Wednesday 15 October 2014

சாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 2]

             சாமுத்திரிகா லக்ஷ்ணம் பகுதி 2
                    தலையின் லக்ஷ்ணம்

 1] வட்டமாக பருத்தமான தலை அமைப்பை கொண்டவர் செல்வந்தராக இருப்பார்2] வட்டமாக சிறுத்த தலை அமைப்பை கொண்டவர் அழகும் செல்வமும் சேரப்பெற்றவர்3] நீண்ட தலையை கொண்டவர் சதா எந்நாளும் வறுமை நிலையை கொண்டவர்  

                   தலைமயிர் லக்ஷ்ணம்

1]பிளவுபட்ட தலைமயிர் கொண்டவர் மிகுந்த செலவுகள் கொண்டு சுகமான போஜனம் [சாப்பாட்டிற்க்கு வழியற்ற நிலை]
2] பருத்த கருத்த மயிருள்ளவர் செல்வநிலையை கொண்டவர்.3] பருத்த ஆனால் கொஞ்சம் சிவந்தநிலை மயிர் உள்ளவர் வறுமைநிலையிலேயே இருப்பார்.4]யானைமுடியை போன்ற அமைப்புள்ளவருக்கு வியாபார விருத்தி நன்றாக அமையும்5]மிகுந்த அடர்த்தியாகவும் நெருக்கமான மயிர் அமைப்பு கொண்டவர் தீர்க்க ஆயுள் உள்ளவர்
6] சிறுத்த சிவந்த நிறமுள்ள மயிர் அமைப்பை கொண்டவர் “அதிக காமம் கொண்டவர்”7] சுருண்ட சொற்ப மயிர் உள்ளவர் விகாரமும் சொற்ப செலவுகளை கொண்டவர்
8] மிகுந்த நீண்ட மயிர் உள்ளவர் அதிக பழிசொல்லுக்கு ஆளாவார்.


           தலையில் இருக்கும் சுழியின் லக்ஷ்ணம்


1] தலையில் ஒரே ஒரு சுழி வலமாக பெற்றவர் அதிகமான சொந்தபந்தங்கள் அமைந்தவராக இருப்பார்.

2] தலையில் ஒரே ஒரு சுழி இடப்புறமாக அமையப்பெற்றவர் வாழ்க்கை  வறுமை நிலையில் இருக்கும்

3] இரண்டு சுழியும் இடம்புரியாக [இடமாக] அமையப்பெற்றவர் அற்பாயுளும் வறுமை நிலையும் கொண்டவர்.

4] இடப்புறத்தில் வலமாக சுழி இருக்க பெற்றவர் பூர்ண ஆயுளும் மிகுந்த செல்வம் உடையவராக இருப்பார்.

5] மூன்று சுழி இடப்புறத்தில் இடம்புரியாக இருக்கப்பெற்றவர் விரைவில் தன் தாய்-தந்தையை இழப்பார்.

6] மூன்று சுழியும் தொங்கினாற்ப்போல் கூடி இருக்கப்பெற்றவர் வெட்டுப்பட்டு இறக்கும் நிலையை தரும்.

7] இரண்டு சுழியில் ஒரு சுழி வலம்புரியாகவும் ஒரு சுழி இடம்புரியாகவும் இருக்கப்பெற்றோர் கொஞ்சம் காலம் வறுமையும் பின்நாளில் செல்வநிலையும் அடைவார்கள்

                முகத்தின் லக்ஷ்ணம்

1] சிறுத்தமுகம்  உடையவர் அழகுள்ளவர் 

2] சிங்கம்போல பருத்தமுகம் உடையவர் யாருக்கும் யோக்கியனானாக நாணயஸ்தனாராக இருப்பார்.

3]பருத்து முகமும் கருத்து முகத்தில் மிகுந்த மயிர் உள்ளவர் யாரையும் வசீகரிக்கும் தன்மையும் செல்வமும் உள்ளவராக இருப்பார்

4] சிவந்த மயிர் உள்ள முகம் உள்ளவர் கபட நாடகதாரியாக இருப்பார்.

5] மிருதுவான முகத்தில் மயிர் உள்ளவர் அழகனாக இருப்பார்


முகத்தில் அமையும் சுழியின் லக்ஷ்ணம்

1] முகத்தில் வலதுபக்கத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப்பெற்றவர் சுகமான போஜனம் அமையப்பெற்றவர்.

2] முகத்தில் இடதுபக்கத்தில் ஒருசுழி இடம்புரியாக இருக்கப்பெற்றவர் சிலநாள் வறுமையும் சில நாள் செல்வநிலையும் மாறி மாறி அமையப்பெற்றவர்.

3] முகத்தில் இடதுபக்கம் ஒருசுழி வலம்புரியாக அமையப்பெற்றவர் நல்ல நினைவாற்றல் கொண்டு நினைத்ததை முடிக்கும் வல்லவன்.

4] தாடையின் கீழே இரண்டு சுழி வலம்புரியாக இருக்கப்பெற்றவர் அதிக செல்வந்தர் ஆக இருப்பார்கள்.

5] தாடையின் இடம்புரியாக இருக்கப்பெற்றவர் வறுமையும் வியாதியும் உடையவர் உள்ளவர்கள்.

                 நெற்றி சாமுத்திரிக்கா லக்ஷ்ணம்

1]நெற்றியின்  நான்குவிரல் அளவு அகலம் இருக்கப்பெற்றவர்  நல்ல ஞானியாக இருப்பார்கள்2] நெற்றி மூன்றுவிரல் அகலம் இருக்கப்பெற்றவர் நல்லஞானமும் செல்வமும் அமையப்பெற்றவர் ஆவர்.3] நெற்றியில் இரண்டுவிரல் அகலம் இருக்கப்பெற்றவர் மிகுந்த செல்வம் உடையவர் ஆவர்.4] நெற்றியில் ஒருவிரல் அகலம் மட்டுமே இருக்கப்பெற்ற நபர் மிகுந்த மூடத்தன்மை உடையவர் ஆக இருப்பார்கள்

           நெற்றியில் இருக்கும் சுழியின் லக்ஷ்ணம்

1] நடு நெற்றியில் ஒருசுழி வலம்புரியாக இருக்கப்பெற்றவர் செல்வநிலை உடையவர்.

2]நடு நெற்றியில் ஒருசுழி இடம்புரியாக இருக்கப்பெற்றவர்
சதா எந்நாளும் வறுமைப்பிடியில் வாழ்வார்கள்.

3] முன்நெற்றியில் இடமாக ஒருசுழி இருக்கப்பெற்றவர் விரைவில் தாய்தந்தை இழக்கும் நிலையில் ஏற்ப்படுத்தும்.

4] முன்நெற்றியில் இருசுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவர் காமவெறியால் தவறு செய்வதும் பாவசெயல்களை செய்வராகவும் இருப்பார்கள்.


5] நெற்றியிலும் அதிகமான மயிர் மிகுந்து இருப்பவர்கள் அதிகமான கபட நாடகதாரியாக இருப்பார்கள்.. 


 இன்னமும் சாமுத்திரிகா லக்ஷ்ணம் தொடரும் 

No comments:

Post a Comment