Saturday 25 April 2020

ஜோதிட பயிற்சி தளம் (பகுதி 11)

சுக்கிரனின் தன்மைகள் ஜோதிட பயிற்சி தளம் பகுதி [11]

அனைவருக்கும் வணக்கம் நான் பெருந்துறையில் இருந்து Ask எனும்
Astro Senthil Kumar எழுதுகிறேன்.

அடிப்படையில் ஜோதிடத்தில் ஒன்றும் தெரியாது என்பவர்களுக்கு என இந்த தளம் 
https://www.youtube.com/channel/UCgkT8E50F8EbZfT0yOIT45A?view_as=subscriber
யூடியூப்பில் எனது சேனல் லிங்கில் உங்களுக்கு என ஜோதிட பதிவுகளை பதிகிறேன்.. அதையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...






சுக்கிரன் 

ராசிகள் :-ரிஷபம் துலாம்

உச்சம் :-மீனம்

நீசம் :-கன்னி

மூலத்திரிகோணம் :-துலாம்


நிறம் :-வெண்மை


குணம் :-ராஜஸம்

மலர் :-வெண்தாமரை


ரத்தினம் :-வைரம்


மரம் :-அத்தி

கிழமை :-வெள்ளி


தேவதை :-லட்சுமி


கிழக்கு :-கிழக்கு


ஆசன வடிவம் :-ஐங்கோணம்


வாகனம் :-கருடன்


தானியம் :-மொச்சை


உலோகம் :-வெள்ளி

நோய் :-சீதளம்

சுவை :-இனிப்பு

பால் :-பெண்


கால் :-இரண்டு கால்


ஜாதி :-வேளாளர்


இயக்கம் :-நடக்கும்

மச்சம் :-இடது

தழும்பு :-முகம்

தாது மூலம் ஸ்திரம்

தாவரம் :-விளைபயிர்

தாவரத்தின் ஆளுமை :-காய்

பஞ்சபூதம் :-நீர்

திசை :-கிழக்கு

உறுப்பு :-குறி

ஆளுமை :-கரிசல் மண் பரப்பு

தோற்றம் :-அழகு

உடலில் :-நீர்

செயல் :-இனிமை

தலம் :-ஸ்ரீரங்கம்



சுக்கிரனின் உருவமைப்பு பூமியை ஒத்துள்ளது..
 இதை பூமியின் உடன் பிறந்த இரட்டை குழந்தை என்று கூறுவதுண்டு.
சுக்கிரன் சூரியனை 2 2 5 நாட்களில் சுற்றி வருகிறது தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 23 1/2 மணி நேரம் ஆகிறது..
ஜோதிடத்தில் சுக்கிரன் உலகிலுள்ள ஆடம்பரமான அழகான ரசனை மிகு ஐம்புலன்களை சார்ந்த அனைத்து செயல்பாட்டுக்கும் அதிகாரம் வழங்கும் வல்லமை படைத்தவன்..
அசுரகுருவான சுக்கிரன் இவங்களுக்கெல்லாம் உரியவள் சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் நல்ல முறையில் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாவிதமான லௌகீக சுகங்களை அனுபவித்து மகிழ்வார்கள்..
இக்கோள் சூரியனுக்கு இரண்டாவது வட்டத்தில் சுற்றி வருகிறது இது சூரியனை 2 2 5 நாட்களில் சுற்றி வருகிறது இதன் சுற்றளவு 23 ஆயிரத்து 200 மைல்கள் ஆகும் இது சூரியனை குறுக்களவு சுமார் 7700மைல்களாகும்...   இக்கோள் 23 1/2 மணிநேரத்தில் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்கிறது.. 





சுக்கிரனுக்கு வழங்கும் இதர பெயர்கள்:-

 அசுர மந்திரி, உசனன், கவி, சுங்கன், ஆநாவிலன், ஆசான், உசன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சீதன், சீதகன்,  நற்கோள், பளிங்கு, பார்க்கவன், பிரசுரன்,  பிருகு, புகர்,  புயல், மழைக்கோள், வெள்ளி


சுக்கிரன் குணங்கள்:-


 ஆடம்பர விருப்பம் கலைகளில் ஆர்வம்,
 அலங்காரப்பிரியர் காதல் மற்றும் காமத்தில் விருப்பம்,
 வெண்மையில் ரசனை இளமையாக இருக்க விருப்பம்,
 அழகின் இரசித்தல் படுக்கைகளில் நேசித்தல்,
வாசனை திரவியங்களை விரும்புதல்,
ஆடம்பரங்களில் ஆசை விலை உயர்ந்த ஆடைகளை அணிதல்,
கொஞ்சி பேசுதல், புதிய வாகனங்களை மட்டுமே பயன்படுத்துதல்




காரகத்துவம்:-
 களத்திரகாரக,ன் தாம்பத்திய உறவு, கவிதை எழுதுதல்,
 மலர்கள், ஆடைகள், ஆபரணங்கள், மதுபான வகைகள்,
திருமணபந்தம் சுக்கிலம் [விந்தணு]
தனம் எனும் பணம் செல்வச்செழிப்பு 
வாகனங்கள் அலங்காரப்பொருட்கள் 
வீட்டுமனை சுகபோக வாழ்க்கை 
வாசனை திரவியங்கள் 
சப்தஸ்வர ராகங்கள் 
முகத்தில் கள்ளங்கள், கர்ப்பப்பை,  
கவர்ச்சியான அழகு இனிப்பு பொருட்கள் 
சந்தோஷம் வசீகர முக அழகு 
கற்பனை என்னும் இல்லற வாழ்க்கை 
ஆடம்பர நண்பர்கள் தொழில் 
அழகு ஆபரண வாசனைப் பொருட்கள் விற்பனை 
சுவையான பொருள்கள் 
விற்பனை ஹோட்டல் தொழில் 
வெள்ளி வைர வியாபாரிகள் 
பேன்சி வியாபாரங்கள் 
கால்நடை வளர்த்தல் 
இசை நாடகம் நாட்டியம் சினிமா துறை போன்ற கலைத் தொழில் 
துணி மொத்த வியாபாரம் 
ஜவுளி உற்பத்தி தொழில் ஜவுளி ஏஜென்ட் 
கலைத்துறையில் பணி, மதுபான தொழில் மதுபான பார் தொழில் 
தங்கும் விடுதி நடத்துதல் சிற்பம் செதுக்குதல் 
வட்டித்தொழில் நிதி நிறுவனம், நிதி அமைச்சராக இருத்தல்,
 தணிக்கையாளர் வீடு வர்ணப்பூச்சு, வீட்டு உள் அலங்கார நிபுணர் 





1ம் பாவம் 

அலங்காரப்பிரியர் மகிழ்ச்சி உள்ளவர்
லௌகீக வாழ்க்கையில் ஆசையில் மேம்பட்டு இருப்பவர்
உயர்ந்த சிந்தனை திறன் கௌரவம் மற்றும் அந்தஸ்தை பெறுதல்
கூடுதலான காம இச்சைகள் வசீகர தோற்றமும்
அழகான ஒரு சூழ்நிலையை விரும்புதல் 





2ம் பாவம் 

ரசிக்கக்கூடிய வசீகரமான முகம் இனிமையாக கொஞ்சி பேசுதல் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை 
சாஸ்திர சம்பிரதாயங்கள் மூலம் வழி நடத்துதல் 
சமையல் கல்வி பயிலுதல் ஆடை அலங்கார கல்வி பெறுதல் 
வாகன கல்வி பெறுதல் மதுபானம் விருப்பம் 
விலை உயர்ந்த கற்கள் மூலம் வருமானம் 
மாணவியர்கள் மூலம் ஆதாயம் 
கேளிக்கை விடுதி மூலம் ஆதாயம் 





3-ம் பாவம் 


காமத்தில் அதிக ஈடுபாடு ஆசைகள் அதிகமாக இருக்கும் 
உற்சாகம் நிறைந்த மனம் 
அடிக்கடி தன்னை மாற்றிக்கொள்ளும் குணம் 
நன்றாக பாடும் திறன் 
இசைக்கருவிகளை மீட்டும் திறன் 
கலை ஞானத்தில் புகழ் அடைந்து பேசுதல் 
இன்ப சுற்றுலா விரும்புதல் 




4-ம் பாவம் 


அழகான ஆடம்பரமான கலை நயமான வீட்டுவசதி 
ஆடம்பரமான வாகன வசதி சுகமான வாழ்க்கை தரும் 
புதுமையான கருவிகளை பயன்படுத்துதல் 
நவீன பொருட்களை மட்டுமே பயன்படுத்துதல் 
தங்கம் வெள்ளி வைரம் போன்ற ஆபரண சேர்க்கை 
தாயாரிடம் மிகுந்த பாசம் அறுசுவை உணவு விருப்பம் 
உணவு மூலப்பொருட்களை விற்பனை மளிகை கடை தொழில் 
ஆடம்பர ஆபரண தொழில்கள் மற்றும் தயாரித்தல் 






5-ம் பாவம் 


பெண் குழந்தைகள் மீது அதிக பாசம் 
செல்வ சேர்க்கை கலைத்துறை தொடர்புகள் 
சமயம் சார்ந்த சிந்தனைகள் 
உல்லாச வாழ்க்கையை விரும்புதல் 
மது மாது கேளிக்கை நாட்டங்கள் அதிகம் 
அழகான குழந்தை பெறுதல் 
பெண் தெய்வ வழிபாடு 
மகாலட்சுமி வழிபாடு 




6-ம் பாவம் 



திருமணத்தடைகள் திருமண 
உறவுகளில் விரிசல் 
கணவன் மற்றும் மனைவி உறவுகளில் விரிசல் 
சிறுநீரக கோளாறு நோய்கள் 
பணம் செல்வ செழிப்பில் பிரச்சினைகள் 
கெட்ட பழக்கத்திற்கு அடிமையாதல் 
வீடு மனை வாகன பிரச்சனைகள் 
மனைவியாலும் பிரச்சினைகள் 
உடலில் சர்க்கரை நோய் ஏற்படுதல் 



7-ம் பாவம் 


வசீகர தோற்றம் அழகு அடைதல் 
திருமண வாழ்க்கையில் சந்தோசங்கள் 
வீடு மனை வாகனங்கள் ஆடைகள் ஆபரணங்கள் 
அழகான மனைவி லௌகீக வாழ்க்கையில் தரம் 
காமத்தில் கூடுதல் இன்பம் அடைதல் 
நிறைந்த நண்பர்கள் உறவினர்கள் 
கலைகளில் ஈடுபாடு களத்திர உறவினால் மேன்மை 
களத்திர உறவினரால் நன்மை கலைகளில் ஈடுபாடு 
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் 
பல பெண்களுடைய தொடர்புகள் 




8-ம் பாவம் 



பிரச்சினை திருப்தியின்மை 
அவமானங்கள் நடிகர் போன்ற போலியான 
அன்பு காதல் பாசம் விபரீத பாலியல் செயல்கள் 
முறைகேடான பாலியல் உறவுகள் 
துரோகம் செய்தல் 
அழகு அழகான ஆபத்து அதிக ஈடுபாடு 
சுய வருமானம் வீடு மனை வாகனம் சேர்க்கைகளை பாதிப்பு 
பொன் பொருள் முறை தவறிய சேர்க்கை 
திருமண தடைகள் 
வியக்கும் விதமாக பேசி இனிக்க இனிக்க பேசி ஏமாற்றுதல் 
குடும்ப விருத்தி உடன் கூடிய பிரச்சனைகள் 
கலைகளில் ஈடுபாடும் அதைத் தொடர இயலாமையும் 
உடலில் சர்க்கரை நோய் பாலியல் நோய் 
சிறுநீரக நோய் விந்தணுக்கள் வீரியம் இல்லாமை 
விலைமாதர்கள் தொடர்பு
ஆடை ஆபரண சோதனைக்கல்வி 
உணவு தயாரிப்பு கல்வி கணிப்பொறிக் கல்வி 




9ம் பாவம்


கலைகளில் ஆர்வம் அதிஷ்டம் அடைதல் 
ரசனையுடன் செயல்களில் மூழ்குதல் 
காமம் உணர்வு ஈடுபாடு கௌரவமான வழியில் ஆசைகள் 
ஆடை ஆபரண சேர்க்கை 
இசைக்கருவிகள் காற்றினால் இசைக்கக் கூடிய இசைக்கருவிகள் கையாளுதல் 
கலை ஞானத்தால் புகழ் அடைந்தல் 
சுற்றுலாவில் ஈடுபாடுகள் 
மனைவியின் மூலமாக அதிர்ஷ்டங்கள்



10-ம் பாவம் 



அழகு நிலையம் வைத்துள்ளவர்கள்
 தங்கம் வெள்ளி வைரம் போன்ற  ஆபரண தொழில்கள் 
உணவு பொருட்கள் சம்பந்தமான தொழில் 
உணவு மூலப்பொருட்கள் சம்பந்தமான தொழில் 
உணவு உற்பத்தி தொழில்கள் 
உயர்ந்த தன்மையான தொழில்கள் 
வங்கி தொழில்கள் வாசனை பொருட்கள் 
வரவு செலவுகள் 
கலைத்துறை சார்ந்த பாடுதல் இசையமைத்தால் நாடகம் கதை வசனம் ஒளிப்பதிவு செய்தல்  திரைப்படத்தை இயக்குதல் 
இனிப்பு மற்றும் பழரச பானம் தயாரிப்பு 
விற்பனை லாட்ஜ் போன்ற தங்கும்விடுதிகள் நடத்துதல் 
மதுவகைகள் கட்டில் மெத்தை தொழில்கள் 
மணவறை அலங்காரம் செய்தல் 
மலர் விற்பனை செய்தல் 
வாகன ஓட்டுனர்கள் வாகனத்தை வாடகைக்கு விடும் தொழில் 
போக்குவரத்து துறை 




11-ம் பாவம் 


களத்திர உறவு 
ஆடை ஆபரண அலங்காரப் பொருட்கள் சேர்க்கை பெறுதல் 
வீடு மனை வாகனம் போக்குவரத்து மூலமாக ஆதாயம் பெறுதல் 
வாசனை பொருட்கள் வியாபாரம் செய்தல் 
கலையின் மூலமாக ஆதாயம் பெறுதல் 
அழகான குழந்தைகள் மூலம் ஆதாயம் பெறுதல் 
உணவு மூலப்பொருட்கள் மூலமாக ஆதாயம் பெறுதல் 
திரையரங்கு தங்கும் விடுதிகள் உல்லாச விடுதிகள் கேளிக்கை விடுதிகள் மூலம் ஆதாயம் பெறுதல் 
சுற்றுலா வழிகாட்டி 
பெண்கள் இளையகளத்திரத்தின் மூலம் ஆதாயம் பெறுதல் 



12-ம் பாவம் 


சுயசம்பாத்திய இழப்பு 
களத்திர பிரிவினை காமத்தில் 
கூடுதல் ஆசைகள் காமத்தால் சொத்துக்களை இழத்தல் 
ஆடம்பர செலவுகள் வீடு வாகனங்களில் முதலீடு சேமிப்பு வழி இழப்பு
சுகமான வாழ்க்கை அதனால் நடுத்தெருவுக்கு கொண்டு வருவதும், உறவுகளை இழந்து வெகுதூரம் போய் வாழ்வதும் 




ஜோதிட பயிற்சி தளம் 12 ல் சனீஸ்வரர் குறித்து பேசுவோம் 

எல்லாம் ஒரு நோட்டில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள்..

மேலும் தொழில் முறை ஜோதிடர்கள் ஆக தனி பயிற்சி உண்டு வாட்ஸ் அப் எண் 9843469404 மூலமாக அணுகவும்..

தனி நபர் ஜாதக ஆலோசனைகள் பெற

What's App 9843469404 

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 

பெருந்துறை
Astro Senthil Kumar.


No comments:

Post a Comment