Saturday 11 April 2020

ஜோதிட பயணம் [ பகுதி-10]

ஜோதிட பயணம் பாகம் 10
சனிபகவான் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டரை ஆண்டுகள் தங்குவார் அவர் தங்கும் இடங்களுக்கு ஏற்றவாறு ஜாதகருக்கு ஜனன காலத்தில் சனிபகவான் தங்கியுள்ள வீடு வலிமை மற்றும் பார்வை ஆகியவற்றை ஏற்றபடி பலன்கள் மாறுபடும்
. அதனால் பலன்களை அறிய விரும்புபவர்கள் கோச்சாரத்தில் கூறப்பட்டுள்ள பலன்களுடன் தசா புத்தி களையும் அறிந்து அதற்கேற்றாற்போல் பலன்களை அளிக்க வேண்டும்


சனி பகவான் ஜெனன காலத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு 12-ஆம் இடத்திற்கு வரும்போது ஏழரை ஆண்டு சனி தொடக்கம் என்று கூறுவார் அதாவது சனி பகவான் ராசிக்கு பன்னிரண்டாவது வீட்டிற்கு அதாவது ராசிக்கு முந்தின வீட்டிற்கு வந்து அந்த வீட்டில் அவர் தங்கும் இரண்டரை ஆண்டுகளை ஏழரைச் சனியின் முதல் பாகம் அல்லது முதலாவது இரண்டரை ஆண்டு சனி என்று ராசிக்கு அதாவது சந்திரன் நின்ற ராசிக்கு வரும் போது ஜென்ம சனி அல்லது இரண்டாவது இரண்டரை ஆண்டு சனி என்றும் சந்திரன் நின்ற ராசிக்கு அடுத்த அதாவது இரண்டாவது வீட்டில் வந்து அங்கு தங்கும் இரண்டரை ஆண்டு காலத்தை கழிவுத் சனி அல்லது மூன்றாவது இரண்டரை ஆண்டு சனி என்றும் கூறுவார்கள்..


சனி பகவானை பொதுவாக கெட்டவர் என்று கூறுவார் அவ்விதம் கூறுவது தவறு சனிபகவான் சிறந்த நீதிமான் ஆவார் அவர் ஏழரை நாட்டு சனியாக அல்லது எட்டாவது வீட்டில் அஷ்டமத்து சனியாக வரும் காலத்தில் சிலருக்கு சிறு கஷ்டத்தை கொடுக்கலாம் இன்னும் சிலருக்கு மிகுந்த கஷ்டத்தையும் கொடுக்கலாம் ஆனால் அவர் ஆரம்ப காலத்தில் சிறிது கடுமையாக நடந்து கொண்டாலும் காலத்தில் பறித்துக்கொண்டது அனைத்தையும் கொடுத்து விடுவார் இன்னும் சொல்லப்போனால் பறித்துக் கொண்டதற்கு பன்மடங்கு மேலாகவும் கொடுத்து விடுவார் ஆனால் சனி பகவானை கெட்டவர் என்று கருதாமல் அவரை பணிந்து நன்மை செய்யும் படி வேண்டிக் கொண்டால் அவருடைய கடுமை குறைந்து நன்மை பெருகும்..


நீங்கள் சனிபகவானின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரு எளிய வழி நீங்கள் நீதி நேர்மையாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு சனி பகவான் எள்ளளவும் துன்பத்தை கொடுக்க மாட்டார்..


சந்திர பகவான் நின்ற ராசிக்கு ஜென்மத்தில் சனி பகவான் வரும்போது அவர் பன்னிரெண்டாம் வீட்டில் அதாவது சந்திரன் நின்ற ராசிக்கு முந்தின வீட்டில் தங்கியிருந்த போது இருந்ததைவிட சற்று கடுமையாகவே அல்லது கடுமை குறைந்து காணப்படுவார்கள் ஆனாலும் இப்போது அவரால் சில நன்மைகளை ஏற்படாமல் போகாது..


சனி பகவான் ஜென்மத்தில் தங்கியிருந்த காலத்தில் உடல் ஆரோக்கியம் கெடும் பணத்தட்டுப்பாடு தலைக்குமேல் போகும் அளவு மீறி இருக்கும் நண்பர்கள் உறவினர்களுக்கு உடன் விரோதம் ஏற்படும் குடும்பத்தில் துக்ககரமான சம்பவங்கள் நிகழலாம் பிறருக்கு துன்பம் காரணமாக தற்கொலை எண்ணங்கள் கூட ஆகலாம் ஆனால் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சனிபகவான் விடமாட்டார் அப்படிப் பட்ட துன்பங்களை தாங்கும் மன வலிமையையும் துணிவையும் அழைத்து வருவார் அவ்வளவு நல்ல பலனைத் தராது குடும்பத்தில் எவ்வளவு கஷ்டம் இருந்த போதிலும் ஓரளவு மனநிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும் கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும்


சனிபகவான் இரண்டாம் இடத்திற்கு வரும்போது துன்பங்கள் சிறிது சிறிதாக குறையும் மனக் கவலைகள் அகலும் வீண் செலவு வீண் அலைச்சல் மாத்திரம் அப்படியே இருக்கும் குடும்பத்தில் மங்களகரமான சம்பவங்கள் நடைபெறும் ஜாதகரை திருமணமானவராக இருந்தால் திருமணம் நடைபெறும் வீடு மனை முதலிய வை வாங்கலாம் செய் தொழிலில் மாற்றம் ஏற்படலாம் அல்லது மேல் பதவி கிடைக்கலாம் சிலருக்கு எதிர்பாராத வகையில் பொருள் வரவு சொத்து சேர்க்கையும் ஏற்படலாம் லாட்டரி குதிரை பந்தயங்களில் வெற்றி கிடைக்கும் கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும் சிலருக்கு துன்பத்தையும் கொடுக்கும்..


சனி பகவான் மூன்றாம் இடத்திற்கு வரும்போது விரோதிகள் அழிவார்கள்.. உறவினர்கள் உதவ முன்வருவார்கள் குடும்பத்தில் ஒரு புதிய ஜீவன் தோன்றும் எடுத்த காரியங்கள் வெற்றியை அளிக்கும் செய்தொழிலில் நல்ல ஆதாயத்தை தரும் மனக் கவலைகள் அகன்று மகிழ்ச்சி ஏற்படும் மேற்படிப்புக்கு வசதி உண்டாகும் உதவியும் ஆதரவும் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும் அதுவரை இருந்துவந்த தொல்லைகள் அகலும் ஊதாரித்தனமான செலவுகளும் பண விரயமும் குறைந்து பொருள் சேரும் கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சி நிலவும்

சனி பகவான் 4-ஆம் இடத்திற்கு வரும்போது அவ்வளவு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது நாலாம் இடம் அவருக்கு அவ்வளவாக நல்ல இடம் இல்லை சில நூதன நோய்கள் ஏற்படலாம் மனக்கவலை அளவுக்கு மீறி இருக்கும் மரணபயம் உண்டாகும் பண வரவுக்கு மேல் செலவு அதிகரிக்கும் செய் தொழிலில் கவனமாக இருக்கவேண்டும் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் தீமையே ஏற்படும் சனி பகவான் நான்காம் வீட்டிற்கு வந்த சமயம் மிகுந்த கஷ்டங்கள் உண்டானாலும் கழிவு காலத்தில் நன்மைகளை ஏற்படும் ஆதலால் துன்பங்களைக் கண்டு கலங்காமல் இருந்து வந்தால் நன்மையே ஏற்படும் இக்காலத்தில் மனச்சோர்வு இடம் தரலாகாது நல்ல நிகழ்வுகளும் கெட்ட நிகழ்வுகளும் நடைபெறும் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்


சனி பகவான் ஐந்தாம் இடத்திற்கு வரும்போது செய்தொழிலில் தடங்கள் மேலதிகாரிகள் விரோதம் நண்பர்கள் உறவினரின் மாறுபட்ட மனப்போக்கு ஆகியவற்றை எதிர்நோக்க வேண்டியிருக்கும் குடும்பத்தில் சிறுசிறு தகராறுகள் விளைந்து கொண்டே இருக்கும் பணவரவை விட செலவு அதிகரிக்கும் கடன் தொல்லைகள் கவலையளிக்கும் வழக்குகள் எதிரிடையான முடிவுகள் கொண்டுவரும் பண வரவை விட செலவு அதிகரிக்கும் கடன் தொல்லைகள் கவலையை அளிக்கும் லாட்டரி குதிரைப்பந்தயம் ஆகியவை நஷ்டத்தில் முடியும் குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழ்ந்தாலும் ஒன்றிரண்டு வருத்தத்தை நிகழ்ச்சிகளும் நடைபெறும் மக்களும் மனைவியும் உதவியாகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியவராகவும் இருப்பார்கள்..


சனிபகவான் 6-ம் இடத்திற்கு வரும்போது செய்யும் தொழிலில் வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்கும் நோய்கள் அகலும் ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும் செல்வாக்கு அதிகரிக்கும் எதிர்பாராத வகையில் பண லாபம் ஏற்படும் வழக்குகள் நல்ல முடிவை அளிக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிட்டும் புதுமனை புகுவதும் புத்தாடைகள் வாங்குவதும் மன மகிழ்ச்சியான வகை செய்வதும் ஆகிய சம்பவங்கள் நிகழும் குடும்பத்தினர் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் ஒரு குறையும் இருக்காது இந்த காலத்தில் மற்ற கிரக நிலைகளையும் சேர்ந்து பார்க்க வேண்டும்..


சனிபகவான் ஏழாம் இடத்திற்கு வரும்போது முயற்சிகள் தோல்வி ஏற்படும் தொழிலுக்கு இடையூறுகள் வந்து சேரும் வெளியூர் பிரயாணங்கள் அடிக்கடி ஏற்படும் ஆனால் பிரயாணங்களில் அதிக நன்மைகள் ஏற்படாது வயிறு சம்பந்தமான நோய்கள் உண்டாகும் கெட்ட நடத்தையுள்ள பெண்கள் சேர்க்கைகள் ஏற்படும் அதனால் வருமானம் அவமானம் பொருள் வீண் கவலை உண்டாகும் குடும்பத்தினர் உடல்நிலையை பற்றி கவலை இருந்து வரும் ஆனாலும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் வரப்போகும் பெரிய ஆபத்துகளை தடுக்கலாம் இந்த நாட்களில் எச்சரிக்கையுடனும் காரியங்களை செய்வதால் ஓரளவு நல்ல பலனை அடையலாம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்த தான் நிலவும் கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும்..


சனிபகவான் எட்டாம் இடத்திற்கு வரும்போது அவ்வளவு நன்மையை அளிக்க மாட்டார் எட்டாம் வீடு அவருக்கு அவ்வளவு உகந்ததல்ல எட்டாம் வீடு சனி பகவானுக்கு இந்த வீடு கெடுதல் செய்வதற்கென்றே அமைத்துக் கொடுக்கப் பட்டதாக கூட கருதலாம் ஆனால் சனி பகவான் தொடக்கத்தில் சிறிது கடுமையாக நடந்து கொண்டாலும் பிறகு கொடுத்த அளவுக்கு மேல் நன்மை செய்வார் அடுத்த வீட்டிற்கு செல்வதற்குள் பறித்துக் கொண்டதற்கு மேல் கொடுத்து விடுவார் ஆனால் யாரும் கவலையோ அச்சமோ மனத்தளர்ச்சி கொள்ள வேண்டியது இல்லை மேலும் ஜனன காலத்தில் சனிபகவான் நல்ல இடத்தில் தங்கி நல்ல கிரகங்களின் பார்வையும் பெற்றிருந்தால் அவருடைய கொடுமை அவ்வளவாக இருக்காது தசாபுத்திகள் நல்ல படியாக அமைந்து இருந்தால் சனி பகவான் அவ்வளவு தொல்லை கொடுக்க மாட்டார்...


சனிபகவான் 9-ம் இடத்திற்கு வரும்போது சிறிது தனலாபம் செய்தொழிலில் முன்னேற்றம் அல்லது மாற்றம் மேலதிகாரிகள் ஆதரவு முதலியவை கிட்டும் வெளியூர் பயணங்களில் அதிக நன்மைகள் ஏற்படாது மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள விட்டால் கெட்ட பெயரும் பொருள் நஷ்டமும் ஏற்படும் எதிர்பாராத வகையில் விபத்துகள் நடைபெறும் ஆனாலும் அதனால் பெரிய நஷ்டமோ உயிர் சேதமும் ஏற்பட்டு விடாது குடும்பத்தினரை எச்சரிக்கையுடன் கவனித்து வரவேண்டும் சிறிதும் அலட்சியமாக நடந்து கொள்ளக்கூடாது குடும்பத்தின் குடும்பத்தினரில் எவருக்கேனும் ஏதாவது நோய் ஏற்பட்டால் கூட அதை அலட்சியம் செய்யாமல் உடன் கவனித்துவிட வேண்டும் காலதாமதம் வீண் கவலையை அளிக்கும் கணவன் மனைவி உறவுகள் பற்றி அவ்வளவு சிறப்பாக கூறமுடியாது..


சனிபகவான் பத்தாம் வீட்டிற்கு வரும்போது செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் பண தட்டுப்பாடு குறையும் ஆனாலும் வரவை விட செலவு அதிகமாக இருக்கும் வீண் அலைச்சல்களை ஆகியவை இருந்தாலும் மனதில் ஒரு நிம்மதி இருக்கும் சொத்து விற்பனையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது பெரியோர்கள் சந்திப்பு அரசாங்க ஆதரவு முதலியவை கிட்டும் வெளியூர் பிரயாணங்கள் சிறிது லாபம் கிடைக்கும் குடும்பத்தினர் பற்றிய கவலை இருக்காது பெற்றோர் ஆரோக்கியமாக இருப்பார்கள் மனைவி மக்கள் உதவி புரிபவர்களாக இருப்பார்கள் கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும்..


சனிபகவான் பதினொன்றாம் இடத்திற்கு வரும்போது எண்ணியவை யாவும் கைகூடும் செய்தொழிலில் அதிக நன்மையும் பொருள் சேர்க்கையும் கிட்டும் விரோதிகளும் நண்பர்களாவார்கள் நண்பர்கள் உதவி செய்வார்கள் முழு ஆதரவு அளிப்பார்கள் மேலதிகாரிகள் உதவி புரிபவர்களாகவும் பதவி உயர்வுக்கு ஆதரவு தருவார்கள் பெரிய விபத்துக்கள் நடைபெற்றாலும் தீமைகள் எதுவும் பெரிய அளவில் ஏற்பட்டுவிடாது ஆனால் அந்த விபத்துக்கள் மூலம் பெரிய நன்மைகள் எதுவும் ஏற்படக்கூடும் என்று சொல்லவும் இடமிருக்கிறது எதிர்பாராத வகையில் தாயார் அல்லது மனைவி வழியில் சொத்துக்கள் கிடைக்கும் தசாபுத்திகள் நல்லவிதமாக அமர்ந்திருந்தால் அதிக நன்மைகள் ஏற்படும் சொந்தமாக சொத்துக்கள் வாங்கலாம் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்..


சனிபகவான் 12-ம் இடத்திற்கு வரும்போது கீழ்மக்கள் நட்பு கெட்ட காரியங்களில் மனதை செலுத்துதல் பணவிரயம் மனைவி மக்களால் கவலை வீண் அலைச்சல் திருடர்கள் பயம் நோய் தொல்லை உயிர்சேதம் மரணம் ஆகியவை ஏற்படலாம் ஆனால் நண்பர்கள் உறவினர்கள் உதவியாலும் ஆதரவாலும் மனதிற்கு ஒருவித நிம்மதி கிடைத்து வரும் வெளியூர் பயணங்களை தவிர்த்து செய்தொழில் முழு கவனத்தையும் செலுத்தி கூடுமானவரை பொறுமையுடனும் இருந்தால் பெரிய இழப்புகள் இருந்து விடுபடலாம் உடல்நலனை கவனத்துடன் கண்காணித்து வர வேண்டும் கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும் மக்கள் உதவி புரிபவர்களாக இருப்பார்கள் லாட்டரி குதிரைப்பந்தயம் போன்றவற்றை நம்புவது பயனளிக்காது..


மேற்கண்ட இந்த கால கட்டங்களில் நாம் சனிக்கிழமை பிரதோஷத்தை கடைப்பிடிப்பது மிக சிறப்பு அல்லது தங்களுடைய ஜென்ம நட்சத்திரத்தன்று ஏழைகளுக்கு உணவு அளிப்பது மிகச்சிறப்பு அதுவும் முடியாதவர்கள் தினமும் காலையில் காகத்திற்கு அன்னம் வைப்பது மிகவும் சிறப்பு இயற்கையில் பிறக்கும்போதே ஊனமாக இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு உணவு தானம் கொடுப்பது மிக மிக சிறப்பு..


நன்றி வணக்கம்
என்றும் உங்கள் அன்புடன்

No comments:

Post a Comment