Tuesday, 21 January 2014

திசையும் புக்தியும் பயன் தருவது எப்போது ?

எந்த திசை எந்த புக்தி நடந்தாலும் பிறந்த ஜாதகமும்
கோச்சாரமும் மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது அவசியம்!

1) ஒரே ராசியில் இணைவது [ Conjunction] 1 ஒரேபாகையில் இருப்பது சேர்க்கை ஆகும்!

2) மூன்றாவது வீட்டில் 60 சேர்க்கை  [ Sex tile ] 3/11 திருதீயம் ஆகும் [ ஜெனன ஜாதகத்தில்  மிகுந்த நற்பலன் தரும் அமைவு இது ]

3)நான்காவது வீட்டில் 90 பாகை [ Square ] 1/4 கேந்திரம் ஆவது [ ஜெனன ஜாதகத்தில் சுமாரான பலன் தரும் ]

4) ஐந்தாவது வீட்டில் 120 பாகையில் [ trine ] 1/5 திரிகோணமாக அமைவது 

5) ஒருகிரஹத்தில் இருந்து நேர் எதிர்வீட்டில் 180 [ opposition ] சமசப்தமம் C.G.ராஜன் இதுபோல் அமையும் கிரஹநிலை கெடுபலன் தான் அதிகம் தருகிறது என சொல்லி இருக்கிறார்.

6) ஒருகிரஹத்தில் இருந்து 240 பாகையில் அமைவது [  Square ] தசம்அ கேந்திரம் நற்பலன் தரும் 

கோசாரத்தில் “திசாநாதனும் புக்தி நாதனும்” வருவதையும் கவனத்தில் கொண்டும் பிறவி ஜாதகத்தில் இருக்கும் கிரஹ நிலையும் அவர்களின் சாரநாதன் [ஜீவன்] யார் ? சாரநாதனுக்கு பாதம் தந்த [ சரீரம்] எப்படி இருக்கிறது? என்பதை கவனத்தில் கொண்டு பலாபாலன் எடுத்து உரைக்க ஜோதிட பலன் துல்லியமாக வரும் என்பதும் உண்மை,

பொதுவாக 3 / 11 ஆக பிறவி ஜாதகமும் ஜோதிடம் பார்க்கும் காலகட்டத்தில் கோச்சாரமும் 3/11  ஆக திசாநாதனும் புக்திநாதனும் இருக்க ஜாதகருக்கு மிகவும் நற்பலன் அமையும் என்பது கணிப்பு!!

என்றும் ஜோதிட பணியில் !!

பெருந்துறை ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்

Wednesday, 15 January 2014

வாடகை தாயால் குழந்தை அமையும் நிலை!

 “உரிய காமத்தோர் பாவியுடன் கூடி இரண்டில் நிற்க!

விரிவுறு செவ்வாய் பார்க்கில் வேசியரிடத்திலேதான் 

பரிவோடு புத்திர யோகம் பலித்திடும் “

[ஜாதக அலங்காரம்]

 “காமத்தோன் பெரும் பாவரைக் கைகலந்து

ஏமத்துஏறி இரண்டில் கூடவே

பூமிக்கே சுதன் நோக்குறின் வேசியர்க்

கேமிக்காகும் இணையறு மைந்தனே”

[யவன காவியம்]

ஏழாம் இடத்துக்குறியவன் பாவகிரஹங்களை கூடி இரண்டாம் இடத்தில் இருக்க செவ்வாய் பார்த்தால் அந்த ஜாதகன் மனைவியால் புத்திரம் கிடைக்காமல் பழைய காலத்தில் [ வேசியர் என சொல்லப்பட்ட சொல் தற்க்காலத்திற்க்கு வாடகை தாய் என வைத்துக்கொள்ளலாம்] 

புத்திர தோஷத்தை வெறும் ஐந்தாம் பாவத்தை மட்டும் எடுத்து கொள்ளாமல் 5 க்கு 3 மிடம் எனும் 7 ம் பாவத்தின் அதிபதியை சொல்ல வந்ததற்க்குள் பல சூட்சுமங்கள் இருக்கிறது என்பது மட்டும் உண்மை!!

ஜென்ம வாரத்தின் துர்பலன்

காசிபன்அத் திரி நிலத்தில் தாரை பாலும்

காலம்உணர் அங்கிரரில் மாட்டும்

ஏசல்இலாச் சாயையினும் இரவி ஆதி 

எழுவரும்பின் நாள் நிரையே பிறந்த வாற்றால்

தாசிதுகில் ஆடி ஆவணியும் கேட்டை 

சாரும்உடை குளம்கடை நாள் முறையே கண்டு

தேசுபெற அவரவர்தம் வாரநாளில்

சேய் உதிக்கில் கொடும் துயரம் செப்புவாரே!

பொருள்;- 

காசிபமுனிவருக்கு பரணியும் ஞாயிறும்

அத்திரிமுனிவ்ருக்கு சித்திரை திங்களும்,

சிவபெருமானின் வியர்வையில் உத்திராடத்திற்க்கு செவ்வாயும், 

தாராதேவிக்கு அவிட்ட புதனும், 

ஆங்கிரஸமுனிவருக்கு கேட்டை வியாழனும்,

சிவனின் சுக்கிலத்தில் பூராட வெள்ளியும்,

சாயாதேவிக்கு ரேவதியில் சனியும் 

பிறந்தனர், 

ஆகையால் மேற்படி நாளில் அந்தந்த நட்சத்திரம் வரும்போது ஜெனனிக்கும் குழந்தை பிறக்க மிகுந்த கஷ்ட ஜீவனம் அமையும் என்பதை கவனித்து பலன் காண வேண்டும்!

என்றும் ஜோதிட பணியில்!

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,

பெருந்துறை- 638 052
 
 

 

Monday, 13 January 2014

சதுர்யுகங்களில் இலக்ன பேதம்

முந்தின யுகங்களின் முதல் நிகேஷமும்

வந்தாஆ தானமும் வரும் சிரோதயம்

அந்த மாம்பூ உதயமும் இலகினமும்

இந்தவாறு அவைநிரை இயம்பு மேலையோர்!!

 நான்கு யுகங்களில் முதல் யுகமான கிரேதாயுகத்தில்நிகேஷகாலம்[ சாந்தி முகூர்த்தம் ] குழந்தையின் ஜென்மலக்னம் ஆகும்!

 திரேதாயுஅகத்தில் கர்ப்பாதான காலம் ஜென்ம லக்னமாக எடுத்துக்கொள்ளப்பட்டது

துவாபர யுகத்தில் தாயின் யோனியிலில் இருந்து குழந்தயின் சிரசு வெளிப்படும் நேரம் லக்னமாக கணிக்கப்பட்டது

நான்காவது யுகமான கலியுகத்தில் “குழந்தையின் பூவோதய காலமே “ லக்ன உதயம் ஆகும்

பூவோதாய காலம் என்பதன் விளக்கம் ஆனது:- கலியுகத்தில் குழந்தை பிறந்து பூமிக்காற்று படும் நேரத்தையே .அதாவது குழந்தை சுவாசிக்கும் நேரத்தையே “லக்னமாக” வைத்தார்கள்!

குழந்தை முதலில் சுவாசிக்க துவங்கியதும் அழத்துவங்கும் அந்த நேரமே  “லக்னம்” ஆகும்

The First Cry of the Child is the Correct "birth time" of the Child 

இதை நான் சொல்லவில்லை ஜோதிட நண்பர்களே !

யாவனாச்சாரியார் “யவன காவியத்தில்” சொன்ன விஷயம்!

சபரி திருக்கணித பஞ்சாங்க கணித மேதை மதிற்பிற்குறிய S.M. சதாசிவம்  அவர்கள் விளக்கமான தமிழ் விரிவுரை கொடுத்துள்ளார். 

காலம் சென்ற P.V.ராமன் அவர்கள் “Three hundred  important combinations" எனும் புத்தகத்திலும் எழுதி  இருப்பதாய் தகவல்அறிந்தேன்!

என்றும் ஜோதிடப்பணியில்!

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்

பெருந்துறை

செல்:-98427 69404

செல்:-98434 69404 

 

   

Tuesday, 7 January 2014

எந்த திதியில் என்ன செய்யலாம் ?

பிரதம திதியில்:- அதிபதி :- அக்னி பகவான் 

பிரதம திதியில் செய்ய தக்க கார்யம் 

உலோகம்,மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்

துதியை திதியில்:-அதிபதி :- துவஷ்டா தேவதை 

துதியை திதியில் செய்ய தக்க கார்யம் 

விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது!

திருதியை திதி:- அதிபதி :-பார்வதி

 திருதியை திதியில் செய்ய தக்க கார்யம்

வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹபிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்!

சதுர்த்தி திதி:- அதிபதி :-கஜநாதன் [விநாயகர்] 

 சதுர்த்தி திதியில் செய்ய தக்க கார்யம் 

சதுர்த்தி திதியில் வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்கார்யம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்க்கு விதி விலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்க்கு விதி விலக்கு ]

 பஞ்சமி திதி:- அதிபதி :-சர்ப்பம்

பஞ்சமி திதியில் செய்ய தக்க கார்யம்

இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்க்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம் !

சஷ்டி திதி:- அதிபதி :-முருகன்

சஷ்டி திதியில் செய்ய தக்க கார்யம்

வேலைக்கு சேர,பசுமாடு வாங்க,வீடு வாங்க, வாகனம் வாங்க , மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொதுகணக்கு!

சப்தமி திதி:- அதிபதி :- சூரியன் 

சப்தமிதிதியில் செய்ய தக்க கார்யம்

வீடுகட்ட,உபநயனம், விவாஹம்,தேவதாபிரதிஸ்டை, இடம் மாற்றம், விவசாயம், துவிதியை,திருதியை பஞ்சமி திதிஒயில் சொல்ல பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர்கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி! 

அஷ்டமி திதி:- அதிபதி :- சிவபெருமான் 


அஷ்டமிதிதியில் செய்ய தக்க கார்யம்

யுத்தம், தான்யம்,வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது!

நவமி திதி:- அதிபதி :-பாராசக்தி 

 நவமிதிதியில் செய்ய தக்க கார்யம்

பகைவரை சிறைபிடிக்க பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க  அதிக தோசம் உள்ள திதி அல்ல இது!

தசமி திதி:- அதிபதி ஆதிசேஷன்

தசமி திதியில் செய்ய தக்க கார்யம்

தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகு கேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி ,  மங்களகரமான கார்யம், ஜலம், முக்கியஸ்தரை சந்திக்க உகந்தது இந்த திதி !

ஏகாதசி திதி:- அதிபதி:- தர்ம தேவதை


ஏகாதசி திதியில் செய்ய தக்க கார்யம்

பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம்,விவசாயம்,ஆபரணம்,வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்!

 துவாதசி திதி:- அதிபதி:-விஷ்ணு 

 துவாதசி திதியில் செய்ய தக்க கார்யம்

விருந்துண்ண தனம், தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள்,தர்மகார்யம்,நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம் [ திருவோணம் இணையும் துவாதசி மட்டும் ஆகாது ]
 

 திரயோதசி திதி:- அதிபதி:- மன்மதன் 

திரயோதசி திதியில் செய்ய தக்க கார்யம்

வ்குகாலம் நிலைக்கும் அனைத்தும், செளபாக்கியமான மங்களகரமான கார்யம் ,நாட்டியம்,  ஆபரணம், வாகன பயிற்சி & நீண்டகால திருமண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்!

சதுர்தசி திதி:- அதிபதி:- கலிபுருஷன்

சதுர்தசி திதியில் செய்ய தக்க கார்யம்

வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்!
தேய்பிறையில் சிவ பெருமானை  வணங்கி வர வேண்டும்!
பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை மற்றும் சுக்கில பட்ஷம் எனும் வளர்பிறையில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகார்யம் தவிர்க்க [ அமாவாஸைக்கு முதல் நாளில் ]  

 அமாவாஸையில் முன்னோர்மற்றும் இறந்தவர்களுக்கு உண்டான கார்யம் மட்டும் செய்யவும்!

 பெளர்ணமியில் செய்ய தக்கவை 

கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும் ,யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும் மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம் 

[குறிப்பு:-  இவை அனைத்தும் பொதுவாக பஞ்சாங்கத்தின் அடிப்படை மட்டுமே!
தேவையற்ற கேள்விகள் எம்மால் பதில் செய்ய இயலாது!
எம்மிடம் கேட்பதற்க்கு பதில் நீங்கள் பஞ்சாங்க வெளியீட்டாரிடம் கேட்டு எனக்கும் சேர விளக்கம் தரவும் நன்றி ] 


 Sunday, 5 January 2014

சூரியன் சந்திரன் இணைவானால் ?

சூரியன் சந்திரன் இணைவானால் என்ன பலன்

புலிப்பாணி பாடல் படி:-

காணப்பா கதிரவனும் மதியும் கூடி

           கனமுள்ள லக்னத்தை கண்ணால் நோக்க 

சீனப்பா சக்கிலியப் பெண்ணை ஜென்மன் 

          சிறப்பாகச் சேர்ந்தணைவான் ஜெகத்திலே தான்

ஊனப்பா உதயவனும் கண்ணுற்றாலும் 

           உத்தமனே உலகத்தில் ஒருவர் பாரார்

வீணப்பா போகருட கடாஷ்த்தாலே

          விதமாகப் புலிப்பாணி விளம்பினேனே!

பொருள்:-
சூரியனும் சந்திரனும் கூடி பலமுள்ள லக்னத்தை கண்ணால் நோக்கினால் 
ஜென்மன் நீசப்பெண்ணுடன் கூடு இப்புவியில் அலைவான் என்பதை சிறப்பு விதியாக கொள்ளவும்!
சூரியன் சத்தியஜாதியை சேர்ந்தது!
சந்திரன் வைஸ்ய ஜாதியை சேர்ந்தது!
அதனால் ஜாதகனுக்கு நடுத்தர ஜாதி பெண்ணின் மேல் மோகம் கொள்வார் என்பது சரியான கருத்தாகும்!

சூரியன் சந்திரன் கூட அது அமாவாஸை யோகம் இருவரும் தன் சுயபலத்தை இழந்து விடுவர் . அப்படி தன் பலம் இழந்த சூரியனும் சந்திரனும் ஏழம் இடத்தில்  இருந்து பலமுள்ள லக்னத்தை நோக்கி லக்னாதிபதியும் வேறு இடத்தில் பலம் இழந்தோ நீசம் பட்டு போனாலோ இதில் உள்ள பாடல் அந்த ஜாதகனுக்கு பொருந்திப்போகும்!

குறிப்பு:- இப்பாடல் ஜோதிடர்களுக்கு மட்டுமே தவிர எனது மற்ற முகநூல் நண்பர்கள் இதை தனது ஜாதகத்துடனோ குடும்பத்தார் ஜாதகத்துடனோ சுயபரிசோதனையை செய்ய வேண்டாம்! ஜோதிடர்களை அணுகி பலன் காணவும் 

என்றும் ஜோதிடப்பணியில்!

பெருந்துறை ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் 

 

Saturday, 4 January 2014

கல்வி யோகம் எப்படி இருக்கும் ?

சுக்கிரன்:- 4 வீட்டில் இருக்க சங்கீத வல்லமை உண்டு!

புதன்:-  4 வீட்டில் இருக்க ஜோதிட சாஸ்திரம் கை கொடுக்கும்!

சூரியன் அல்லது புதன் இருவரில் ஒருவர் 5 ல் ராகுவுடன் இருக்க ஜோதிடவல்லுனர் . மருத்துவ தொழில் கை வரும்!

[விளக்கம் ராகு [பாம்புக்கோள்] என்பதால் ரசாயனம் மருத்துவம் புதன் ஜோதிட ஞானம் சூரியன் ராகு இருந்தாலும் இதே நிலை தான் ]

சூரியன் புதன் : 2 ம் வீட்டில் இருக்க ஜோதிட கலை கை கொடுக்கும்!

சூரியன் செவ்வாய் 2 ம் வீட்டில் இருக்க தீர்க்கவாதி, சனி .புதன். சூரியன் 5 ம் வீட்டில் இருப்பின், தத்துவ ஞானி, வேதாந்தி.தர்க்கவாதி என்பர்!

சூரியன்& புதன் இரண்டும் கேந்திரம் திரிகோணம் அல்லது 11 ல் அமர ஜாதகன் கவனானாக இருப்பார்!

குரு : 2 ம் வீட்டில் அமர வேதவிற்பனர். 2 ம் வீடு ஆட்சி உச்சம் ஆக இருந்தால் இன்னமும் சிறப்பு

இது குறித்து ஜோதிடர்களுக்கு சந்தேகம் இருப்பின் ”பாவர்த்த ரத்னாகரம்” எனும் “ஜோதிட ரத்னாகரம்” நூலில் படித்து தெளிவு பெறவும்!
என்றும் ஜோதிட பணியில்!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட ஜோதிட மையம்.

Thursday, 2 January 2014

எந்த நாளில் பெண்ணுக்கு திருமணம் நடத்தலாம் ?

 தாராபலன் படி திருமணம் நடத்த உகந்த நட்ச்சத்திரம் பின்வருமாறு:-

அசுவினி&மகம்&முலம்  பெண்ணுக்கு :

 ரோஹிணி .ஹஸ்தம் திருவோணம் சிறப்பு 

பரணி &பூரம்,&பூராடம் பெண்ணுக்கு:- 

மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் சிறப்பு 


கிருத்திகை&உத்திரம்&உத்திராடம் பெண்ணுக்கு:- 

திருவாதிரை, சுவாதி ,சதயம் சிறப்பு 

ரோஹிணி&ஹஸ்தம்&திருவோணம்பெண்ணுக்கு:-

புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி  சிறப்பு

மிருகசீர்ஷம்&சித்திரை&அவிட்டம்பெண்ணுக்கு:-

பூசம்,அனுஷம்.உத்திரட்டாதி சிறப்பு

 

திருவாதிரை,&சுவாதி 7சதயம்,பெண்ணுக்கு:-

ஆயில்யம்,கேட்டை,ரேவதி சிறப்பு

 

புனர்பூசம்&விசாகம்7பூரட்டாதி,பெண்ணுக்கு:-

அசுவினி,மகம்,முலம்  சிறப்பு

 

பூசம்&அனுஷம்&உத்திரட்டாதி பெண்ணுக்கு:- 

பரணி ,பூரம்,,பூராடம்சிறப்பு

ஆயில்யம்&கேட்டை&ரேவதிபெண்ணுக்கு:-

கிருத்திகை,உத்திரம்,உத்திராடம் சிறப்பு


என்பது முன்னோர் வாக்கு அதை விட்டு ஜோதிடரிடம் ஞாயிற்று கிழமை மூகூர்த்தம் கணித்து தர சொல்வது அபத்தம் ஆகும், கிடைக்கும் நாட்கள் 8 மாதம் ஆனாலும் பொறுத்து இருந்து திருமணம் செய்வது உத்தமம் என்பது அடியேன் கருத்து!


 என்றும் ஜோதிடப்பணியில்!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் 
48/40,ராஜ வீதி,
பெருந்துறை-638 052 
செல்:-98427 69404
செல்:-98434 69404