Monday 24 May 2021

ஜோதிட பயிற்சி தளம்-12

 

கேது என்னும் கிரகம் சுக்கிரனுக்கு நட்பு கிரகமாக இருந்தாலும் சுக்கிரனின் கார்கத்துவத்துடன் சற்று நேர் எதிரிடையான எண்ணங்களை கொண்டவர் கொடுப்பவர்..

ஒரு ஜாதகத்தில் பலம் பொருந்திய சுக்கிரன் எல்லா விதமான சுகங்களை ஏற்ப்படுத்தி அதனால் ஆன்மீகத்தில் இருந்து தனி மனிதனை விலகி செல்லும்படியான மன சஞ்சலத்தை ஏற்ப்படுத்த கூடியவர் கேது பகவான்..

 

கேது உலக சுகங்களில் இருந்து தனி மனிதனை ஆன்மீக பாதையில் திருப்பி மோட்ச மார்க்கம் எனும் பாதையில் கொண்டு செல்பவர் கேது ..

அதனாலே தான் கேது ஞானகாரகன் மோட்சகாரகன் என்று கூறுகிறோம்..

பாம்பின் வால் பகுதி போன்று தொங்கி கிடக்கும் அனைத்து பொருட்களும் கேது காரகன் ஆகிறார்.. வால் போன்ற தோற்றங்களுடையது.. அதில் சிக்கல் ஏற்பட்டால் நீக்குவது கடினம் ஆகும்.. ஆக கயிறு என்பது கட்டுவற்கு பயன்படுத்துவதற்க்கு ஆகும். அவ்வாறு மனிதனை இயக்கவிடாமல் கட்டி போடுவார் ...

கேது தந்தை விப்பசித்தியாவார்.. தாய் ஹிம்ஹிகை ஆவார்.. கேது கஸ்யப முனிவரின் பேரன் ஆவார் .. இராகு இவருக்கு அண்ணன் ஆவார்.. தவம் செய்து செம்பாம்பு உருவமுடைவர் ஆனார்.. சூர்யனுக்கு 13.000 விஸ்திர யோசனையுள்ள மண்டலத்தில் இருப்பவர் கேது..

இவருக்கு ஆறு குதிரைகள் பூட்டிய ரதமும் உண்டு என்பர்..

இவர் ஒரு முறை சூரியனை எதிர்மறை சுற்றில் [ அப்பிரதஷிணமாக] சுற்றி வர 18 ஆண்டுகள் 6 மாதம் ஆகும். இவர் அக்னிக்கு விகேசியிடம் பிறந்தவர் என்பதும் சிலருடைய கருத்து ஆகும்..

கேதுக்கு வழங்கும் மாற்று பெயர்கள் :- பாம்பு , செம்பாம்பு, கதிர்பகை, சிகி, மற்றும் ஞானி..

 

ஜோதிடவியலில் கேதுவின் தன்மை பற்றி கவனிப்போம்:-

 

குணம் :- கொடூரன்

மலர்:- செவ்வல்லி

இரத்தினம்:- வைடூரியம்

நட்புகோள்கள்:-சனி -சுக்கிரன்

பகை கோள்கள்:- சூர்யன், சந்திரன், செவ்வாய்

சமமான கோள்கள்:- புதன், குரு

கோளின் காரகம்:- மாதாமஹன், ஞானம், மோட்சம்,

கோளின் ஆட்சி வீடு :- இல்லை [ இருக்கும் இடமே அதன் வீடு ஆகும்]

கோளின் மூலத்திரிகோண வீடு:- மீனம்

கோளின் உச்ச வீடு:- விருட்சிகம் [ உச்ச வீடு இல்லை என்பது சிலர் கருத்து ஆகும்]

கோளின் நீச்ச வீடு:- ரிஷபம் [ சிலர் இல்லை என்பர்]

கோளின் நட்சத்திரங்கள்:- அசுவினி, மகம், மூலம்

கோளின் திசை ஆண்டுகள் - ஏழு ஆண்டுகள் ஆகும்

கோள் ஒரு ராசியில் இருக்கும் காலம்:- ஒன்றரை ஆண்டுகள்

ஷேத்திரம் :- காளஹஸ்தி

 

கேதுவின் குணங்கள் / காரகத்துவம் / தொழில்

குணங்கள்:-

மெளனம் வைராக்கியம் திடசித்தம் மன வெறுப்பு சன்யாசௌணர்வுகள் வாழ்க்கையில் விரக்தி அடைதல் எதிலும் பிடிப்பு இல்லாமை இயங்க விடாமல் முடக்குதல் எதிகால சிந்தனை இல்லாமை ஆன்மீக உணர்வுகள்

காரகத்துவம் :-

நரம்புகள் முடிகள் மர்ம உறுப்புகள் ஆசான வாயில் வீட்டின் பின் வாசல் குளியல் அறை ஜோதிஷம்  மாந்திரீகம் ஆன்மீகம் சட்டம் கயிறு நூல் மாங்கனி மரத்தின் வேர் பகுதி மரவிழுது வலை பாம்பின் வால் சங்கிலி சாக்கடை உலர்ந்த் புல் மூலிகை யானையின் தும்பிக்கை வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் மிருகத்தின் வால் கருத்து வேறுபாடுகள் வழக்கு பிரிவினைகள் சண்டை சச்ச்சரவுகள் தத்துவங்கள் இரகசியங்கள் மன வெறுப்பு கொடிய தண்டனை மன மயக்கம் பரதேச வாழ்க்கை சிறைவாசம் தேச சஞ்சாரம் சூழ்ச்சி எண்ணங்ககள் தற்கொலை எண்ணம் விரோதத்தால் கொலை செய்ய முயற்ச்சி செய்தல் தலைமுடி விபச்சார தொழில் கலகங்கள் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுத்துதல் தாய்வழி சாபம் ஞானம் தியானம் தவம்

தொழில்:-

சித்த மருத்துவம் ஜோதிஷம் ஆன்மீகத்துறை அடிமட்ட தொழில் சட்டத்துறை தையற்கடை கயிறு வியாபாரம் மின்கம்பி சம்பந்தமான தொழில் நூற்பாலையில் பணி புரிதல் மதபோதனை செய்தல் துறவறம் மேற்கொள்ளுதல் மந்திர சக்தி மூலம் சிகிச்சை செய்தல் மீன் பிடித்தல் முத்து எடுத்தல் மூலிகை வியாபாரம் செங்கல்,மண் தொழில்; ஞான உபதேசம் செய்தல் செருப்பு வியாபாரம்



கேதுவும் பாவத்தொடர்பு :-

1ம்- பாவதொடர்பு :-

குற்றவியல் சிந்தனை குறுக்கு புக்தி பொய்யான செயல் வீண் விவாதங்கள் வதந்தியை பரப்புவது சூழ்நிலைத்தன்மை சூது மற்றும் வஞ்சக குணங்கள் தடைகளுடன் கூடிய செயல்கள் மறைமுக சிந்தனை மேலோங்கி இருத்தல் மனநிலை பாதிப்படைவது ஆன்மீக தொடர்பு வருதல்

2ம்- பாவ தொடர்பு:-

குடும்ப வாழ்க்கையில் ஆசையின்மை குடும்ப பொறுப்புகலற்ற பேச்சும் செயலும் தத்துவத்துடன் கூடிய செயல்கள் பரதேச வாழ்க்கை ஒன்றை பலவாக பிரித்து பேசுதல் பிரிவினையுடன் இருத்தல் ஆன்மீக சாஸ்திர ஈடுபாடு கல்வியில் தடைகள் வருதல் தத்துவ கல்வி காப்பாற்ற இயலாத செல்வாக்கு பண வரவு தடைகள் பொய்யை நம்பும் விதமாக பேசுதல்

3ம்- பாவ தொடர்பு:-

பொய்யாக குற்றஞ்சாட்டுதல் வதந்திகளை பரப்புதல் போலியான கடிதங்கள் ஆவணங்கள் உருவாக்குதல் குறிக்கோள் இல்லாமல் இருப்பது செயல்கலை தடை செய்தல் உழைப்பின்மீது நாட்டமில்லாமை தத்துவார்த்தமான எண்ணங்கள் ஆன்மீக ஆழத்தினை வெளிபடுத்துதல் சன்னியாச பயணம் செய்தல் உறவுகளுடன் பிரிவினையோடு வாழ்தல்

4-ம் பாவம் தொடர்பு:-

சாஸ்திர சம்பிரதாயங்களில் ஆழமான ஞானம் வாகனங்களை பயன்படுத்த விரும்பான்மை ஒதுங்கி இருக்கக்கூடிய மனோபாவம்   வீடு மனை போன்ற சொத்து சேர்க்க எண்ணம் இல்லாமை பொறுப்புகள் இல்லாத நாடோடி வாழ்க்கை பழைய வீடுகளில் குடி இருத்தல் பழைய பொருட்களை சேகரித்தல் தத்துவ உயர் கல்வி பயிலுதல் சித்த மருத்துவ கல்வி பயிலுதல் சுகபோகங்களை வெறுத்ததல் தாயாருடன் கருத்து வேறுபாடு மூலமாக பகை தாய் அடைதல்  தொடர்பு இல்லாத தனிமையை விரும்புதல்

 

5ம்- பாவ தொடபு:-

ஞானம் மிகுந்த சிந்தனைகள் குறுக்கு வழியில் செயல்படும் எண்ணங்கள்

குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுகள் பிரிவினைகள் ஆன்மீக உணர்வுகளில் அதீத ஈடுபாடுகள் ஆழ்நிலை சன்னியாசம் துறவிகள் ரிஷிகள் போன்றவர்களை பற்றிய சிந்தனைகள் பூர்வீக சொத்துகளில் வில்லங்கம் மற்றும் பிரச்சனைகள் பூவீக சொத்துக்கள் குறித்து நீதிமனறம் செல்லுதல் அறிவாற்றலில் குழப்பம் மிகுந்த சிந்தனை சமூக சடங்களில் குற்றம் காணும் ஞானம் எதையும் குற்றத்துடன் விமர்சித்தல் விபசார பெண்களுடன் தொடர்பு பாரம்பரிய புகழை பயன்படுத்துவதில் தடைகள் பிரம்மச்சாரியம்  தெய்வீக வழிபாடுகள் விநாயகர் ஆஞ்சநேயர் ஐயப்பன்

6ம்*- பாவ  தொடர்பு :-

ஆன்மீக நாட்டம் இல்லாமை ஆலயம் குல தெய்வம் செல்வதில் தடைகள் ஏற்படுதல் கருத்து வேறுபாடுகள் தகராறுகள், பிரிவினைகள் வாழ்க்கையில் விரக்தி அடைதல் மனவெறுப்புடன் செயல்படுதல் தேவையற்ற வைராக்கியங்கள் இயக்கம் இன்றி முடங்கி கிடத்தல் சிதிர்கால சிந்தனை இல்லாமை தேவையற்ற குழப்பங்கள் உருவாக்குதல் குற்றம் செய்யும் சிந்தனைகளை மேம்படுத்த திட்டம் தீட்டுதல் விபசார தொடர்பில் ஈடுபடுதல் சூதாட்ட குணங்களுடன் இருத்தல்

7ம்- பாவ தொடர்பு:-

திருமண  உறவுகளில் பிரிவினை மற்றும் பிரச்சனைகளை ஏற்படுத்துதல்

கருத்து வேறுபாடுகள் விவாகரத்து செய்ய முயற்சி செய்தல் வழக்கு குடும்ப உறவில் விரிசல்கள் களத்திர ஒற்றுமை இல்லாமை களத்திர மாமன் நண்பர்களுடன் விலகி இருப்பது திருமண வாழ்வில் இல்லறத்தில் ஈடுபாடு பிடிப்பின்மை குடும்ப உறவில் பிடிப்பின்மை தேசாந்திரம் செல்லும் நிலைக்கு தள்ளப்படுதல்

8ம்- பாவ தொடர்பு 

நிரந்தர குடியிருப்பில்லாமல் வாழுதல் போலி ஆன்மிகவாதியாக வேடம் தரித்தல் வாழ்க்கையில் பிடிப்பின்மை மன வெறுப்புடன் வாழ்தல் தற்கொலை எண்ணம் ஏற்படுதல் பொய் பேசுதல் எதிர்கால சிந்தனை இல்லாமை குடும்பத்திற்க்கு அவமானம் தேடி தருதல் வழ்க்குகளை சந்தித்தல் மாங்கல்ய தோஷத்தால் வாழ்க்கையை இழத்தல் போலி ஆவணம் தயாரித்தல் போலி கையெழுத்து போடுதல் பொய் சாட்சி சொல்லுதல் தீராத பிரிவினைகள் கருத்து வேறுபாடுகள் சண்டை சச்சரவுகள் உடலில் வெப்பம் காரணமாக கட்டி ஏற்படுதல் உஷ்ண ரீதியான நோய் நொடிகள் அடைதல்

9ம்- பாவ தொடர்பு:- 

பிறர்க்கு அறிவுரை சொல்வதில் அவர்களை ஏளனம் செய்தல் உபதேஷம் செய்தல் தெவீக ஆன்மீக கொள்கைகளுடன் கலவர ஈடுபாடுகள்

இரக்கமற்ற கொடூர மனதுடன் இருத்தல் கொலைக்குற்ற உணர்வுடன் செய்ல்படுத்தக்கூடிய கொடூரத்தனம் பொய் வதந்திகளை பரப்புதல் தகப்பனார் வழியில் கருத்து வேறுபாடுகள் பிரச்சனைகள் களத்திரம் மற்றும் இளைய சகோதரனுடன் கருத்து வேறுபாடுகள்

10ம்- பாவ தொடர்ப்பு:-

சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவம் மேலும் ஜோதிட மாந்திரீக தொழிலில் ஈடுபடுதல் ஆன்மீக துறையில் அடிமட்டதொழில் ஆன்மீக சுற்றுலா வழிகாட்டியாக வாழுதல் கயிறு தொடர்பான வியாபாரங்கள் மதபோதனைகளில் ஈடுபடுதல் நூற்பாலைகளில் பணிபுரிதல் செங்கல் உற்பத்தி மற்றும் மண்பாண்டம் செய்தல் அல்லது அதனை விற்பனை செய்தல் மின்கம்பிகள் சம்பந்தமான பணி செய்தல்

11ம்- பாவ தொடர்பு:-

சகோதர உறவு கருத்து வேறுபாடுகளால்  வழக்கு நடத்துதல்

தொழில் கூடத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு தொழில் முடங்குதல்

பயனில்லாத பாரம்பரிய சொத்துக்கள் சித்த மருத்துவம் மாந்திரீக வழி ஆதாயங்கள் ஆன்மீக அடிமட்ட செயல்கள் பணி வழியால் ஆதாயம் பெறுதல்

12ம்- பாவ தொடர்பு :-

மறுபிறவி இல்லை எனும் நம்பிக்கை படுக்கை சுகங்களை ஆய்வ்ய் நோக்கில் உணர்த்துவது பரதேச வாழ்க்கை நாடோடி வாழ்க்கை எதையும் ஒதுக்கக்கூடிய மனோபாவம் வீடு வாகனம் பயன்பாட்டு அனுபவ தடைகள் போன்றவை

என்றும் ஜோதிடப்பணியில் 

பெருந்துறையில் இருந்து 

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 

ask எனும் 

Astro Senthil Kumar

கட்டண அடிப்படையில் 

ஜோதிட ஆலோசனைகள் பெற  

Whats App :- 9843469404