Wednesday, 19 April 2017

K.P.ஜோதிடம் ஒரு பாரம்பரியமே

K.P.ஜோதிடம் ஒரு பாரம்பரிய ஜோதிடமே......

ஜோதிடத்துறை
இதில் பல்வேறுபட்ட ஜோதிடநிலை
பாரம்பரியம்
அதில் வாக்கியம் மற்றும் திருக்கணிதம் என இரண்டு முறைகள்
அதுபோக இப்போது
KP
KB மற்றும்
சாரஜோதிடம்
பஞ்சபட்ஷியை கொண்டு
ஜாமக்கோள் கொண்டு
நிமித்தங்கள் கொண்டு என்று பல்வேறு ஆசான்கள் தனக்கென ஒரு பாதை இட்டு அதில் தனக்கும் கீழ் சீடர்களை ஏற்படுத்தி கொண்டு ஒரு மாறுப்பட்ட விதமாக
"தன்னை மட்டுமே "முன்னிலை படுத்தி செல்கிறார்கள் !!!!!

சமீபத்தில் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கீடு செய்து K.P.ஜோதிடத்தால் எப்படி கேள்வியாளர் வரும்போது நிகழும் மற்றும் கிரகங்கள் இருக்கும் நிலையை கண்டு பலாபலனை அறிவதெப்படி என்ற கருத்துக்களை உள்வாங்கும் முயற்சியில் இருக்கிறேன் !!!!!

அப்படி படிக்கும்போது அதில் சொல்லபட்ட விஷயங்களை எல்லாம் முன்னரே ஶ்ரீகுமாரசாமி சுவாமிகள் இயற்றிய
"குமாரசாமியம் "ஜோதிடநூலில் எழுதப்பட்ட  விஷயங்களில் 54 படலத்தில் ஒரு படலம் 47வதாக வரும்
"சிந்தனாபல படலம் " (சிந்தனை நேரத்தில் நிகழும் கிரகநிலைகள் )என்பதில் 18 ஆண்டுகள் ஆழ்ந்த ஆராய்ச்சி காரணமாக  இருக்கவும் நாம ரெடி கிருஷ்ணமூர்த்தி பத்ததி எனும் KP System உருவாகி இருக்கிறது என்பது நன்றாக புலப்பட்டது !!
அதைபற்றி கொஞ்சம் குமாரசாமியம் நூலில் என்னதான் இருக்கிறது என்பதை கொஞ்சம் விவரிக்க இப்பதிவு !!!!

"சிந்தனையுற் றவனுதயம் செடத்துதய மாயத்
தினகிரகர் முற்கிரகத் திரத்தினில்வைத் திதனால் எந்தவினம் எந்தவகை எப்பலம் சொல்லா விதையமுள ததற்குதய மேடாதி எதுவோ வந்தவிடத் தும் இறைமே அவ்விடத்தும் உளாக ரகப்பெயரில் அதிபலப்பேர் அறைகுவரா லசியம் வந்தவனுக்குக் குயதமாக பத்தலமாய் விழித்தன் மற்றவரா இறைபெலக்கின் மரணமின்மற் றதற்கே """"
-------++குமாரசாமியம் பாடல் எண் 389 ......

பொருள் விளக்கம் ;-
கேள்வியாளர் குறிப்பிட்ட சிந்தனையாக ஜோதிடரை காண வந்த நேரத்தில் கண்ட உதயராசி லக்னமாக கொண்டு அன்றைய தினத்தின் அதிபதி தாற்கால கிரகமாக வைத்து (ஜெனன கால ) அந்த ஜாதகர் முதலாக குடும்பத்துக்கு எல்லாம் பலன்களை சொல்லபடுவன ஆதலால் அந்த ஜாதக கேள்வியாளர் நினைத்து வந்த சிந்தனை பற்றி பலாபலனை சொல்ல வேண்டில் உதய லக்னம் மேடாதிக்கு எவ்விடம் என்று அறிந்து உதய லக்னாதிபதி இருந்த இடம் எவ்விடத்தில் என்று அறிந்து இந்த இடங்களுக்கு உண்டாகும் காரகத்தன்மை வைத்து பலமுள்ள இடங்களுக்கு காரக பெயர்களை கொண்டு பலனை அறிந்து சொல்லுதல் வேண்டும் பிணியுடன் இருப்போர் பற்றிய கேள்வியாகில் உதய பாவ கிரக ராசியாகவும் அந்த உதயத்தை சுபர்கள் நோக்கவும் நோயில் இருந்து மீள்வார் என்ற பலாபலனை சொல்லி அனுப்பலாம் !!!
மாறாக சுபகிரகம் சுபராசி உதயமாகி பாவர்கள் பார்வைக்கு சிக்கினால் மாரகம் எனும் மரணமே உண்டு என அறியலாம். ...அதற்கு அடுத்தபடியான 390 வது பாடலில் இன்னும் அற்புதமான கருத்துக்களை கொண்டதாக அமைந்துள்ளது !!!
அது
"தற்கமொரு வர்க்கொருவர் உற்றிடில்வெல் பராகில் சாற்றெனுமுன் மனையோனி தங்களில் சத்துருவாய் நிற்குமிதற் கடலுள நாளொரு பாத முதனேர் நெருப்பளவாய் எலிமுயறோ லரவிவை நேர்க்குதளாம் சொற்குளவத் திசைக்குளதும் பஞ்சபட்ஷிக் குளதும் சொற்றிடு நாமத்துளதும் சுடர் முதலெண் டிசைப்போர் மற்குளது மற்றதுவும் கண்டுறைத்திடு வரிதுவெவ் வளவு நாள்கெனிலதிபர்க் குளது வகுப்பதுவே """""
------------### குமாரசாமியம் பாடல் எண் 390
இச்செய்யுள் சொல்வது ;-
ஒரு விஷயத்துக்கு ஜோதிடரிடம்
வெற்றி கிடைக்குமா ?***
தோல்வி கிடைக்குமா ??**என்று கேள்வியாளர் கேட்கும்போது
கிரகங்களின் யோனியாக

1)கீழ்திசை (நேர்கிழக்கு இந்திர மூலை) கருடனாகவும்

2)தென்கிழக்கு (அக்னிமூலை ) பூனையாகவும்
3) தெற்கு (யமமூலை ) சிங்கமாகவும்

4) தென்மேற்கு (நிருதி மூலை )நாயாகவும்

5)மேற்கு (வருணமூலை ) சர்ப்பம் எனும் பாம்பாகவும்

6) வடமேற்கு (வாயுமூலை ) எலியாகவும்

7) வடக்கு (குபேரமூலை ) யானையாகவும்

8) வடகிழக்கு (ஈசான்ய மூலை ) முயல் ஆகவும்
திசைகளுக்கு யோனியை நிர்ணயம் செய்து அந்த திசைக்கு இருக்கும் பகை யோனியை கண்டு வெற்றியை வகுத்து சொல்லலாம் என்கிறது பாடல்
அதன்படி
சித்திரை முதல் ஆனி வரை எலி பூனையை வென்று விடும் !!!
ஆடி முதல் புரட்டாசி வரை முயல் நாயை வென்று விடும் !!
ஐப்பசி முதல் மார்கழி வரை யானை சிங்கத்தை வென்று விடும் !!!!
தை முதல் பங்குனி வரை சர்ப்பம் கருடனை வென்று விடும் இப்படி பலம்வாய்ந்த மிருகங்களை பலம் குறைந்த மிருகங்கள் வெல்லும் என்பதை அந்த ஜாதகர் வருகைப் பொருத்து அமைந்த உதயலக்னம் கொண்டும் பஞ்சபட்ஷி பலனும்
நாம நட்சத்திரம் பலனும் (கோட்சாரத்தில் சந்திரன்
நடப்பு திசை புக்தி அறிந்து இவைகள் முதலானவைக்கு தக்கதொரு பலாபலனை சொல்ல பலன் தப்பாது நடக்கும் என்பதும் அது எத்தனை நாட்களில் என்பதை  பலவானுக்கு சொன்ன விதம் (வேறு ஒரு பாடலில் ) கணித்து சொல்லவும் என்கிறது குமாரசாமியம் ஜோதிடநூல் .......

படலம் எனும் தொகுதி 54
செய்யுள் மொத்தமாக 425 கொண்டது குமாரசாமியம்
வெறும் இரண்டு பாடலை எடுத்து பார்த்தாலே இவ்வளவு விஷயங்களை பிடிக்க முடிகிறது என்றால் மொத்தமாக இருக்கும் செய்யுள் உள்ளே எவ்வளவு விஷயங்கள் பொதிந்து இருக்கிறது என்பதை வரும்கால ஜோதிடராக திகழப்போகும் ஜோதிட ஆர்வலர்கள் எல்லாம் சிந்தனை செய்து பாருங்கள் !!!
மிக அற்புதமான விஷயங்களை எல்லாம் சின்ன சின்ன செய்யுள் உள்ளே வைத்து இருக்கிறார்கள் காலஞ்சென்ற சித்தர்கள் !!!
சிறந்த ஜோதிட நூல் ஆன இந்த குமாரசாமியம் ஜோதிடத்துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும் .....

(எங்க ஸார் கிளம்பீட்டிங்க ஓ குமாரசாமியம் வாங்கவா ம்ம்ம்ம் வாங்குங்க வாங்குங்க அற்புதமாக வாசியுங்கள் )

பெருந்துறையில் இருந்து
*Astro Senthil Kumar*
Wats App
9843469404

Monday, 10 April 2017

ஹேவிளம்பி ஆண்டில் தீராத நோயை தீர்க்கும் உக்ர யோகங்கள் [ 2017-2018]

நோயை தீர்க்கஉத்ரயோகங்கள்
அன்பு ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்
இந்தியவேத ஜோதிடம் பல பிரிவுகளை கொண்ட அமைப்பு ஆகும்!!!
நான்கு வேதத்தில் உட்பிரிவாககல்பம்” [மருத்துவம்] “ஜோதிஷ்” [ஜோதிடம்] கொண்ட தளம் நம் வேதங்கள்
நோய்க்கு தீர்வு ஜோதிடத்தில் பண்டய காலத்திலேயே எழுதப்பட்டு இருக்கிறது என்பதை பற்றிய பதிவு இது!!
[இன்று பல்கலைகழகத்தில் எடுக்கும் மருத்துவ ஜோதிட படிப்பில் இவை இருக்கிறதா என்பது நான் அறியவில்லை இருந்தால் சந்தோசமே இல்லையெனில் இனி இதையும் சேர்த்து படியுங்கள் ]
கடந்த வாரத்தில்காலப்ரகாசிகை
எனும் ஜோதிடநூலில் இருந்த சில நுட்பங்களை எம்முடைய கோணத்தில்  
பதியப்பட்ட்து அதன் சாராம்சம்
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகள் பல எடுத்தும் பயனில்லை என்று சொல்வோர்களை தான் இப்போதெல்லாம் அதிகமாக காண முடிகிறது !!!!!
மருந்துகள் சரியில்லையா ????*?*
மருத்துவர் சரியில்லையா ???****
நோய் தீரும் எனும் நம்பிக்கை இல்லாமல் போகும் காரணம் தான் என்ன எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கவலையோடு இருப்போர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும் பதிவு இது !!!!
(
நாள் செய்யாதை நல்லாரும் செய்யார் )
காலப்ரகாசிகை எனும் அற்புதமான நூலை புரட்டிய போது சிக்கிய தகவல்களை கொஞ்சம் நீங்களும் வாசியுங்கள் !!!!!
"உக்ர யோகங்கள் "
(
தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள் )
திருதியை அல்லது அஷ்டமி உடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் நாள் !!!!
சதுர்த்தி அல்லது அஷ்டமி உடன் கூடிய உத்திர நட்சத்திரம் நாள்
பஞ்சமி திதியும் திருவோணம் கூடிய நாள்
சஷ்டி திதியுடன் மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள்
சப்தமி திதியுடன் ரேவதி நட்சத்திரம் கூடிய நாள்
நவமி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாள்
தசமி திதியுடன் பூசம் நட்சத்திரம் கூடிய நாள்
திருதியை அல்லது துவாதசி திதியுடன் அனுஷம் நட்சத்திரம் கூடிய நாள்
ஏகாதசி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் அல்லது மகம் நட்சத்திரம் கூடிய நாள்
தசமி திதியுடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாள்
திரயோதசி திதியுடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய நாள்
போன்றவை "உக்ர யோகங்கள் "என்ற பெயரில் அழைக்கப்படுகிறது !!!
"
உக்ர யோகங்கள் "நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள் எடுத்தால் 
"
நோய் தீரும் "என்கிறது 
"
காலப்ரகாசிகை "ஜோதிட நூல் 
எதை செய்தாலும் முதலில் அதன்மேல் நம்பிக்கையை வைத்து முயற்சி செய்யுங்கள் !!!
"
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் """
எல்லோரும் இன்புற்று இருக்க !!!!!!
எல்லாம் வல்ல "தன்வந்திரி பகவான் "அருள்புரியட்டும் !!!!!!” “”
திருக்கணித ஜோதிடம் எனும் முகநூல் பேஜ்ஜில் ஒரு வாரத்தில் வாசித்தோர்கள் எண்ணிக்கை 15,000க்கும் மேலே அதை வாசித்த நண்பர்கள் தொடர்ந்து பதிவை பாராட்டியது இல்லாமல் வரும் மன்மத ஆண்டில் “ (2015-2016)
பின்னர்
துன்முகி ஆண்டில் (2016-2017)
இனி வரும்
ஹேவிளம்பி (2017-2018)
க்கும் 
ஆக இந்த பதிவு 
வாசித்தால் மட்டும் போதாது கொஞ்சம் கருணையுடன் மற்றவர்களுக்கு சென்றடைய ஷேர் செய்யுங்கள்..

இந்த தீராதநோய்க்கு அறுவை சிகிச்சை போன்றவை செய்ய உகந்த நாட்களை பட்டியல் செய்யுங்கள் என தொடர்ந்து கோரியதாலும் ஜோதிடத்தை வைத்து வாழும் நம்மால் மக்களுக்கு உதவ வேண்டும் எனும் எண்ணத்துடன் வரும் ஆண்டில் மருத்துவர்கள் மிகவும் முற்றியநோய் அறுவை சிகிச்சை செய்தாலும் காப்பாற்ற இயலாது என்று கைவிடப்பட்ட நோயாளிகள் யாரேனும் இந்த உக்ரயோகநாளில்தக்கதொரு அறுவை சிகிச்சை செய்து உயிர் மீண்டார்கள்என்றால் அதை பின்னிட்டு இங்கே தகவல்கள் செய்யுங்கள் இப்பதிவின் நோக்கமே ஜோதிடத்தில் இல்லாதது ஒன்றுமே இல்லை என்பதே !!!
வரும் ஹேவிளம்பி [ 2017 -2018 ] ஆண்டு தீராத நோய்க்கு சிகிச்சைகள் எடுத்து நோய் தீர்த்து வாழ சில நாட்கள் எம்முடைய தேடலில் சிக்கியது அதன் பட்டியல் பின்வருமாறு::----

1] சித்திரை மாதம் 15 ஆங்கில தேதி  28-04-2017 பகல் 1-40 முதல் 29-04-2017 காலை 6-55 வரை திருதியை உடன் ரோஹிணி நட்சத்திரம்

 2] வைகாசி மாதம் 31 ஆங்கில தேதி 14-06-2017  அதிகாலை 3-05  முதல் மதியம் 3-30 வரை பஞ்சமி உடன் திருவோணம்

3] ஆனி 21 ஆங்கில தேதி 05-07-2017 அதிகாலை 5-30 முதல் 06-07-2017 அதிகாலை 2-50வரை

4] ஆனி 31 ஆங்கில தேதி 16-07-2017 அதிகாலை 00-50 முதல் மதியம் 1-35 வரை சப்தமி உடன் ரேவதி

5] ஆடி 3 ஆங்கில தேதி 19-07-2017 00-50 முதல் மதியம் 1-35 வரை ஏகாதசி உடன் கிருத்திகை 

6] ஆடி 10 ஆங்கில தேதி 27-07-2017 அதிகாலை 4-25 முதல் காலை 7-00 மணி வரை சதுர்த்தி உடன் உத்திரம்

7] ஆடி 30 ஆங்கில தேதி 15-08-2017 மாலை 5-45 முதல் 16-08-2017 அதிகாலை 2-31 வரை நவமி உடன் கிருத்திகை

8] ஆடி 31 ஆங்கில தேதி 16-08-2017 மாலை 3-20 முதல் 17-08-2017 அதிகாலை 12-45 வரை தசமி உடன் ரோஹிணி

 9] ஆவணி 27 ஆங்கில தேதி 13-09-2017 அதிகாலை 01-05 முதல் காலை 06-25 வரை  அஷ்டமி உடன் ரோஹிணி [ கோகுலாஷ்டமி ]

10] புரட்டாசி 10 ஆங்கில தேதி 10-10-2017 பகல் 12-30 முதல் 11-10-2017 காலை 9-05 வரை சஷ்டி உடன் மிருகசீரிடம்


11] புரட்டாசி 27 ஆங்கில தேதி 14-10-2017 அதிகாலை 03-25 முதல் காலை 6-50 வரை தசமி திதியுடன் பூசம்


 12] புரட்டாசி 31 ஆங்கில தேதி 17-10-2017 காலை 6-15 முதல் இரவு 11.59 வரை திரயோதசி உடன் உத்திரம்

13] ஐப்பசி 19 ஆங்கில தேதி 06-11-2017 அதிகாலை 04-20 முதல் இரவு 07-20 வரை திருதியை உடன் ரோஹிணி

14] மார்கழி 28 ஆங்கில தேதி 12-01-2018 இரவு 9-25 முதல் 13-01-2018 காலை 10-10 வரை துவாதசி உடன் அனுஷம்

15] தை 10 ஆங்கில தேதி 23-01-2018 மாலை 4-45 முதல் 24-01-2018 காலை 8-30 வரை சப்தமி உடன் ரேவதி

16] தை 13 ஆங்கில தேதி 26-01-2018 காலை 07-30 முதல் மதியம் 1-30 வரை நவமி உடன் கிருத்திகை

17] தை 14 ஆங்கில தேதி 27-01-2018 காலை 06-10 முதல் 11-10 வரை தசமி உடன் ரோஹிணி

18] தை 21 ஆங்கில தேதி 03-02-2018 காலை 11-25 முதல் 04-02-2018 காலை 08-55 வரை சதுர்த்தி உடன் உத்திரம்

19] மாசி 10 ஆங்கில தேதி 23-02-2018 பகல் 12-45 முதல் 24-02-2018 அதிகாலை 00-40 வரை அஷ்டமி உடன் ரோஹிணி

20] பங்குனி 12 ஆங்கில தேதி 26-03-2018 பகல் 1-00 முதல் 27-03-2018 அதிகாலை 03-40 வரை 
 இந்த நாடகள் எல்லாம் தீராத வியாதி என கருதுவதற்க்கு சிகிச்சை எடுக்க உகந்த நாட்கள் ஆகும்..
இவையெல்லாம் சாத்தியமா என கருத வேண்டாம்
மகாபாரதம் அறிவீர் அதில் கெளரவர்கள் “ 100 பேர் கருக்கலைந்தபோது 100 குடுவையில் பிடிக்கப்பட்டு 100 சகோதர்கள் உருவானார்கள் ..முதல் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது விநாயகப்பெருமானுக்கு நடந்த்து.. இன்று மருத்துவத்தில் அதையெல்லாம் சாத்தியம் ஆக்கி இருக்கிறது….
உத்ரயோகம்இனி வரும் காலகட்டத்தில் ஒவ்வொரு மருத்துவரும் சிகிச்சை பலன் அளிக்காத நோயாளிகளுக்கு சோதித்து பார்த்துஅதில் மருத்துவ வெற்றிஅடைய அதிக நாட்கள் இல்லை !!!
``````இதோ சில தினங்களில் ஹேவிளம்பி  ஆண்டு நெருங்கி விட்ட்து!!!
மக்களின் நலன் கருதி வெளியிடுவது!!!
என்றும் ஜோதிடப்பணியில்!!!
Astro Senthil Kumar
 ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்
புதுபஸ் நிலையம் பின்புறம்
 பெருந்துறை   -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார் 
செல்: +91 98427 69404
             +91 98434 69404    
ஆன்லைனில் ஜோதிட ஆலோசனைகளை பெற முன்னிட்டு வங்கியில் கட்டணம் செலுத்தி பின்னர்
astrosenthilkumar@gmail.com எனும் மெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்..
வங்கி விபரங்கள்
Union bank of india
a/c no:- 629102010002579
Ifsc code:- UBIN 0562912
Village:- 803534- Perundurai
Cust Id:- 241739254
Name:- Senthilkumar .A

Wednesday, 5 April 2017

கிழமைகள் பிறந்த கணக்கு

ஜோதிட ஆர்வலர்கள் அனைவரும் எம் வணக்கங்கள்...

இன்று கிழமைகள் பிறந்த அளவீடுகள் எவ்வாறு அமைகிறது என்ற ஆய்வுகள் செய்வோம்.....

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
என ஏழு நாட்கள் கொண்டது
ஒரு வாரம்
சரி
ஒரு வாரம் ஓகே.....

ஒரு கிழமை என்பன எப்படி ஆரம்பித்து செல்கிறது

உதாரணத்திற்கு
சனிக்கு பின் ஞாயிறு ஏன் வந்துச்சு
ஏன்
புதன் வந்து இருக்கலாமே
இல்லை
வியாழன் வந்து இருக்கலாமே
ஏன் ஞாயிறு வந்துச்சு ..
இதை எந்தவொரு குறிப்பிட்ட கால அளவில் ஜோதிடம் பார்க்கும் எம் ஜோதிட நண்பர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் மட்டுமின்றி
பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வர இந்த பதிவு.....

முக்கிய கோரிக்கையை முன் வைக்கிறேன் படித்தவுடன் உங்கள் டைம்லைனில் ஷேர் செய்யுங்கள்..
அது எனக்கு நீங்கள் தரும் தட்சிணையாக கருதுகிறேன்.....

சித்தர்கள் கண்ட கோள்களின் வகைகள் பற்றிய ஆய்வு செய்த பின்னர் தினத்தை மிகவும் துல்லியமாக கணித்து இவ்வுலகிற்கு கொடுத்தனர்.....

விபரங்கள் காண்போம்....
பூமியை நெருங்கி வரும் கோள்களின் பட்டியலில்
வெகுதூரத்தில் இருக்கும் கோள் முதல் ஆரம்பத்து

சனி -(30ஆண்டுகள்)
குரு- (12 ஆண்டுகள்)
செவ்வாய்-(ஒன்றரை ஆண்டுகள்)
சூர்யன்- (ஒரு ஆண்டு)
சுக்கிரன்-(சுமார் 1 ஆண்டு)
புதன்-(சுமார் 1 ஆண்டு)
சந்திரன் (27 நாட்கள்)
இவைகள் பூமியை நெருங்கிய தூரத்தின் அளவு அல்லது சுற்றும் அளவு என வைத்து கொள்வோம்...
இவைகளை ஒரே நேர்க்கோட்டில் ஒரு பேப்பரில் எழுதி கொள்ளுங்கள்...

இங்கே ஹோரைகள் எனும் ஹவர் என்கிற மணி நேர அடிப்படையில்
சனிக்கிழமை சூர்ய உதயத்தின் போது


சனி ஹோரை காலை 6-7 (1)
குரு ஹோரை காலை 7-8 (2)
செவ்வாய் ஹோரை 8-9 (3)
சூர்ய ஹோரை 9-10 (4)
சுக்கிரன் ஹோரை 10-11(5)
புதன் ஹோரை 11-12(6)
சந்திரன் ஹோரை 12-1 (7)
இங்கே முதல் வரிசை நிறைவு அடையும்
பின்னர் அடுத்த இரண்டாம் வரிசையில் கிரகங்களின் பெயருக்கு
கீழே இவ்வாறு எழுதி வாருங்கள்..

மதியம்

சனி ஹோரை 1-2(8)
குரு ஹோரை 2-3(9)
செவ்வாய் ஹோரை 3-4(10)
சூர்ய ஹோரை 4-5(11)
சுக்கிரன் ஹோரை 5-6(12)
புதன் ஹோரை 6-7(13)
சந்திரன் ஹோரை 7-8(14)

அடுத்த மூன்றாம் வரிசையில்
இரவில்

சனி ஹோரை 8-9(15)
குரு ஹோரை 9-10(16)
செவ்வாய் ஹோரை 10-11(17)
சூர்ய ஹோரை 11-12(நள்ளிரவு)(18)
சுக்கிரன் ஹோரை 12-1(19)
புதன் ஹோரை 1-2(20)
சந்திரன் ஹோரை 2-3(அதிகாலை)(21)

அடுத்தபடியாக நான்காவது வரிசையில்
சனி ஹோரை 3-4(அதிகாலை)(22)
குரு ஹோரை 4-5(23)
செவ்வாய் ஹோரை 5-6(24)
இங்கே 24 மணி நேரம் வரை ஒரு தினம் முழுமையாக பூர்த்தி அடைந்து
25வது மணி நேரமாக அமைந்தது தான்
சூர்ய ஹோரை அது அடுத்த நாள் ஆகிய
#ஞாயிறுக்கிழமை ஆகும்...
இங்கே இருந்து பயணிக்கும் ஹோரை கணிதம்
25மணி நேரத்தில் சந்திரனின் திங்கட்கிழமை பிறப்பு
அதிலே இருந்து அடுத்த 25மணி நேரம் செவ்வாயின் பிறப்பு
அதிலே இருந்து அடுத்தபடியாக அமையும்
25வது மணி
புதன்கிழமை பிறப்பு அடுத்த 25மணி நேர குருவின் வியாழன் பிறப்பு
அடுத்த 25மணி நேர சுக்கிரன் ஹோரை யில் வெள்ளிக்கிழமை பிறப்பு
அடுத்த 25வது மணி நேரத்தில்
சனி ஹோரையில்
சனிக்கிழமை பிறப்பு என வரிசைப்படி கிழமைகள் பிரிக்கப்பட்டு சித்தர்கள் நமக்கு செதுக்கி உருவாக்கிய சூத்திரம் இது...
ஆகவே
சூர்ய உதயத்தில் இருந்து தான் கிழமைகளும் பிறக்கின்றன???
இதிலே எங்க பாஸ் நள்ளிரவில் நாட்கள் பிறக்கிறது?????
முக்கியமான ஜோதிட விஷயத்தை
ரகசியமாக  சொல்கிறேன் கொஞ்சம் காதை கொடுங்க...
இந்த ஹோரா என்பது சமஸ்கிருதத்தில் மட்டுமே பயன்படுத்தி வந்த வார்த்தை ஆகும் ..
இந்த ஹோரா (மணி) என்பதை தான் ஆங்கிலேயர்
Hour's (ஹவர்ஸ்)
என்று பெயரை சூட்டி கொண்டார்கள்...

அப்புறம் பாஸ் கொஞ்சம் வேலை இருக்கு நாளைக்கு ஒரு ஜோதிட ரகசியத்தை பற்றி பேசுவோம்..
நாளைக்கும் கொஞ்சம் காதை கொடுங்க...
இன்னிக்கு கொஞ்சம் காதை கொடுத்து
இதை எல்லா இடத்திலும்
ஷேர் செய்யுங்கள்...

என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
Wats App 9843469404