Friday 1 May 2020

ஜோதிட பயிற்சி தளம் (12)


சனி எனும் சனைச்சரண் தன்மைகள் ஜோதிட பயிற்சி தளம் பகுதி [12]

அனைவருக்கும் வணக்கம் நான் பெருந்துறையில் இருந்து Ask எனும்
Astro Senthil Kumar எழுதுகிறேன்.

அடிப்படையில் ஜோதிடத்தில் ஒன்றும் தெரியாது என்பவர்களுக்கு என இந்த தளம் 
https://www.youtube.com/channel/UCgkT8E50F8EbZfT0yOIT45A?view_as=subscriber
யூடியூப்பில் எனது சேனல் லிங்கில் உங்களுக்கு என ஜோதிட பதிவுகளை பதிகிறேன்.. அதையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...








சனி பகவான்



ஆட்சி ராசிகள் :-மகரம் கும்பம் 


மூலத்திரிகோணம் :-கும்பம் 


உச்சம் :-துலாம் 


நீசம்:- மேஷம் 


நிறம் :-கருப்பு 


குணம் :-குரூரம் 


மலர் :-கருங்குவளை 


ரத்தினம் :-நீலக்கல் 


கிழமை :-சனி 


தேவதை :-எமன் 


கிழக்கு :-மேற்கு 


ஆசனம் :-வில்வ வடிவம் 


வாகனம் :-காகம் 


தானியம் :-எள்  


உலோகம் :-இரும்பு


நோய் :-வாய்வு 


சுவை :-கைப்பு 


கால் :-நான்கு 


ஜாதி :-சூத்திரர் 

இயக்கம் :-ஊனம் 

மச்சம் :-இடது 


தழும்பு :-தொடை  


இடம் :-அடுப்பு 

தாது:- தாது, சரம் 


 தாவரங்கள் :-முள்செடி 


தாவரங்களின் ஆளுமை:-வேர் 


பஞ்சபூதம் :-ஆகாயம்


 திசை :-மேற்கு 


உறுப்பு :-தொடை 


ஆளுமை :-களிமண் பரப்பு 



தோற்றம் :-விளக்கம் 


உடலில் :-தோல் 


செயல் :-கவனம் 


ஸ்தலம் :-திருநள்ளாறு


சனி எனும் சனைச்சரண் [எ] சனீஸ்வரன்  மாற்று பெயர்கள்:-


 அந்தகன்,  அந்தணன்,அந்தன்,  கதிர் மகன்,  கரியவன், காரி,  கீழ்மகன்,சந்தில், சவுரி,  சாவகன்,  தமனியன், நோய் மகன், பங்கு,  பங்கு பாதன், மந்தன்,  முடவன், முதுமகன், மேற்கோள், தவிர கிழமைகளில் ஒன்றாகும்



சனி கோளின் இதர விபரங்கள்:-

கோள்களில் பூமியை விட மிகவும் விரைவில் உள்ள வீரியமான கிரகம் சனி கிரகம் சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 29 -1/2 ஆண்டுகளாகின்றன.

 அதனுடைய சுழற்சியின் வேகம் 10- 1/4 மணி நேரம் ஆகும்,

 இது மிகவும் மெதுவாக சுழல்வதால் ஊர்ந்து செல்வது போன்ற பொருளில் சனைச்சரண் என்று அழைக்கப்படுகிறது,

 உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் எவ்வளவு காலம் வாழவேண்டும் என்னும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பெற்றுள்ளார் .

மானுட வாழ்வில் ஒரு மனிதனின் முக்கிய கடமையாகிறது சோதனைகளை வழங்குவதில் சிறந்தவர் எவ்வாறு அதேபோன்று சாதனங்களில் வழங்குவதும் சிறந்தவர் ஆவார்.

 அதிக அளவில் துன்பங்களை அழிக்கும் பாவ கிரகம் சனீஸ்வரன் கருதினாலும் இவரைப் போன்று சிறந்த நீதிமான் யாரும் இல்லை அளவற்ற நன்மைகள் வாரி வழங்குவார் சனீஸ்வரன் நல்வினைகள் சிறுவர்களுக்கு நன்மையும் தீமையும் செய்ய உள்ளது தீமையும் பாகுபாடின்றி வழங்கக் கூடியவராகவும் சூரியனுக்கு ஆறாவது வட்டத்தில் உள்ளது சூரியனுக்கு 88,00,66,000 மைல்கள் தூரத்திலிருந்து 29-1/2வருடத்தில் சூரியனை சுற்றி வருகிறது.

 இது தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 10மணி 14நிமிடம் வினாடிகள் சுற்றிவரும் இதன் குறுக்களவு சுமார் 73,000மைல்களாகும்



சனியின்  குணங்கள்:-

 சோம்பல் பிடிவாதம் அடிமை 
வாழ்வின் கலகங்கள் கஞ்சத்தனம் 
பிறருக்கு தீங்கு தரும் கள்ளத்தனம் 
மது குடித்தால் போதை பொருள் பயன்படுத்தும் தன்மை 
அறியாமையுடன் இருத்தல் கெட்ட கெட்ட சாவகாசம் 



காரகத்துவம் 

தடைகள், தொல்லைகள், இரவின் வலிமை, கருமையான யானை
எருமை, எண்ணை,  தேச சஞ்சாரம்,இரும்பு , கல், கருமையான பொருள்கள் ,சூதாட்ட குணம், கஷ்டப்படும் காலம், நோய்கள் தாக்கம், பிழைப்பு
ஜீவனம் எனும்தொழில், மரணம், உடல், ஊனம், முகத்தில் தாடை, கணுக்கால் வாய்வு நோய்கள், கடும் மரணம், ஊழியர்கள், நெடுந்தொலைவு பயணம், பாவங்கள் கர்மகாரியம், மூத்த சகோதரர், தொழில்கள், இரும்பு வியாபாரம் எண்ணெய் வியாபாரம், கடுமையான வேலைகள், ஆடுமாடு மேய்த்தல், கால்நடை வளர்த்தல், தோட்டவேலை ,கருங்கல் மணி வியாபாரம்
மரம் வெட்டுதல்,மர விற்பனை, பழைய பொருள் வியாபாரம்,
 மயானத்தில் பணி செய்தல், செருப்பு தைத்தல், துப்புரவு பணி,
முடி திருத்துதல் கல் மண் சம்பந்தப்பட்ட கட்டட பணி செய்தல்,
எடுபிடி வேலை செய்தல், மக்கள் தொடர்பு வேலை செய்தல்,




1ம் பாவம்

தாழ்வு மனப்பான்மை, கோழைத்தனம், எவரையும் நம்பாத அவநம்பிக்கை, மந்தபுத்தி, சந்தேக குணம், பொய் மற்றும் பித்தலாட்ட செயல்கள்,
மனக் கலக்கத்தை அடைதல்
பிரச்சனையிலிருந்து வெளிவராதநிலைமை தாமதம் ஆதல்,
ஒழுக்கமற்ற தன்மை கீழ்த்தரமான நபருடன்தொடர்பு
 நோயினால் பாதிக்கப் படுதல், தற்காப்பு எண்ணங்கள்,



2-ம் பாகம் 


துன்பம் நிறைந்த வாழ்க்கை, முன்னுக்குப்பின் முரணாக பேசுதல்,
 மந்தமான செயல்பாடுகள்,சாஸ்திரங்களுக்கு  எதிராக பேசுதல், நம்பிக்கையற்ற பேச்சு, நம்பிக்கை துரோகம் செய்தல்,
ஆன்மீக நம்பிக்கை இல்லாமல் வாழ்தல்,மந்தமான கல்வியறிவு,
பொய்யான பேச்சு, அவமரியாதை கூடிய குடும்ப வாழ்க்கை.
தாழ்வுநிலை செயல்கள், வருமானம் வர காலதாமதமாகும்,
கணிதக் கல்வி பயிலுதல், வறுமையான பொருளாதார நிலைமை,




 3-ம் பாவம் 



சோம்பேறித்தனம். குறிக்கோளை மறைத்தல், 
அநாகரிகமாக கருத்துரைகள்,எண்ணத்தால் பிறருக்கு தீங்கு செய்தல், அவநம்பிக்கை அடைதல், நம்பிக்கை துரோகம் செய்தல்,
திருட்டுத்தனம் மூலம்பெறும் வருமானம்,
 திருட்டுக்கும் ஒரு ஆதிபத்தியம்.
 தனிமையான பரதேச பயணம்.
 பயந்த சுபாவம் ,மனநோய்,இருத்தல் உடல் பிணி,
கருத்துக்களை வெளியே கூற அச்சப்படுதல்,
 வாக்குவாதம் செய்தல். பிறரை அவமதித்தல்,
 மூட நம்பிக்கையோடு பேசுதல் அறியாமை உடன் இருத்தல்,
இல்லறத்தில் நாட்டம் இல்லாமல் உதவி செய்ய மறுத்தல்,
கஞ்சத்தனம் தாழ்வுமனப்பான்மை தொடர்ந்தே தோல்விகள்,





 4-ம் பாவம்



ஒழுக்கநெறி குறைபாடு, அழுக்கான சுத்தமற்ற வீட்டுவசதி,
பழைய வாகன வசதி,  சாஸ்திரங்களுக்கு சம்பிரதாயங்களுக்கு  எதிரான செயல்பாடுகள், நம்பிக்கை இல்லாமல், விதண்டாவாதம்,
எதிர்வினை செயல்படுதல், சொத்துக்கள் இல்லாமை,
வலுவான வாழ்க்கை, மறைமுக வாழ்க்கை,
அதிக மக்கள் தொடர்பு சாதனை செய்யும் வல்லமை,
நோயினால் பாதிப்பு,
இரும்பு சார்ந்த தொழில் முறைகள்,,



5-ம் பாவம் 




குழந்தை பிறப்புகளில் காலதாமதம்,
 தடைகளை செய்தல்,
பயனற்ற பூர்வீக சொத்துக்கள் அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள், குழந்தைகள் மூலமான துன்பங்கள்,
 நோய்வாய்ப்பட்ட குழந்தைகள்,
உடல் ஊனமான குழந்தைகள்,
ஜாதகருக்கு மந்தபுத்தி
அடிமையான பேச்சு மற்றும் செயல்கள்
குடும்ப வாழ்க்கையில் துன்பங்கள்
மனைவியினுடைய பிரிதல்
நினைவாற்றலின் மந்தத்தன்மை
தாழ்நிலை கொண்ட மக்களுடன்தகாத உறவுகள்
தாழ்ந்த கொள்கை சிந்தனை எளிதில் புரிந்து கொள்ளாமை 

காவல் தெய்வம் மதுரை வீரன் முனீஸ்வரர் கருப்பண்ணன் 





6-ம் பாவம் 


நோயினால் பாதித்தல், தீராத துன்பங்கள்,
மன உளைச்சல் சோம்பல் மேலோங்கி இருத்தல்,
கெட்ட வழக்கத்திற்கு அடிமைத்தனம்,
மீளா நிலைமை, குடும்ப வறுமை,
வலிமையான கஷ்டகாலம்,
களத்திர பிரிவினை வழக்குகளை சந்தித்து தொழில் ரீதியான பிரச்சினைகள் முடக்கம்
அந்திம காலத்தில் தனிமையில் வாடுதல்,
முழங்கால் மற்றும் கணுக்கால் நோய்கள்
பாவச் செயல்களை செய்தல்
ஜீரண உறுப்புகள் சம்பந்தமான நோய் பித்துப் பிடிக்கும் நிலை
பிறரை ஏமாற்றும் பொய்மைகள் நிறைந்த குணங்கள்
குற்றவுணர்ச்சி சூதாட்ட குணங்கள் 




7-ம் பாவம் 



களத்திர உறவுகளில் பிரச்சனை
திருமண வாழ்க்கையில் பிரச்சனை
களத்திரத்தில் துன்பம்
தாமதப்படுத்த பட்ட திருமணங்கள்
வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல்
வறுமையான வாழ்க்கை தரம்
புரிந்துகொள்ளமுடியாத அடிமையாளர்.
வேலைக்காரன், தாழ்வுமனப்பான்மை
சோம்பல், கஞ்சத்தனம், சந்தேக குணம்,
களத்திரத்தை நம்பாதவன்,
அவநம்பிக்கை கொண்ட வாழ்க்கை,
களத்திரம் நோயினால் பாதிப்பு
மன அழுத்த பாதிப்பு பொய் மற்றும் பித்தலாட்ட செயல்கள்
முதுமைத் தோற்றம்
தாழ்ந்த குலத்தவரின் பாலியல் தொடர்புகள் 



8-ம் பாவம் 



துன்பங்கள் பிரச்சனைகள் அவமானங்கள் நிறைந்த வாழ்க்கை பிரச்சினைக்குரிய காரகங்கள் வலிமை அடையும்
அறியாமை குணத்தோடு இருத்தல்
மன அழுத்தம் அதிகமான சஞ்சலம்
தீராத நோயினால் மிகுதியால் சோம்பல்கள்
பாவ காரியங்களைச் செய்யக்கூடிய துணிவு
துரோகங்களை செய்வித்தல், சிறைவாசம்,
சூதாட்ட குணங்கள், தீர்க்க ஆயுள் காலம்,
ஜீவன தீராத பிரச்சினைகள், வீண் அலைச்சல்,.




 9-ம் பாவம் 



சமூக செயல்களில் ஈடுபாட்டினால் பெருந்தன்மையற்ற குணங்கள்
பயந்த சுபாவம், தவறான கொள்கை பிடிப்பு,
அவமானங்களுக்குரிய செயல்களை புரிதல்
ஆன்மீக ஈடுபாடு இல்லாமல் நாத்திக கொள்கையை வழிநடத்துதல்
நாத்திகம் பகுத்தறிவு வாதத்தால் பெறவேண்டிய நன்மையை இழத்தல் மூத்தவர்களை மதிக்காத குணம் த
கப்பன் வழிப் பயன்பாட்டில் குழப்பங்களை அடைதல்
உண்மைக்கு புறம்பாக பேசுதல் செயல்படுதல்
நம்பிக்கை துரோகம் செய்தல்
நண்பர்களின் சேர்க்கை இன்மை
கட்டுப்பாடற்ற உழைக்கும் தன்மை
சில நேரங்களில் சோம்பேறித்தனம்
கேள்விகள் மூலம் வருமானம் அடைதல்
தீராத கடன் தொல்லைகள் வாழ்தல்
பழி வாங்கும் உணர்ச்சி அதன் மூலம் தீராத வழக்குகள்
 நீண்டநாள் பிரச்சினைகளால் தவித்தல்
நோயினால் பாதிப்பு 



10-ம் பாவம் 



மந்தமாக நிதானமாக செய்யும் தொழில்கள்,
இரும்பு வியாபாரம் எண்ணெய் வியாபாரம்
நிலக்கரி சுரங்கத் தொழில்
கடினமான வேலை செய்தல்
கழிவு பொருள் சார்ந்த தொழில்
தோட்டக்கலை கால்நடை வளர்த்தல்
தோல் வியாபாரம் கல் மண் மரம் வெட்டுதல்
மரவிற்பனை செய்தல்
மக்கள் தொடர்புள்ள தொழில்கள்
கட்டிட பணியாளர்கள்
 பில்லி சூனிய ஏவல் தொழில்கள்
கனிம வளத்தின் மூலமாக ஆதாயங்கள் 



11-ம் பாவம் 




வாழ்வில் கடுமையான உழைப்பு 

மந்தமான பணவரவு கமண் இரும்புமரம் மூலம் பண வரவு அறியாமை தாழ்வுமனப்பான்மை மந்த புத்தியோடு இருத்தல். 

அடிக்க ஒரு  மாற்றக்கூடிய குணங்கள் கொண்டவர்கள் 

புத்திரபாக்கியம் தாமதத்தை ஏற்படுத்துதல் ,சந்தேக குணம் கொண்டவர்கள் 

குழந்தைகளுக்கு நோய் 

செயல்களில் தாமதம் ஆயுள்விருத்தி 

தீராத தொல்லைகள்.

 கடினத்தன்மை மேலோங்கி இருக்கும் 



12-ம் பாவம் 

நிரந்தரமற்ற தொழில் 

வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது 

சோம்பல் குணம் பிடிவாத குணம் 

தேவையற்ற பேச்சு 

தொடர்ந்து நோயினால் வந்த பாதிப்பு 

எளிதில் தொல்லைகளில் மாட்டிக் கொள்ளுதல் 

மனவேதனை மனசஞ்சலம் அடைதல் போன்றவைகள் ஏற்படும்,,







ஜோதிட பயிற்சி தளம் 13 ல் சுக்கிரன்  குறித்து பேசுவோம் 

எல்லாம் ஒரு நோட்டில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள்..

மேலும் தொழில் முறை ஜோதிடர்கள் ஆக தனி பயிற்சி உண்டு வாட்ஸ் அப் எண் 9843469404 மூலமாக அணுகவும்..

தனி நபர் ஜாதக ஆலோசனைகள் பெற

What's App 9843469404 

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 

பெருந்துறை
Astro Senthil Kumar.