Saturday 28 March 2020

ஜோதிட பயணம் [பகுதி -2]



ஜோதிட பயணம். பாகம் 2
நடத்துனர் :-பூ.சி பெரியசாமி ஜோதிடர் கோவை9842616578


ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு கிரகத்திற்கு நட்பு பகை உச்சம் நீச்சம் ஆட்சி சமம் மூலத்திரிகோணம் ஆக. இருக்கும் இதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம் இப்பொழுது அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்


மேஷ ராசி
செவ்வாய்க்கு இந்த வீடு சொந்தமானது இதனால் அவனே இதற்கு அதிபதி அவன் ஆட்சி வீடாகும் குருவுக்கு இது நட்பு வீடு ராகு கேதுவுக்கு பகை வீடு செவ்வாய்க்கு மூலத்திரிகோண வீடு இந்த ராசியில் சூரியன் உச்சம் சந்திரன் சுக்கிரன் புதன் சமம் சனி நீச்சம்


ரிஷப ராசி
சுக்கிரனுக்கு இந்த வீடு சொந்தம் அதனால் அவனுக்கு இந்த வீடு ஆட்சி வீடாகும் புதன் சனி இருவருக்கும் இது நட்பு வீடு சூரியன் குரு இரண்டிற்கும் இது பகை வீடு சந்திரனுக்கு மூலத்திரிகோணம் ராசி இது சந்திரன் உச்சம் வீடு ராகு கேது நீச்சம் செவ்வாய்க்கு சமம் வீடு ஆகும்
(சந்திரனுக்கு இந்த ராசியில் 4 பாகையில் இருந்து 30 பாகைக்குள் இருக்கும்போது மூலத்திரிகோண ம்)


மிதுன ராசி
மிதுனம் புதனுக்குரிய வீடு ஆட்சி வீடு சந்திரன் சுக்கிரன் சனி ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு இது நட்பு வீடு குரு செவ்வாய் இரண்டிற்கும் பகை வீடு சூரியனுக்கு சம வீடு


கடக ராசி
இது சந்திரபகவான் வீடு சந்திரனுக்கு ஆட்சி வீடு சூரியன் நட்பு செவ்வாய் நீச்சம் புதன் பகை குரு உச்சம் சுக்கிரன் பகை சனி ராகு கேது பகை


சிம்ம ராசி
இது சூரிய பகவானுக்கு சொந்த வீடு அதனால் அவருக்கு ஆட்சி வீடு சந்திரன் செவ்வாய் புதன் குரு ஆகிய கிரகங்களுக்கு இது நட்பு வீடு சுக்கிரன் சனி ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு பகை வீடு சூரியனுக்கு மூலத்திரிகோண வீடு இந்த ராசியில் 21 பாகையில் இருந்து 30பாகைக்குள் சூரியனுக்கு மூலத்திரிகோணம் ஆகும்


கன்னிராசி
புதனுக்குரிய மற்றொரு ராசியான இந்த வீடு அவருக்கு ஆட்சி வீடு உச்சமாகவும் எங்கே இருக்கிறார் சந்திரன் குரு சனி ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு இது நட்பு வீடு செவ்வாய்க்கு பகை வீடு புதனுக்கு மூலத்திரிகோணம் இந்த ராசியில் சூரியன் சமம் சுக்கிரன் நீச்சம்
இந்த ராசியில் புதன் பகவானுக்கு 11 பாகையில் இருந்து 15 பாகைக்குள் இருக்கும்போது மூலத்திரிகோணம் என்க


துலாம் ராசி
சுக்கிரனுக்கு சொந்தமான வீடு அவன் ஆட்சி வீடு புதன் ராகு கேதுவுக்கு இது நட்பு வீடு குருவுக்கு பகை வீடு சுக்கிர பகவானுக்கு மூலத்திரிகோண வீடு சந்திரன் செவ்வாய் சமம் சனி உச்சம் ஆகிறார் சூரியன் நீச்சம் ஆகிறார் சுக்கிர பகவானுக்கு 28 பாகையில் இருந்து 30 பாகைகள் மூலத்திரிகோணம் என்க


விருச்சக ராசி (விருச்சகம்)
செவ்வாயின் ஆட்சி வீடு சூரியனுக்கு குருவுக்கும் இது நட்பு வீடு சனி பகை வீடு புதன் சுக்கிரனுக்கு சம வீடு ராகுவும் கேதுவும் உச்ச வீடு சந்திர பகவானுக்கு நீச்ச வீடு


தனுசு ராசி
இது குரு பகவானின் சொந்த வீடு ஆட்சி சூரியன் செவ்வாய் ராகு கேதுவுக்கு நட்பு வீடு சந்திரன் புதன் சுக்கிரன் சனி இவர்களுக்கு சம வீடு குரு பகவானுக்கு இது மூலத்திரிகோண ராசி ஒரு பாகையில் இருந்து பத்து பாகைக்குள் மூலத்திரிகோணம் என்று அறிக


மகர ராசி
சனிபகவானுக்கு சொந்த வீடு ஆட்சி சுக்கிரன் நட்பு சூரியன் ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு பகை சந்திரன் புதன் சமம் செவ்வாய்க்கு உச்ச வீடு


கும்பராசி
இதுவும் சனி பகவான் ராசியில் சனி ஆட்சி வீடு சனி பகவானுக்கு இந்த வீடு மூலத்திரிகோணம் சூரியன் பகை சந்திரன் சமம் செவ்வாய் சமம் புதன் சமம் குரு சமம் ராகு கேது பகை சுக்கிரன் நட்பு


மீன ராசி
குரு பகவானுடைய வீடு குருவுக்கு ஆட்சி சூரியன் நட்பு சந்திரன் சமம் செவ்வாய் நட்பு புதன் நீச்சம் குரு ஆட்சி சுக்கிரன் உச்சம் சனி பகவான் ராகு கேதுக்களுக்கு நட்பு வீடு


நட்சத்திரங்களையும் அவற்றுக்குரிய ராசிகளையும் இப்போது பார்ப்போம் நட்சத்திரம் தங்கிய ராசியே சந்திரா லக்னம் அல்லது ராசி என்று அழைப்பார்கள் ஒருவருடைய ராசியை அவர் பிறந்த நட்சத்திரத்தை கொண்டே கூறிவிடலாம்


அசுவினி
பரணி
கார்த்திகை
ரோகிணி
மிருகசீரிஷம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
ஹஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி
நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் 4 பாதங்கள் ஆகின்றன 

அதனால் 27×4=108 பாதங்கள்
108 பாதங்களை 12 ராசிக்கு பக்கிர்ந்தால் 108 ÷12=9 பாதங்கள் ஆகும்
ஒரு ராசிக்கு இரண்டேகால் நட்சத்திரங்கள் கிடைக்கும்


அசுவினி பரணி கார்த்திகை 1-ஆம் பாதம் மேஷ ராசியில் அடங்கும்
கார்த்திகை 2 3 4 ரோகிணி மிருகசீரிஷம் 1 2 ரிஷப ராசியில் அடங்கும்
மிதுன ராசியில் மிருகசீரிஷம் 3 4 திருவாதிரை புனர்பூசம் 1 2 3 ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும்


கடக ராசியில் புனர்பூசம் நான்காம் பாதம் பூசம் ஆயில்யம் அடங்கும்
சிம்ம ராசி மகம் பூரம் உத்திரம் 1ஆம் பாதம் அடங்கும்


கன்னி ராசியில் உத்திரம் 2 3 4 பாதங்கள் ஹஸ்தம் சித்திரை 1 2 பாதங்கள் அடங்கும்


துலாம் ராசியில் சித்திரை 3 4 பாதங்கள் சுவாதி விசாகம் 1 2 3 பாதங்கள் அடங்கும்


விருச்சிக ராசியில் விசாகம் 4-ம் பாதம் அனுஷம் கேட்டை அடங்கும்


தனுசு ராசியில் மூலம் பூராடம் உத்திராடம் 1ஆம் பாதம் அடங்கும்


மகர ராசியில் உத்திராடம் 2 3 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1 2 பாதங்கள் அடங்கும்


கும்பராசியில் அவிட்டம் 3 4 பாதங்கள் சதயம் பூரட்டாதி 1 2 3 பாதங்கள் அடங்கும்


மீன ராசியில் பூரட்டாதி 4-ஆம் பாதம் உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரங்கள் அடங்கும்

ஆகிய 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் அடங்கும்


நட்சத்திரங்களும் அதன் அதிபதிகளும் திசையின் கால அளவு

அசுவினி மகம் மூலம் கேது மகாதிசை 7 ஆண்டுகள்


பரணி பூரம் பூராடம் சுக்கிரன் மகாதிசை 20 ஆண்டுகள்


கார்த்திகை உத்திரம் உத்திராடம் சூரியன் மகாதிசை 6 ஆண்டுகள்


ரோகிணி அஸ்தம் திருவோணம் சந்திரன் மகாதசை பத்தாண்டுகள்


மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம் செவ்வாய் பகவான் திசை ஏழு ஆண்டுகள்


திருவாதிரை சுவாதி சதயம் ராகு மகா திசை 18 ஆண்டுகள்


புனர்பூசம் விசாகம் பூரட்டாதி குரு பகவான் திசை 16 ஆண்டுகள்


பூசம் அனுசம் உத்திரட்டாதி சனி பகவான் திசை 19 ஆண்டுகள்


ஆயில்யம் கேட்டை ரேவதி புதன் பகவான் திசை 17 ஆண்டுகள்

அனைவரும் அகத் தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் இறைவனை வழிபாடு செய்து இல்லத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்


மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம் நட்சத்திர காரர்களும் திருவாதிரை சுவாதி சதயம் நட்சத்திரக்காரர்கள்

வருகின்ற 48 நாட்களுக்கு வீட்டிலேயே நவகிரக துதி காலையில் நெய் தீபம் ஏற்றி பாராயணம் செய்யவும்

நவகிரக ஸ்ருதியை மூன்று முறை அல்லது பன்னிரண்டு முறை அல்லது 108 முறை பாராயணம் செய்தால் சிறப்பு நவகிரகத்தின் அனைத்து தோஷங்களும் நிவர்த்தி அடைந்து சுகம் பெறுவது திண்ணம்
பின்பு இந்த நவகிரக ஸ்துதி பாராயணம் செய்தவர்கள் உங்கள் அனுபவத்தை எனக்கு பதியுங்கள்
நீங்களும் உங்கள் குடும்பமும் குழந்தைகளும் நோய்நொடியின்றி தீர்க்காயுளுடன் வாழ நான் வணங்கும் ஈசன் சிவபெருமான் உங்களை காப்பாற்றுவார்


ஜோதிட பயணம் தொடரும்🌷🌿🌻🌻🌻🌻🌾🙏🙏

No comments:

Post a Comment