Monday, 27 July 2015

காலசக்ர திசை -1

காலசக்ரம் ஜோதிடத்தில் மிக தொன்மையானது என்பதை சுட்டிக்காடும் பதிவு இது
ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொக்கிஷம்
ஜோதிடம் மஹரிஷி பராசர முனிவரால் மக்களுக்கு வகைப்படுத்தி கொடுக்கப்பட்டது..
பிரபஞ்சம் தோன்றி இரவும் பகலும் மாறி மாறி வந்ததின் விளைவாக சித்தர்கள் பொழுதை உணர்ந்தனர்..
சூர்யனின் ஓட்டத்தை 360 பாகை சுற்றி வருவதை அறிந்தனர்..
அதில் மூன்று பிரித்து ஒவ்வொரு 120 பாகைக்குள் 4 ராசிகளை அதன் தன்மையை [ நெருப்பு நிலம் காற்று நீர் ] என வகைபடுத்தினர்..அவர்கள் சிந்தையில் ஞானத்தால் யோகித்தது அனைத்தும் இன்றைய விஞ்ஞானிகள் ஏற்று கொண்டே தீர வேண்டிய அளவிற்க்கு அன்றே கணித்தனர்..
விஷயத்துக்குள் செல்வோம்..
 “அருக்கன் வீதிஇது முன்னோர்கள் கண்டறிந்தது..இதையே இன்று ஆங்கிலத்தில் Milky way என்றும் தமிழில்பால்வீதிஎன்றும் அழைக்கிறோம்..
அந்த வீதியில் மூன்று பாகங்களை கொண்ட 120 பாகைகளை பாராசர முனிவர் 120 ஆண்டுகள் என ஒரு மனிதனுக்கு கணித்து எடுத்தார்கள்..அதை சந்திரன் ஸ்புடகலை ரீதியாக சுற்றி வரும் கணக்கில் முதல் 13.20 அல்லது 800 கலைகள் கேதுவின் 7 ஆண்டுகள்..
அடுத்த 13.20 அல்லது 800 கலைகள் சுக்கிரனின் 20 ஆண்டுகள்
அடுத்த 13.20 அல்லது 800 கலைகள் சூர்யனின் 6 ஆண்டுகள் என முதல் 120 ஆண்டினை கணக்கிட்டு 9 நடசத்திரங்களை கொண்டு 120 ஆண்டுகள் பூர்த்தி செய்து   அடுத்தடுத்த மறு இரு சுற்றும் அதேபோல கணக்கிட்டார் .. ஆக 360 பாகைக்கு சரியான விகிதாசாரத்தை கொண்டே அவைகள் நிர்ணயம் செய்யப்பட்டது
இதை விம்சோத்ரி திசை எனும் மஹாதிசை எனும் நட்சத்திர அடிப்படையானது.. இதுவரை அப்படி தான் இனி நாளைக்கு யாரேனும்நவீன பராசரர்கள்வந்து மாற்றுவார்களா என்பது எனக்கு தெரியாது..
பராசரரால் வகைப்படுத்திய இக்கணிதமே உலக அளவில் தற்போது நடைமுறையில் இருக்கிறது..ஜோதிடம் அறிந்த அனைவரும் ஒப்புக்கொள்ளும் விஷயம் தான் இது..
சென்ற நூற்றாண்டில் இதில் அதிமதி நுட்பமாக காலம்சென்ற கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 120 பாகைக்கு 120 ஆண்டாக கணக்கிட்டதை மிக நுட்பமாக ஆய்வுகள் செய்து 13.20 எனும் 800 கலைக்கு [ ஒரு நட்சத்திரம் உள்ளே ] வைத்து செய்த கணக்கு அவருடைய ஆய்வில் மிகச்சரியான பலாபலனை அறிந்தார்..அதில் உருவானது தான்கிருஷ்ணமூர்த்தி பத்ததிஇந்த வகை ஆருடம் என்பதுஜோதிடம் பார்க்க வந்தவர்கள் என்ன குணாதிசயம் வந்தவர் ஜோதிடம் பார்க்க வந்த எண்ணம் ஈடேறுமா??இல்லையா??என்பதை மட்டுமே சொல்கிறதே தவிர இப்போதையகிருஷ்ணமூர்த்தி பத்ததிஎனும் K.P.சிஸ்டத்தில் எந்தவொரு இடத்திலும் பராசரர் வகுத்த திசாபுக்தியை பற்றிய விமர்சனம் செய்யவில்லை..அதில் இருந்து மாறுபட்ட திசையை கொண்ட கணிதம் எதையும் உட்புகுத்தவில்லை..மாறாக கே.பி.க்கு என தனிப்பட்ட அயனாம்சம் தயார் ஆனது [ சரி சரி எத்தனை எத்தனை அயனாம்சம் இதுவும் இருக்கட்டும் கொஞ்சம் ஓரமாகவே ] உடனே கே.பி தான் மிக நுண்ணிய கணக்கு என்று கருத வேண்டாம்..
உலகிற்க்கு மஹாதிசை அறிமுகம் செய்த பராசரர்கிருஷ்ணமூர்த்தி பத்ததிஎனும் அதிமதி நுட்பத்தையும் விட மிக மிக அதி மதி நுட்பமாக ஒரு கணக்கியல் செய்தார் அதுவே நாம் இங்கே அறிந்து கொள்ள வேண்டிய முதன்மை விஷயம் .
இதையெல்லாம் வைத்து ஜோதிட பலாபலனை எடுத்து சொல்லும் ஜோதிடருக்கு பண்டையகால சொல்வழக்குகர்ம தலைவன்என்றே அழைக்கப்பட்டனர் .. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கர்மாவை சரியாக செய்ய மக்களுக்கு நல்வழி காட்ட அவ்வாறு அழைக்கப்பட்டனர்..
ஆனால் இன்றைய ஜோதிடர்கள் கண்டபார்முலாவைத்து மக்கள் செய்ய இருக்கும் கர்மாக்களை தடுக்கும் வண்ணம் அல்லவா? செயல்படுகிறார்கள்..
பழைமையான சூடாமணி உள்ளமுடையான் எனும் ஜோதிட நூல் இருக்கிறது ..அது இல்லாதவர்கள் கொஞ்சம் வாங்கி படியுங்கள்..
அதில் ஒரு பாடலை இங்கே கவனிப்போம் ..
பரகித கணிதம்
பொன்னவன் அனைய முன்னோர் பொருந்திய நவகோள் எண்ணம் பண்ணிய வடநூலால் செய்த பரஹித பனுவல் தன்னை பண்ணிய தமிழினாலே மண்ணிய நோக்கறியும் வண்ணம் அன்னமின் நடையினாய்-உரைசெய்வன் அழிவில்லாமல்
சூடாமணி உள்ளம் உடையான் செய்யுள் எண் :-371 இவ்வாறு சொல்கிறது..
இதன் அர்த்தம் சரியாக பிரகஸ்பதி முதலிய ஏனைய ஜோதிட முன்னோர் வித்துவான்கள் நவகோள் நிலையை அறிந்து வடமொழியில் சொல்லப்பட்டதை எல்லாம் தமிழினால்  ஜோதிடத்தில் பற்று உள்ள அனைவரும் கொஞ்சம் அறியும் வண்ணம் எடுத்து செய்து ஜோதிடத்தை அழிவில்லாமல் காப்பாற்று என சொல்கிறது இச்செய்யுள்.. இதை சரியாக செய்வதே பரகித கணிதம் ஆகும்..இதை செவ்வென செய்வோன் கர்ம தலைவன் ஆவர் ..அதாவதுசரியான ஜோதிடர்ஆவர்..ஒவ்வொரு மூலநூலில் தேடி பாருங்கள் இதுவரை அறியாத பல்வேறுசூட்சுமங்களைஉள்வாங்கி இருக்கிறது .. அதுவேஜோதிடம்இது பெரிய யானை தான் பாவம் நாலு குருடனிடத்தில் சிக்கி கொண்டு படும்பாடு இருக்கேஇந்த ஜோதிட யானைக்குவாய் இருந்தால் அழுது இருக்கும் சரி அதை அப்புறம் பேசுவோம்..
இன்றைய நாடி ஆகட்டும் .K.P. அல்லது நிமித்தம் ,ஆருடம், சாமுத்திரிகா லக்ஷ்ணம் ஆகட்டும்  எல்லாம் பாரம்பரிய ஜோதிடத்தில் இருந்து வந்தவை தான்.. அதை யாராலும் மறுக்க முடியாது ..இல்லை மறுத்து தான் பாருங்களேன்.
ஒரு ஜோதிடன் ஒரு ஆசானிடம் சில ஆண்டு மட்டுமே பயின்று தன்னுடைய ஆசான் 60 ஆண்டு அனுபவம் மிக்கவன் .அதை எல்லாம் தனக்கு போதனை செய்து விடார் என்று தன்னை பிரபலம் செய்து கொள்வதை விட முட்டாள்தனம் வேறில்லை ..தன்னிடம் என்ன திறமை தன்னுள் முடங்கி இருக்கிறது என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும்..அதுவே சிறந்த ஜோதிடனுக்கு அழகு ..
காசிப முனிவர் மகன் தான் சூர்யன் எனில் அவர் மனைவி எப்படி அத்தனை உஷ்ணம் வயிற்றில் தாங்கினார்,,..??
முனிவர் மனைவிகள் இல்லற சேர்க்கையில் ஈடுபட்டார்கள் என்றால் இன்று நித்தியானந்தாவை நிந்திப்பது ஏன்??
என்னவோ ஜோதிடமே என்னால் தான் வளர்கிறது என்பவர் கொஞ்சம் ஓரமாக செல்லவும் ..காரணம் ஜோதிடத்தை வைத்து தான் நீங்கள் வாழ்கிறீகளே தவிர ஜோதிடத்தை நீங்கள் வாழவைக்கவில்லை ..அதை உங்களால் வாழவைக்க முடியாது அந்த தகுதியை இழந்து விட்டீர்கள் என்றே சொல்ல முடியும்
அடுத்த பதிவில் எம் பராசரர் எமக்கு அருளிய காலசக்ர திசையை கணிக்கும் முறை பற்றி பேசுவோம்


இன்னும் பதிவுகள் வரும் …..தொடரும் -2