Sunday, 22 December 2013

முன்னோர் கர்ம வினை நிச்சயமாக பாதிப்பு தரும்

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் அண்ணனுக்கு 3 மகன்கள்.
தம்பிக்கு 3 மகள்கள். அதில் தம்பி 3 மகளுக்கும் திருமணம் செய்து 7 பேரக்குழந்தைகள். ஆனால் மூத்தவ்ர் வீட்டில் ஒருவருக்கும் திருமணம் இல்லை. முதல் பையன் 37 வயது, 2 வது பையன் 35 வயது, 3-வது பையன் 30 வயது, ஆனால் இன்னமும் ஒருவருக்கும் திருமணம் இல்லை. முதல் பையன் மூலம் அதுவும் ஹனுமன் ஜெயந்தியில் பிறந்தவர், எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக மிக பெரிய சந்தேகம் , இவர்கள் குடும்பம் “பிரம்மசாரி சாபம்” இருக்குமோ என்று. பின்னிட்டு அவர்களிடமும் கேட்க முடியாது தயக்கம், ஒரு நாள் அவர்கள் ஊர்காரர் வயதான பெரியவர் ஒருவர் ஜாதகம் பார்க்க வந்தார், அவருக்கு பலன் சொல்லி யாரும் காத்திருப்பில் இல்லாமல் இருக்க நான் அவர்கிட்டே கொஞ்சமாக பேச்சு இந்த திருமணம் இல்லாத பையனை பற்றி திருப்பி பேசினேன், “அவரும் என்ன செய்ய ஒருத்தனுக்கும் கல்யாணம்” அமையவில்லையே? என வருத்தப்பட்டார், நானும் அவரிடம் எனக்கு என்னமோ அவர்கள் குடும்பம் “பிரம்மசாரி சாபம்” பெற்று இருக்குமோ? என சந்தேகம் எனக்கு இருப்பதை சொன்னேன், அவர் என்னை ஆழமாகப்பார்த்தார், பின் உங்க கிட்ட யாராவது சொன்னார்கள? என கேட்டார், நான் இல்லை முதல் பையன் மார்கழி அமாவாஸை அதுவும் இல்லாமல் ஹனுமன் ஜெயந்தியில் பிறந்து இருக்கிறார். அதனால் நான் ஜோதிட ரீதியாக சொன்னேன் என்றேன், பின்னர் அவர் சொன்ன தகவல் அதிர்ச்சி அடைய வைத்தது,
அவர் சொன்னதகவல்:-
இந்த பையனின் தாத்தா அந்த ஏரியா மிராசுதார், அவருக்கு ஒருதம்பி , சுமார் 50 ஏக்கர் பூமி அந்தக்காலத்தில் இருந்துள்ளது, இந்த பையனின் சின்ன தாத்தா
[ தாத்தாவின் தம்பி] சிறந்த முருகு பகதர், அவர் விவசாய வேலையை எதுவும் பார்க்காமல் அடிக்கடி முருகர் தரிசனம் காண “அறுபடை” பயணம் , அல்லது மருதமலை பழனி மலை என சென்று விடுவார், திருமணம் வேண்டாம் என சொன்னது அண்ணனுக்கு மிகுந்த சந்தோசம் [ பங்கு தர வேண்டியதில்லையே],தம்பியின் பயணத்திற்க்கு எந்த தடையும் விதிப்பதில்லை. செலவுக்கும் பணம் தந்து மயக்கி வைத்து இருந்தார், சில நாட்களில் தம்பி அண்ணனிடம் “சொத்து பிரித்து தா” நான் பழனிமுருகனுக்கு என் பங்கு சொத்தை எழுதிவைக்கணும் என்றார், அண்ணன் தனக்கு இரு மகன்கள் அவர்கள் உனக்கு மண்தள்ள வெண்டும் தானே? அதனால் உன்பங்கை அவர்களுக்கு விட்டு விடு”பழனிமுருகனுக்கு என்ன சொத்தா இல்லை” என மறுத்து விட்டார், ஆனால் தம்பி ஊர்பஞ்சாயத்தை கூட்டி விட்டார்,
[ அப்போது யாரும் நீதிமனறம் சென்றதில்லை ] ஊர்பஞ்சாயத்தில் அண்ணன் இப்போ அறுவடை இருக்கு அது முடிந்ததும் வேண்டுமால் பஞ்சாயத்தார் வந்து “யாருக்கு எந்த பங்கு என பிரித்து தரட்டும்”என சொல்லி விட்டார், பஞ்சாயத்தாரும் அறுவடை முடியட்டும் தம்பி என சொல்லி விட்டனர், ஆனால் அறுவடை முடியும் முன்னர் தம்பி கிணற்றில் தவறி இறந்து விட்டார், அப்போது அவர் உடலில் ஒருபெரியகல் கட்டபட்டு இருந்ததாம், அப்போதே “ அவர் அண்ணனால் அவர்கொலைதான் செய்யப்பட்டார்” என்பது ஊருக்கே தெரியுமாம் ,ஆனால் மிராசுதாரை அப்போது எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது, ஆனால் அந்த “பிரம்மசாரி” இறந்தது, சரியாக மார்கழி மாதம் அமாவாஸையாம் , அதாவது “ஹனுமன் ஜெயந்தி” அன்று, அதனால் தான் இன்னமும் அந்த குடும்பத்தில் திருமண வாய்ப்பு வரவில்லை என அந்த ஊர்காரரான பெரியவர் சொன்னார், அப்போது தான் எனக்கும் என மனதில் பட்ட “பிரம்மசாரி சாபம்” இருக்குமோ எனும் ஐய்யம் சரியானது எனப்பட்டது, ஆனாலும் இன்னமும் அந்த குடும்பத்தில் திருமணம் அமையவில்லை, “உங்க பையன்களுக்கு கல்யாணம் ஆகணும்’ என்றால் “முருகனுக்கு பாதி சொத்தை எழுதிவைக்க” சொல்ல அவர்களிடம் யார் சென்று சொல்வது ? நீங்களே சொல்லுங்க ?அவர்களிடம் யார் சென்று சொல்வது ?

Sunday, 15 December 2013

சுக்கிரனால் உடலில் ஏற்ப்படும் வியாதிகள்

மேஷத்தில் பாதிக்கப்பட்டால் :- சளித்தொல்லை, தலைநோய், சிறுநீரகப்பிரச்னையையும் தருவார்,

ரிஷபத்தில் பாதிக்கப்பட்டால்:- டான்ஸில், இரத்த கோளாறு தருவார்,

மிதுனத்தில் பாதிக்கப்பட்டால்;- வலிப்பு நோய்

கடகத்தில் பாதிக்கப்பட்டால்:- வயிற்றுக்கோளாறு, சதை வளர்ச்சி இவைகளை தரும்

சிம்மத்தில் பாதிக்கப்பட்டால்:- முதுகுவலி, இருதயகோளாறு தருவார்,

கன்னியில் பாதிக்கப்பட்டால்:- கிருமிகளால் தொல்லை,

துலாத்தில் பாதிக்கப்பட்டால்:- கருப்பையில் பாதிப்பும், மாதவிடாய் கோளாறு,விரையில் பாதிப்பு, பிறப்புறுப்பில் பாதிப்பு அடிக்கடி கர்ப்பசம்பந்தமான வைத்தியம் பார்க்க நேரிடும்,

விருட்சிகத்தில் பாதிக்கப்பட்டால்:- மூத்திரக்கோளாறு , கிட்னி பாதிப்பு, விரையில் பாதிப்பு, பிறப்புறுப்பில் பாதிப்பு

தனுசில் பாதிக்கப்பட்டால்:- ஈரல் சம்பந்தமான பாதிப்பு

மகரத்தில் பாதிக்கப்பட்டால்:- முழங்கால் வலி,பாத வலி, தோல் சம்பந்தமான வியாதி போன்றது பாதிப்பு தரும்

கும்பத்தில் பாதிக்கப்பட்டால்:- முழங்கால் வலி, பாத வலி,வீக்கம் போன்றது தருவார்,

மீனத்தில் பாதிக்கப்பட்டால்:-கர்ப்ப பையில் பாதிப்பு ஒழுக்கசீர்கேடு மதுபழக்கம் போன்றது பாதிப்பு தரும்

இது அனைத்தும் பொதுவான ஜோதிடக்கருத்தே தவிர சுக்கிரன் பாதகரை சேர்வதும் பார்ப்பதும் பாதககிரஹம் சாரம் பெறுவதும் தான் சுக்கிரன் பாதிப்பாரே தவிர ,இதை படிக்கும் வாசகர்கள் தனது ஜாதகம் கொண்டு சுயபரிசோதனை செய்யக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும் 

என்றும் ஜோதிட பணியில்!

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,
பெருந்துறை- 638 052
செல்:- 98427 69404
செல்:- 98434 69404

Friday, 6 December 2013

புத்ரம் [குழந்தை] கிடைக்க என்ன வழி?

குரு சிலருக்கு யோகமும் தருவார்! 
குரு சிலருக்கு பாதகமும் தருவார்! 
அது அவர்கள் ஜாதகத்தை பொருத்தே அமையும்!
சிலருக்கு குருவால் குருதிசையால் பாதமான சூழ்நிலையும் ஏற்படும் குரு லக்னத்தின் பாதகரின் பாதக்காலில் செல்ல பாதகமும், யோகரின் காலில் செல்ல யோகமும் தருவார்!
திசையின் நாதனும் புக்தியின் நாதனும் செல்லும் நட்சத்திர அதிபதி ஜீவனாகவும், அவருக்கு பாதம் தந்த நட்ச்சத்திர அதிபதி சரீரமாகவும் பாவித்தே பலனும் உண்டாக்கும்!
அதனால் குருதிசையே நடந்தாலும் அவர் நின்ற பாதம்
[ ஜீவன் ] அவருக்கு பாதம் தந்தவர் [சரீரம்] ஆகும், ஜீவன் கெட்டாலும் சரீரம் கெட்டாலும் பாதிப்பு என்னவோ திசை நடப்பருக்கே தான் ஏற்ப்படுகிறது!

[ குழந்தை பேறு அமைய குரு ஜாதகத்தில் வழுத்தும் 5-ம் அதிபதி வழுத்தும் இருக்க புத்ரபிராப்தி சீக்கிரம் அமையும், கணவன் - மனைவி வாழைப்பழம் இரவில் உண்ண சொல்லி பெரியவர்கள் சொல்வதன் காரணம்:- குரு மணடலத்தில் பரவியிருக்கும் ‘மீத்தேன் அமிலம்” [புத்திரபேறுக்கு இது உடலில் முக்கியம்] வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதே அதன் அர்த்தம், அதேபோல் நீண்டநாள் குழந்தை பேறு அமையாத தம்பதிகள் வாரம் ஆன வியாழன் அன்று மட்டும் தாம்பத்தியம் கொள்வது ”சீக்கிரமே புத்ரபிராப்தி” அமையும் 

பிரதோஷ வழிபாட்டின் ரகசியம் [ எல்லோரும் சொல்லுங்க ]

சோமசூத்ரப்பிரதஷ்ணம் வழிபாடு என்பது என்ன? 
சோமசூத்ரப்பிரதஷ்ணம் எனபது ஆலகாலவிஷம் தேவர்களை துரத்திய போது அவர்கள் இடமும் வலமும் ஓடியதே ஆகும்! 
நாமும் அதேபோல் ஓடவேண்டும் எப்படி தெரியுமா? 
முதலில் நந்தியில் இருந்து எதிர்மறையாக [ அபதஷ்ண வலம்] சண்டிகேஸ்வரர் வரை இடபுறமும் சென்று சண்டிகேஸ்வரை வணங்க வேண்டும், [ அங்கு அபிஷேகத்தீர்த்தம் விழும் நிர்மால்ய தொட்டியை தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள் ] போனவழியேதிரும்பி வந்து நந்தியையும் சிவதரிசனம் செய்து வலம் வந்து சண்டிகேஸ்வரர் சன்னதிவரை வரவும்! [ அங்கு அபிஷேகத்தீர்த்தம் விழும் நிர்மால்ய தொட்டியை தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள் ] போனவழியே
திரும்பி [ அபதஷ்ண வலம்] சண்டிகேஸ்வரர் வரை இடபுறமும் சென்று சண்டிகேஸ்வரை வணங்க வேண்டும்,
[ அங்கு அபிஷேகத்தீர்த்தம் விழும் நிர்மால்ய தொட்டியை தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள் ]
இப்படி மூன்று முறை சுற்று வந்து சிவாலய தரிசனம் செய்தால் அனேக அஷ்வயாகம் செய்தபலன்
[ குதிரையை வைத்து பூஜித்த பலன் ] கிட்டும் என அனேக ஞானநூல்கள் சோல்லியுள்ளது! இதுவே சோமசூத்ரப்பிரதஷ்ணம் வழிபாடு எனப்பொருள் ஆகும்!

வருஷ ஜாதகத்தை கணிக்கும் விதம்

நீலகண்டர் வருஷ ஜாதகத்தை கணிக்க திருக்கணிதமுறையில் தந்துள்ள கணிதம் . 
இது படிப்படியாக உங்களுக்கு கணகிட்டு பயில உதவும்

1 வயது -----  1 நாள்              6 மணி      9 நிமிஷம்  12 செகண்ட்

2 வயது-------2 நாள்               12 மணி     18நிமிஷம்       18 செகண்ட் 

3 வயது--------3 நாள்               18 மணி     27 நிமிஷம்     30 செகண்ட் 

4 வயது-------5 நாள்                0 மணி       36 நிமிஷம்    36 செகண்ட்

5 வயது----  6 நாள்                 6 மணி       45 நிமிஷம்    48 செகண்ட் 

6 வயது----- 0 நாள்                 12 மணி       55 நிமிஷம்  55 செகண்ட் 

7 வயது-----1 நாள்                  19 மணி       04 நிமிஷம் 06 செகண்ட் 

8 வயது---- 3 நாள்                  1 மணி         13 நிமிஷம்  18 செகண்ட் 

9 வயது ----4 நாள்                  7 மணி         22 நிமிஷம்  30 செகண்ட் 

10 வயது----5 நாள்                 13 மணி        3 நிமிஷம்  12 செகண்ட் 

20 வயது ----4 நாள்                3 மணி          3 நிமிஷம்   36 செகண்ட் 

30 வயது-----2 நாள்                 16 மணி        34 நிமிஷம்  54 செகண்ட் 

40 வயது ----1 நாள்                  6 மணி          6 நிமிஷம்  30 செகண்ட் 

50 வயது----6 நாள்                   19 மணி         38 நிமிஷம்  6 செகண்ட் 

60வயது-----5 நாள்                   9 மணி           9 நிமிஷம்  42 செகண்ட் 

இப்படி வயதை கணக்கிட ஜாதகர் பிறந்த கிழமை யுடன் நாழிகை மற்றும் விநாழிகையுடன் கூட்டி 

கணக்கிட வருவது ஜாதகரின் தற்போதைய வயதுக்கு ஏற்ப்ப கணக்கிட்டு கொள்ளவும் ,இப்படி மேற்கண்ட கணிதப்படி வருஷ ஜாதகம் கணிக்கலாம், அத்துடன் வருஷ ஜாதகத்திற்க்கு திசா புக்தியும் அந்தரமும் கணக்கிட்டு பலன் காணலாம், 

 என்றும் ஜோதிடப்பணியில் 

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் பெருந்துறை   

Tuesday, 3 December 2013

தாரம் தங்காத ஜாதகம் [ தாரதோஷ ஜாதகம் ]

இதுபோன்ற ஜாதகம் அமையப்பெற்ற ஜாதக ஜாதகிகள் எத்தனை முறை திருமணம் செய்தாலும் தாரம் தங்குவதில்லை , லக்னம் எது ஆனாலும் ஜாதகத்தில் 7 க்குடையவன் 8 க்குடையவன் மற்றும் பாதகாதிபதி ஆகியோர் ஒரே பாதக்காலில் செல்வது [கிரஹயுத்தம் ] ஜாதகர்களின் திருமண வாழ்வை மிகவும் பாதிக்கிறது, இதுபோன்ற ஜாதகம் அமையப்பெற்றவர்கள் முடிந்தளவு இரண்டாம் தாரமாக வாழ்க்கையை அமைப்பது நல்லது. இந்தஜாதகத்தில் 4 ல் கேது [சுகஸ்தானம்]நான்காம் அதிபதி அஷ்டமாதிபதி செவ்வாய் சாரம் , 7 [சுக்கிரன்] 8 [செவ்வாய்] பாதகாபதி [சனி] ஆகியோர் ஒரேபாதக்கால் எடுத்து அதில் சுக்கிரனும் சனியும் கிரஹ யுத்தம் செய்வதை பாருங்கள் . இதுதான் தாரதோஷம் என்பது, இச்சாதகனுக்கு இருமுறை திருமணம் செய்தும் மனைவி இவருடன் பிழைக்காமல் ஓடிவிட்டனர், மூன்றாவதாக மனைவியை தேடி வருகிறார் [ ஆனால் இனி “திருமணம் நடக்கும்” என்று என் மனதுக்கு படவில்லை ]

Sunday, 1 December 2013

சோமவார அமாவாஸை சிறப்பு & அதன் வழிபாடு

இம்மாதத்தில் இன்று கார்த்திகை 16 ம்தேதி உதிக்கின்ற அமாவாஸை ஆனது, மிகவும் சிறப்பானது, இன்று குழந்தை இல்லாத தம்பதிகள் மற்றும் திருமணம் ஆகாத இளைஞர்கள் & கன்னியர்கள் ஆகியோர்
 திங்கள் கிழமையாக [ சந்திரனுடைய நாளாக அமைவதால் ]
இன்று காலை 8.50 க்கு மேல் அமாவாஸை திதியில் அரசமரத்தில் கீழ் அமைய பெற்ற விநாயகரை 108 முறை அரசமரத்தை சுற்றி வலம் வந்து பிராத்திப்பவர்களுக்கு “சகலதோஷ நிவர்த்தி” அடைவர் என்பது காலம் தொட்டு வரும் மரபு,
அதனால் தோஷம் பீடிக்கப்பட்டவர்கள் இன்று அரசமர விநாயகரை நம்பிக்கையுடன் 108 முறை வலம் வந்து பயன் அடைவீர்களாக!

என்றும் ஜோதிட பணியில்
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் பெருந்துறை