Thursday 16 April 2020

ஜோதிட பயணம் [ பகுதி 11]

சோதிட பயணம் பாகம்-11

சந்திரன் நின்ற ராசிக்கு புதன் வரும்போது தீயவர் நட்பு தீய காரியங்களில் மனதை ஈடுபடுத்துதல் பொருள் இழப்பு ஆகியவை சம்பவிக்கும் மனஅமைதி அகலும் தீய எண்ணங்கள் பெண்களின் தொடர்பு ஏற்படலாம் செய்தொழிலில் இடையூறுகள் உண்டாகும் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும் முன்னேற்றம் தடைபடும் புதிய ஜீவன் ஒன்று தோன்றலாம் பெற்றோர் உடல்நலம் நல்லபடியாக இருந்து வரும் கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும் மக்களால் தொல்லையும் கவலையும் பணச் செலவு ஏற்படலாம்



புதன் இரண்டாம் இடத்திற்கு வரும்போது வீணான அச்சம் ஏற்படும் தொழில் கெட்டபெயர் நஷ்டம் அவமானம் ஆகியவை ஏற்படும் மேலதிகாரியின் உதவி புரிய மாட்டார்கள் பெண்களால் பணவிரயம் ஏற்படும் பெற்றோர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் ஆனாலும் தீமை எதுவும் ஏற்பட்டு விடாது கவலைகள் அதிகரிக்கும் மனைவி மக்கள் காரணமாக அவை மறைந்து மகிழ் உண்டாகும் பணத்தட்டுப்பாடு கஷ்டமும் உறவினர் நண்பர்கள் உதவியால் குறையும்



புதன் மூன்றாம் இடத்துக்கு வரும்போது வரவை போலவே செலவும் அதிகமாக இருக்கும் நண்பர்கள் உறவினர்கள் பண வரவு கிடைக்கும் குடும்பத்தில் சுபகாரியம் ஏதாவது நடைபெறலாம் செய்தொழிலில் அதிக முன்னேற்றம் மென்மை காணப்படும் மேலதிகாரி ஆதரவு குறையும் கணவன் மனைவி உறவு மாத்திரம் மகிழ்ச்சியாக இருக்கும் வீண் அலைச்சல் வெளியூர் பிரயாணம் எதிர்பாராத நிகழ்ச்சிகளால் பொருள் இழப்பும் நிகழும் பெரியோர்கள் சந்திப்பும் தெய்வ வழிபாடும் நன்மையும் கிட்டும்




புதன் 4-ம் இடத்துக்கு வரும்போது தனதான்ய விருத்தி நண்பர்கள் உறவினர்கள் உதவி பணவரவு ஆகியவை கிடைக்கும் மேலதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஏற்படும் தாய் வழியில் சொத்து சுகம் கிடைக்கும் மனைவியால் நன்மை ஏற்படும் எதிர்ப்புகள் மறையும் செய்தொழிலில் நல்ல ஆதாயம் இருந்து வரும் நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் நன்மையும் விளையும் மகிழ்ச்சிக்கான பணம் செலவாகும் வெளியூர் பிரயாணத்தில் நன்மை ஏற்படும் புதன் நான்கில் இருக்கும் நாட்கள்வரை தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பது போல் எல்லா மகிழ்ச்சிகரமாக நடைபெறும்




புதன் ஐந்தாம் இடத்திற்கு வரும்போது மனைவி மக்களால் தொல்லை வீண் அலைச்சல் முதலியவை ஏற்படும் ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் மனஸ்தாபங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும் சௌபாக்கியமும் நிலவும் அதேசமயம் நண்பர்கள் உறவினர்கள் விரோதம் ஏற்படும் இடம்விட்டு இடம் மாறலாம் வெளியூருக்கு மாற்றம் ஏற்படும் செய்தொழிலில் சிறிது தங்கள் ஆதரவை இன்மை நீடிக்கும் தீயவர் நட்பு தீய காரியங்கள் மனதை ஈடுபடுத்துவதும் அதனால் பொருள் விரயத்தை அடைவதும் அதிகமாக இருக்கும் பிற மனைவி சேர்க்கை உண்டாகலாம் உண்மை வாழ்க்கைக்கு விட்டு போலி வாழ்க்கையில் மனம் அதிகமாக ஈடுபடலாம் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காது ஆனால் எதிர்பாராத வகையில் பணவரவு புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும்




புதன் ஆறாம் இடத்திற்கு வரும்போது எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும் செய்தொழிலில் அதிக நன்மை ஏற்படும் மேல் அதிகாரிகள் ஆதரவும் உதவியும் பதவி உயர்வும் கிடைக்கும் பெண்களால் பொருள் வரவு இருக்கும் வீடு வாசல் நிலம் புலன்கள் சொத்துக்கள் கிட்டும் விருந்துகள் நடத்தும் விருதுகளை அனுபவிக்கவும் வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டாகலாம் லாட்டரி குதிரைப்பந்தயம் ஆகியவற்றில் நல்ல பலன்களை அடைய முடியும் மனைவி மக்கள் மகிழ்ச்சி அளிப்பவர் பார் உறவினர்கள் நண்பர்கள் உதவி ஆதரவும் கிடைக்கும்..





புத பகவானின் 7-ஆம் இடத்துக்கு வரும்போது எப்போதுமில்லாத துணிவு உண்டாகும் எந்த காரியத்தை துணிவுடன் செய்து அதிக நன்மை அடையலாம் காதலில் வெற்றி ஏற்படும் லாட்டரி பந்தயங்கள் அதிக லாபத்தை நன்மையை தராது முன்கோபம் காரணமாக நெருங்கிய நண்பர்களிடம் விரோதம் உண்டாகும் தீய எண்ணங்கள் ஏற்படும் அதனால் அவமானம் நேரும் எச்சரிக்கையுடன் பொறுமையுடனும் நடந்து கொண்டு வந்தால் வரவிருக்கும் தீமைகள் அகற்றலாம் கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும்



புதபகவான் எட்டாம் இடத்துக்கு வரும்போது மக்கட்பேறு கிட்டும் முன்பு தடைபட்ட காரியங்கள் இப்போது ஒரு இடையூறும் இன்றி கைகூடி வரும் அதில் நல்ல ஆதாயம் ஏற்படும் தூர தேசப் பிரயாணம் ஏற்படும் அதன் மூலம் பல நன்மைகள் உண்டாகும் உறவினர் நண்பர்கள் ஆதரவும் உதவியும் கிடைக்கும் நண்பர்களுடன் நல்ல விருந்துகள் படை கிடைக்கும் பந்தயங்களில் வெற்றி பெறலாம் பெண்கள் மூலம் பொருள் கிட்டும் மனைவி மக்கள் மகிழ்ச்சி விடுபவர்களாக இருப்பார்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.





புதன் பகவான் 9-ஆம் இடத்துக்கு வரும்போது செய் தொழில் மந்தம் ஆதரவின்மை முதலியவை சம்பவிக்கும் மேல் அதிகாரிகளின் உதவியோடு ஆதரவோடு இருக்காது கவலை அமைதியின்மை வீண் அலைச்சல் முதலியவை சம்பவிக்கும் நண்பர்களிடம் மனஸ்தாபங்கள் உறவினர்களின் ஆதரவு குறையும் சில ஏமாற்றங்கள் ஏற்படும் பொருள் இழப்புகள் திருடர் பயம் ஏற்படும் சொத்து விற்பனையில் மந்த்தம் ஏற்படும் கணவன் மனைவி உறவு ஒற்றுமை மகிழ்ச்சி அளிக்கும் மக்கள் அதிக உதவியாக இருக்கமாட்டார்கள்..




புதபகவான் பத்தாம் இடத்திற்கு வரும்போது பொருள் வரவு சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் புது மனை வாங்கலாம் புதிய ஆபரணங்கள் புத்தாடைகள் வாங்கவும் வாய்ப்புகள் கிடைக்கும் காதல் விவகாரங்கள் கைகூடும் எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும் நல்ல பலன்கிடைக்கும் உறவினர் நண்பர்கள் தக்க தருணத்தில் உதவுவார்கள் செய்கின்ற தொழிலில் அதிக நன்மையும் கிடைக்கும் மேல் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள் அவ்வளவு நன்மை செய்யாது குடும்பத்தில் சுபகாரியம் ஒன்று நடைபெறும் புதிய ஜீவன் ஒன்று குடும்பத்தில் சேரலாம் எதிர்பாராதவிதமாக உறவினர் ஒருவருடைய சொத்து கிடைக்கலாம் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் மக்களால் நன்மையை ஏற்படும் குடும்ப உறுப்பினர்கள் அதிகமாகும்..





புதன் பதினொன்றாம் இடத்திற்கு வரும்போது வாகனங்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் செய்தொழிலில் அதிக நன்மைகள் ஏற்படும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் உண்டாகும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் புதிய தொழிலை மேற்கொள்ள நேரிடும் மேல் அதிகாரிகள் ஆதரவு காட்டும் பதவி உயர்வு ஏற்படும் வேலை மாற்றம் உதவிகளுக்கு உதவுவார்கள் எடுத்த காரியங்கள் வெற்றி அடையும் சிறுசிறு லாபமே கிடைக்கும் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்..





புதன் 12-ம் இடத்துக்கு வரும்போது செய் தொழிலில் இடையூறு கெட்டபெயர் கடன்தொல்லை அவமானம் முதலியவை ஏற்படும் நோயின் தொல்லை அதிகரிக்கும் குடும்பத்தில் ஒருவரிடத்தில் உடல் நிலை மிக மோசமாக மாறலாம் எச்சரிக்கை உடனிருந்து ஆவணம் செய்தால் தப்பித்துக்கொள்ளலாம் மேலதிகாரிகள் அனுதாபங்கள் கிடைக்காது கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும் மக்கள் ஆதரவு அதிகம் இருக்காது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் சில நேரங்களில் புதபகவான் நிலை பெற்றிருக்கும் பட்சத்தில் தசாபுத்திகளும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நற்பலன்களை கொடுப்பார் வெளியூர் வெளிநாடு பயணம் செய்யலாம்...



என்றும் உங்கள் அன்புடன்

No comments:

Post a Comment