிகுவா யிருபதாந் தேதி தன்னில் பார்த்திபனே பகலெட்டு நாழிகைக்கு படுக்கை விட்டெழுந்திருப்பான் வாஸ்து தானே !!
ஆகையா லந்தநா ழிக்கு மேலே அடவாக வொரு முகூர்த்த வேளை தன்னில் சோகையிலா வாஸ்துவும் நித்திரையை விட்டுச் சுகமாக வெழுந்திருப் பனந்நேரத்திற் பாகமுடனந்த க்காலத்தில் நாட்கள் பாங்குடனே தான் பார்த்து மனைகோல் செய்தால் தேகமது அழியாமல் வீடுகட்டிச் செல்வமொடு மனை மக்களுடன் வாழ்வானே “”
——சுந்தரானந்தர் அருளி செய்த “ஜோதிட முகூர்த்த சிந்தாமணி 300″ —+பாடல் எண் ;-227-229
இப்பாடல் படி
“சித்திரை 10 ம் தேதி 5 நாழிகை அளவில் (சூர்ய உதயம் பின்னிட்டு 2மணி நேரத்தை அந்தந்த ஊருக்கு தள்ளி கணக்கியல் செய்யவும் )
வைகாசியில் 21 ம் தேதி 8 நாழிகை (சூர்ய உதயம் முதல் 3-12 மணி நேரத்தை தள்ளி )
ஆடி 11ல் 2 நாழிகை தள்ளி (சூர்யோதம் பின் 0-48 நிமிடங்கள் தள்ளி )
ஆவணியில் 6ம் தேதி 21 நாழிகை (சூர்யோதம் முதல் 8-24 நிமிடங்கள் தள்ளி )
இது மாலை நேரத்தில் மட்டுமே வரும்
ஐப்பசி மாதத்தில் 11ம் தேதி 2 நாழிகை (சூர்யோதம் முதல் 0-48 நிமிடங்கள் கழித்து )
கார்த்திகை 8ம் தேதி 10 நாழிகை (சூர்யோதம் முதல் 4-00 மணி நேரம் கழித்து )
தை மாதம் 12ம் தேதி 8 நாழிகை (சூர்யோதம் முதல் 3-12 நிமிடங்கள் கழித்து )
சர்ச்சைக்குறிய
மாசியில் 22 ம் தேதி 8 நாழிகை (சூர்ய உதயம் முதல் 3-12 மணி நேரத்திற்கு பின் )
குறிப்பு ;-பாடலில் “மாசிமாதம் அறிகுவா யிருபதாந் தேதி (20மண் தேதி )தன்னில் “என்றே சொல்கிறது ….ஆனால் இப்போது பஞ்சாங்கத்தில் 22 மண் தேதியை தொடர்ந்து அச்சிட்டு வருகிறார்கள் ……
(இதைப்பற்றிய கருத்து கேட்பு பஞ்சாங்களின் கணிதர்களை கேட்க மாசியில் 22 தான் சரியான தேதி என்கிறார்கள் .. )
எம்முடைய ஆய்வில் சூர்யன் கும்பத்தில் ராகு நட்சத்திரம் சதயம் கடந்து குருவின் நட்சத்திரம் ஆன “பூரட்டாதியில்” பிரவேசிக்கும் காலத்தை தான் “சுந்தரானந்தர் “சொல்லி இருக்கிறார் என்பதும் சமயங்களில் பிரவேசம் ஒரிரு நாட்கள் முன்பின் வரும் என்பதால் பஞ்சாங்கங்கள் மாசி 22 ஐ தேர்வு செய்து இருக்கிறார்கள்…
மனதில் உறுத்தல் இல்லாமல் செய்தால் மாசியில் மனைகோள் எனும் “வாஸ்து பூஜை “செய்யலாம்..
“எப்படி மாசியில் மனை கோள் ஆகாது” என முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்களே என்று மனதில் தோன்றலாம் .. அதே முன்னோர்கள் “தையில் தலை [தலைச்சன் பிள்ளை எனும் மூத்த சகோதரத்திற்க்கு ] கல்யாணம் ஆகாது “என்கிறார்கள்..உண்மையில் “ஜேஷ்டா புத்ர-புத்ரிகளுக்கு” [குடும்பத்தில் மூத்த சகோதர -சகோதரிக்கு ] ஜேஷ்டா மாதம் எனும் “ஆனியில் தான் “ விவாஹம் செய்யக்கூடாது .அதுபோலவே தான் இந்த “மாசியில் மனைகோள் ஆகாது “என சொன்னதும் சித்தர் பாடல் படி உறுதியாக மாசியில் மனை கோள் செய்யலாம் …
இது தொடர்ந்து வருடா வருடமும் பஞ்சாங்கமும் “வாஸ்து நித்திரை விட்டு எழும் நேரத்தை கொடுத்து வருகிறது ……..
ஒரு ஜோதிடராக இருப்போர்களால் உடனடியாக ரெடிமேட் வாஸ்து அட்டவணை 50+ ஆண்டுக்கும் மேலாக இந்த பாடலை கொண்டு கணிக்கிட முடியும் ……ஜோதிட நண்பர்கள் முடிந்தளவுக்கு சிரத்தையுடன் பழைமையான ஜோதிடப்பாடலை தேடுங்கள் உங்களுக்கு எவ்வாறான கேள்விக்கும் விடைகள் உண்டு !!!!!
இதர விபரங்கள் நிஜமான வாஸ்து நாட்கள் பற்றிய தாம்பரம் பாலு சரவண சர்மா அவர்களின் இணையத்தில் காணலாம் !!
http://www.prohithar.com/images/true-sayana-vasthu-dates.jpg
என்றும் ஜோதிடப்பணியில் !!!!!
ஶ்ரீவீரபத்ர ஜோதிட மையம்
Astro Senthil Kumar ……