Saturday 18 April 2020

ஜோதிட பயிற்சி தளம் [பகுதி -8]

செவ்வாயின் தன்மைகள் ஜோதிட பயிற்சி தளம் பகுதி [8]

அனைவருக்கும் வணக்கம் நான் பெருந்துறையில் இருந்து Ask எனும்
Astro Senthil Kumar எழுதுகிறேன்.

அடிப்படையில் ஜோதிடத்தில் ஒன்றும் தெரியாது என்பவர்களுக்கு என இந்த தளம் 
https://www.youtube.com/channel/UCgkT8E50F8EbZfT0yOIT45A?view_as=subscriber
யூடியூப்பில் எனது சேனல் லிங்கில் உங்களுக்கு என ஜோதிட பதிவுகளை பதிகிறேன்.. அதையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...





செவ்வாய் 

ஆட்சி:- மேஷம் , விருட்சிகம் 

மூலத்திரிகோணம் :- மேஷம் 

உச்சம் :- மகரம் 

நீசம் :- கடகம் 


நிறம் :-சிவப்பு 


குணம் :-ராட்சஸம் குரூரன்  


மலர் :-செண்பகம் 


ரத்தினம் :-பவளம் 


மரம் :-கருங்காலி 


கிழமை :-செவ்வாய் 


தேவதை :-கார்த்திகேயன் முருகன் 


இலக்கு :- தெற்கு


ஆசன வடிவம் :-முக்கோண வடிவம் 


வாகனம் :-அன்னம் 


தானியம் :-துவரை 


உலோகம் :-செம்பு 


நோய் :-பித்தம் 


சுவை :-துவர்ப்பு

 

 பால் :-ஆண்


 கால்கள் :-நான்கு கால்கள்


ஜாதி :-சத்ரியர்


இயக்கம் :-நடக்கும் 


மச்சம் :-வலது 


தழும்பு :- கை 


இடம் :-பூமி

 

தாது :-தாது சரம்

 

தாவரம் :-சிறுபயிறு 


தாவரத்தின் ஆளுமை :-பூ 


பஞ்சபூதம் :-நெருப்பு 


திசை :-தெற்கு

 

உறுப்பு :-மார்பு 


ஆளுமை :-செம்மண் பரப்பு 


தோற்றம் :-தைரியம்

 

உடலில் :-தசை

 

செயல் :-சந்தர்ப்பம் 

ஸ்தலம் :-பழனி


 

செவ்வாய் குறித்த இதர விபரங்கள் :-


செவ்வாய் கிரகம் பூமியைவிட உருவத்தில் சிறியது செவ்வாய் தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 24 மணி 37 நிமிடங்கள் ஆகிறது சூரியனை 6 8 7 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது



 ஜோதிடத்தில் செவ்வாய் கடினமான பொருள்களையே தனது காரகத்துவங்கள் ஆக கொண்டவர் குணத்திற்கு தொடர்பு ஏற்படும்போது வெறுக்கத்தக்க குணங்களை உணர்ச்சிபூர்வமான குணங்களை கொண்டவர் ஆவார்.


 இது சூரியனின் வெளிவட்ட கிரகம் இதனுடைய பார்வை தான் நின்ற வீட்டிலிருந்து கடிகாரச் சுற்று வீரத்தில் 4 7 8 வீட்டை பார்ப்பார் சூரியனுக்கு நான்காவது வட்டத்தில் சுமார் ஒன்று 4 5 பூஜ்ஜியம் பூஜ்ஜியம் பூஜ்ஜியம் பூஜ்ஜியம் பூஜ்ஜியம் மைல்களுக்கப்பால் இருந்துகொண்டு சூரியனை சுற்றி வருகிறது 24 மணி 37 நிமிடம் 23 வினாடிகளில் தன்னை தானே சுற்றிவரும் சூரியனை ஆறு 8 7 9 நாட்களில் சுற்றி வரும் இதன் சுற்றளவு 4 2 மூன்று ஒன்பது மைல்களாகும்..

 செவ்வாய்க்கு வழங்கப்படும் பிறபெயர்கள் :-

அங்காரகன், அழல், ஆரஸ், உதிரன், குஜன், குருதி, நிலமகன், மங்கலன், சேய்,அரத்தன்,அழலோன், அறிவன், ஆரல், மங்கலன், வக்கிரன், செந்தீவண்ணன், பெளமன், அறிவன் போன்ற பெயர்களாகும்...



செவ்வாய் குணங்கள்:-

 முன்கோபம் ஆத்திரம் அவசரம் கர்வம் ஆணவம் அகம்பாவம் முரட்டுத்தனம் வேகம் விடாமுயற்சி வீண் சண்டை வாக்குவாதம் உணர்ச்சிவசப்படுதல் போர்க்குணம் பகை உணர்ச்சி விரோத குணம் நீண்டநாள் பகை சந்தேக குணம்

 காரகத்துவம் 

சகோதரன் கணவன் உடல் வலிமையை மனவலிமை வெட்டுக்காயம் தழும்பு பூமி நீளம் வயல் ரத்தம் கூர்மையான ஆயுதம் திருமண யோகம் விவசாயம் படுக்கையறை அடுப்பு தூண்கள் பாறை மழை சுரங்கம் துப்பாக்கி குண்டு கடினமான பொருள் காவல்துறை
தொழில் 

பூமிதனில் அரசுத்துறையில் காவல்துறை அதிகாரி ராணுவம் செங்கல்சூளை சமையற்கலை சட்டி பானை செய்தல் தீயணைப்பு துறை ஆயுதம் செய்தல் ஆயுதக்கிடங்கு செங்கல் வியாபாரம் அறுவைச்சிகிச்சை நிபுணர்

1ம் பாவம்
செவ்வாய் உடைய பல தொடர்புகள் முன்கோபம் முரட்டுத்தனம் எவரையும் மதியாமை ஆணவம் அதிகார தோரணை தன்னம்பிக்கை மிகுந்த தைரியம் தொழில் கல்வி ஈடுபாடு போராளிகளும் சந்தேக குணம்


2ம் பாவம்

முரட்டு குணம் போக்கிரி தனமான பேச்சு கம்பீரமான பேச்சாற்றல் கொடூர சொற்களுடன் பயிற்சி சொன்னதை செய்யும் குணம் போர்க்களமா வாழ்க்கை தொழில் கல்வி பயிலுதல் நிலம் மூலம் ஆதாயம் அதிகாரிகளால் செல்வாக்குப் பெறுதல்

3ம் பாவம்

 துணிச்சலாக வீரம் கட்டுக்கடங்காத கோபம் பழி உணர்ச்சி தன்னம்பிக்கையுடன் இருத்தல் காதுகளில் கோளாறு வதந்திகளைப் பரப்புதல் காமத்தில் கூடுதல் விந்துவில் வீரியம் வழிபடுதல் மனம் இறுக்கத்துடன் படபடப்பாக செயல்படுதல்


4ம் பாவம்

மென்மையான அசையாச் சொத்துக்களை காளி வீட்டு மனையின் நிலங்களில் முதலீடு செய்தல் இயந்திரங்களை வைத்து வாழுதல் இயந்திரங்கள் சம்பந்தமான உயர்கல்வி வேளாண்மையில் ஈடுபாடு பெற்றிருத்தல் உயர்கல்வி போகத்தில் அதிக ஈடுபாடு அடுக்குமாடி வீடு குடியிருப்புகள்

5ம் பாவம்


ஜாதகருக்கு போக்கிரி கனமான குழந்தைகள் அமைதல் ஜாதகருக்கு குழந்தைகளுக்கும் இடையே பாசம் பாரம்பரிய நிலைகள் மற்றும் அசையா சொத்துக்களை பெற்றிருத்தல் பெண்களுக்கு கருக் கலைதல் ரத்தப்போக்கும் ஈடுபடுதல் அறிவாற்றலில் மந்தத்தன்மை சிந்திக்க இயலாத அறிவின் தன்மை வைராக்கிய குணம் மிகுந்த இருத்தல் கடற்கரை உறவினர்கள் மற்றும் சகோதர வழி ஆதாயம் பெறுதல் சிவன் மற்றும் முருகனை வழிபடுதல்

6ம் பாவம்



அதிக கடன் தொல்லைகள் எதிர்பாராத விபத்துக்களால் காயம் படுதல் நெருப்பின் மூலம் காயங்கள் எதிரிகள் பிரச்சினையை சமாளிக்கும் வல்லமை மற்றும் தைரியம் வழக்குகளில் வெற்றி பகையை ஒழித்தல் ரத்த நோய் பல் வியாதிகள் பல்வகை முரண்பாடுகள் சகோதரர்கள் பிரிவினைகள் பிரச்சனைகள் அதிக கோபம் சிறைதண்டனை பாவங்கள் செய்யும் தொழில் அதிக கோபம் அதீத முரட்டுத்தனம் வீண் சண்டை ஈடுபடுதல் ஆதிக்க உணர்வு நிலை சம்பந்தமான வழக்கு,                   கணவன் மனைவி பிரிவினை [பெண் ஜாதகத்தில்  வலிமை அடைய]

7ம் பாவம் 


நிலம் சொத்துக்கள் அடையும் ஈடுபாடு ஆணவம் அதிகாரம் அற்ப புத்தி கோபம் சந்தேகங்கள் விரோதம் பாலுணர்ச்சி படபடப்பு முரட்டுத்தனம் பாலியல் தனம் நிலம் சம்பந்தமான தொழில் அதிகாரமிக்க ஆளுமையுள்ள தொழில்கள் மின்னணுவியல் மின்சாரம் சம்பந்தமான பணிகள்


8ம் பாவம்


சகோதர பிரச்சனை திருப்தியின்மை அவமானங்கள் சகோதரர் வழி தீராத பகை பாகப்பிரிவினைகள் அசையாச் சொத்து பிரச்சனை நீதிமன்ற வழக்குகள் அடிதடி வெட்டுக்குத்து கைகலப்பு போன்ற மூர்க்க குணங்கள் எதிர்பாராத விபத்துக்களால் ஏற்படும் மரணம் நெருப்பினால் மரணம் பிறரை கொடுமைப்படுத்துதல் பாலியல் தொழில் கல்வி பெறுதல் இயந்திர கல்வி இயந்திர வழி வருமானம் மிகுந்த பய உணர்ச்சி முரட்டு தைரியம் ரத்தம் சம்பந்தமான நீண்டநாள் வியாதிகள் களத்திர தோஷம் களத்தில் துரோகம் நீண்ட வகை கொலை பாதக செயல் செய்தல் கற்பழித்தல் போன்றவற்றை செய்யும் துணிவு

9ம் பாவம்



சகோதர வழி நன்மையால் மதிப்பு மரியாதை கௌரவம் அடைதல் போர்த் தளபதி போல செயல்படுவீர்கள் செயலாளர் பொறுப்பு தைரியம் முன்கோபம் முரட்டுத்தனம் குளிர்ச்சித் தன்மை மற்றும் தன்னம்பிக்கை நிலம் தோட்டம் பண்ணை அசையாச் சொத்துக்கள் அடைதல் பொறியியல் கல்வி அறிவியல் அறிஞராகவும் விஞ்ஞானியாகவும் வாழ்தல் இயந்திரம் மேலாளராக இருப்பது

10ம் பாவம்



ஆணை பிறப்பிக்கும் தொழில் அதிகாரம் செலுத்தும் தொழில் நெருப்பு தொடர்பான தொழில்கள் தொழில் கல்வி தொடர்பான தொழில்கள் சமையல் தொழில் மேலாண்மை தொழில் மின்சாரத்துறை காவல்துறை ராணுவம் வனத்துறை சீருடை சார்ந்த தொழில் அசையாச் சொத்து பணத்தோட்டம்

11ம் பாவம்


சகோதர வழியில் நன்மைகள் ஆதாயங்கள் நிலம் பூமி மேலாண்மை வேளாண்மை விவசாயிகள் இலாபங்கள் தொழில்கல்வி பொறியியல் துறை சார்ந்த துறையில் நன்மை பெறுதல் இயந்திர வழியில் ஆதாரங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றி ஆளுமைத்திறன் வழி நன்மை பெறுதல் தொழில் கலை தொழிலாளர் வழி நன்மைகள் செயல்கள் வழி நன்மை பெறுதல் கணவன் மனைவி புரிதல் 

12ம் பாவம்

சகோதரர் வழியில் பயன்பாடு அற்றநிலை பெண்கள் கணவன் உறவில் பயனற்ற நிலை நிலம் பூமி வழி வியாபார முதலீடுகள் இழப்புகள் ஏற்படுதல் உணர்ச்சியில் சண்டித்தனம் கொடூரமான சிந்தனைகள் எதிர்பாலினரை நிர்வாகிக்கும் சூழ்நிலைகள் போன்றவற்றை ஏற்படுத்தும்




ஜோதிட பயிற்சி தளம் 9 ல் பேசுவோம் எல்லாம் ஒரு நோட்டில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள்..

மேலும் தொழில் முறை ஜோதிடர்கள் ஆக தனி பயிற்சி உண்டு வாட்ஸ் அப் எண் 9843469404 மூலமாக அணுகவும்..

தனி நபர் ஜாதக ஆலோசனைகள் பெறWhat's App 9843469404 

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 

பெருந்துறை
Astro Senthil Kumar.


1 comment:

  1. உங்கள் கருத்தை பதிந்து செல்லுங்கள் அன்பர்களே..

    ReplyDelete