Thursday, 28 November 2013

வருஷ ஜாதக கணிதமுறை [[தஜகநீலகண்டீயம்]

தஜகநீலகண்டீயம் படி வருஷ ஜாதகம் கணிக்கும் முறையானது!

ஜனன சமயம் முதல் சென்ற வருஷம் வரை எத்தனை ஆண்டுகள் ஆயின என்று கணக்கிடவும், பிறகு வ்ருஷம் ஒன்றுக்கு 1 நாள் வீதம் கணக்கிடவும்,அதை இப்போது சென்ற வருஷத்துடன் கூட்டவும், இது பக்கம் இருக்கட்டும்,  
பிறகு அது வரை சென்ற வருஷங்களை 21 ஆல் பெருக்கி 60 ஆல் வகுக்க மீதிவருவது மணி நிமிஷம் முதலியது ஆகும், அத்தோடு ஜாதகன் பிறந்த நாளன்று கிழமை நாழிகை விநாழிகையை கூட்டவும்,அப்படி கிடைக்கும் மொத்தத்தை 7 ஆல் வகுக்க மீதிவருவது அந்த வருஷத்தின் ஆரம்ப தினமும் நேரமும் ஆகும், 
உதாரணம்: வருஷ ஜாதகத்தை கணிக்க பலகாலமாக செய்து வரும் முறையானது சூர்யசித்தாந்த அடிப்படையானது.
சூர்யசித்தாந்தப்படி ஒருவருஷம் என்பது:-365 நாட்களும் 15 நாழிகையும் 31 விநாழிகையும் 30 தர்பரை கொண்டது ஆகும்.
இதை ஏழால் வகுத்து ஈவு போக நின்றது 1 நாள் 15 நாழிகை 30 தர்பரை ஆகும், ஒருஜாதகன் 08/08/2012 ம் வருஷம் பிறந்ததாக வைத்து கணக்கிடுவோம், அவரது 2013 ம் வருஷத்திய பிறந்தநாளை கண்டுபிடிக்க ,மேற்படி வருஷத்துடன் 1 நாள் 15 நாழிகை 30 பரையைக்கூட்ட வேண்டும், இந்த ஜாதகரின் பிறந்த நாள் 09/08/2013 ல் வரும் , அத்தோடு அவர்பிறந்த நேரத்தை கண்டுபிடித்து  [ நாழிகைரீதியாக] அத்தோடு 15 நாழிகை 31 விநாழிகையை கூட்ட வேண்டும் 
இதை கண்டுபிடிக்க நீலகண்டர் சில சுலபமான வழிகளை எழுதி இருக்கிறார்.     
கிழமைகளுக்கு ஒவ்வொரு எண் தந்து இருக்கிறார்,
ஞாயிறு:1 
திங்கள் ;2
செவ்வாய்:3
புதன்:4
வியாழன்;5
வெள்ளி:6
சனி;7 [இதை எண்கணிதத்துடன் போட்டு குழம்ப வேண்டாம். இது நாட்களுக்கு உண்டானது மட்டுமே]
இதில் தஜக முறைப்படி ஒருபட்டியல் & நவீன விஞ்ஞான முறைப்படி ஒரு பட்டியல் நாளை மறுநாள் இணைக்கப்படும், காரணம் சூர்யசித்தாந்தப்படி 365 நாட்களும் 6 மணி 12 நிமிஷம் ஆகும், ஆனால் தற்போதைய திருக்கணிதப்படி 365 நாட்களும் 6 மணி 12 நிமிஷம் 36 செகண்டு ஆகும், அதனால் வருஷத்திற்க்கு 3 நிமிஷம் 24 செகண்ட் வித்தியாசம் ஏற்ப்படுகிறது, திருக்கணிதம் தான் சரி என தூரதிருஷ்டி கருவிகள் மூலம்  விஞ்ஞானமுறைப்படி இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதனால் இருமுறையும் நாளை மறுதினம் பதியப்படும்,  
ஆனால் இதை இதன் ஆசிரியர் சுமார் 500 ஆண்டுக்கு முன்னரே கணக்கீடு செய்தது தான் நம்மை பிரமிக்க வைக்கிறது,

நான் இதை கணிக்கீடு செய்ய முதலில் மிகுந்த சிரமமாகத்தான் இருந்தது, ஆனால் கணக்கிட கணக்கிட சற்று சுலபமாக இருக்கிறது, இதை நமது ஜோதிட நண்பர்கள் சற்று நுணுக்கமாக படிக்கவும்,இதன் படி பலன் காண்பது என்பதை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக எழுதப்போகிறேன், இக்கணிதமுறை மிகவும் நுணுக்கமாக எனக்கு வருஷ ஜாதகம் கணித்து தாருங்கள் எனும் வாடிக்கையாளருக்கு பயன்படும்,

குறிப்பு:-நான் எனது என் குடும்பத்தார் என [ சுயநலம்] கணக்கிட்டீர்கள் எனில் கணிப்பு வராது, அடியேன் இதுவரை ஜோதிடம் பயின்ற பின்னர் எனது ஜாதகம் குழந்தைகள் ஜாதகம் எதையும் கணிப்பதும் இல்லை.மற்ற நண்பர்கள் இடம் ஆலோசனையும் கேட்பதில்லை, அப்படி ஒருமன பக்குவம் வந்தால் தான் நீங்களும் புலமை அடைய முடியும் என்பதே நிதர்சனமான உண்மை!
என்றும் ஜோதிடப்பணியில் 
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம், பெருந்துறை

Wednesday, 27 November 2013

வருஷ ஜாதகத்தை கணித்தவர்


  “தஜக நீலகண்டீயம்” இதன் ஆசிரியர் நீலகண்டர் சமஸ்கிருத பாஷையிலும் அரபி&பார்ஸி  பாஷையிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்.

இவர் கார்க்கிய கோத்திரத்தில் பிறந்த பிராமணர் , தனது 30 வயதில்   “தஜக நீலகண்டீயம்”என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்,இவர் தந்தை மூகூர்த்த சாஸ்த்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவர், 

விதர்ப்ப தேசத்தில் தர்மபுரி என்ற ஊரில் ஆனந்த தெய்வக்ஞர்[தந்தை] பத்மா [தாயார்] ,நீலகண்டருடன் பிறந்தவர் ஸ்ரீ ராம தெய்வக்ஞர் இவரும் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர், 

நீலகண்டர் பிறந்தது கி.பி 1537 ம் வருஷம் என ஆண்டு பிறந்தவர், கி.பி 1567 ல் தான் இந்நூலை எழுதி இருக்கிறார், இதை இவர் எழுதிய போது இவர்தந்தை உயிருடன் இருந்துள்ளார், இவர் “தஜக நீலகண்டீயம்”எழுதும் போது மூன்று பாகங்களாக பிரித்து எழுதி அதில் பல இடங்களில் அரபி பார்ஸி வார்த்தைகளை பயன் படுத்தி இருக்கிறார், பல அறிய தகவல் நிறைந்தது இப்புத்தகம்

குறிப்பு:- இதை 02/07/1921 ல் பிறந்த புதுக்கோட்டை சமஸ்தான திருமணஞ்சேரியில் பிறந்த P.S.ஐயர் 1993 ல் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட முயற்சி செய்து அது வெளியிடப்படாமல் போய் அவரின் காலத்திற்க்கு பின் தான் வெளிவந்தது, 1000 பிரதிகளே முதல் பதிப்பு [அதில் ஒன்று அடியேனிடம் உள்ளது] 

தொடர்ந்து நான் அதில் சொல்லப்பட்ட விஷயங்களை புத்தகமாக வெளியீடு செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் சிறு சிறு ஜோதிடத்திற்க்கு தேவையான பகுதிகளை பதிந்தால் அதை சமஸ்கிருதத்தில் எழுதிய “நீலகண்டருக்கும்” தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட “P.S.ஐயர்” அவர்களின் நம்மால் செலுத்தப்படும் “குருமரியாதை” ஆகும். ஜோதிடர்களுக்கு ஜோதிட ஆய்வாளர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என கருதுகிறேன் , ஜோதிட நண்பர்கள் தனது கருத்தை சொன்னால் சற்று நல்லது,

Monday, 25 November 2013

கோச்சார சூரியன் பலன் தரும் நிலை

நவகிரஹ வட்டத்திற்க்கு சூர்யனே பிரதானம் !
அவர் தன் சஞ்சார நிலையில் பலன் தருவது பின்வருமாறு;-
ஜெனன கால ஜாதகத்தில் சூர்யன் தான் இருக்கும் இடத்திற்க்கு
வரும் காலம் ஒரு வருஷம் முடிவை குறிக்கும் ,
 அக்கால கட்டத்தில் ஜாதகரின் மனநிலை உற்சாகமாக இருக்கும் ,
இக்காலகட்டத்தில் புது முயற்சி வெற்றியை தரும்,
கடன் பெற இக்காலகட்டம் உகந்தது,
வியாபாரமுயற்சி கைகொடுக்கும் நிலை வரும்,

சூரியன் ஜாதகத்தில்தான் இருந்த இடத்துக்கு மூன்றில் வரும் காலம்
நமக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல சுலபமாகும்,
உழைத்து முன்னேறக்கூடிய கால கட்டம் ஆகும்,

அதே சூரியன் கோச்சாரத்தில் பிறந்த ஜாதகத்தில் தான் இருக்கும் இடத்துக்கு நான்கில் அல்லது பத்தில் வரும் காலம் கார் வைத்து டிரைவர் வைத்து இருப்பவர்கள் கூட தன் டிரைவரிடமே கடன் வாங்கும் சூழல் வந்து சேரும்,அப்படி சூழ்நிலை அமையும் மாதிரி பணக்கஷ்டமும் உண்டாக்கும்,

அதே சூரியன் ஐந்திலோ ஒன்பதிலோ சஞ்சாரம் செய்யும் காலகட்டம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மனைவியுடன் “உறவு” வலுப்பெறும்,
நண்பர் உதவிகள் சமயத்துக்கு கிடைக்கும் காலகட்டம் ஆகும்,

ஜென்ம சூரியனுக்கு ஏழில் சூரியன் கோச்சார ரீதியாக வரும் போது வேண்டாத “நீசஸ்திரி” தொடர்ப்பால் துன்பம் வந்து சேரும்,
சிலநேரம் விதவைகளால் கலகம் வந்து சேரும்,
வியாபாரத்தொடர்ப்புகள்  வில்லங்கம் தரும் பின்னர் சரியாகும்,

குறிப்பு;- இது பொதுவான பலனே தவிர உங்கள் தனிபலன் அல்ல!
உங்கள் தனிப்பலனுக்கு தகுந்த ஜோதிடரை அணுகவும்,காரணம் எங்களை போன்ற ஜோதிடர்களுக்கு நேரில் பலன் சொன்னால் மட்டுமே
“பலன் உண்டு”,தவிர இதுபோல் ஜோதிட குறிப்புகள் அனைத்தும் “ட்ரைலர்”
மட்டுமே- “மெயின் பிக்சர்’ இது அல்ல!
இது “ரீலும்” அல்ல! “ரியல்” தான்

என்றும் ஜோதிட சேவையில்!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,
பெருந்துறை- 638 052

செல்: 98427 69404 [ ஏர்செல்]
செல்; 98434 69404 [வோடாபோன் ]

Sunday, 24 November 2013

பிறந்த நாளை கொண்டாடுவது எப்படி?

பிறந்த நாளை கொண்டாட நாம் அனைவரும் முதலில் தேர்ந்து எடுப்பது நம் தமிழ்முறைபடி என 

Saturday, 23 November 2013

வாரசூலை என்பது என்ன ?

11-07-2013, 12:47 PM

வாரசூலை என்பதின் பொருள் என்ன ?பொதுவாக நாம் ஏதேனும் ஒருகாரியமாக புதுவிஷயமாக செல்வது என்றால் அன்று நாம் செல்லும் திசையில் வாரசூலை உள்ளதா? என்பதை பார்த்து தான் கார்யமுயற்ச்சி செய்வோம் , இது நமது ஜோதிட கலாச்சாரம், நான் புதியதாய் ஜோதிடம் பயில ஆரம்பித்த போது வாரசூலை என்பதின் பொருள் குறித்து நானும் பல அனுபவ ஜோதிடர்களை அணுகி கேட்ட போது பலரிடம் இதுபற்றி “ எதுவும் தங்களுக்கு தெரியாது” என்றும் “ பஞ்சாங்கத்திலேயே வாரசூலை எந்தநாளுக்கு எத்திசை சூலம் என்பது போட்டிருக்குமே? அதை பார்த்து பலன் சொல்லுங்க” என்றனர்,

ஆனால் எனக்கு வாரசூலம் எப்படி உருவானது என்பதை அறிய ஆவல் எற்ப்பட்ட்து!
பின்னர் பலநூல்கள் தேடி நான் அறிந்து கொண்ட விஷயம் என்னவென்றால்
“இந்த உலகை ஆளும் சிவபெருமான் தன் சூலாயுத்தை ஓய்வுக்கு கொடுக்க சற்று நேரம் தரையில் வைத்து வைப்பார்” அப்போ நாம் அதை எதிர்கொண்டு போக்க்கூடாது “எனபதால் தான் வார[ தினம் ] சூலம் வாரசூலை உருவானது! சிவனின் சூலம்ஞாயிறு = மேற்கு

திங்கள் = கிழக்கு

செவ்வாய்= வடக்கு

புதன்= வடக்கு

வியாழன்= தெற்கு

வெள்ளி= மேற்கு

சனி= கிழக்கு


பின் திரும்ப மேலிருந்து கணக்கிடவும்’ ’சிவனின் சூலம் கூட காலையில் 5 நாழிகை தான் பூமிமீது வைப்பார் , 2 மணி நேரம் மட்டுமே காலையில் வாரசூலை கணக்கிடவும், பின் 2 மணிநேரத்திற்க்கு மேல் மேற்கொண்டு அந்த திசையில் பயணிக்கலாம்’ என்பதே பொருள்


இதை ஷேர் பண்ணிய Facebook+1 for Brahmins > Friendship-Gossip-Social > Social > Groups and Talks > News & Knowledge to Share ஆகியோருக்கு நன்றி

Friday, 22 November 2013

ஜோதிடம் வளர்ச்சியா? வீழ்ச்சியா?

முன்னர் பழையகாலத்தில் ஜோதிடம் என்பது மிகவும் புனிதமாக பார்க்கப்பட்டது!

அன்றைய காலகட்டத்தில் பஞ்சாங்கம் கோவிலில் குருக்கள் வசம் இருந்தது, அவர்களை இறைவனுக்கு நிகராக இன்னமும் மக்களால் பார்க்கப்பட்டு வருகிறார்கள். அப்போது எல்லாம் ரச்சு இல்லாத திருமணமும் அவர்களால் கோவிலில் நடத்தி வைக்கப்பட்டது, கிணறு வெட்ட வீடுகட்ட ஜாதகம் இல்லாதவர்களும் அவர்களை நாட பூ வாக்கால் முடிவு எடுக்க பட்டது, 
காலப்போக்கில் பஞ்சாங்கம் வள்ளுவர்களிடம் வந்தது அவர்களும் அப்போது எல்லாம் ஆபீஸ் போட்டு தொழில் செய்ய முடியாது என்பதால் கிராமம் தோறும் வீடு சென்று பலன் பார்த்தனர் 
அது வரை  ஜோதிடம் மிக மிக புனிதமான கண்ணோட்டத்துடன் பார்க்க பட்டது,
இடையே தான் சில மாற்றம் படித்தவர்கள் பலரும் பஞ்சாங்கம் பிடிக்க ஆரம்பித்தனர் அதனாலும் பாதிப்பில்லை ஜோதிடம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது, 
இடையே எங்கே குழப்பம் வந்தது? என்றால் படித்த மக்கள் தனது வீட்டில் மகனுக்கோ மகளுக்கோ கடைவீதியில் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் பொருத்த புத்தகத்தை எப்போது வீட்டில் வாங்கி வைத்தனரோ அப்போதே ஜோதிடம் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்து விட்டது, 
எங்கு வைத்து யாரிடம் ஜோதிடம் படித்தார்கள் வரன் வீட்டார் ?
ஆனால் பாருங்கள் ஒரு தொழில்முறை ஜோதிடரை போல் தன்னை காட்டி கொண்டு பேசுவதை 
திருக்கணிதமும் சரி வாக்கியமும் சரி யோனியோ ரச்சோ இல்லாமல் திருமணம் செய்யலாம் எனத்தான் சொல்லி இருக்கிறது.

ஆரோகண நிலைபாடு அவரோகண நிலைபாடு போன்றதை வைத்து இருவீட்டாரும் ஒத்துப்போனால் திருமணம் செய்யலாம் என சொல்லி இருக்கிறது
சிரசு ரச்சு :-புருஷனுக்கு ஆகாது [ சரி ஆயுள் பாவம் பார்த்து செய்யலாம்]
கண்டரச்சு :- ஸ்திரிக்கு ஆகாது [சரி ஆயுள் பாவம்   பார்த்து செய்யலாம்]
உதரரச்சு:- புத்திர நாசம் [சரி இருவரின் 5&9 பார்த்து பால் உள்ளவிருட்சமா என பார்த்து செய்யாலாம்]
தொடை ரச்சு :-செல்வநாசம் [ சரி இருவரின் 2&11 ஐ பார்த்து செய்யலாம்]
பாதரச்சு:-தேசாந்திரம் [சரி பூர்வீகத்தை விட்டு வெளியே தான் இருப்போமே] 

இப்படி தான் செல்கிறது ஜோதிட குறிப்புகள் ஆதாரம் பல உள்ளது. காலவிதானம் & கேரள ஜோதிடம் & 108 நவீன கோவில் வாக்கிய பஞ்சாங்கம் இதை பற்றி விரிவாக சொல்லி இருக்கிறது!
ஆனால் உண்மையில் நடப்பது என்ன யார் ஜோதிடரிடம் வந்து ரச்சு இல்லாத ஜாதகத்தை கொண்டு வருகிறார்கள்? அவர்களே வீட்டில் சுயபரிசோதனை செய்ய எது காரணம் கடை வீதியில் விற்க்கப்படும், குறிப்பாக சிவகாசிப்பக்கம் அச்சிடப்பட்ட சில பொருத்த புத்தகங்கள் 
அதை வாங்கி ஆதரிக்கும் மக்கள் தான் காரணம் இன்னமும் சொல்லப்போனால் அப்படிப்பட்ட புத்தகம் ஒன்றை பலன் காணும் ஜோதிடர்களும் நம்புவது தான் வேதனை தருகிறது, 
எனக்கு தெரிந்த ஜோதிட நண்பர் ஒருவர் யாராவது பொருத்தம் பார்க்க வந்தால் இருஜாதகமும் கையில் வாங்கி கொண்டு நட்சத்திரம் பார்த்து பின்னர் அந்த குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்து இரண்டும் பொருந்தி போகிறதா எனப்பார்த்து விட்டு தான் திசாசந்திப்பு கவனிப்பார் , அதுவும் அவர் குரு நாதர் சொல்லி கொடுத்த திசாசந்திப்பு என்பது ஏகதிசை தான் திசாசந்திப்பு என [அட ஈஸ்வரா] சொல்லி அனுப்பி விடுவார் நான் பலமுறை அவரிடம் சொல்லி விட்டேன் ஏகதிசை என்பது திசாசந்தி அல்ல என உடனே 2 நாட்களில் குருநாதரை போய்ப்பார்ப்பார்
விளக்கம் கேட்பார் குரு நாதர் உடனே யாருய்யா சொன்னது ஏகதிசை வந்தால் திசாசந்திப்பு தான் என சொல்லு என்பார்
நம்ம நண்பரும் நான் சொன்ன மாதிரியை  உதாரண திசாசந்திப்பை [ அகஸ்திய கணக்குப்படி ஆண் பெண் இருவருக்கும் 2015 ல் திசாமாற்றம் மாடல் கணிப்பு] கொடுத்துள்ளார், அந்த குரு நாதனுக்கு தெரியாது அதை பற்றி [ சரி என்னிடமாவது கேட்டு இருக்கலாம்] 
என்னால் கணிக்கப்பட்ட சீட்டை உற்று பார்த்த குருநாதர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? 
”தம்பி இதை கணித்தவனுக்கு ஜோதிடம் பற்றி தெரியாது போல் இருக்கிறது நீ நம்ம ரூட்லயே போ” என சொல்லி அனுப்பி விட்டார் 
இதே போக்கில் போனால் ஜோதிடமும் ஜோதிடத்தை நம்பி வாழ்வோரும் வீழ்ச்சி தான் அடைவோம் ,
வாருங்கள் அனைவரும் ஜோதிடத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம் 
குறிப்பு:- அதற்க்கு முதலில் வீட்டில் இருக்கும்  பொருத்த புத்தகத்தை புறக்கணிப்பீர்!
ஏகதிசையை திசாசந்தி என சொல்லும் ஜோதிடர்களையும் ரச்சு இல்லாமல் திருமணம் செய்தால் கணவன் மனைவிக்கு உயிருக்கு தீங்கு என சொல்லும் ஜோதிடர்களை புறக்கணிப்பீர்
ரச்சு இல்லாமல் திருமணம் செய்து உயிர் தீங்கு இல்லாமல் வாழும் பலதம்பதிகள் ப்க்கத்திலேயே இருக்கிறார்கள் 
ஜோதிஸ் என்பது வெளிச்சம் அதை நீங்களாக பார்த்து பார்த்து இருட்டுக்கு போகாதீர்கள் 
 

ஜோதிடத்தில் எதை பின்பற்றுவது?

நமது ஜோதிட சித்தாந்தத்தை மிகவும் நுணுக்கமாய் ஆராய்ந்து நமக்கு பல அறிய தகவலை தந்தது ஆர்யபட்டர்,பின்னிட்டு வாராகமிகிரர்,வருஷ ஜாதகமுறைய    [தஜகநீலகண்டீயம்] உலகுக்கு தந்த நீலகண்டர் , யவனர், போன்றோர்கள் மிகவும் நுணுக்கமான பல வழிமுறைகளை தந்துள்ளனர், நிலை அப்படி இருக்க நம்முன்னோர்கள் விட்டு விட்டு சென்ற அனைத்தையும் விட்டு தள்ளு புதியதாக நான் சொல்லி தருகிறேன் ஜோதிடம் என்பது சற்று வியப்பை அளிக்கிறது, முகநூலில் கூட பல ஜோதிடர்கள் நான் சொல்லி வந்த கருத்தை ஏற்று கொண்டு கெளரவிப்பது எனக்கு மகிழ்ச்சியே! 
ஆனாலும் விதிமுறைக்கு புறம்பாக சில விஷயம் சொல்வதை யாரும் ஏற்று கொள்வதில்லை,
தற்போது, ஜோதிடத்தில் முன்னரே இருக்கும் பழமையான வாக்கிய பஞ்சாங்கம் , C.G.ராஜனால் [ 1921 முதல் 1942 வரை நவீனபடுத்தப்பட்ட திருக்கணித பஞ்சாங்கம் ஆகியவை தான் தற்போது அனைத்து ஜோதிடர்களாலும் பயன்பாட்டில் உள்ளது, C.G.ராஜனால் இயற்றப்பட்ட பல ஜோதிட நூல்கள் மூலம் ஒரு ஆர்வம் உள்ள நபர் கொஞ்சமாக குருவழி காட்டுதலுடன் நிச்சயமாக நல்ல ஜோதிடராக புகழ் அடைய முடியும் என்பது நிதர்சன உண்மை!
ஆனால் நான் சற்று கருத்தை பதிவது எதனால் என்றால் ஜோதிடம் பாழ்பட்டு போய்விடக்கூடாது அதுவும் நமது ஜோதிடரால் என்பதே ஐய்யப்பாடு!

திருக்கணிதம் ,வாக்கியம்,  நாடியில் திருமணப்பொருத்தம் 
கே.பி.ஸிஸ்டம் ,ஜாமக்கோள் ஆருடம், பிரச்சன்ன சூட்சுமம் ,சந்திர நாடி கற்று கொள்ளவது சரியானது,

இதை தவிர வேறுவிதமாய்
  “கால் கட்டை விரலுக்கும், அஞ்சனா வசிய மூலிகை   தருகிறேன் ,அஸ்டதித்திக்கு தேவதா செய்து தருகிறேன் உனக்கு வாக்கு பலிதம்ஆகும் மற்றும்
தாந்திரீக பயிற்சி எனும் பெயரில்
நல்ல வருமானம் தரும் வாங்கி கொள் என ஜோதிடர்களிடம் வியாபாரம் செய்யும் முறையும் 
வாக்கு பலிதம் அடைய  வாங்கிக்கொள் என்பதும் அதை வாங்கி வைத்தால் மட்டும் சொல்லும் அனைத்தும் நடந்து விடுமா?
இந்தக்கூற்று எப்படி சாத்தியம் ஆகும்? சொல்லுங்க ? ”

இடையே ஆறுமாதத்தில் ஜோதிடம் பயின்று ஜோதிடர் ஆகலாம் என விளம்பரம் பயிற்சி கட்டணம் எனும் பெயரில் சில ஆயிரம் பின்னர் ஆஞ்சனா மை வாங்கி கொள் என சில ஆயிரம் எதேனும் ஒருபட்டம் “ ஜோதிட பூஷன் .ஜோதிடரத்னா, ஜோதிஸ்சிரோண்மணி ‘ என பெயருக்கு முன்னால்  ஒரு பட்டம் , அப்படி பட்டம் வாங்கியவரால் சரியான பலன்  சொல்ல முடியுமா? முகநூலில் கூட நான் மூலநட்சத்திர பெண்ணும் மகநட்சத்திர ஆணும் திருமணம் செய்ததை பற்றி எழுதினேன், நண்பர் தீர்த்தகிரி வெங்கடேஷன் அவர்கள் கூட அதை ஆதரித்தார், ஆனால் பெரும்பாலான ஜோதிடர்கள் அதை லைக் கூட செய்யவில்லை.காரணம் அவர்களுக்கு அதை பற்றி தெரியாது என்பதே உண்மை ஆகும், தவிர ஒரே திசை நடந்தால் அதை திசாசந்திப்பு எனவும் பழமையான ஆரோகண அவரோகணத்தை ஏற்று கொள்ள மறுப்பது, அதே போல் வேறு ஜோதிடரிடம் முன்னரே திருமணப்பொருத்தம் பார்த்து விட்டு வந்தாலும் நாடி முறையில் சரியில்லை சாரப்படி சரியில்லை , ஜாமக்கோள் படி சரியில்லை எனவும் [எண்கணிதப்படி சரியில்லை என்பதும் ] ஆள் ஆளுக்கு ஒருமுறையில் பயணம் செய்ய சொன்னால் பலன் காண வரும் நபர் பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு தான் போகணும், ஆசான் என கூறிக்கொண்டு இருக்கும் பலருக்கு நான் வாரசூலையை பற்றி கேட்க யாருக்கும்ட் தெரியவில்லை ஆனால் தேடிபிடித்தேன் படித்தேன் பதிந்தேன் முகந்நூலில், அதைக்கூட பிராமணர் பக்கம் ஷேர் செய்து ஆதரித்தது, 
நான் யாரையும் குற்றம் கூறவரவில்லை , ஆனால் 10 பொருத்ததை போட்டு குழப்பாதீர்கள்!
நன்றாக பலனை அறிய வேண்டும் எனில் முதலில் ஜோதிடத்தையும் கணிதத்தையும் அடிப்படையில் இருந்து பயில வேண்டும் என பதிந்து நண்பர்களிடம் பகையை தேடி வைத்து விட்டதோ என எண்ணத்தோன்றல் வருகிறது, 

வாக்கியம் கோவில் வழிபாட்டுக்கு மட்டும் தான்,  திருக்கணிதம் மனித குல ஜாதக கணிப்பிற்க்கு  என்பதை மனதில் கொள்ளவும்

பழமையான பலமூல நூல்களை பாடல்களை தேடிப்பிடித்து ஜோதிஸ் ஜாம்பவான்கள் தற்க்கால நடைமுறைக்கு ஏற்ப்ப புதுபித்தால் போதும் ஜோதிடம் நன்கு வளரும் அதை விட்டு தான் நடத்தும் ஆறுமாத ஜோதிட பயிற்சி என்பது ஜோதிடத்தை வளர்த்தாது அதை நடத்தும் நபர்களை வேண்டுமானால் வளர்த்தும் 
அப்படி ஆறுமாதத்தில் படித்து விட்டு என்னைக்காண வந்த ஒருநபருக்கு ராசிகட்டமும் அம்ஷ நிலையும் கூட கணிக்க தெரியாமல் திணறிப்போனார், 
ஜோதிடக்கலை வளரவும் இனி வருங்கால ஜோதிடர்களை வளப்படுத்தவும் பழைய மூலநூல்களை மிகசிறந்தது ,இந்த ஆறுமாத பயிற்சி அல்ல!
பலமுனை கேள்விகள் வரலாம் ஆனால் மனதில் பட்டதை சொல்லிதானே தீரணும்?

Thursday, 21 November 2013

திசாபுக்தி துரிதமாக கணிக்க எளிய முறை

இப்போது எல்லாம் ஜோதிடம் புதியதாக பயில்வோர் மட்டும் அல்ல 
அனுபவமாக ஜோதிடம் பார்ப்பவர்களும் சில நேரம் திசா புக்தியை கணிக்க தடுமாறியதை கண்டு இருக்கிறேன். எளிய முறையில் திசாபுக்தி கணிக்க கால்குலேட்டர் அவசியம் 
முதலில் சூர்ய திசையை காண்போம், 
சூர்யதிசை ஆனது 6 ஆண்டு அதன் ஆரம்பம் சூர்ய புக்தி கணக்கிடுவது 
திசாநாதன் 6 புக்தி நாதன் 6 [அதாவது திசையின் கால அளவிட] 
6x6= 36 விடை  ஆகிறதா? அதில் 3 க்கும் 6 க்கும் இடையே ஒருபுள்ளி வைக்கவும். சரி இப்போது கணக்கிடுவோம் முன்னால் இருப்பது 3 மாதம் அதாவது சூர்யதிசை சூர்யபுக்திக்கு பின்னால் இருக்கும் 6 இருக்கிறதா? அதை 6 X3 பெருக்கவும் அது 18 ஆகமாறும் சரியா ? இப்போது அந்த முன்புறம் இருக்கும் 3 மாதத்துடன் இந்த 18 நாட்களை இணைக்க இப்6 Xபோது சூர்யதிசை சூர்யபுக்தி 3 மாதம் 18 நாட்கள் ஆகும், அடுத்தது சந்திரபுக்தி வரும் அல்லவா/?
இப்போது சூர்யதிசை 6-யை சந்திரபுக்தி 10 பெருக்க வேண்டும் அதன் விடை 6 X10 = விடை 60 ஆகிறது முன்புறம் இருப்பது மாதம் பின்புறம் நாட்கள் இல்லை இப்போது சூர்யதிசை சந்திர புக்தி 6 மாதம் ,
அடுத்தது செவ்வாய் புக்தி அதற்க்கு 6 X 7 [ செவ்வாயின் 7 வருஷத்தால் பெருக்க வேண்டும் ]
6 X7 = 42 விடையாகும் 4க்கும் 2 க்கும் இடையே புள்ளி வைத்து முன்புறம் இருப்பது மாதம் பின்னால் இருக்கும் 2-யை 3ல் பெருக்க வருவது நாட்கள் ஆகும், ஆக சூர்யதிசை செவ்வாய் புக்தி 4 மாதம் 6 நாட்கள் 
சூர்யதிசை 6 ராகுபுக்தி 18  அதை  6 X 18 = 108 விடை ஆகும் முன்னால் இருப்பது10 மாதம் பின்னாலிருக்கும் 8 யை 3ல் பெருக்கி வருவது நாட்கள் = 24 ஆகும் ஆக 
சூர்யதிசை ராகுபுக்தி 10 மாதம் 24 நாட்கள் ஆகும், 
6 X6= 36
6 X10=60
6 X7=42
6 X18=108
6 X16=96
6 X19=114 
6 X17=102 
6X7=42
6X20=120 
அடுத்தது சந்திரதிசை அல்லவா?
10x10=100
10x7=70
10x18=180
10x16=160
10x19=190
10x17=170
10x7=70
10x20=200 இதில் நாட்கள் அமையாது அனைத்தும் மாதமே அடுத்தது செவ்வாய் திசை அதை திசாநாதனும் புக்திநாதனும் கொண்டு கணக்கிட
7x7=49 
7x18=126
7x16=112
7x19=133 
7x17=119
7x7=49 
7x20=140
7x6=42
7x10= 70
இதில் பின்புறம் வரும் எண்களை நாட்களாக கணக்கிட 3 ல் பெருக்கி கணக்கிடவும் ஆக 
சூர்யதிசை ஆறு வருஷம் 
சந்திரதிசை பத்து வருஷம்
செவ்வாய்திசை எழுவருஷம் என கணக்கீடு சரியாகவரும் இதைபோல இனி வரும் திசைகளை கணக்கிட்டு கொள்ளவும் 


             
   

ஜோதிடம் யாருக்கு அதிகமாக பலன் தந்தது?

ஜோதிடத்தில் பலன் காண நாம் அனைவரும் நவகிரஹத்தை மட்டும் வைத்து பலன் கண்டபோது இடையே ஒரு மூன்று கிரஹங்கள் வந்தது ,
அவை முறையே 

1]புளூட்டோ 2]நெப்ட்யூன்3]யுரோனஸ்

புளூட்டோ என்பது ஒருராசியில் குறைந்தது  15 ஆண்டும் அதிகளவு 32 ஆண்டும் என இருக்கும்
நெப்ட்யூன் என்பது குறைந்தது  ஒருராசியில் 14 ஆண்டுகள் இருக்கும்,
யுரோனஸ் என்பது ஒருராசியில் குறைந்தது 7 ஆண்டுகள் இருக்கும் இதை ஆங்கிலேயர்கள் நமது ஜோதிடத்தின் இடையே புகுத்தினர், நம்மில் பலருக்கும் அதில் அந்நிய மோகம் கொண்டு அதை பற்றியும் சற்று படிக்க முயற்சி செய்தனர் [ எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல] அதை பற்றி  1]புளூட்டோ &2]நெப்ட்யூன்3]யுரோனஸ் பலவிதமான ஜோதிட நூல்கள் எழுதப்பட்டு அதையும் நம்ம ஜோதிடர்களால் வாங்கி படிக்கப்பட்டு வந்தது, பின்னர் ஒருகால கட்டத்திலே நமது பஞ்சாங்க வெளியீட்டாளர்கள் & மற்றும் நமது தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவில் இருக்கும் அனைத்து ஜோதிடர்களும் கூடி இந்த மூன்றையும் கோள்களாக கணக்கிட கூடாது என முடிவெடுத்து மேலும் விஞ்ஞானிகளும் கூடி இந்த மூன்று கோள்களையும் நீக்கி விட்டனர், அது போல தான் அடிக்கடி ஏதாவது ஒன்று புதியதாய் வரும் பின்னர் காணாமல் போகும், 

ஆனால் எப்போதும் ஜோதிடத்தில் கணக்கிட பழமையான முறையே ஒத்து போகும்,


அதுதான் தொடர்ந்து வரும் முன்னர் எப்படி இந்த புளூட்டோ +நெப்ட்யூன்&யுரோனஸ் காணாமல் போனதோ அதுபோல் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட முறை எனும் பெயரில் நமது ஜோதிடர் வட்டத்தில் பலன் கூற பயிற்சி முறை எனும் பெயரில் தனக்கு தானே பட்டமும் புகழாரமும் சூட்டி கொண்டு பலகுழுமம்   இன்னமும் எந்த எந்த பெயரிலோ பட்டம் வைத்து கொண்டு  அவர்களை முகதுதி பாட தனியாக சிஷ்யர் கூட்டம் அமைத்தும் தமிழகத்தில் பயிற்சிமுகாம் அமைத்து ஜோதிடர்களை குழப்பி கொண்டு தான் இருக்கிறது, அது அவர்கள் பிழைக்க வழியாக வேண்டுமானால் சரியாக இருக்கலாம் புதியதாக பயில விரும்பும் ஒரு ஜோதிடர் தன் குரு நாதர்  அவர்களை நம்பி சென்று படிப்பதையும் பார்க்கிறோம், ஜோதிடத்தில் சீக்கிரம் பணம் பார்க்க வேண்டும் எனும் வேகம் இப்படி சொல்லி கொடுப்பவரிடமும் இருக்கிறது, கற்று கொள்ள செல்பவர்களிடமும் இருக்கிறது, ஆனால் நமது பாரம்பரியமான ஜோதிட அணுகுமுறை பற்றி கற்று கொடுப்பவருக்கும் தெரியாது, கற்று கொள்ள சென்றவரிடமும் இருக்காது, அதனால் முறையான ஜோதிடம் புதியதாக படிப்பவருக்கு தெரியாமல் போய்விடுகிறது, இவர்களுக்கு தேவை சீக்கிரமாக “ஜோதிடராக” பணம் சம்பாதிக்கணும் அவ்வளவே எண்ணம் .. இது எல்லாமே மூன்று வாரத்தில் கருவா பொண்ணு சிகப்பழகி ஆக்குகிறேன் எனும் விளம்பரம் செய்யும் “முகசாயம் வியாபாரிகளே!! எப்படியோ கொஞ்சம் காலத்தில் இவர்களை நம்பி போகும் சிஷ்யர்களுக்கும் “முகத்தில் பூசுவார்கள் “””

பின்னர் இந்தமுறையும் ஒருகாலத்தில் புறக்கணிக்கப்படும்,ஆனால் வாக்கியமோ திருக்கணிதமோ அதை பின் பற்றி கணிதம் போட்டு பயிற்சி முறையாக படிபடியாக அனுபவம் வர குறைந்தது 1 முதல் 3 ஆண்டுகள் வரை கற்று கொள்பவரின் ஆர்வம் பொருத்து காலதாமதம் ஆகலாம், தாமதம் ஆனால் தான் என்ன முறையே கற்று கொள்ளலாமே?பின்னால் பலன் தரும்  இல்லை எனில் புதியாதாய் புதுமுறையை கற்று தருகிறேன்  என்பவர்களுக்கு மட்டுமே ஜோதிடம் அதிக லாபம் தரும் என்பதே மறுக்க முடியாத உண்மை இதை நான் எப்போதோ சொல்லியது திரும்ப சொல்ல வேண்டிய சூழல்கள் இன்றும் இருக்கிறது 

Sunday, 10 November 2013

ஜோதிடத்தில் பிரச்சனம் கணிக்கலாம்

 

பலன்காணஅன்பர்கள்  வரும்போது அப்பப்போது நடக்கும் பிரசன்ன விஷயம் மற்றும் நிமித்த சாஸ்திரம் போன்றதே ஜோதிடர்களால் சில விஷயம் அனுமானிக்க முடியும்,என்பால் மிகுந்த அன்பு வைத்து ஜோதிடம் பார்க்க வந்த அன்பர் ஒருவர் [ வெள்ளோடு பக்கம்] அவரின் பெண்ணுக்கு அமைந்த வரன் சுமார் 6 மாதம் இழுத்து அடித்து பின் ஒருநாள் ஏற்பாடு ஆனது, பொருத்தம் பார்க்கவே 50 முறை வந்த மனிதர் ,அவர் தன்மகளுக்கு அமைந்த மாப்பிள்ளை பையன் வீட்டாரோடு வந்து அமர்ந்த போது [ என்னை ஒருநண்பர்  தனது சித்தப்பா இறந்து போனதை சவம் எடுக்க எந்த நேரம் என செல்போனில் நேரம் கேட்டார், இது எதிரில் அமர்ந்து இருந்தவர்களுக்கு தெரியாது, நானும் குளிகை காலம் தவிர்த்து நேரம் சொன்னேன், பின் முன்னால் அமர்ந்து இருப்பவர்களை கவனிக்க அவர்கள் இரு ஜாதகத்தையும் [ முன்னமே பொருத்தம் பார்த்தது தான் அதை கொடுத்தனர், நான் பஞ்சாங்க கணிதம் இட்டு 7 மாதம் தள்ளி [ சென்ற கார்த்திகையில் ] ஆனிமாதம் நாள் குறித்தேன், ஆனால் மாப்பிள்ளை பையனோ மாசிக்கு முகூர்த்தம் கணிக்க சொன்னார், நான் அது பெண்ணின் ஜென்ம மாதம் அதை நான் கணிக்க மாட்டேன் என சொல்லி விட்டு ஆனிதான் தாராபலம் சிறப்பு எனச்சொல்ல அந்த மாப்பிள்ளை பையன் தனக்கு தெரிந்த ஜோதிடருக்கு போன் போட்டுஎன்னிடம் நீட்டி அவரிடம் பேசுங்க” என சொன்னார், நான் மறுத்து விட்டேன், நீங்க வேறுபக்கம் வேண்டும் என்றாலும் நாள் கணித்து கொள்ளுங்க ஆனால் நான் பெண்ணின் ஜென்மமாதத்தில் கணிக்க மாட்டேன் என சொல்ல அந்த மாப்பிள்ளை பையனோ மாசிதான் திருமணம் அமைக்கணும் வாங்க எங்க ஜோதிடரிடம் போகலாம் என்றார், பெண்ணின் அப்பாவுக்கோ தர்மசங்கடம் ஆகிப்போனது, “ அவர் ஜோதிடரே நீங்க தான் மாசியில் முகூர்த்தம் கணித்து தாருங்க நாங்க முதலில் இருந்தே உம்மிடம் தானே பொருத்தம் பார்த்தேன்,முகூர்த்தமும் நீங்களேகணியுங்க என சொல்லியும் நான் ம்றுத்து விட்டேன், பின் வேறு ஜோதிடரிடம் சென்று முகூர்த்தம் கணித்து “மாசித்திருமணத்திற்க்கு நானும் சென்றேன் , நாட்களும் ஓடியது , ஆனால் திருமணம் முடிந்து வைகாசியில் பெண்ணின் தகப்பனார் ”ஹார்ட் அட்டாக்” வந்து போய் விட்டார், இதுபோல அசம்பாவிதம் ஏதேனும் தோன்றும் என மனதில் எனக்கு ஈசன் அருளால் அந்த நேரத்தில் சவம் எடுக்க ஒருத்தர் போன் செய்தார் அல்லவா? அந்த இறந்து போனவருக்கு காலாஷ்டமி 6 மாதம் இருந்தது, அதை கொண்டே நானும் திருமண தேதி கேட்க வந்தவர்களை 6 மாதம் காலாஷ்டமி கணக்கிட்டு தள்ளி இடையே பல சுபமூர்த்தம் இருந்தும் ஆனிமாதத்தை சொன்னேன், ஆனால் விதி என் வாடிக்கையாளர் வெள்ளோடு கவுண்டிச்சிபாளையம் சுப்ரமணி [நாடார்] அவர்களை விட்டு வைக்கவில்லையே? என்ன செய்ய ? அதனால் புதியதாய் ஜோதிடம் பழகிவருவோர்கள் ‘ஜோதிடம் பார்க்க அன்பர் வந்தபோதும் சற்று முன்னரும் என்ன நடந்தது என்பதை கொண்டே அனுமானிக்கலாம் என்பதால் இப்பதிவு

Thursday, 7 November 2013

அஷ்டவித விவாஹங்கள் [8 விதம்]

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் அது

அவ்வாறு இல்வாழ்க்கையை சிறக்க இல்லாளின் பங்கு மிக அவசியமாகிறது, 

1) ப்ராஹ்மம், 2) தைவம்,3)ஆர்ஷம்,4) ப்ராஜாபத்யம், 5) ஆஸுரம்

6) காந்தர்வம் 7) ராக்ஷஸம் 8) பைசாசம் அதன் விபரம் :-

1)ப்ராஹ்மம் என்பது ஒழுக்கமும் கல்வியும் நற்க்குடிபிறப்பும் இளமையு அழகும் கொண்ட மணமக்களை முறைப்படி கன்யாதானம் செய்து மணம் முடிப்பது ப்ராஹ்மம் ஆகும், 

2) தைவம் என்பது யாகங்களில் இளமையும் அழகும் கொண்ட மணமகனை தேர்வு செய்து தன் பெண்ணை கொடுப்பது தைவம்ஆகும் 

3)ஆர்ஷம் என்பது மணமகன் தனக்கு பெண் தர மணமகளின் தகப்பனுக்கு பசுவும் கன்றும் அல்லது இரண்டுகாளை மாடு கொடுத்து பெண்ணை திருமணம் செய்வது 

 4) ப்ராஜாபத்யம் என்பது நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வேதத்தற்க்கு கட்டுபட்டு தர்மபடி வாழச்சொல்லி கன்னிகையை தானம் செய்வது  ப்ராஜாபத்யம் ஆகும்,

5) ஆஸுரம் என்பதுதன்வீட்டுக்கு தெரியாமல் மணமகன் பெண்ணின் தந்தை அல்லது அவள் உறவுக்கு பணம் அதிகம் தந்து மணம்முடிப்பது ஆஸுரம் ஆகும்

6) காந்தர்வம் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர்மேல் ஒருவர் காதல் கொண்டு காமத்தில் தாலிகட்டாமல் உறவு கொள்வது என்பது காந்தர்வம் ஆகும்

7) ராக்ஷஸம் என்பது ஒரு பெண்ணின் மேல் ஒருதலைக்காதல் கொண்டு அவளை உறவினர்கள் தடுத்தும் உறவினர்களை  துன்புறுத்தி பெண்ணையும் துன்புறுத்தி தூக்கி சென்று “பலாத்காரம் “ செய்ய அது ராக்ஷஸம் ஆகும் 

கடைசியாக வருவதுதான்

8) பைசாசம் என்பது உறங்கி கொண்டு இருப்பவளையோ அல்லது மயக்கத்தில் இருப்பவளையோ  இயல்பாக மனநிலை சரியில்லாத பெண்ணையோ அல்லது ஒழுக்கம் இல்லாத பெண்ணை பலவந்தமாக உறவு கொள்வது ,அவ்வாறு செய்பவன் பாவிகளுக்குள்ளும் மஹாபாவியாகி விடுகிறான் என மனுதர்ம சாஸ்திரம் சொல்கிறது 

[ நன்றி :- அம்மன் தரிசனம் 2011 தீபாவளி மலர் ]