Thursday 19 March 2015

நோய் தீர்க்க ”உக்ர யோகங்கள்”


நோயை தீர்க்க “உக்ரயோகங்கள்”


அன்பு ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்!!!
இந்தியவேத ஜோதிடம் பல பிரிவுகளை கொண்ட அமைப்பு ஆகும்!!!
நான்கு வேதத்தில் உட்பிரிவாக “கல்பம்” [மருத்துவம்] “ஜோதிஷ்” [ஜோதிடம்] கொண்ட தளம் நம் வேதங்கள்
நோய்க்கு தீர்வு ஜோதிடத்தில் பண்டய காலத்திலேயே எழுதப்பட்டு இருக்கிறது என்பதை பற்றிய பதிவு இது!!


[இன்று பல்கலைகழகத்தில் எடுக்கும் மருத்துவ ஜோதிட படிப்பில் இவை இருக்கிறதா என்பது நான் அறியவில்லை இருந்தால் சந்தோசமே இல்லையெனில் இனி இதையும் சேர்த்து படியுங்கள் ] 

கடந்த வாரத்தில் “காலப்ரகாசிகை”
[ புத்தக அன்பளிப்பு  தஞ்சை பவளக்கண்ணன் ]
எனும் ஜோதிடநூலில் இருந்த சில நுட்பங்களை எம்முடைய கோணத்தில்
பதியப்பட்ட்து அதன் சாராம்சம்

“நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகள் பல எடுத்தும் பயனில்லை என்று சொல்வோர்களை தான் இப்போதெல்லாம் அதிகமாக காண முடிகிறது !!!!!
மருந்துகள் சரியில்லையா ????*?*
மருத்துவர் சரியில்லையா ???****
நோய் தீரும் எனும் நம்பிக்கை இல்லாமல் போகும் காரணம் தான் என்ன எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கவலையோடு இருப்போர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும் பதிவு இது !!!!
(நாள் செய்யாதை நல்லாரும் செய்யார் )
காலப்ரகாசிகை எனும் அற்புதமான நூலை புரட்டிய போது சிக்கிய தகவல்களை கொஞ்சம் நீங்களும் வாசியுங்கள் !!!!!
"உக்ர யோகங்கள் "
(தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள் )

திருதியை அல்லது அஷ்டமி உடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் நாள் !!!!

சதுர்த்தி அல்லது அஷ்டமி உடன் கூடிய உத்திர நட்சத்திரம் நாள்
பஞ்சமி திதியும் திருவோணம் கூடிய நாள்

சஷ்டி திதியுடன் மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள்

சப்தமி திதியுடன் ரேவதி நட்சத்திரம் கூடிய நாள்

நவமி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாள்

தசமி திதியுடன் பூசம் நட்சத்திரம் கூடிய நாள்

திருதியை அல்லது துவாதசி திதியுடன் அனுஷம் நட்சத்திரம் கூடிய நாள்

ஏகாதசி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் அல்லது மகம் நட்சத்திரம் கூடிய நாள்

தசமி திதியுடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாள்

திரயோதசி திதியுடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய நாள்

போன்றவை "உக்ர யோகங்கள் "என்ற பெயரில் அழைக்கப்படுகிறது !!!
"உக்ர யோகங்கள் "நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள் எடுத்தால்
"நோய் தீரும் "என்கிறது
"காலப்ரகாசிகை "ஜோதிட நூல்
எதை செய்தாலும் முதலில் அதன்மேல் நம்பிக்கையை வைத்து முயற்சி செய்யுங்கள் !!!
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் """
எல்லோரும் இன்புற்று இருக்க !!!!!!
எல்லாம் வல்ல "தன்வந்திரி பகவான் "அருள்புரியட்டும் !!!!!!” “”
திருக்கணித ஜோதிடம் எனும் முகநூல் பேஜ்ஜில் ஒரு வாரத்தில் வாசித்தோர்கள் எண்ணிக்கை 15,000க்கும் மேலே அதை வாசித்த நண்பர்கள் தொடர்ந்து பதிவை பாராட்டியது இல்லாமல் வரும் “மன்மத ஆண்டில் “ இந்த தீராதநோய்க்கு அறுவை சிகிச்சை போன்றவை செய்ய உகந்த நாட்களை பட்டியல் செய்யுங்கள் என தொடர்ந்து கோரியதாலும் ஜோதிடத்தை வைத்து வாழும் நம்மால் மக்களுக்கு உதவ வேண்டும் எனும் எண்ணத்துடன் வரும் ஆண்டில் மருத்துவர்கள் “மிகவும் முற்றியநோய் அறுவை சிகிச்சை செய்தாலும் காப்பாற்ற இயலாது “என்று கைவிடப்பட்ட நோயாளிகள் யாரேனும் இந்த “உக்ரயோகநாளில்” தக்கதொரு அறுவை சிகிச்சை செய்து “உயிர் மீண்டார்கள்”என்றால் அதை பின்னிட்டு இங்கே தகவல்கள் செய்யுங்கள் …இப்பதிவின் நோக்கமே “ஜோதிடத்தில் இல்லாதது ஒன்றுமே இல்லை “என்பதே !!!
வரும் மன்மத ஆண்டு தீராத நோய்க்கு சிகிச்சைகள் எடுத்து நோய் தீர்த்து வாழ சில நாட்கள் எம்முடைய தேடலில் சிக்கியது அதன் பட்டியல் பின்வருமாறு::----

1 ] 21/04/2015 அன்று காலை 11-56 முதல் மாலை 5-06 வரை 5மணிநேரம் 10 நிமிஷம் [ திருதியை-ரோஹிணி]


2 ]  06/05/2015 அன்று காலை 10-10 முதல் மதியம் 12-40வரை 2மணிநேரம் 30நிமிடங்கள் [திருதியை-அனுஷம்]


3 ] 06/06/2015 அன்று மாலை 5-31 முதல் மறுநாள் 07/06/2015 மதியம் 2-27 வரை 20 மணிநேரம் 56 நிமிடங்கள். [பஞ்சமி – திருவோணம் ]


4 ] 24/06/2015 அன்று 03-16 முதல் இரவு 7-27 வரை 16 மணிநேரம் 11 நிமிஷம் [ அஷ்டமி –உத்ரம் ]


5 ] 29/06/06 அன்று அதிகாலை 04-10 முதல் காலை 11-00 வரை 6 மணிநேரம் 50 நிமிஷம் [ துவாதசி –அனுஷம் ]


6 ] 11/07/2015 அன்று பகல் 1-26 முதல் 12/07/2015 காலை 8-23 வரை 18 மணிநேரம் 57 நிமிஷம் [ ஏகாதசி- கிருத்திகை ]


7 ] 07/08/2015 அன்று மாலை 6-50 முதல் மறுநாள் 08/08/2015 அன்று மாலை 5-39 வரை 22 மணிநேரம் 50 நிமிஷம் [ நவமி –கிருத்திகை ]


8 ] 08/08/2015 அன்று மாலை 6-27 முதல் மறுநாள் 09/08/2015 அன்று 4-59 வரை 22 மணிநேரம் 32 நிமிஷம் [ தசமி –ரோஹிணி ]


9 ] 18/08/2015 அன்று 03-15 முதல் காலை 10-10 வரை 6 மணிநேரம் 55 நிமிஷம் [ ஏகாதசி-கிருத்திகை ]


10 ] 05/09/2015 அன்று 03-55 முதல் 06/09/2015 அன்று 00-05 வரை 20 மணிநேரம் [அஷ்டமி- ரோஹிணி ]


11 ] 05/09/2015 அன்று இரவு 03-55 முதல் 06/09/2015 அன்று 00-05 வரை 20 மணிநேரம் 16 நிமிஷம் [அஷ்டமி –ரோஹிணி ]


12 ] 02/10/2015 அன்று காலை 8-27 முதல் மாலி 4-46 வரை 8 மணிநேரம் 19 நிமிஷம் [ பஞ்சமி –ரோஹிணி ]


13] 03/09/2015 அன்று காலை 07-27 முதல் மாலை 03-19 வரை 7 மணிநேரம் 52 நிமிஷம் [ சஷ்டி –மிருகசீர்ஷம் ]


14] 06/10/2015 அன்று மாலை 03-38 முதல் 07/10/2015 அன்று காலை 10-58 வரை 19 மணிநெரம் 20 நிமிஷம் [ தசமி –பூசம் ]


15 ] 08/10/2015 அன்று பகல் 01-25 முதல் இரவு 7-15 வரை 5 மணிநேரம் 50 நிமிஷம் [ ஏகாதசி- மகம் ]


16 ] 29/10/2015 அன்று மாலை 6-37 முதல் 30/10/2015 அன்று காலை 08-25 வரை 13 மணிநேரம் 45 நிமிஷம் [ திருதியை – ரோஹிணி ]


17 ] 15/12/2015 அன்று பகல் 02-05 முதல் 16/12/2015 அன்று 01-25 வரை 11 மணிநேரம் 20 நிமிஷம் [ பஞ்சமி –திருவோணம் ]


18 ] 06/01/2016 அன்று காலை 07-26 முதல் 07/01/2016 காலை 7-54 வரை 24 மணிநேரம் 38 நிமிஷம் [ துவாதசி – அனுஷம் ]


19 ] 16/01/2016 அன்று 02-32 முதல் மாலை 05-56 வரை 15 மணிநேரம் 24 நிமிஷம் [சப்தமி – ரேவதி ]


20 ] 19/01/2016 அன்று பகல் 12-19 முதல் இரவு 9-45 வரை 9 மணிநேரம் 26 நிமிஷம் [ ஏகாதசி – கிருத்திகை ]


21 ] 28/01/2016 அன்று 01-57 முதல் இரவு 11-57 வரை 10 மணிநேரம் [ சதுர்த்தி – உத்ரம் ]


22 ] 16/02/2016 அன்று 00-27 முதல் 03-09 வரை 2 மணிநேரம் 42 நிமிஷம் [ நவமி – கிருத்திகை ]


23 ] 16/02/2016 அன்று இரவு 11-05 முதல் 17/02/2016 02-30 வரை அதாவது 2 மணிநேரம் 35 நிமிஷம் மட்டுமே [ தசமி – ரோஹிணி ]


24 ] 18/03/2016 அன்று காலை 08-33 முதல் காலை 09-38 வரை 1 மணிநேரம் 05 நிமிஷம் [ தசமி –பூசம் ]

25 ] 11/04/2015 02-54 [அதிகாலை ] மாலை 04-11 வரை 14 மணிநேரம் 07 நிமிஷம் [பஞ்சமி –ரோஹிணி ]


26 ] 12/04/2016 அன்று 00-27 முதல் பகல் 2-54 வரை 10 மணிநேரம் 57 நிமிஷம் [ சஷ்டி – மிருகசீர்ஷம் ]


இந்த நாட்கள் எல்லாம் தீராத வியாதி என கருதுவதற்க்கு “சிகிச்சை “எடுக்க உகந்த நாட்கள் ஆகும்..

இவையெல்லாம் சாத்தியமா என கருத வேண்டாம் …
மகாபாரதம் அறிவீர் அதில் “கெளரவர்கள் “ 100 பேர் கருக்கலைந்தபோது 100 குடுவையில் பிடிக்கப்பட்டு 100 சகோதர்கள் உருவானார்கள் ..[அன்றைய குடுவை தானே இன்று டெஸ்ட் டியூப் குழந்தை ]
முதல் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது விநாயகப்பெருமானுக்கு நடந்த்து.. இன்று மருத்துவத்தில் அதையெல்லாம் சாத்தியம் ஆக்கி இருக்கிறது….


“உத்ரயோகம்” இனி வரும் காலகட்டத்தில் ஒவ்வொரு மருத்துவரும் சிகிச்சை பலன் அளிக்காத நோயாளிகளுக்கு “சோதித்து பார்த்து” அதில் “மருத்துவ வெற்றி” அடைய அதிக நாட்கள் இல்லை !!!

இதோ மன்மத ஆண்டு நெருங்கி விட்ட்து!!!இனி எல்லாம் சாத்தியம் தான்!!!!

மக்களின் நலன் கருதி வெளியிடுவது!!!

என்றும் ஜோதிடப்பணியில்!!!
Astro Senthil Kumar
 ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,
புதுபஸ் நிலையம் பின்புறம்
 பெருந்துறை   -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார்
செல்: +91 98427 69404
             +91 98434 69404  


Wednesday 4 March 2015

மன்மத வருஷத்தில் கோயில் கும்பாபிஷேகம் செய்யலாமா???

ஜோதிட முழக்கம்” 2015  பெருந்துறைகாஞ்சிபுரம்
ராஜப்பா குருக்கள் அவர்கள் ஆற்றிய சிறப்புரைஎழுத்து வடிவில் உங்கள் பார்வைக்கு!!!!
காமாட்சியாஸ்னாம் கடிதாஸ்னம் இதபவு!!!
வியாக்யாத காமா ஹமகா!!!கல்யாணம் சதுதங்க ரோதுபவம்காஞ்சிபுர நாயகா!!!”
[ஸ்லோகத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும் திருத்தம் செய்ய]
எல்லாம் வல்ல இறைவனின் அருளாலே!!
இந்த காலங்களை பற்றிய நிர்ணயம் செய்யும்ஜோதிட சாஸ்திரம்வேதங்களின் அங்கமாக இருக்கிறது!!
வேதம் நான்கு அதில்6 சாஸ்திரங்களின் ஜோதிடமும் ஒன்றாகும்!!
வேதம் ,வேதாங்கம், இம்சா, மாமீம்சா என சாஸ்திரங்களின் பிரிவுகளில் ஜோதிடமும் நிருத்தம் என சேர்க்கப்பட்டுள்ளது!!
இங்கே ஆகம சாஸ்திரங்கள் எல்லாம் உலக நன்மைக்காகவே படைக்கப்பட்டது,,
எல்லோரும் இங்கே ஜோதிட சாஸ்திரம் பற்றி பேச இருந்தாலும் பொதுவாக காமீகம் ,காரணம் இதில் காமீகம் தான் பகவானால் உபதேசிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக கட்டிடம் சார்ந்த கலைகளில் காமீகம் சிற்ப அமைப்பாகிறது,
அதற்கான காரணிகள் இருக்கிறது, அதில்காலவீதி படலம்என்றும் ஒன்று உண்டு!!
மாகமாகம் வினாசத்ரோ யனோ ரவைத்ரோத்ரம்
உத்ராயணத்தில் சாந்திரமானத்தில் தை அமாவாஸை வந்தால் மாசி மாதப்பிறப்பு என்கிறது விதிமுறை!!
ஆனால் ஆகமத்தில்மாக இதி கும்பாசம்தியாசூர்யன் கும்பத்தில் பிரவேசிக்கும் காலத்தை கொடுத்து இருக்கிறது!!அதற்க்கு வியாக்னம் கொடுத்து இருக்கிறார்கள் ..நாம் சாதாரணமாகசைத்ர ,வைசாகம். ஜேஷ்டாஎன சொல்கிறோம்,, சந்திரன் அந்த நட்சத்திரத்தில் கூடுவது கண்டு செளரமானம் என சொன்னால் சூர்ய கதிவைத்து சொன்னால் எந்த ராசிக்கு பிரவேசிக்கிறதோ அதை வைத்து உதாரணமாகசைத்ரமாதம்என கணிதம் ..சித்திரை மாத பெளர்ணமி  ஒருநாள் முன்பின் அமையலாம்.விசாகம் ,வைகாசிக்கு சம்பந்தப்பட்ட்து,, இப்படி மாதமும் பெளர்ணமியும் கணக்கில் வைப்பது சாந்திரமானம் ..இவைகள் எல்லாம் சாந்திரமானத்தில் கணக்கிடாலும்சிவராத்திரிபோன்ற வைபவங்கள் எல்லாம் செளரமான வழி வகையாக செய்ய வேண்டும் என்பது ஆகமவிதி முறை ஆகும்..வியாக்னம் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி பல வருஷங்களுக்கு முன்பு 12 ஆண்டு என நினைக்கிறேன் தைமாத கடைசியில் வருவதுமாசி சிவராத்திரியா??”என சர்ச்சை வந்தது..அப்போது கும்பத்தில் சூர்யன் பிரவேசித்த பின்னர் வருவதேமஹா சிவராத்திரிஎனபஞ்சாங்க சத் சங்கத்தில்முடிவு செய்தார்கள்.. இதற்கு உதவியாக பஞ்சாங்க கணிதர்கள் பயன்படுத்தசைவ கால விவேகாஎனும் பல்வேறு உப ஆகம விதிமுறைகள் எல்லாம்இகமத்யான சிவாச்சாரியார்என்பவர் அந்த காலத்திலேயேகால நிர்ணயம் சைவ காலவித விவேகாஎனும் கிரந்தம் படைத்துள்ளார்கள்..பூஜைகள் பற்றிய சர்ச்சைகள் எழும் போது எல்லாம் பஞ்சாங்க கணிதர்களுக்கு கை கொடுப்பதே இந்தசைவ கால விவேகாநூல் தான் ..
ஜோதிடத்தில் மூல நட்சத்திரம் இப்போதெல்லாம் முகூர்த்ததிற்கு எடுத்து கொள்கிறார்கள்..பஞ்சாங்கமும் கொடுத்தும் இருக்கிறதுஆனால் ஆகமத்தில்மூல நட்சத்திரம்இரண்டாம் பட்சத்தில் தான் வைக்கபடுகிறது..
12 நட்சத்திரங்கள் விலக்கப்படுகிறது அதில் உதாரணமாக ஆருத்ராய சர்வநாசம்என சொல்லப்பட்டாலும் ஆனால்திருவாதிரைசிவ பிரதிஷ்டைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது..ஆனால் திருவாதிரை மற்ற தேவதைகள் பிரதிஷ்டைக்கு எடுக்கவும் கூடாது..
ஆகமவிதி என்பதுகீழ் நீதிமன்றம்போல தான் ஆனால்சிவாகம விதிஉயர்நீதிமன்றம்போல என்பதை கருத்தில் கொள்ளுங்கள்!!
ரிஷிகள் தன் ஞானத்தின் வலிமையால் கண்டு உணர்ந்து அதை அனுசரித்து தன்தபஸ் வலிமையால்மக்களுக்கு படைக்கப்பட்டதேஜோதிட சாஸ்திரம்
கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜோதிட விதிகளை ஆகமவிதிகளுக்கு உட்பட்டு மீறாமல் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது..
திருமணம் போன்ற முகூர்த்தங்களில் 7/8 இடம் சுத்தம் பார்த்தாலும் குறிப்பாக 7 இடம் சுத்தம் இருந்தாலும் முகூர்த்தம் நிர்ணயம் செய்யப்படுகிறது,,ஆனால் ஆலய விஷயங்களில் லக்னத்தின் எட்டாம் இடம் சுத்தி வேண்டும் கிரகங்களில் உயர்வான குருவே எட்டில் இருந்தாலும் ஆலய விஷயங்களை பார்க்கும் போது அந்த லக்ன நேரத்தை தவிர்க்க வேண்டும்..அவ்வாறாக தான் ஆலய கும்பாபிஷேக கால நிர்ணயம் செய்ய வேண்டும்..
பிரஷ்திடை என்றால் எட்டாம் இடம் சுத்தம் வேண்டும்..
சிலர் வரும்மன்மத வருஷம்கோயில் கும்பாபிஷேகம் செய்விக்க கூடாது :
கோயில் கும்பாபிஷேகத்திற்க்கு நாட்கள் இல்லை என சொல்லி கொள்கிறார்கள் ..எதோ ஒரு பத்திரிக்கை கூட அதை எழுதி இருப்பதாக சொன்னார்கள்..
இவைகள் எல்லாம் தவறான தகவல்கள்
மன்மத வருஷம்கீலக வருஷம்தாது வருஷம் என ஒரு ஆறு தமிழ் ஆண்டுகள் அதுவும்கூட தொடர்ச்சியாக இல்லை மாறி மாறி வரும்..
வரும் மன்மத வருஷம் சேர்ந்த அந்த ஆறு ஆண்டுகளில்நூதன ஆலயம் கும்பாபிஷேகம்செய்விக்க கூடாது என்றே சொல்கிறது!!
எல்லா கும்பாபிஷேகமும் ஒரே கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது!!
ஆவர்தனம்ஆனாவர்தனம்புனராவர்தம்என திதி/நட்சத்திர வேறுபாடுகள் உண்டு!!
நூதன பிரதிஷ்டை என்பது முற்றிலும் புது ஆலயமாக ஆலயமே இல்லாத இடத்தில் உருவாக்கப்படுவது!!
ஜூர்ணதாரண பிரதிஷ்டை என்பது பழைய கோயில்களைஅஷ்டமங்கல பிரசன்னம்பார்ப்பதாலோ ஆலய கோபுரம் அல்லது சில பழுது சார்ந்த வேலையாக [ரீசார்ஜ் செய்வது போல] இருந்தால் அந்த கோயில்கள் கும்பாபிஷேகம் செய்விக்கலாம்.. குறைபாடுகளை கொண்ட ஆலயங்கள் தாரளமாக கும்பாபிஷேகம் செய்விக்கலாம்..
12 ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படும் கும்பாபிஷேகம் தாராளமாக செய்யலாம்..ஆனால் எட்டாம் இடமும் சுத்தம் வேண்டும் அதை மறந்து விடாதீர்கள்..
லக்னத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் எப்போதும்ஸ்திர லக்னமும்உபய லக்னமும்கும்பாபிஷேகம் செய்விக்க வேண்டும்>> சிலர் தவறாக சர லக்னம் எடுப்பது சரியானதில்லை!!
ஆனால்சர லக்னம்பால ஆலயம் செய்விக்க எடுத்து கொள்ளலாம் பால ஆலயம் செய்விக்கசரலக்னம்என்பது மிக உத்தமம் ””
சர்ராசி விர்ஜயேஎனகாலவீதி படலம்சொல்கிறது..பின் விதி தொடர்ந்து வருகிறது அதில் தான் சூட்சுமம்குருவும் சர்ராசியில்இருக்க வேண்டும் எனும் விதிமுறை..
மாகாபாத்ரபதயோ விநா” – கும்பாபிஷேகம் மற்றும் விவாகம் மாசி மாதம் சிறப்பில்லை என்கிறது ஆகமவிதி!!
ஆனால் இப்போதெல்லாம் செய்கிறார்கள் ஆனால் யாருடைய தூண்டுதலில் செய்விக்கப்படுகிறது என்று  தெரியவில்லை!!
உத்ராயணத்தில்மாசியைதவிர மற்ற ஐந்து மாதங்கள் எடுத்து கொள்ளலாம்தட்சிணாயனத்தில்ஆவணி- ஐப்பசி- கார்த்திகைஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்..]
ஜூர்ணதார்ண கும்பாஷேக விஷயத்தில்அஸ்ட பந்தன மருந்துதேவதைகளுக்குசாற்றியேதீர வேண்டும் எனும் நிர்பந்தம் இருக்கும் ஆலயத்தில் இன்றே பணியை ஆரம்பித்து நாளை காலையே செய்விக்கலாம் இதைஅர்த்தரித பிரதிஷ்டைஎன்று சொல்வார்கள்..இதற்குராகு காலம் எம கண்டம் போன்றவைகள் தவிர்த்து செய்தால் போதுமானது
அம்பாள் போன்ற பெண் கடவுளுக்கு செய்விக்கும்போது ஆயாதிபெளஷியாந்தம்என சொல்வார்கள்..கிராம தேவதைகள் காளி-துர்க்கை-போன்ற பெண்கடவுளுக்கு ஆடி மாதம் கூட கணக்கில் எடுக்கப்படுகிறது!!
இதர விஷேசங்கள் ஆடி மாதம் கூடாது!
தைமாதமும் ஆடிமாதமும் வெள்ளிக்கிழமை என்பது மிக சிறப்பு மிக்கது!!
சித்திரை மாத சித்திரை நட்சத்திரம்வைகாசி மாத விசாகம்ஆனி மாத ஜேஷ்டா [கேட்டை] அல்லது மூலம்ஆடி மாத பூராடம்/ உத்திராடம்ஆவணி மாத திருவோணம்புரட்டாசியில் [பாத்ரபத நட்சத்திரம்] பூரட்டாதி /உத்திரட்டாதிஐப்பசி அசுவிணிகார்த்திகை கிருத்திகைதனுசு மாத திருவாதிரைதை பூசம்மாசி மகம்பங்குனி உத்ரம் என அடிப்படையாக பெளர்ணமி திதியை பிரதானமாக அனுசரித்தாலும் சவ்வியமாக வரும் முதல்நாள் அல்லது அடுத்தநாள் அதே நட்சத்திரம் தொடரும் அதை எல்லாம் அந்தந்த ஊருதீர்த்தவாரிஅனுசரிக்க வேண்டும்..கடலோர ஆலயங்களில் பத்து நாட்கள் கூட விழா எடுக்கபடுகிறது..
27 நட்சத்திரம் 30 நாட்களுக்கு பகிர்ந்து வரும்போது ஒரு மாதத்தில் ஒரே நட்சத்திரம் இருமுறை வரும் ..தீர்த்தவாரி எடுக்க எதை கணக்கில் எடுப்பது எனும் குழப்பம் வருவது இயற்கையே!!
அப்படி சர்ச்சைகள் வரும்போது எல்லாம் முதலில் வரும் நட்சத்திரம் விட்டு விட்டு பின்னால் வருவதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்..
பொதுவாக மாத ஆரம்பத்தில் சில வருஷங்களில் வருவதால் தான் இதுபோன்ற சர்ச்சைகள் வரும் .ஜோதிடர்கள் ஆகிய நீங்கள் எல்லாம்காலவிதி படலம்அவசியம் அறிந்து வைத்து இருக்க வேண்டும்.கால நேரமும் குறைவாக இருக்கிறது.. என்க்கு பின்னால் மக்களின்லோக-சுப சுகங்களைபற்றி எல்லாம் ஏனைய ஜோதிட பெருமக்கள் இனி பேசுவார்கள் நன்றி!!