Monday, 24 February 2014

விதவை யோகமா செவ்வாய் தோஷத்தால் ?


செவ்வாய்க்கு -அங்காரகன் - ஆரன் -வக்கிரன் - மஹீஜன் - ருத்ரன் - குரூரதிருக் - எனும் மாற்று பெயருண்டு

பொதுவாக செவ்வாய் தோஷம் திருமண பெண் என்றால் யாரும் சில நொடி யோசித்து தான் பேசுவது உண்டு 

பலரால் பலவாறாக சொல்லப்பட்டு வந்த “செவ்வாய் தோஷத்தை” இன்று நாமும் சற்று ஆராய்வோம்

சூர்ய குடும்பத்தில் நான்காவது “பெரிய கிரஹம் செவ்வாய் ஆகும்” பூமியில் இருந்து சுமார் 230 பில்லியனுக்கும் அதிக தூரத்தில்  “வான்மண்டலத்தில்” தனக்கென ஒரு வட்டம் இட்டு “கம்பீரமாக” சுற்றி வருவது செவ்வாய். வீரம் மிக்க விளையாட்டு, காவல்துறை.ராணுவம் போன்றதுக்கு சொந்தக்காரன் செவ்வாய். ஆங்கிலத்தில் “மார்ஸ்” என சொல்வதால் தான் இன்னமும் ராணுவம் போலீஸ் துறை அணிவகுப்பை அப்படியே சொல்லி வருகிறது 

பொதுவாக “செவ்வாய் தோஷத்தை” கணிக்கிட 2,4,7,8,12 ஆம் இடங்களில் இருக்க அது “செவ்வாய் தோஷம்” என கணக்கிடப்பட்டு வந்துள்ளது!!ஆனால் இந்த இடங்களில் இல்லாமல் இருந்தாலும் “செவ்வாய் தோஷம்” தருவது எப்படி என்பதே நமது ஆய்வு 

செவ்வாய் உஜ்ஜயினி தேசத்தில் ஜெனனித்ததாய் புராண கதை உள்ளது,

உடலில் இரத்ததின் காரகனாய் இருந்து மனிதனை ஆட்டுவிக்கும் செவ்வாயை பெண்களுக்கு  விஷயத்தில் தான் அதிகம் பாதிப்பை தருகிறார் என்பதே மறுக்க முடியாத உண்மை,

1 - இரண்டாம் இடம் எனும் வாக்கு [கடும்சொல்] குடும்பம் ஸ்தனத்தில் இருப்பதால் கோபமான கடும் சொல்லுக்கும் சொந்தக்காரானாக்கி “ஜாதகி” பகை தேட வைக்கிறது, விட்டுக்கொடுத்து போகும் கணவன் வாய்த்தால் பரவாயில்லை .11 ல் அமைய பெற்ற செவ்வாய் 2ம் இடத்தில்  பாதிப்பை தருவது பற்றி 11 ம் பாவம் எனும் கட்டுரை விரைவில் வரும்,

2 - சுகஸ்தானம் எனும் படுக்கை விஷயத்தின் ரகசியம் உள்ள இடம் ஆகும் அங்கு “செவ்வாய்” இருந்தால் ? பெண்ணுக்கு அதில் வேகம் அதிகமாய் தான் இருக்கும் அதற்க்கேப்ப “வாழ்க்கை துணை” அமையாவிட்டால் ? “ஜாதகி” தவறிலைக்க வாய்ப்பாய் போகும் என்பதால் செவ்வாய் தோஷம் இங்கு நன்கு ஆராய வேண்டும், லக்னத்தில் இருக்கும் செவ்வாய் இந்த சுகஸ்தானத்தை பாதிப்பது பற்றி “லக்ன செவ்வாய்” கட்டுரை விரைவில் வரும்,

3 - ஏழாம் இடம் இது “காமத்தை தேடும் இடம்” இதில் இருக்கும் செவ்வாய் மட்டும் அல்ல நான்கில் அமைந்த செவ்வாயில் “சூட்சுமம்” இங்கே பாதிப்பை தரும் . இருவருடைய ரத்தமும் சீராக உடலை “இயக்க” வைக்க பிரச்னை இல்லை ,இல்லை எனில் “கும்பத்தில் தேவையற்ற” முறைகேடான “உறவை” ஏற்ப்படுத்தி விடும் என்பதால் தோஷத்தை கணக்கிடல் வேண்டும்  லக்னத்தில் இருக்கும் செவ்வாய் இந்த களத்திர ஸ்தானத்தை பாதிப்பது பற்றி “லக்ன செவ்வாய்” கட்டுரை விரைவில் வரும்,

4 - எட்டாம் இடம் இருக்கும் செவ்வாய் உயிர் ஸ்தானத்தில் “மறைவிடத்தில்” அமைய பெரும்போது அவர்களின் மறைமுக ஆர்வம் கண்டும் எட்டில் இருக்கும் செவ்வாய் இரண்டாம் இடத்தை கவனிக்க ”வாக்கு” & “குடும்பஸ்தானமும்” பாதிப்பை தருவது “பெண்களுக்கே” அதிக பாதிப்பு .இந்த எட்டாம் இடத்து செவ்வாயால் பல பெண்கள் “மாதவிலக்கு” பிரச்னையை ஏற்ப்படுத்தி தருவதில் “செவ்வாய்க்கு நிகர் செவ்வாயே” 

5 - பண்ணிரண்டாம் இடம் “சயன” “போக” சுகத்தை தருவதற்க்கு 12 இருந்து மறைந்து “ஏழாம் இடத்தை” தனது 210 பாகை வீச்சால்  “காமத்தை வாழ்க்கை துணையிடம் தேடி செல்லும்” யுக்தியை உந்து சக்தியை மறைந்தே தருவார் செவ்வாய். 

6 - செவ்வாய் தோசத்தை “பரிகாரம்”செய்து கழித்து திருமணம் செய்வித்தாலும் “செவ்வாய்” சரியில்லாத திசா புக்தி வரும் காலத்தில் கணவனை இழக்கவும் , பிரியவும் , குடும்பத்தை விட்டு விலகி செல்லவும்  வைத்து விடுகிறது, 

7 - இந்த செவ்வாய் தோசத்திற்க்கு “செவ்வாய் தோசமே” இணைக்க பட வேண்டும் என்றும் இல்லை எனில் “தம்பதி மரணம்” என சொல்வதும் ஏற்ப்புடையது அல்ல!! அதே நேரம் “செவ்வாய் தோசத்தால்” ஊனப்பட்ட குழந்தைகளை பெற்று எடுப்பார்கள் [ ஒருவருக்கு வெள்ளை அணு ஒருவருக்கு சிகப்பணு ] என்பதால் தான் “செவ்வாய் தோசத்தை எம்போன்ற ஜோதிடரால் இன்னமும் ஆராயப்படுகிறது” 

8- தற்க்காலத்தில் “ஸ்கேன்” இருந்து குறைபட்ட குழந்தை பேறு தடுத்தாலும் ,ஒருவருக்கு வெள்ளை அணு ஒருவருக்கு சிகப்பணு இருந்து [ஒருவருக்கு செவ்வாய் மற்றவருக்கு இல்லாமல் ] அடிக்கடி “கருக்கலைப்பு” பெண்ணுக்கு உடல் பிணியை ரகசியமாய் தருவதில் கெட்டிக்காரன் “செவ்வாய்” அதனால் முரிந்தளவுக்கு “செவ்வாய்” தோசத்தை கவனிக்க வேண்டும், 

9- செவ்வாய் தோசத்தை பற்றி சொல்ல வேண்டும் எனில் “ஒரு நூலகம்” அளவுக்கு எழுதலாம், இருந்தும் சில குறிப்பு “செவ்வாயை” இருக்கும் இடத்தை வைத்து கணக்கிடுவதை விட பார்க்கும் பார்வையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்பதே இப்பதிவின் “நோக்கம்” ஆகும், 2 ல் இருந்தால் மட்டும் தோசம் அல்ல, 8 மற்றும் 11 ல் இருந்து தன் வீச்சத்தை 210பாகையிலும் 90 பாகையிலும் செலுத்தினாலும் அது 

இதுவும் “செவ்வாய்”தோசமே!

10- எட்டாம் இடம் பண்ணிரண்டாம் இடத்தில் நின்றால் மட்டும் தோசம் அல்ல!! 5 ல் இருந்து 8 யையும் 12 யையும் தன் 90 பாகை மற்றும் 180 பாகையில் தன் “வீச்சத்தை” செலுத்தினால் [ 5 ல் செவ்வாய் புத்ர தோசம் தருவது பற்றி ஐந்தாம் பாவத்தை பற்றி ஆராயும் போது கவனிப்போம்] ஆக ஐந்தில் நிற்க்கும் “செவ்வாயால்” 

இதுவும் “செவ்வாய்”தோசமே!

11 - நான்காம் இடம், ஏழாம் இடம், எட்டாம் இடம் நின்றால் மட்டும் “செவ்வாய் தோசம்” என்பதல்ல . லக்னபாவத்தில் நின்ற “செவ்வாய்”தன் “வீச்சத்தை” 4 ம்மிடத்தில் 90 பாகையிலும், 7 ம் இடத்தை 180 பாகையிலும், 8 ம் இடத்தை 210 பாகையிலும் “வீச்சத்தால்”பாதிப்படைய செய்கிறார் என்பது மிக மிக மறுக்க முடியாத உண்மை ,ஆக “லக்னத்தில் அமைந்த செவ்வாயாலும்” பாதிப்பு உண்டு!! லக்ன தோசம் பற்றி “லக்ன பாவத்தில்”கவனிப்போம், 

இதுவும் “செவ்வாய்”தோசமே!

மிக மிக முக்கிய குறிப்பு இதை “ஜோதிடர்” அல்லாதவரும் படிக்க நேரிடலாம். அப்படி படிப்பவர்கள் “தன் ஜாதகம் & மனைவி ஜாதகம்” கொண்டு ஆராயாதீர்கள்,அப்படி “ஒரு பத்திரிக்கை செய்தியை” படித்த கணவன் ஒருவன் தன் மனைவி மேல் “சந்தேகம்” கொண்டு அதனால் “மனைவி” தற்கொலை செய்து கொண்டாள், கணவன் இப்போ “நடுரோட்டில்” அந்தளவுக்கு “கலகக்காரன்” நமது “செவ்வாய்” 

என்றும் ஜோதிட பணியில்!!

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,பெருந்துறை.


Sunday, 23 February 2014

உங்க ஜாதகத்தில் “பத்தில்” என்ன இருக்கு ?

ஸூரியன் பத்தில் நிற்க தந்தை தேடிய சொத்துக்கள் அடைபவனாகவும் மன்னர் சேவை [அரசு வேலை] உடையவனாகவும் எடுத்த கார்யம் முடிப்பவனாகவும் நுட்பமாய் வெற்றியடைபவனாகவும் இருப்பான் .ஆனால் இவர் தந்தை “பாவத்தை செய்து சொத்து சேர்த்தவராக இருப்பார்”


ஸந்திரன் பத்தில் இருக்க சிறந்த வீடு உயர்ந்த வாழ்வு தீயசெயலுக்கு செல்லாமல் கபநோய் கொண்டவராகவும் .கதை காவியம் கவிதையில் புலமையில் ஈடுபாடு கொண்டவராகவும், மாதுர்வழி கர்மம் உடையவராகவும் “நற்க்குலத்தில் பிறந்தவராகவும் இருப்பார்”


செவ்வாய் பத்தில் அமைய ஜாதகர் அழகன் , எதிரியை வெல்பவர்,சாமார்த்திய சாலி, உலகப்பற்றுதல் நீக்கி “யாகம் யக்ஞம் ஹோமம்”முதலியவற்றை செய்து தெய்வ குற்றம் பெற்று நெருப்பாலும் ஆயுததாலும் பாதிப்பை அடைபவனாகவும் இருப்பார்


புதன் பத்தில் அமைய பெற்றவர் வித்தை மதி நுட்பம் தர்ம சிந்தனை நல்லொழுக்கம் பொறியியல் தொழில் நுட்பம் ஆகிய பலன்களை அடைபவராக இருப்பார்


குரு பத்தில் நிற்க ஆபரண சேர்க்கை பிரியன் நாற்கால் ஜீவனராசிகள் அதிகம் பெற்றவர் அதிக சுகமும் உள்ளத்தில் அன்பு நிறைந்தவராகவும் கணித நூலில் வல்லவனாகவும் இருப்பார்


சுக்கிரன் பத்தில் இருக்க ஜாதகர் ஆட்சியாளரக்கு சமமான வாழ்வும் நினைத்த கார்யத்தை “சூட்சுமத்தால் வெல்பவராகவும்” சகல செளபாக்கியம் அடைந்தவராகவும் சிவனின் அருளுக்கு பாத்திரமானவராகவும் இருப்பார்`


சனி பத்தில் அமைய பெற்றவர் பிறருடைய ஆதரவுடன் தொழில் அமைப்பவராகவும் “தீயோர் சேர்க்கையால் அவதி” அடைபவராகவும் அடிக்கடி தொழில் முடக்கம் அடைபவராகவும் “கால் முடக்கம்” அடைபவராகவும் இருப்பார்

இவைகள் அனைத்தும் கிரஹங்களின் பாதசாரம் சேர்க்கை பார்வைக்கு ஏற்ப்ப மாறுபாடு சிலவற்றில் வரும் அனைத்து “ஜாதகத்திற்கும்”இது பொருந்தாது என்பதை கவனத்தில் எடுத்து கொள்ளவும்
என்றும் ஜோதிட பணியில் 

பெருந்துறை ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் 

வெட்டுப்பட்டு இறக்கும் நிலை

 “அரவுசுன் சேயிந்த மூவர் ஒன்றாய்ப் பவர் அங்கிசத்தேவரவினுமே புகர் எட்டோனைக் கூடி மருவுகினும்இரவிதனத்தினும் சேய்மதி ஈரைந்து இருப்பினும் தான் கரவினில் வெட்டுண்டு அவன் உயிர் மாயும் என் காதலியே”

என சொல்லி இருப்பது “யவன காவியம்” 

ராகு-சனி-செவ்வாய் மூவரும் கூடி பாவகிரஹ நவாம்சத்தில் இருக்க “சுக்கிரன்” எட்டுக்குடையவனை கூடி இருந்தாலும் இரண்டாம் இடத்தில் “சூரியன்” பத்தில் “சந்திரன்” செவ்வாய் இருந்தாலும் அந்த ஜாதகன் கள்ள உறவு மற்றும் “திருட்டு” சம்பந்தமான பிரட்சனையால் உடலில் வெட்டு பட்டு இறப்பான் என்பதே பாடலின் பொருள் 

சாமுத்திரிகா லஷ்ணம் தலையில் “மூன்று சுழியம்” இருப்பவனுக்கும் இதே நிலைமை தான் என சொல்லி இருக்கிறது!!
என்றும் ஜோதிட பணியில் 
பெருந்துறை ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் 

Monday, 10 February 2014

“சகட யோகம்” யோகம் தருமா?

 தேவகுரு வியாழன் நின்ற ராசிக்கு 6,8,12 -ல் சந்திரன் நிற்க அது சகடயோகம். 

சகடம் என்பது சக்கரம் ஆகும். சக்கரம் போல் நிலையில்லாத ஏற்ற தாழ்வு ஏற்ப்படுத்தும் ,படிபடியாக உயர்ந்து “திடீர் வீழ்ச்சியை” சந்திக்கும் சகடயோக ஜாதகர்ளுக்கு வாடிக்கையே!!

சகட யோக ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் ஆட்சியிலும், ரிஷபத்தில் உச்சத்திலும், குருவின் வீடான தனுசு, மீனத்திலும் இருக்க பெற்ற ஜாதகர்களுக்கு தீமைகள் விலகி “நன்மைகள்” ஏற்ப்படும், 

 “நறுமணம் தனுமீன் கன்னி நண்டுடன் எருது தண்டு, திறமுடன் சசியே நிற்கில் தீர்க்கமாம் சகடபின்னம்”

பொருள்:- சந்திரன் தனுசு.மீனம். கன்னி. கடகம். ரிஷபம்.மிதுனம். ஆகிய ராசிகளில் இருந்து “சகட யோகமாயின்” தீமைகள்  குறைந்து நன்மைகள் ஏற்றப்படும் என்பதே பாடலின் பொருள், 

ஜோதிடம் என்றால் என்ன?

வேதங்கள் நான்கு வகைப்படும் அவை:- ரிக் ,யஜுர்,சாம, அதர்வண வேதங்கள்!!

1} ரிக் வேதம்:- இது உலக சிருஷ்டி முதல் மனித இயல்பு வரை உள்ள எல்லா ரகசியங்களையும் விளக்கமாகவும் ,உதாரணங்களுடனும் ,சீக்கிரம் புரிந்து கொள்ளும் விதமும் ஸ்படமாக எடுத்துரைக்கிறது!!

2} யஜுர் வேதம்:- மனிதன் தன் திருப்திக்காகவும், வாழ்வியலின் தர்மத்தை கடைபிடிக்கவும் உபயோகமான வழியில் தன் நித்திய  கர்மாக்களையும் , ஸரெளத, ஸ்மார்த்த அனுஷ்டானங்களையும் அவைகளை செய்யும் முறையும் எடுத்துரைக்கிறது!!

3 } சாம வேதம்:- பக்தி மற்றும் சங்கீதமயம் ஆனது!!இதிலும் அதிகமாக ரிக்வேதத்தின் அடிப்படையிலேயே கையாளப்படுகிறது!!ஸ்வரம் தான் இதன் பிரதானம்.இது பெரும்பாலும் பிராத்தனை ரூபத்தில் உள்ளது!!

4 } அதர்வண வேதம்:- சர்வ கஷ்ட நிவாரண ,தோஷ பரிஹார மந்திரங்களை உள்ளடங்கியது!!

ஒவ்வொரு வேதத்திலும் ஸம்ஹிதை, சாகை, ஆரண்யம், பிராமணம் மற்றும் உபநிஷத் அடங்கியது!!

ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு காண்டமும் ஒவ்வொரு ரிஷிகளும் எடுத்துரைப்பதால் நித்திய பாரணத்திலும் ஒவ்வொரு காண்டத்திலும் & மந்திரத்திலும் ஒருரிஷியை குறிப்பிட்டுள்ளார்கள்

மேலை நாட்டை சேர்ந்த இந்தியன் தன் நவீன ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் காரணமாய் நமது “வேதம் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது என்பதை ஆங்கிலேயனும் ஒப்புக்கொள்கிறான். அதில் நாம் ஜீவித்திருக்கும் இந்த யுகத்தை “கலியுகம்” என்று பெயர், 

இந்த வேதத்திற்க்கு ஆறு உறுப்புகள் உள்ளது!! அவைகள்:-

1} சிஷை : [படிப்பியல் ] இதில் வேதம், வேதாங்கம், சாஸ்த்திரம்,விஞ்ஞானம், தர்க்கம்,மீமாம்சை.அரசியல், மனுநீதி போன்றது அடக்கம்!!

2 } கல்பம்: இது மந்திரபிரயோகம் ஆகும். 

3 } நிருக்தம்: இது [பலபாஷையை அறிவது] மொழியியல் ஆகும் 

4 } வியாகரணம்:- இது இலக்கண முறையை சார்ந்தது ஆகும் 

5 } சந்தஸ்: அலங்காரம் [ பாஷையின் நடை] நாட்டியம் போன்றது ஆகும்!!

6 } ஜோதிஷம்: [ஜோதிடம்] விண்வெளியில் ஆய்வை அறிவது ஆகும்!!!

 “சப்த சாஸ்திரம் முகம், ஜ்யோதிஷம் சஷுஷி சீரோத்ர முக்தம் நிருக்தம்.கல்பஹகரெள, யாதுரஸ்ய வேதஸ்ய, ஸாநாஸிகா, பாதபத்ம  த்வ்யச்சந்த ஆத்யெள புதைஹி” என 1200 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதமேதை “பாஸ்கராசார்யான்” குறிப்பிட்டு உள்ளார்,  அதன் பொருள்:--

வேத புருஷனின் முகம் இலக்கணம், கண்கள் “ஜோதிஷம்”, செவிகள் நிருக்தம், கைகள் கல்பம், சிட்சை [படிப்பு] அவனது மூக்கு, சந்தஸ் அவன் இரண்டு கால்கள் [பாதம்] ஆகும், மனிதனுக்கு கண்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தூரம் “ஜோதிஷம்” முக்கியம், “ஜோதிஷம்” எவ்வளவு அவசியம் ஆனது என்பதை எடுதுரைக்கிறது!!

வேதத்தின் கண்கள் ஆன “ஜோதிஷ” சாஸ்த்திரம் ஆனது அண்டத்தில் [ விண்வெளி-space] மற்றும் அதன் பிரகாசம் [light] இவற்றின் ரசகியத்தை எடுத்துரைப்பது ஆகும்!!

சூரியனை சுற்றி இருக்கும் கிரஹங்கள் மற்றும் நட்சத்திர மண்டலங்களும் மனிதனுக்கு “தனிப்பட்ட வாழ்வியலினின் மாறுதலை நுணுக்கங்களை கண்டு எடுத்துரைப்பதே “ஜோதிஷம்” ஆகும்!!

இது நம்முனோர்கள் கண்ணை மூடி தவம் புரிந்து தன் “யோக திருஷ்டியால்” பெற்று அதை நமக்கு எழுதிவைத்து விட்டு போன பொக்கிஷம் என்றால் மிகையல்ல!!