Wednesday 26 October 2016

பிரசன்ன ஜோதிட குறிப்புகள் குறித்த பதிவு ..

ஆருட பாவம் எனும் “நஷ்ட ப்ரச்னை”
நஷ்டப்பட்ட சொத்து இருக்கும் திசையை சந்திரனை கொண்டு காணும் வழி

அசுவினி முதலாக நட்சத்திரங்களை எண்ணி பிரசன்னம் கேட்கப்படும் அந்த நாளில் சந்திரன் நின்ற நட்சத்திரம் வரை எண்ணி கொண்டு அத்துடன் நிறுத்தி கொண்டு எட்டு கட்டம் வரும்படி கட்டம் அமைத்து ஒவ்வொன்றிலும் மூன்று நட்சத்திரம் வீதமாஅக் அசுவினி முதலாக எண்ணி அமைத்து வரும் போது எந்த திக்கில் நிற்கிறதோ அந்த திக்கில் கைவிட்டு போன பொருள் இருக்கும் என அர்த்தம் கொள்ள வேண்டும்..[ எட்டு கட்டமும் எட்டு திக்கு ஆக பாவிக்கப்பட வேண்டும் நடு கீழ் மத்தியில் இருந்து “கிழக்கு” திசையில் இருந்து தட்சிண வலமாக கணிக்கில் எடுத்து கொண்டு கவனிக்க வேண்டும் ]

இப்படி “கணிதம் கண்ட பிறகு
நஷ்டம் அடைந்த அதாவது காணாமல் போன கை விட்டு போன சொத்து கிடைக்குமா?? என அறிய காணும் வழிமுறை என்னவென இனி கவனிப்போம் …
பிரச்சனம் கேட்ட அந்தநாளில்
தற்போதைய

திதி
வாரம்
நட்சத்திரம்
லக்னம்
ஜாமம்திக்கு

ஆகிய இவைகளை கவனித்து
தனி தனியாக எண்ணி ஒன்றாக மொத்தமாக கூட்டின தொகையை எட்டினால் வகுத்து மீதம் வரும் எண் என்ன என்பதை பார்த்து கண்டுபிடித்த எண் ஆனது

ஒன்று அல்லது
ஐந்து ஆகிய இரண்டில் எது வந்தாலும் இழந்த சொத்து கைக்கு கிடைக்கும் என பொருள் ஆகும்.
இரண்டு அல்லது எட்டு என எண்களில் வரும் போது “கை விட்டு போன பொருள்” திரும்ப கைக்கு கிடைக்கவே கிடைக்காது ..
மூன்று அல்லது ஏழு ஆகிய எண்கள் இரண்டில் எது எட்டினால் வகுத்த மிச்சமாக வரும் எனில் நஷ்ட பொருள் ஒருவரால் பீடிக்கப்பட்டு இருக்கும்..
மேலே சொன்ன எட்டால் வகுத்து காணப்பட்ட மீதம் எண் ஆனது நான்கு அல்லது ஆறு ஆகிய எண் ஆக அமையும் எனில் “கைவிட்டு போன பொருள்” எது ஆகினும் அது திரும்ப “கைக்கு” வந்து சேரும்..

நட்சத்திரங்களை கொண்டு எந்த திக்கில் நஷ்டம் ஆன பொருள் இருக்கும் என்பதை கணிக்கும் முறை :-
கிருத்திகை
ரோஹிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்பூசம்
ஆயில்யம் ஆகிய நட்சத்திர நாளில் நஷ்டம் ஆகினில்
நிச்சயமாக இந்த நஷ்ட சொத்து “கிழக்கு” திசையில் இருக்கும்.. 

மகம்
பூரம்
உத்திரம்ஹஸ்தம்சித்திரை
சுவாதி
விசாகம் ஆகிய நட்சத்திர நாளில் நஷ்டம் ஆகின் இழந்த பொருள் நிச்சயமாக “ தெற்கு” திசையில் இருக்கும்  


அனுஷம்
கேட்டைமூலம்
பூராடம்
உத்திராடம்திருவோணம் ஆகிய நட்சத்திர நாளில் எனில் “மேற்கு” திசையில் இருக்கும்..


அவிட்டம்சதயம்
பூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி ஆகிய நட்சத்திர நாளில் எனில் “வடக்கு” திசையில் நஷ்ட பொருள் இருக்கும் என கணிதம் ஆகும்.. 

“கைவிட்டு போன பொருளோ நபரோ உள்ளூரிலா??? வெளியூரிலா?? வெகுதூரத்திலா?? என கேள்வி எழும்போது அதை பற்றிய ஆருடம் கணிக்கும் போது
மகம்
பூரம்
உத்திரம்
ஆகிய மூன்று நட்சத்திர நாளில் பிரசன்னம் எனும் போது அந்த நஷ்ட பொருள் மிகமிக சமீபத்திலேயே உள்ளது என பொருள் ஆகும் விரைவில் கைக்கு வந்தும் சேரும்..


அஸ்தம்
சித்திரைசுவாதிவிசாகம்அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம் ஆகிய நாளில் ப்ரசன்னம் கேட்பின் நஷ்டம் ஆன பொருள் அந்த ஊருக்குள்ளே தான் உள்ளது நஷ்ட சொத்து விரைவில் காணப்படும் .. 

உத்திராடம்திருவோணம்
அவிட்டம்சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதிஅசுவினிபரணி ஆகிய நாளில் ப்ரசன்னம் கேட்பின் உள்ளூரில் இல்லாமல் அருகிலுள்ள வெளியூருக்கு சென்று இருக்கும் பிற ஊரில் கிடைக்கும் எனலாம்.


மீதம் இருக்கும்

கிருத்திகை
ரோஹிணிமிருகசீரிடம்திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம் ஆகிய நாளில் ப்ரசன்னம் கேட்பின் அந்த “நஷ்ட சொத்து” வெகுதூரத்திற்க்கு சென்று விட்டது என பொருள் ஆகும்.. 

“ஒரு களவாடிய பொருள் ஆனது யாரால் களவாடப்பட்டு இருக்கும் எனும் ப்ரசன்னம் காணும் விதம் ஆனது :- ப்ரசன்னம் கேட்கும் காலத்தில் ஏற்படும் “லக்னம்” கொண்டு இதை கணிக்கலாம்.. “மேஷலக்னம்” எனில் அந்த நஷ்ட சொத்தை களவு செய்தது “பிராமாணர்” என பொருள்..“ரிஷப லக்னம்” ப்ரசன்ன லக்னம் எனில் சொத்தை களவாடிய ஷத்திரியர் இனத்தால் எனவும் சொல்லலாம்.“மிதுன லக்னம்” ப்ரசன்ன காலத்தில் அது வைசியர் தான் அதை களவாடியது என அறியலாம்..

“கடக லக்னம்” ப்ரசன்ன காலத்தில் லக்னம் “சூத்திரரால்” களவாடப்பட்டது..“சிம்மம்” லக்னம் ப்ரசன்ன லக்னம் ஆகின் “சோரர்” தன் உறவுகளே “திருடி” இருக்கலாம் என அறியலாம்..“கன்னி” லக்னம் ஆகின் அவரோ அல்லது அவரது மனைவியோ கூட இருக்கலாம்…

 “துலாம் “ லக்னம் நஷ்ட ப்ரசன்ன நேர்ந்தால் அவரது தன் புத்திரர் அல்லது தாய் அல்லது தன் சகோதரர் இவர்களால் சோரம் ஆனது ..
 “விருட்சிகம்” லக்னத்தில் “நஷ்ட ப்ரசன்ன” நேர்ந்தால் “தன்னை” பற்றி சாராதவர் அன்னியர் திருட்டை செய்தவர்கள்..
“தனுசு” லக்னம் ப்ரசன்ன காலத்தில் லக்னம் ஆகில் நஷ்ட ஆன பொருள் “சொந்த எஜமானனே “ “கள்வர்” அதாவது தானே “அபகரித்தவர் எனலாம்..”மகரம்” லக்னம் ப்ரசன்ன நஷ்ட பிரச்சனை ஏற்பட்டால் “ பெருச்சாளி” பொருள் நஷ்டம் ஆனது என சொல்லலாம்..”கும்பம்” லக்னம் “நஷ்ட ப்ரசன்ன” செய்யப்பட்ட லக்னம் ஆகினில் “தாய் மாமன்” சொத்து களவாடப்பட்டது ….

“மீனம்” லக்னம் ப்ரசன்னம் ஆகினில் “நஷ்ட பொருள்” பூமியில் மறைந்து போனதென சொல்லலாம்..

கர்ப்ப துவார பாஹிய பிரச்சனை குறித்துமேஷம்கடகம்துலாம்மகரம்ஆகிய நான்கு ராசிகளும் துவார ராசிகள் எனும் சர ராசிகள் என நினைவில் கொள்ளவும்
 

ரிஷபம்
சிம்மம்
விருட்சிகம்கும்பம்
ஆகிய நான்கு ராசிகள் பாஹிய ராசி எனும் ஸ்திர ராசிகள் என நினைவில் கொள்ளவும்
மிதுனம்
கன்னிதனுசுமீனம்
ஆகிய நான்கு ராசிகளும் கர்ப்ப ராசி உபய ராசிகள் என நினைவில் கொள்ள வேண்டும்..

இந்த விதிப்படி அதாவது
துவார ராசி என்பது சரராசி
பாஹிய ராசி என்பது ஸ்திர ராசி
கர்ப்ப ராசி என்பது உபய ராசிஇதை எல்லாம் ஒரு ஆருட ராசியாக கொண்டு யோசிக்கும் போது  முதலில் சொல்லி இருக்கிற கர்ப்ப ராசி [ உபய ராசி ] எனும் எந்த ராசியில் நேர்ந்தாலும் பிரசன்னம் கவனிக்கப்படும் விஷயம் “ஜீவன்” சிந்தனையை கொண்டதாக இருக்கும்..

பாஹிய ராசி [ ஸ்திர ராசி ] எனும் ரிஷபம் , சிம்மம், விருட்சிகம், கும்பம் இவைகளில் பிரசன்னம் கேட்கப்படும் போது “ மூலசிந்தனை” பற்றியதாக இருக்கும்..இரண்டு , நான்கு, பால கால்களை சம்பந்தமான இருகால் நான்கு கால் அல்லது பலகால் ராசி இவைகளை உடையவை “ஜீவசிந்தனை” ஆக இருக்கும்..


வெள்ளி, வெண்கலம், தங்கம், துக்கநாகம், ஈயம், இரும்பு, நவரத்னம் இவைகளை “தாது” சிந்தனையில் அடங்கும் …வாணிபம் யுத்தம் ,தானியம், விருட்ஷம், வீடு, பாக்கு, கந்தம்,கற்பூரம்,  கஸ்தூரி , புதுவிதைகளை நடுதல் ஆகியவை “மூலசிந்தனை”யில் அடங்கும்..


மேஷம் மீனம் தனுசு, இவைகளை நடப்பு ராசிகள் ஆகும்..மிதுனம், துலாம், கும்பம் ஆஸீன ராசிகள் ..கடகம் சிம்மம். விருட்சிகம், இவைகளை இருப்பு ராசிகள்..ரிஷபம் கன்னி மகர ராசிகள் சயன ராசிகள் ..இவைகளில் நடப்பு ராசிகள் பிரசன்னம் கேட்கப்பட்டால் “ கோர சம்பவம்” ”கோர கலகம்” குறித்த ”ஆருடமாக” இருக்கலாம்..

இருப்பு ராசிகளில் உத்தம பலனும்
சயன ராசிகளில் மரணத்தையும்
ஆஸின ராசிகளில் கார்ய சித்தியும் பலனாக தரும்..

நோயாளி சம்பந்தமாக பிரச்னைகளை கேட்கும் போது கர்ப்ப ராசிகளில் பிரசன்னம் கேட்கும் போது வியாதி அல்ல என்றும்
துவார ராசிகளில் பிரசன்னம் செய்தால் நோய் அதிகம் உடைய நோயாளி மிருத்யவை அடைவான் என்றும்
பாஹிய ராசிகளில் பிரசன்னம் நேர்ந்தால்  நோயாளி சுகத்தை அடைவான் என்றும் ஆருடம் சொல்லவும்.. 


நஷ்ட [தொலைந்த] பிரச்னையில் பிரசன்னம் கேட்கும் போது
சரம் எனும் துவாராசியில்
அல்லது கர்ப்ப ராசியில்  பிரசன்னம் ஆனால் நஷ்டமான பொருள் கிடைக்கும் எனவும் ஸ்திரியின் கையில் அது சிக்கி இருக்கும் எனவும் சொல்லலாம்..
ஸ்திர எனும் பாஹிய ராசியில் நஷ்டம் குறித்து பிரசன்னம் கேட்பின்
போன பொருள் ஒரு ஆணால் கொண்டு செல்லப்பட்டது ..அது திரும்ப கைக்கு கிடைக்காது என சொல்லலாம்..
கர்ப்ப ராசி எனும் மிதுனம் கன்னி தனுசு மீனம் ஆகிய கார்னர் ராசிகள் இருக்கும் போது பிரசன்னம் கேட்டால் உயரமில்லாத ஒரு குள்ளமான தாயாதியால் அது சோரம் [ திருட்டு] போய் இருக்கும் என சொல்லலாம்.
பாஹிய ராசி எனும் ஸ்திர ராசி செய்யப்பட்டால் தாயாதியும் சேர்ந்தே கூட சேர்ந்தே களவு செய்யப்பட்டு இருக்கும் ..உயரமான நபர் என்றும் துவார ராசியில் சர ராசியில் ஆனால் வெளி தேசத்தவர் களவு செய்யப்பட்டு இருக்கும்..
சீக்கிரம் வஸ்து காணப்படும் என்றும் சம உயரமுடையவர் .
மேஷம், சிம்மம், தனுசு இவைகளில் பிரசன்னம் நேர்ந்தால் கால தாமதத்திற்க்கு கார்ய சித்தி உண்டு ஆகட்டும்..
கடகம், மகரம், விருட்சிகம் இவைகளில் பிரசன்னம் செய்யப்பட்டால் கார்ய நாசம் ஆகும்,,
ரிஷபம், துலாம்,குமபம் இவற்றில் பிரசன்னம் செய்யப்பட்டால் வெகு தனலாபமும் பிரசன்னத்தின் பலனாக உண்டாகும்..

பிரசன்ன பெயர் எட்டு விதம்

[1] சம்யுக்தம்
[2] அஸமயுக்தம்
[3] அபிஹிதம்
[4] அநபிஹிதம்
[5] அபிகாதிகம்
[6] ஆலிங்கிதம்
[7] அபிதூமிதம்
[8] தக்தம்
ஆக எட்டு விதங்களிலும் பிரசன்னக் கேட்கும் போது கேட்பவர் பக்தி சிரத்தையுடன் தன் கையினால் வேறு எதையும் தொடாமலும் ஒரு விதமான சேஷ்டைகளும் செய்யாமல் இருந்து கேட்கும் பிரசன்னத்திற்கு ஸமயுக்தம் என்று பெயர் ..இப்படி கேட்கும் பிரச்சனை மிக்க உத்தமமான பலனை தரும். லாபமும் உண்டாகும்..பிரசன்னம் கேட்கும் போதுமார்க்கங்களில் இருந்து கொண்டும் படுத்து கொண்டும் வாகனங்களிள் அமந்து கொண்டும் சரியான ஜோதிடம் கேட்கும் எண்ணம் இன்றியும் பழம் தாம்பூலம் தட்சிணை இவையின்றியும் கேட்கும் பிரசன்னத்திற்கு அஸமயுக்தம் என பெயர் ஆகும். இதன் பலன் இவர்களின் கேள்விக்கு வெகு நாட்கள் கழித்தே பிரசன்னன் கேட்டதிற்கு பலன் சித்தி ஆகும்.. 

பிரசன்னம் கேட்கும் போது மங்களகரமான பொருட்களை வைத்து கொண்டே
கொண்டே அல்லது எடுத்து கொண்டே அல்லது தொட்டு கொண்டே ஒருவர் பிரசன்னம் கேட்கிறார் எனில் அது அபிஹிதம் என்று பெயர் ஆகும்..இதன் அர்த்தம் ஆனது பிரசன்னம் கேட்ட விஷயம் மிக நல்ல லாபகரமான ஆதாயம் தரும் .சித்திக்கும் என பொருள் ஆகும்..பிரசன்னம் கேட்ட போது அவர்கள் தன் கையினால் அடுத்தவர்கள் சரீரத்தை தொட்டு கொண்டே கேட்டால் அது அநபிதம் என பொருள் ஆகும்..இது போன்ற பிரசன்னம் கேட்கும் போது வினவப்படும் கேள்வியில் எந்தவொரு பலனும் அவர்களுக்கு கிட்டாது .. மேலும் அதில் அவர்களுக்கு நஷ்டமே ஏற்படுத்தும் என பொருள் எடுத்து கொள்ளலாம்..

பிரசன்னம் கேட்கும் போது தன் சகாயத்தினால் பிறருக்குக்காக கேட்கப்படும் போது தலையை தடவிக்கொண்டே கேட்டாலும் அல்லது இதயப்பகுதி ஆகிய இடத்தில் அடித்து கொண்டே கேட்டாலும் கைகளால் காலை தடவி கொண்டே கேட்டாலும் அடித்து கொண்டே கேட்டாலும் அல்லது கை கால்களை ஆட்டி கொண்டே கேட்டாலும் அதன் பெயர் “அபிகாதிகம்” என பொருள் ஆகும்.. இதன் பலனாக அவர்கள் சோகமும் பாதகமும் அடைவார்கள் என்பதே இதன் பொருள் ஆகும்..பிரசன்னம் கேட்பவர் தான் கேட்கும்போது கேட்பவர் தன்னுடைய வலது கையினால் தன் சரீரத்தை தொட்டு கொண்டே கேட்டால் அது ஆலிங்கம் என பெயர் ஆகும். இதன் பலன் சுகமும் சற்றே துக்கமும் உண்டாகும் என பொருள்..துக்கத்தை சில வியாகூலம் எனவும் கூறுகிறார்கள்..பிரசன்னம் கேட்கும் போது ஒருவர் தன்னுடைய இரு கைகளாலும் தன்னுடைய சர்வ அங்கங்களை தொட்டுக்கொண்டே கேட்டால் அந்த பிரசன்னம் ஆனது “அபிதூமிதம்” என பெயர் ஆகும்..இதன் பலன் அற்ப லாபமும் மித்திரர் வருகையும் அந்த மித்திரரால் இவருக்கு அற்ப லாபமும் என்கிற வெளிப்பாடு தான் இந்த பிரசன்னம் என கருத்தில் கொள்ளலாம்.. 

பிரசன்னம் கேட்கும் போது அழுது கொண்டோ அல்லது அலட்சியமாகவோ அல்லது ஜலத்தில் கால் வைத்து கொண்டோ அல்லது குளித்து கொண்டோ தகாத இடங்களில் இருக்கும் போதோ தகாத செய்கை செய்து கொண்டோ பக்தி ஹீனமாக இருந்து கொண்டோ அங்கும் இங்கும் அலைந்து கொண்டோ நல்ல எண்ணமின்றியோ , இன்னொருவருடன் வீண் வாய் சண்டை இட்டு கொண்டோ துன்பப்பட்டு  கொண்டோ கேட்கும் போது இதன் பெயர் “தக்தம்” என சொல்லப்படுகிறது..இதன் பலன் “நிஷ்டபலன்” இவர்களின் பிரசன்ன கேள்வியால் எந்தவொரு பலனும் ஏற்ப்பட போவதில்லை என பொருள் ஆகும்..

பிரசன்னம் கேட்க தகுதி இல்லாதவர்கள்
குள்ளர்கள்
அங்கஹீனம் அடைந்தோர்
காக்கையை போன்ற குணம் உடையோர்
பரபரப்பு உடன் இருப்போர் ..
பேராசை பிடித்தோர் ..
திருப்தி அற்ற நிலையில் வாழ்வோர்கள்..
குஷ்டரோகிகள் ..
நல்ல நடத்தை இல்லாத தாயின் பிள்ளைகள்..
ஆத்திரம் கொண்டோர்கள்..
குருடர்கள்..
வஞ்சகர்கள்..
கோளர்கள் …[ கணவர் இறந்த பின்னர் ரகசிய உறவில் குழந்தை என பொருள்]
லோபிகள் [குடியும் பிற பெண்களின் தொடர்பில் உள்ளோர்கள் ]
செவிடர்கள் .
இவர்கள் பிரசன்னம் கேட்கும் போது சொல்வதும் கூடாது .


இவர்கள் பிரசன்னம் கேட்கவும் தகுதி இல்லாதவர்கள் ..இவர்கள் கேடபதற்க்கு சமாதானம் ஆக இவர்களுக்கு இக்கலியுகத்தில் ஜோதிடரால் எதையும் சொல்லி விட முடியாது ..மேலும்
அனர்தகர்களுக்கு விசுவாசம் அற்றவர்களுக்கு பெரிய சந்தேககாரர்களுக்கு பரிகாசம் பேசுவோருக்கும் பிரசன்னம் சொல்லவே கூடாது என்பதே இதன் பொருள் ஆகும்…


பிரசன்னம் கேட்பவர் எதைப்பற்றி கேட்கிறார் என்பதை சாமான்னய சிந்தனையாய் அறிய

மேஷராசி பிரசன்ன ராசி ஆனால் இருகால் உள்ளவைகளை பற்றியதும்ரிஷபராசி ஆனால் நாற்கால் ஜந்துவைப்பற்றியதும்..மிதுனம் இரட்டைப் படை ராசி ஆகினில் கேட்கும் பிரசன்னம் “கர்ப்பிணி” குறித்ததும்
கடகராசியில் பிரசன்னம் கேட்கும் போது வியாபார விவகாரங்களை பற்றியதும்சிம்ம ராசியில் பிரசன்னம் கேட்கப்படும் போது அரசாங்க உத்தியோகம் குறித்தும்
கன்னி ராசியில் பிரசன்னம் கேட்கப்படும் போது கன்னி அல்லது விவாஹ சம்பந்தமான கேள்வி எனவும்துலாராசியில் பிரசன்னம் கேட்கப்படும் போது அது “தாது” சம்பந்தமான விஷயங்கள் எனவும்
விருட்சிக ராசியில் பிரசன்னம் கேட்கப்படும் போது அது “நோய்” சமப்ந்தப்பட்ட விஷயம் எனவும்தனுசு ராசியில் பிரசன்னம் ஆகில் அது “தன லாபம் “ குறித்த விஷயம் எனவும்மகர ராசியில் பிரசன்னம் கேட்பின் அது “ சத்ரு உபாதை” குறித்த பிரசன்னம் எனவும்கும்ப ராசியில் பிரசன்னம் ஆனால் அது “ ரகசியமான வியாபார ஆதாயம்” குறித்து எனவும்
மீனராசியில் பிரசன்னம் ஆனால் அது “ ஸ்தானத்தின் அசைவு பற்றியும் விரயம் செய்வது பற்றியும்” என பொருள் கொள்ளலாம்.. 

   இதையும் வேறு பட்ஷத்தில்
மேஷராசி ஆகின் ஸ்வர்ணம் சம்பந்தப்பட்ட விஷயம் எனவும்
ரிஷபராசியில் பிரசன்னம் எனில் வெள்ளி குறித்த விஷயம் எனவும்
மிதுனம் ஆகில் அது தாமிரம் எனும் “செம்பு” குறித்து விஷயம் எனவும்
கடக ராசி ஆனால் அது “ வெண்கலம்” குறித்த விஷயம் எனவும்
சிம்ம ராசி ஆனால் அது “இரும்பு” சம்பந்தமான வினா எனவும்
கன்னி ராசி ஆனால் அது “வஸ்திரம் “ சம்பந்தப்பட்டது எனவும்
துலாராசியில் எனில் அது “பருத்தி” சம்பந்தப்பட்டது எனவும்
விருட்சிகராசியில் எனில் அது “தானியம்”குறித்த வினா எனவும்
தனுசு ராசியில் எனில் அது “ தனம்” சார்ந்த பிரச்சினை எனவும்
மகர ராசியில் எனில் அது “நீரில்” சஞ்சரிக்கும் பொருளைப்பற்றியது எனவும்
கும்பராசியில் எனில் அது” சூத்திரர்” குறித்த வினா எனவும்
மீன ராசியில் எனில் அது “ வாசனை திரவியங்களை” பற்றியது எனவும்
சிந்தனையில் கொள்ளவும்..

பிரசன்னத்தில் ஏற்படும் கால நிர்ணயம் ஆனது எப்படி கணிப்பது எனில்ஆலிங்கிதம் எனப்படும் பிரசன்னத்தில் அன்றைய தினத்திலேயே பிரசன்னம் பலிக்கும் என கருதலாம்.அபிதூமிதம் எனும் பிரசன்னத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பத்து தினங்களில் பலனுண்டாம்..வேறு பட்ஷத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பிரசன்னம் கேட்ட தினத்தில் இருந்து ஒரு மாதத்தில் மேற்படி பிரசன்னம் பலிதம் ஆகும் எனலாம்.. 

தாம்பூலம் எனும் வெற்றிலையினால் பிரசன்னம் குறித்த பலாபலனை அறிய
பிரசன்னம் கேட்க வருபவர் ஜோதிடரிடம் கொண்டு வரப்பட்ட
வெற்றிலை பாக்கு  பழம் தட்சிணை இவைகளில் ஒவ்வொன்றையும் தனி தனியாக வைத்து கொண்டு அவற்றில் வெற்றிலையை மட்டுமே தனியாக எண்ணி அதன் எண்ணிக்கையை இரண்டு மடங்கு ஆக்கி செய்து கொண்டு வந்த எண்ணிக்கையை 12ல் வகுத்தால் கிடைக்கும் எண்ணிக்கையை மேஷாதி ராசியில் வரிசை கிரமாக எண்ணி கண்டு அதன்படி பலாபலனை சொல்லவும்..
மனதில் உள்ளவற்றை அறியும் வழியில் சொல்லியபடி அறிந்து அதிலுள்ள அனுகூலமான பலனை எடுத்து சொல்லவும்..
வெற்றிலை பாக்கு இவற்றினால் பிரசன்னம் பலனை காண
மேலே சொல்லியபடி பிரசன்னம் கேட்க வருங்காலத்தில் பிரசன்னம் கேட்பவரால் கொண்டு வரப்படுகின்ற வெற்றிலை பாக்கு இவற்றை எண்ணி எண்னிக்கையை மூன்றினால் பெருக்கி வைத்து கொண்டு ஆறினால் வகுத்து வரும் மீதமுள்ள எண்ணுக்குறிய பலனை வரிசை கிரமப்படி தெரிந்து சொல்ல வேண்டியது..
மேலே சொல்லி உள்ளபடி வகுத்து வரும்
எண் 1 ஆனால் கேட்கப்பட்ட கேள்வியால் லாபம் உண்டு எனவும்.
எண்  2 ஆனால் கேட்கப்பட்ட கேள்வியால் ஹானி உண்டாகும்
மேற்படி
எண் 3 ஆனால் பிரசன்னம் கேட்கப்பட்டதில் பலனுண்டாம்
எண் 4 ஆனால் பிரசன்னத்தின் பலன் ‘துக்கம்” உண்டாம்..
எண் 5 ஆனால் பிரசன்னம் கேட்கப்பட்டதுக்கு “ஜீவன்” உண்டெனவும் அறியலாம்..
எண் 6 ஆனால் பிரசன்னத்தின் பலன் அந்த குடும்பத்தில் “ மரணம்” உண்டென அறியலாம்..
நவகிரகங்களினால் பிரசன்னம் அறிய பிரசன்னம் கேட்க வந்தவர் கொண்டு வந்த “தட்சிணையை” [ நாணயங்களை கொண்டு வர சொல்லி] எண்ணி ஒவ்வொன்றையும் தனி தனியாக எண்ணி கொண்டு அவை ஒவ்வொன்றின் தொகையை இரண்டால் பெருக்கி கொண்டு அதை ஒன்பதால் வகுத்து மீதம் ஏற்படும் எண்ணிக்கையை வரிசை கிரமமாக கிரகங்களை அறிந்து அவர்களால் பலனை அறியவும் ..
மேலே சொல்லிய வகுத்த மீதம்
ஒன்று எனில் சூர்யன்
இரண்டு எனில் சந்திரன்
மூன்று எனில் செவ்வாய்
நான்கு எனில் புதன்
ஐந்து எனில் குரு
ஆறு எனில் சுக்கிரன்
ஏழு எனில் சனி
எட்டு எனில் ராகு
ஒன்பது எனில் கேது
ஆதித்யாதி இந்த நவகிரங்களையும் கிரந்த கர்த்தாக்களையும்
பெரியோரையும்
தன் குல தெய்வத்தையும்
இஷ்ட தெய்வத்தையும்
தன் ஆசானையும்
நன்கு பூஜித்து தைவக்ஞர் [ ஜோதிடர்] பலாபலனை சொல்ல வேண்டியதே ஒரு ஜோதிடர் கடமை ஆகும்..
 என்றும் ஜோதிடப்பணியில்
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
எம்மை நேரடியாக அணுக !!
தொடர்புகொள்ள
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்
புதுபஸ் நிலையம் பின்புறம்
 பெருந்துறை   -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார் 
செல்: +91 98427 69404
             +91 98434 69404    
அல்லது
ஆன்லைனில் ஆலோசனை பெற நீங்கள்
 astrosenthilkumar@gmail.com எனும் மெயிலில் உங்கள் ஜாதக கேள்விக்கு
பதிலை பெறலாம்
ஆனால் முறையாக வங்கி கணக்கில் உங்களால் கட்டணம் செலுத்தப்பட்ட பின்னரே உங்களுக்கு பதில் அளிக்கப்படும்..
வங்கி விபரங்கள்..

Union bank of india
a/c no:- 629102010002579
Ifsc code:- UBIN 0562912
Village:- 803534- Perundurai
Cust Id:- 241739254
Name:- Senthilkumar .A


1 comment:

  1. சிறந்த பதிவு ஐயா. நன்றி.

    ReplyDelete