Saturday, 25 March 2017

அரசுஉதவி நாடி செல்லஉகந்த நாள்


அரசு அதிகாரிகளை அணுக உகந்தநாட்கள்..

ஒரு V.A.O.
ஒரு தாசில்தார்
ஒரு கலெக்டர்
ஒரு  M.L.A 
ஒரு அமைச்சர் போன்ற ஆசாமிகளை
நமது கார்யம் காரணமாக செல்லும்போது அவர்களை எந்தநாளில்
சென்று பார்த்தால் நமக்கு நம் பணியில் வெற்றி கிடைக்கும் என
குழப்பத்தில் இருப்போர்களுக்கு ஆகவே இந்த பதிவு.....

சுந்தரானந்தர் சோதிட காவியம் என்ற மூலநூலில்
சுந்தரானந்தரின் 300முகூர்த்தம் என்ற தலைப்பில் சொல்லிய விஷயத்தில் இன்று ஒரு செய்யுளை வாசிப்போம்....

மிகுத்ததோர் மன்னர்தெரி சனங்கள் செய்ய மிக்கமுள்ள திங்கள் புதன் வியாழன் வெள்ளி பகுத்ததோர் துவாதசியுந் திரயோதசி பஞ்சமித் தமி தசமி திருதிகையும் தொகுத்ததோ ருத்திரட்டாதியோணம் தூய் சதயம் ரேவதிரோ கணியும் பூசம் வகுத்ததோ ரிடப துலாந் தனுர் மீனத்தில் மகாராஜ தெரிசனங்கள் செய்யுநாளே..

என்கிற பாடல் எண்29
ஆகும்

இதில் சொல்லப்படும் கருத்து ஆனது

அரசு சார்பில் நமக்கு தேவைப்படும் வேலையை
திங்கள்
புதன்
வியாழன்
வெள்ளிக்கிழமை அன்று

திருதியை
பஞ்சமி
தசமி
திரயோதசி
துவாதசி

ஆகிய திதிகள் கூடும் நாளில்

ரோஹிணி
பூசம்
திருவோணம்
சதயம்
உத்திரட்டாதி
ரேவதி
ஆகிய நட்சத்திரம் அமையும் நாட்களில்
#மன்னர்
தரிசனம் செய்ய கார்ய வெற்றி அடையும்
என்கிறது
இப்பாடல்...

இன்னும் வேறு ஒரு பழைமையான ஜோதிட பாடலை அடுத்த பதிவில் காண்போம்...

என்றும் ஜோதிடப்பணியில்
பெருந்துறையில் இருந்து

Astro Senthil Kumar

Wats App 9843469404

ஜோதிட ஆலோசனைகளை பெ கட்ட அடிப்படையில் அணுகவும்.

Sunday, 5 March 2017

திடீர் திருமண யோக பெண்

திடீரென திருமணம் கை கூடும்  ஆணுக்கோ /பெண்ணுக்கோ உறுதிபடுத்தப்பட்டு நடக்கும் அது போன்ற சம்பவங்களை நாமும் கேட்டும் இருப்போம் ....


அது போன்ற ஒரு ஜாதகம் தான் இன்று ஆய்வில் செய்வோம்.. 

இந்த பெண் கடந்த 05-04-1994 அன்று 6.55 காலை சேலத்தில் பிறந்த இவருக்கு கடந்த 22 வயது 5வது மாதத்தில் இவருக்கு திடீரென திருமணம் ஏற்பாடு ஆகி நடந்தது ... இவரை மணந்த ஆணுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமண தேதி உறுதி செய்து பத்திரிக்கை அழைப்பும் சென்று திருமணம் நடக்க ஒரு வாரம் இருக்கும் போது அந்த பெண் அவள் காதலன் உடன் ஓடி விட்டார்...


உடனடியாக அதே தேதியில் தன் திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் உறவினர்கள் மூலமாக இந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு ஆனது ..

யாரோ கழுத்தில் சுமக்க வேண்டிய மாங்கல்யம் இந்த பெண்ணின் கழுத்தில் அலங்கரிக்கிறது ....

இந்த ஜாதகி குடும்பத்தின் வறுமையான 
 சூழ்நிலையை தாண்டி மிக உயரத்தில் 
குறிப்பாக ஸ்கூட்டி வாங்கவே திண்டாடிய பெண் 
வீட்டார்  இன்று “ஆடி கார்” வைத்துள்ள இடத்திற்க்கு இந்த பெண்ணை திருமணம் செய்து கொடுத்து உள்ளார்கள் எனில் இந்த ஜாதகத்தில் கிரகங்கள் கொடுத்த “அசுர வளர்ச்சியை” கொஞ்சம் நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்..

பொதுவாக எம் ஒவ்வொரு கட்டுரையிலும் 11ம் பாவத்தில் இருக்கும் கிரகங்கள் நற்பலனையே தரும் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன் ...இதில் 11ல் புதன் இருப்பதை கவனிக்கவும் .. பாதக கிரகம் ஆன சனி 11ல் வலுப்பெற்ற காரணமாக அமைந்தமையால் இவர் 2ம் தார வாழ்க்கை போன்ற வகையில் இவருக்கு திருமணம் ஏற்பாடு ஆனது..

பழமையான ஜோதிட பாடல்களை சில ஜோதிட மேதைகள் பரிகாசம் செய்து பேசினாலும் நான் பழமையான ஜோதிட பாடல்களை உயர்த்தி தான் பேசுவேன்.. 
இன்று ஒரு பாடலை அப்படி காண்போம்..

இந்த ஜாதகியின் “ராகு திசை புதன் புக்தி”க்கு அன்றே “புலிப்பாணி சித்தர்” எழுதிய பாடல் இது 


சேதமில்லா ராகு திசையில் புதனார் புக்தி செப்பு நாள் மாதமது முப்பதாகும் பாதமில்லா நாளதுதான் பதினெட்டாகும் பகுத்தறியும் அதன்பலனை பகரக்கேளு ... வாதமில்லா வாணிபம் செட் ஆகும் பாரு.. வகையான சகோதரமுடன் வாழலாகும்.. பேதமுடன் பொருள் உண்டாம் பூமிலாபம் பொங்குமாங் புத்திரனில் புகழ்மிகப்பாரே!!!!!”””””’---------இவ்வாறான புலிப்பாணி பாடல் 

இந்த ராகுதிசை புதன் புக்தி நடக்கும் போது எந்த ஒரு ஜாதகனுக்கும் மிகப்பெரிய உயர்வை கொடுத்து வாழ்க்கையில் மேன்மையை தரும் என்றார் புலிப்பாணி சித்தர் ...
எம் ஆய்வில் பல ஜாதகங்களுக்கு இவ்வாறான ராகுதிசை புதன்புக்தி மிகப்பெரிய அளவில் நல்ல மேன்மையை பல்வேறுபட்ட வயதினர்க்கு அனுபவ பூர்வமாக உணர்ந்து உள்ளேன்...
இதில் பாவக மாறுதலில் 
12 ல் இருந்த சூர்யன் லக்னத்திற்க்கு வருகிறார் மேஷத்தில் அவருக்கு உச்ச பலம் ....
11ல் இருந்த புதன் 12ல் பாவக மாறுதல் அடைந்து நீசம் அடைகிறார்..
மேஷ லக்னத்தின் 3 மற்றும் 6க்கு உடைய புதன் “நீசம் அடைவதாலும்” புதன் மேஷ லக்னத்தின் யோக கிரகம் ஆன குருவின் “பூரட்டாதி” நட்சத்திர சாரத்தில் இருந்து அம்சத்தில் புதன் ஆட்சி பெறுவதாலும் இந்த ஜாதகத்திற்க்கு புதன் “நீச்ச பங்க ராஜ யோகத்தை கொடுத்து விட்டார்” என்றால் அது மிகையல்ல...
ராசி மற்றும் அம்சத்திலும் லக்னம் வர்க்கோத்தமம் கூடவே 11ம் பாவத்தின் சனியும் வர்க்கோத்தமம் அடைவதால் 11ம் பாவம் என்பது அபரீதமான வளர்ச்சியை கொடுக்கிறது...11 வலு பெறும் போது 2ம் தார வாழ்க்கையை போல வேறு பெண் உடன் நிச்சயம் செய்த ஆணை [ நிச்சயம் செய்தாலே பாதி திருமணம் முடிந்தது போல என்பது கணக்கு ] 
நிச்சயம் 
செய்து திருமணம் வரை வந்த பெண் ஓடி போனதால் இந்த ஜாதகி மணந்த ஆணுக்கு இவர் கிட்டத்தட்ட இரண்டாம் மனைவி போல தான் என்றால் அது மிகையல்ல...

இதில் ஏழில் குரு [ கேந்திர தோஷம் ] 
 எட்டில் ராகு தன் உச்ச வீட்டில் இருக்கிறது .. திருமண வாழ்க்கை நன்றாக அமையுமா எனும் ஐய்யப்பாடு தேவை இல்லை .. நன்கு கவனித்தால் ராகு [ குருவின் விசாகம் சாரத்தில்] புதன் [ குருவின் பூரட்டாதி சாரத்தில்] மேஷ லக்னத்தின் யோகத்தை தரும் குரு ஏழில் அமர்ந்து இந்த ஜாதகிக்கு “வளமையான வாழ்க்கையை ஏற்ப்படுத்தி கொடுத்து இருக்கிறார்;’””” 

பொதுவாக சில திடீர் திருமணங்கள் மூலமாக வாழ்க்கையில் நினைத்து பார்க்க உயரத்தில் வாழ்க்கையை அமைத்து கொடுத்த கிரகங்கள் மீது இந்த ஜாதகிக்கும் பெற்றோருக்கும் ஜோதிடத்தின் பால் நம்பிக்கை பல மடங்கு உயர்ந்து உள்ளது,.......

இப்படி ஒரு உயர்வான வாழ்க்கை இவருக்கு அமையும் ஊரே இவரின் வளர்ச்சியை கண்டு வியந்து நிற்க்கும் என “ஜோதிடராக” திட்டவட்டமாக ஆணித்தரமான வார்த்தைகள் மூலமாக எம் கணிப்பில் சொல்லிய வண்ணம் நடந்தது என்பதில் அடியேனும் சற்றே மகிழ்கிறேன்...
அடுத்தபடியாக இன்னொரு ஜோதிட ஆய்வில் உங்கள் உடன் நாளை பேசுகிறேன் ...
வருகின்ற 19-03-2017 அன்று ”திருமண பொருத்தமும் தாராபலனும்” எனும் எம் ஜோதிட நூல் வெளியாகிறது .. அதை ஸ்ரீ ஆரோமிரா பிரசுரம் மூலமாக வெளியாகிறது... புத்தகம் தேவைப்படும் நபர்கள் வாட்ஸ் அப் எண் :- 94864 98452 மூலமாகவும் அலைபேசி எண்:- 99432 77955 மூலமாகவும் “ஆரோமிரா விஜய் ஹரி” அவர்களை தொடர்பு கொள்ளவும்....
எம்மிடம் ஜோதிட ஆலோசனைகள் பெற விரும்பும் நண்பர்கள் ஆன்லைனில் தொடர்பு கொள்ள வேண்டுமாயின் astrosenthilkumar@gmail.com மூலமாக உங்கள் பிறந்த தேதி நேரம் பிறந்த இடம் “உங்களுக்கான ஜோதிட கேள்விகள் “போன்றதை அனுப்பும் போது 
union bank of india 
a/c no:- 629102010002579
ifsc code:- UBIN 0562912
Village: 803534 
Perundurai 
cust id:- 241739254 aName:- Senthilkumar.A 
எனும் வங்கி கணக்கில் உள்நாடு ரூ1000 வெளிநாடு ரூ 2000 என வங்கியில் செலுத்தி விட்டு பலாபலனை அறிந்து கொள்ளவும்...
வங்கியில் செலுத்திய மூன்று அல்லது நான்கு தினங்களுக்குள் உங்களுக்கான மெயில் வழியாக அல்லது வாட்ஸ் வழியாக உங்களுக்கான ஜோதிட ஆலோசனைகள் வழங்க்கப்படும்.....
என்றும் ஜோதிடப்பணியில் 
பெருந்துறையில் இருந்து 
Astro Senthil Kumar 
Wats App:- +91 9843469404