Thursday, 31 October 2013

பெயர் நாம நட்சத்திரமும் & எண்கணிதமும்

ஜோதிடப்படி நட்சத்திர அடிப்படையும் உடன் எண்கணிதமும் இணைத்து பார்த்து உடன் பிரமீடு சோதனையும் செய்து தான் நிறுவனத்துக்கும் இல்லத்துக்கும் பிறந்த குழந்தைக்கும் பெயர் சூட்டணும் அதே போல் சுய பரிசோதனையும் ஆகாது பக்கத்தில் இருக்கும் ஜோதிடரை அணுகவும் 

அது தான் பின்னிட்டு பெயர் மாற்றம் செய்யாமல் வைக்கும் பெயரே நிலைத்து இருக்கும்  படி முன்னரே நாம் திட்டமிடல் வேண்டும்

உதாரணத்திற்க்கு இணைப்பை காண்க

Wednesday, 30 October 2013

ஜோதிடத்தின் ஆதிமூலம் நான்கு வேதங்களே

1, ரிக்வேதம் 
2, யஜூர்வேதம். 
3, சாமவேதம். 
4அதர்வண வேதம். இதை உள்ளடங்கி செல்வது என்ன ? 
மனிதனுக்கு உடல் உறுப்பு போல வேத்திற்க்கும் ஆறு உறுப்பு உள்ளது! அவை என்ன? 
1, சிட்சை:-இது வேதம்,வேதாங்கம், தர்க்கம், மீமாம்சை,அரசியல், மனுநீதி முதலியது இதில் 
அடக்கம் [ படிப்பியல்] 

2, கல்பம்:- மந்திரப்பிரயோகம், மருத்துவம் சார்ந்தது ஆகும். 

3,நிருக்தம்:- இது மொழியியல் ஆகும் பேசும் பாஸை பயிலும் மொழி முதலியது, 

4, வியாகரணம்:- இது இலக்கண முறை தமிழ், ஆங்கிலம் B.A.LIT போன்றது, 

5, சந்தஸ்:- இது நாட்டியம் ,நாடகம் , நடிப்பு பயிற்சி, 
[ பாஸையின் நடை ] போன்றது! 

6, ஜோதிஷம்:- [ கண்கள்] 1200 ஆண்டுக்கு முன்பு இதைபற்றி பாஸ்கராச்சாரியார்,சாஸ்த்திரத்தின் ”சப்த சாஸ்த்திரம் முகம், ஜ்யோதிஷம் சஷுஷி, சீரோத்ர முக்தம், நிருக்தம்,,கல்பஹகரெள, யாதுராஸ்யவேதஸ்ய,ஸாநாஸிகா, பாதபத்ம த்வ்யச்சந்த ஆத்யெளபுதைஹி” என்றார். 
அதன் பொருள்;- வேதம் புருஷனின் முகம், இலக்கணம், கண்கள் ஜோதிஷம் [ ஓளி] , செவிகள் நிருத்தம், கைகள் கல்பம் , சிட்சை:-[படிப்பு] அவனது மூக்கு, மற்றும் சந்தஸ் அதின் பாதம் ஆகும், ஆக மனிதனுக்கு கண்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் வேதத்திற்க்கு கண்கள் ஜோதிடம் அவ்வளவு முக்கியம், அதை சற்று திறம் பட படித்து ஜோதிடம் பார்ப்பவர்கள் தான் காலம் கடந்தும் பேசப்படுவார்கள், 
இதை படிக்கும் ஜோதிடம் பயிலும் நண்பர்கள் தேர்ந்த ஆசான் கொண்டு படிப்பதும் பின் ஜோதித்தின் மூலம் புகழ் அடைவது நல்லது! எதேனும் ஒரு கலைமன்றம் “ ஜோதிஸ்சிரோன்மணி” ஜோதிடரத்னா- ஜோதிடகலாமணி -என பட்டம் பணம் கொடுத்து வாங்குவதை விட மக்கள் ”இவர் மிக நல்ல ஜோதிடர்” என புகழ் தருவதே சிறந்தது, 

8 ஆண்டு முன் எனக்கும் தன் சபாமூலம் சென்னையில் பட்டம் தருகிறேன் எனவும் அதற்க்கு கலைமன்ற நன்கொடையாக பணமும் கேட்டனர் ,” நான்.எனக்கு அது தேவை இல்லை என சொல்லி விட்டேன்.” 
பட்டயத்தால் அதை ஆபீஸ்ல மாட்ட்டுவதால் ஒரு ஜோதிடன் புகழ் ஓங்காது! படிக்கணும்! படிக்கணும்! படிக்கணும்! படிக்கணும்! ”ஜோதிடத்தை சாக மட்டும் ”படிக்கணும்!

லக்னகணிதம் சுலபமாக பழக சிறுகணக்கு

பொதுவாக லக்னம் கணிக்க இப்போது ஜோதிடம் கற்பவர்களுக்கு நாழிகை அளவீடு செய்ய தடுமாற்றம் கொள்கிறார்கள், அது மிகவும் சுலபமானதே! 
அது எப்படி எனில் உதாரணமாக ஒருகுழந்தை மதுரையில் இரவு 9 மணி 55 நிமிஷத்திற்க்கு பிறக்கிறது எனவைத்து கொண்டு கணிக்கிடுவோம், நல்லிரவு முதல் ரயில்வே மணிப்படிகணிக்கிட இரவு 9.55 p.m. ஆனது சரியான மணி 21 மணி 55 நிமிஷம் ஆகிறது, அதில்உதாரணமாக மதுரையில் சூர்ய உதயம் காலை 6 மணி 09 நிமிஷம் அதை கழியுங்கள் .விடை மீதி 15 மணி 44 நிமிஷம் வரும், சரியா? அதில் 15 மணியை நிமிஷமாக்கவும் கால்குலேட்டரில் 15x60 = 900 விடை அத்துடன் மீதி 44 நிமிஷத்தை கூட்டிக்கொள்ளவும் விடை900+44= 944 அதை கால்குலேட்டரில் ஒருநாழிகை என்பது 24 நிமிஷம் அல்லவா? அதனால் 24 ல் வகுத்து பாருங்கள் விடை என்ன வரும் ? 39.33 அல்லவா? இப்போது முன்புறம் இருக்கும் 39 என்பது நாழிகை பின்புறமாக இருப்பது 33 சதம் அதை 60 விநாழிகை கொண்டது 1 நாழிகை என்பதால் 33 சதம் என்பது 20 விநாழிகை ஆக்கி கொள்ளவும் . இப்போது அந்த குழந்தை பிறந்தது சூர்ய உதயாதி தொடங்கி 39 நாழிகை 20விநாழிகையில் குழந்தை சுபஜெனனம் என்பதே சரியான நாழிகை கணிக்கீடு ஆகும்,சூர்ய உதயம் வரை சென்ற மணிதுளிகளை நாம் 00.00 மணி முதல் கணக்கிட்டு பின்னர் குழந்தை  பிறந்த நேரம் வரை கணக்கிட்டு மணிகளை நிமிஷங்களாக்கி மீதி நிமிஷத்துடன் கூட்டி அதை வகுத்தல் 24 ல் செய்து பார்க்க முன்னிட்டு வருவது நாழிகை பின்னிட்டு வருவது விடையை 100 யை 60 ல் வகுத்து வருவது போல கணக்கிடவும் 10 எனில் 6 விநாழிகை எனில் 33 எனில் 20 விநாழிகை 66 எனில் 40 விநாழிகை எனும் முறையில் கணக்கிடலாம்

ஜோதிடத்தில் எண்களின் ஆதிக்கம்

ஜோதிடத்தில் எண்கள் ஆதிக்கம் மிகவும் இன்றியமையாதது! 

நவகிரஹம் மட்டும் மனிதகுலத்தை ஆட்டுவிக்கவில்லை! நவகிரஹங்களின் எண்களும் மனிதகுலத்தை ஆட்டுவிக்கிறது!

சிலர் தனது பெயரை மாற்றம் செய்து வெற்றிகண்டவரும் உண்டு!

அதேநேரம் சிலர் தனது நிறுவனத்தை பெயர் மாற்றம் செய்து தொழிலையே தொலைத்து போனவர்களும் உண்டு!

ஆகையால் ஒருகுழந்தைக்கு பெயர்வைக்கவும்!                                                        [  நட்சத்திரம் அடிப்படை மற்றும் எண்கணிதம் & பிரமீடு ஆகிய சோதனைக்கு உட்படுத்தி தான் [ name ] பெயரை பார்க்கணும் ]                   தவிர  இச்சோதனையை கவனித்து செய்ய தக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை பெற்றே செய்ய வேண்டும், தவிர சுயபரிசோதனையை நானும் கணிதநிபுணன் என தனக்கு தானே சோதித்துக்கொள்ள கூடாது!அதனால் பதிப்பு சம்பந்தப் பட்டவருக்கு தான் எனபதை மனதில் கொள்ளவும் 
                                            

Monday, 28 October 2013

மாந்தியும் சனியும்

மாந்தியிடம் முதலில் அறிமுகம் ஆகி கொள்வோம்! 

மாந்தியை சனியின் மகனாக குறிப்பிட்டு உள்ளனர்,சனிதான் வலிமை குன்றிய கிரஹம் ஆனால் சனியை கண்டு நடுங்காதவர்கள் இல்லை எனலாம், இலங்கை அதிபன் ராவணன் முதல் நளமஹராஜா வரை சனியின் உபத்திரவத்துக்கு ஆட்பட்டவர்எத்தனைபேர்?

சனியின் பார்வை மிக கொடிது! இராவணன் நவக்கிரஹங்களை குப்புற கவிழ்த்து அரியணை ஏறியபோது . நம்ம நாரதமுனிவர் “ முதுகில் ஏறுவது வீரனுக்கு அழகில்லை, அதனால் மார்பில் ஏறி நட” என சொல்லி உசுப்பேற்றி நவக்கிரஹங்களை மல்லாக்க போட்டு ஏறி நடந்தான் இராவணன். சூரியன்,சந்திரன்.செவ்வாய்.புதன்,குரு,சுக்கிரன் மீது கால் வைக்க எதுவும் ஆகவில்லை,ஆனால் சனிபகவானின் மீது கால் வைக்கும்போது சனியின் பார்வை பட்ட்து, அதனால் வலிமை குன்றினான் இராவணன். பின்னாளில் ராமனிடம் தோற்றான்.

இப்படிபட்ட சனி இராவணன் மிகவலுவாக இருந்த நேரத்தில் அவனுக்கு பிறக்கும் குழந்தை இந்திரஜித்தால் உலகம் அழிவைத்தேடும் அனைவரும் அழிவர் என அதைதடுக்கும் பொருட்டு சிறையில் நவக்கிரஹங்கள் அடைக்கப்பட்டு இருந்தநேரத்தில் சனிபகவான் தன் உடலில் உள்ள அழுக்கை எல்லாம் திரட்டி [குளிகை] வெளியே போட அது இந்திரஜித் ஜாதகத்தில் லக்னத்தில் விழுந்தது, அதனால் இந்திரஜித் தலை சிதறி இறந்து போனான், இந்தமாந்தி எங்கு நிற்க்கிறதோ[ ஜெனன ஜாதகத்தில் ] அந்த இடம் காராகோபவ நாஸ்தி என பொருள் கொள்க! அழிவிற்காக தோற்று விக்கப்பட்ட்து மாந்தி அதனால் மாந்தியால் நற்பலன் ஏற்பட வாய்ப்பு இல்லை, 

குருவிற்க்கும் சனிக்கும் நாரதர் சண்டை ஏற்படுத்தி அதில் கீழே சனிபகவான் விழுந்ததால் ஏற்ப்பட்ட ரத்தத்தில் உருவானவன் மாந்தி எனவும் புராணகதை உண்டு!

கூண்டோடு மரணம் அமைவது கூட இந்த மாந்தியால் தான் [ சுனாமி& பூகம்பம் போன்றது ] விபத்தில் இப்படி மரணம் அடைந்தால் அந்த ஆவி 60 வயது வரை அலைந்து பின் மோர்சம் அடையும் என முனிவர்கள் சொல்லியுள்ளனர். விபத்தால் இறப்பவர்கள் ஒருசிலரின் ஜாதக அமைப்பு பலரை உடன் அழைத்து செல்கின்றனர். 

அதை பற்றி சர்வார்த்த சிந்தாமணி ஜோதிட நூலில் விளக்கம் உள்ளது!

இதர கிரஹங்களுக்கு இஷ்ட்தெய்வம் உள்ளது போல மாந்திக்கும் இஷ்டதெய்வம் துர் ஆவிகள் என முன்னோர்களால் குறிப்பிடபட்டுள்ளது! 


சூரியனுக்கும் சனிக்கும் இடைப்பட்ட தூரம் 148.8 கோடி கிலோ மீட்டர் ஆகு
ம். 

சனி சூரியனை சுற்றி வர எடுத்து கொள்ளும் கால அளவு 29 ½ ஆண்டுகள் ஆகும். சனி பூமியை விட 700 மடங்கு பெரியதாக இருந்தாலும் கனத்தில் 100 மடங்கு தான் உள்ளது. சனிகிரஹத்தை அம்மோனியா, மீதேன். ஹைட்ரஜன் ஆகியவை சூழ்துந்துள்ளது! கருநீலமான சனியை சுற்றி 9 உபகிரஹங்கள் உள்ளது! அதில் 8 கிரஹங்கள் அப்பிரதட்சிணமாகவும் ஒருகிரஹம் மட்டும் பிரதட்சிணமாகவும் சுற்றிவருகிறது! அந்த கிரஹம் பெயர் டைட்டன் [ titan] எனும் கிரஹம் பெயரிட்டு அழைக்கப்படுகிறது! வ இது மற்ற கிரஹத்தை விட அதிக தூரத்தில் உள்ளது! 7/10/2001 அன்று சனிக்கிரஹணம் ஏற்ப்பட்ட்து. அப்போது சனியின் துணை கிரஹம் ஆன டைட்டனுகும் கிரஹணம் ஏற்பட்ட்து! மாந்தியும் டைட்டனும் ஒன்றா என வரும் காலம் சொல்லும் நண்பர்களே!


திருமண பொருத்ததில் ஜோதிட ஆய்வு

திருமண பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை !
பெண்ணின் நட்சத்திரத்தை கொண்டு மட்டும் பொருத்தம் பார்ப்பதும்
பின்னர்  இருவருக்கும் ஏகதிசை நடந்தால் அதை திசைசந்திப்பு என்று சொல்லி அனுப்புவது நமது ஜோதிடர்களின் பழக்கமாக இருக்கிற்து,
ஆனால் இருவருக்கும் ஏகதிசை நடந்தால் அதை திசைசந்திப்பு என சொல்லி கொடுத்த குருநாதர்களை என்னவென சொல்வது?
திசைமாற்றம் என்பது இருவருக்கும் வேறு வேறுதிசை நடந்தாலும் பெண்ணுக்கோ ஆணுக்கோ முதலில் திசை மாறி [உதாரணம்: பெண்ணுக்கு சனிதிசை 12/04/2021 ல் மாற்றம் அதன்பின் ஆணுக்கு சூர்யதிசை 12/04/2022 க்குள் ]  மாற்றம் வந்தால் மட்டுமே திசை சந்திப்பு என்பர், இதைபற்றி நான் ஏற்கனவே முக நூல்லில் பதிந்து இருக்கிறேன், இதை பற்றி ஏதேனும் சந்தேகம் வந்தால் எம்மை தொடர்பு கொள்ள ஜோதிடரீதியான ஆய்வு கண்டு பலனுரைக்க சித்தமாய் உள்ளேன்,
என்றும் ஜோதிடபணியில்!
பெருந்துறை ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் 

லக்ஷ்மி குபேர பூஜை

லஷ்மிகுபேர பூஜை செய்வது எப்போது?
தீபாவளியன்று லஷ்மிகுபேர பூஜையை நான் வீட்டில் நட்த்த வேண்டும் ,அன்று வீட்டை சுத்தம் செய்து அசைவம் சமைக்காமல் ஆச்சாரம் கடைபிடித்து செய்யவும்,
                              முதலில் ஸங்கல்பம் !
"ம்மோபார்த்த ஸமஸ்த துரிதஷயத்வாரா ஸ்ரீ பரமேச்"வர ப்ரீத்யர்த்தம்,கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்:வர பூஜாம் கரிஷ்யே"
பின் பிராத்தனை!  பின் பூஜாரம்பம்! பின் ப்ராணாயாமம்!
அதன்பின் ஸங்கல்பம் பின் கலச பூஜை! அதன் பின் தான்
ஷோடச [16] மாத்ருகண பூஜை:-
ஓம் கெளர்யை நம: ஓம் ஸ்வதாயை நம:
ஓம் பத்மாயை நம; ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ச"ச்யை நம: ஓம் மாத்ருப்யோ நம:
ஓம் மேதாயை நம: ஓம் லோக மாத்ருப்யோ நம:
ஓம் ஸாவித்ர்ய்யை நம: ஓம் த்ருத்யை நம:
ஓம்  விஜயாயை நம: ஓம்புருட்யை நம:
ஓம் ஐயாயை நம: ஓம் துஷ்ட்யை நம:
ஷோடசமாத்ருப்யோ நம:
என பூஜிக்க வேண்டும் அதை பற்றி "சம்ப்ரதாய விரத பூஜாவிதானம்"
எனும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது,
இப்படி பூஜை நட்த்த வேண்டிய ஐப்பசி அமாவாஸை [ தீபாவளி ] அன்று நமது மக்கள் ஏன் தான் அசைவம் சமைத்து பழகினார்கள்?  என தெரியவில்லை,
லஷ்மிகுபேர பூஜை அன்று [ தீபாவளி] இனிப்பை இறைவனுக்கு படைத்து வழிபாடு செய்வீர்கள் ஆனால் வாழ்க்கையில் பொருளாதாரம் மேன்மைக்கு லஷ்மியும் குபேரனும் இல்லத்தில் என்பதே ஐதீகம் ,
வரும் தலைமுறையில் மாற்றம் அடைய நாமும் கொஞ்சம் பழக்கத்தை மாற்றி கொள்வது நல்லதே!
என்றும் இறைபணியில்
பெருந்துறை ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்
நமக்கு நோயற்ற வாழ்வைத்தரும் மருத்துவக்கடவுள் தன்வந்திரி பகவான் அவதாரதினம் ஆனது ,
வரும் ஐப்பசி மாதம் 15 தேதி [ 1/11/2013] வரும் வெள்ளி கிழமை ஆகும் , அந்தநாளில் மருத்துவ கடவுளை வணங்கி நோயற்ற வாழ்வு அமைய பிராத்தனை செய்யுங்கள் , நண்பர்களே! கிருஷ்ணபட்ஷ மஹாப்ரதோஷம் ஆகும், வேறேன்ன ? அதைவிட சிறந்த வெள்ளிகிழமை அமையுமா?
வழிபாடு செல்ல இன்றே திட்டம் இடுங்க !


Sunday, 27 October 2013

திருமண முறிவு ஏன் ?

அடிக்கடி இப்போது திருமணம் பல மணமுறிவை சந்திக்கிறது!
பெண்களிடம் ஆணுக்கு அடங்கி செல்லும் சுபாவம் இல்லை!
தான் வேலை செய்யும் ஊருக்கு பையன் மாற்றல் வாங்கி வந்தால் திருமணம் என கட்டளை இடும் பெண்களும் அதிகம்,
" அந்த காலத்தில் சீதைக்கு ராமன் இருக்கும் இடம் அயோத்தி" என சொல்லப்பட்டது,ஆனால் இப்போ ?
சரி அதுபோக அப்போது எல்லாம் பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்ப பயப்பட்டனர், ஆனால் இப்போ தன் பெண்பிள்ளை வெளியூரில் வேலை பார்ப்பதை தான் பெருமையாக சொல்லி கொள்கிறார்கள் பெற்றோர் என்ன செய்ய கலிமுத்தி விட்டது,
என்னை பொருத்தவரை பெற்றோர்கள் தன் பிள்ளை [பெண்குழந்தை] கட்டி கொடுத்து கணவன் வீடு செல்லும் வரை வயதுக்கு வந்த பெண்களை எந்த பெற்றோர் தன் கண்காணிப்பில் வளர்த்துகிறார்களோ? அவர்களே தன் பிள்ளையின் நலனும் & பால் அன்புகொண்டோர்,
உதாரணத்திற்க்கு
தர்மபுரியில் இன்று ஒரு பெண் தன் தகப்பன் இறந்த தகவலை சொல்லி "கர்மகார்யம் செய்ய வீட்டுக்கு வா" என அழைத்தும் நீங்கள் என் காதலை பிரிக்க சதி செய்கிறீர்கள் நான் உங்களோடு வரமாட்டேன் காதலனோடு தான் செல்வேன் என்று காப்பகத்தில் இருந்தவள். 6 நாள் கழித்து நீதிமன்ற உத்திரவு செய்து போலீஸ் காவலில் எடுத்து தான் அவளின் தகப்பன் இறந்து போனபின் வீடுவருகிறாள். உண்மையிலே தன் தகப்பன் தான் ஒடிப்போனதை கண்டு தற்கொலை [அவள்தானே கொன்றாள்?] செய்து கொண்டது கண்டு "அய்யோ! தப்பு பண்ணிட்டேன்" என கதறுகிறாள், அவளும் வீட்டை விட்டு மகளீர் காப்பகம் வரமாட்டேன் என போலீஸிடம் கேட்க போலீஸ் நீதிமன்ற உத்திரவு படி " நீ எங்களோடு வா- காப்பகத்தில் விட்டு விடுகிறோம், பின்னர் கோர்ட் மூலம் நீ வீடுவரலாம் என சொல்லி விட்டனர் காவல் அதிகாரிகள், இனி வீடு வந்தால் தான் எப்படி அந்த பெண் தன் அம்மாவோடும் தம்பியோடும் வாழ்க்கை நடத்துவாள். என்னை பொருத்தவரை அந்த பெண்ணை சொல்லி குற்றம் இல்லை, அவளை செல்லம் கொடுத்து வளர்த்த பெற்றோரே இந்நிலைக்கு காரணம், பையனை தட்டி வளர்க்கணும் , பெண்ணை பொத்தி வளர்க்கணும் என சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள்?
இதை எல்லாம் பார்க்கும் போது ஒருபலமொழி ஞாபகம் வருகிறது
"சும்மா கிடந்த சிட்டுக்கு குருவிக்கு சோற்றை போடுவானேன்?
அது கொண்டையை கொண்டையை ஆட்டிகிட்டு கொத்த வருவானேன்? "

Saturday, 26 October 2013

ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி

நமக்கு நோயற்ற வாழ்வைத்தரும் மருத்துவக்கடவுள் தன்வந்திரி பகவான் அவதாரதினம் ஆனது ,
வரும் ஐப்பசி மாதம் 15 தேதி [ 1/11/2013] வரும் வெள்ளி கிழமை ஆகும் , அந்தநாளில் மருத்துவ கடவுளை வணங்கி நோயற்ற வாழ்வு அமைய பிராத்தனை செய்யுங்கள் 

 நண்பர்களே! கிருஷ்ணபட்ஷ மஹாப்ரதோஷம் ஆகும், வேறேன்ன  அதைவிட சிறந்த வெள்ளிகிழமை அமையுமா?
வழிபாடு செல்ல இன்றே திட்டம் இடுங்க !    வாழ்க வளமுடன் 

ஸ்ரீ விநாயகர் துணை