Tuesday 21 April 2020

ஜோதிட பயிற்சி தளம் [பகுதி -9]

புதனின் தன்மைகள் ஜோதிட பயிற்சி தளம் பகுதி [9]

அனைவருக்கும் வணக்கம் நான் பெருந்துறையில் இருந்து Ask எனும்
Astro Senthil Kumar எழுதுகிறேன்.

அடிப்படையில் ஜோதிடத்தில் ஒன்றும் தெரியாது என்பவர்களுக்கு என இந்த தளம் 
https://www.youtube.com/channel/UCgkT8E50F8EbZfT0yOIT45A?view_as=subscriber
யூடியூப்பில் எனது சேனல் லிங்கில் உங்களுக்கு என ஜோதிட பதிவுகளை பதிகிறேன்.. அதையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...







புதன் 

ஆட்சி:- மிதுனம் & கன்னி



மூலத்திரிகோணம் :- கன்னி


உச்சம்:- கன்னி

நீசம்:- மீனம்



நிறம் :-பச்சை



குணம் :-தாமசம்



மலர் :-வெண்காந்தல் 



ரத்தினம் :-மரகதப்பச்சை 



மரம் :-நாயுருவி 



கிழமை :-புதன் 



தேவதை :விஷ்ணு 



கிழக்கு :-வடகிழக்கு 



ஆசன வடிவம் :-அம்பு வடிவம் 



வாகனம் :-குதிரை 



தானியம் :-பச்சைப்பயிறு 



உலோகம் :-பித்தளை 



நோய் :-வாதம் 



சுவை :-உவர்ப்பு 



பால் :-அலி



கால் :-இரு கால்



ஜாதி  :-வைசியன் 



இயக்கம் :-பறக்கும் 



மச்சம் பலன்கள் :-வலது



தழும்பு :அக்கில் 



இடம் :-படுக்கை 



தாது :-  ஜீவன் உபயம் 



தாவரம் :-கொத்துச்செடி 



தாவரத்தின் ஆளுமை :-இலை 



பஞ்சபூதம் :-காற்று 



திசை :-வடகிழக்கு 



உறுப்பு :[-முதுகு 



ஆளுமை :-மணல் பரப்பு 



தோற்றம் :- ஆணவம்



உடலில் :-மூளை 



செயல் :-நிபுணன் 



ஸ்தலம் :-மதுரை சொக்கநாதர் 




புதனின் மாற்று பெயர்கள்:-
 அருணன், அறிஞன்,அனுவழி,  அனுரு, கணக்கன், கணக்கன், சவுமன்,  சாமன், சிந்தை, கூரியன், சௌமியன், தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள், நிபுணன், பச்சை, பண்டிதன், மணிமகன், பாகன், பூந்தி, புலவன் மகன், மாதவன், மால், மேதை  என புதனுக்கு பெயர்



 புதன் சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு அடுத்து உள்ள கிரகம் புதனுடைய குறுக்களவு 2100 மைல்கள் ஆகும்.


 புதனுக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள கிரகம் தூரம் 3,60,000மைல்களாகும், 


116நாட்களுக்கு ஒரு முறை பூமியை கடந்து செல்கிறது,
தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் சூரியனை ஒருமுறை சுற்றிவர 88 நாட்கள், இது நவகிரகத்தில் பூமிக்கும் சூர்யனுக்கும் இடையே உள்ள உள்வட்ட கிரகம் இதன் பார்வை தான் நின்ற வீட்டில் இருந்து ஏழாம் வீட்டை மட்டும் பார்க்கும்,  சூரியனை அடுத்து சுற்றிவரும் கோள் புதன் ஆகும்,


சுமார் 24 மணி நேரம் தன்னை சுற்றி வரும் 88 நாட்களில் சூரியனை சுற்றி வரும் இது பூமியிலிருந்து 5,70,00,000 மைல்கள்  தூரத்தில் உள்ளது



 புதனின் குணங்கள் 

 பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைச்சுவை, வசீகரத் தன்மை, மேன்மை, அறிவு, கோழைத் தனம் போன்றவை குணமாகும்



காரகத்துவம் 

தாய் மாமன், கல்வி, புத்தி, நண்பன், இளைய சகோதரி, காதலன் காதலி, நாட்டியம், கழுத்துப்பட்டை, நெற்றி, வரவேற்பு அறை, சிமெண்ட் மற்றும்உள்ளங்கை



 தொழில்கள் 

ஆசிரியர் பணி, எழுத்தாளர், கணக்காளர், ஜோதிடம், வழக்கறிஞர், பத்திரிக்கை துறை, தலைவர், காகிதம், பேனா, அஞ்சல்துறை,செய்தித்துறை, தொலைபேசி, புத்தக வியாபாரம், பேச்சாளர், ஒற்றர் வேலை, நுண்ணிய புலனாய்வுத்துறை, சிற்பத் தொழில், தேர்பாகன்,நகைச்சுவை நடிகர், பிறரை போல மாற்று குரலில் பேசும் திறன்


 புதன் பாவ தொடர்பு 

1ம் பாவம்:-


 நகைச்சுவை நிறைந்த குணங்கள், கூர்மையான புத்தி, தனித்திறமை,ஞாபகசக்தி, மெலிந்த உடல்வாகு, அனைவரிடமும் நன்கு பழகுதல், எழுத்தின் மீது நாட்டம், கலை நுணுக்கம் உள்ள தொழில்கள், புலன் நுகர்ச்சி மேலோங்கி இருத்தல்



2ம் பாவம் 

சிறந்த விமர்சன பேச்சாற்றல், நகைச்சுவை மிகுந்தவர், மகிழ்ச்சியான கலகலப்பான குடும்ப வாழ்க்கை, மென்மையான பொறுமை குணங்கள், கல்வியின் மூலம் மேற்கோள் அடைதல், இதிகாச புராண சாஸ்திரங்களில் புலமை, கல்வியின் மூலம் செல்வாக்கு, கல்விதுறையின் மூலம் ஆதாயம், மாமன் வழியில் ஆதாயம், தந்திரசாலி  குணங்கள் கொண்டவர்கள்




3ம் பாவம் 


தொலைதொடர்பு துறையில் இருத்தல், சிறந்த கருத்துடன் பேசுதல், சிறந்த எழுத்தாற்றல், ஓவியத்தின் சிறந்த ஞானம், சிறந்த விமர்சனம்,பொய்யை உண்மை என்று சொல்லும் திறமை, கலைகளில் ஈடுபாடு, மதிநுட்பமான எண்ணற்ற தனித்திறமை, காதல் உணர்வுடன் வசப்படுதல், கமிஷன்  மூலமான வருமானங்கள், அன்பு பாசத்துடன் இருத்தல், கேளிக்கை, சுற்றுலாவில் விருப்பம், நகைச்சுவை திறனாளி, உபரிவருமானங்கள்


4ம்பாவம் 


சிறப்பான உயர்கல்வி சிறந்த கணித புலமை எதையும் எளிதில் உள்வாங்கும் திறன் கலைநயம் வீட்டுவசதி காற்றில் பறக்கும் வாகன வசதி விமான வசதி விமான பயணங்கள் வெள்ளித் தட்டில் சாப்பிடுங்கள் சாதனை தாய்மாமன் மூலமாக படுதல் நுண்ணிய கருவிகளைக் கையாளும் திறன் புத்தகங்கள் வாசிப்பதில் ஈடுபாடு ஜோதிடத்தில் அதிக நாட்டம்


5ம்பாவம் 



துள்ளிய அறிவாற்றல் ஞாபகசக்தி துறைசார்ந்த புலமை பாண்டித்தியம் சிறந்த விமர்சனம் நகைச்சுவைத் திறன் செய்திகளை அறிந்துகொள்ளும் ஆர்வம் புத்தி கூர்மையுள்ள குழந்தைகள் மாமன் வகை ஆதாயம் பெறுதல் குழந்தைகளிடம் சாத்வீகம் தன்மையுடையதாக மாற்றக்கூடியது இணைய வழிநடத்தல் காதல் வயப்படுதல் காமத்திற்காக காணப்படுதல் விஷ்ணு தெய்வ வழிபாடுகள்




6ம்பாவம்:- 


பேச்சு தடை எழுத்துகளில் சோம்பல், எழுத்தாற்றல் சோம்பல் நகைச்சுவை விருப்பமில்லாமல் மாமன் உறவுகளில் கருத்துவேறுபாடு பகைவர்கள் வருதல் தனித்திறமை பாதிப்பது கல்வியில் தடைகள் வியாபார ரீதியான கலன்கள் தொடர்பில் பிரச்சினை உறவுகளில் விரிசல் கேளிக்கைகளில் நாட்டம் இல்லாமை நுட்பமான அறிவாற்றலை தவறாக செயல்படுத்துதல் போலி கையெழுத்து போடுதல் போலி ஆவணங்கள் தயாரித்தல் காதலில் தடைகள் காதல் மூலமான பிரச்சினைகள் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் அடிக்கடி அந்நிய நாட்டுப் பயணங்கள் வெளிநாட்டின் தொடர்பு வாகனப் பயணங்கள்


7ம் பாவம்:-


 அன்பு பாசம் காதல் உணர்வுடன் கூடிய கலந்த உறவு கள்ள உறவு தனித்திறமை கொண்ட பாண்டித்தியம் புத்தி சாதனங்களால் மிகுந்த பேச்சாற்றல் எழுத்தாற்றல் மென்மையான குணங்கள் காதல் மூலம் திருமண உறவு கூட்டு வியாபாரத்தில் வெற்றி காமத்தினால் புதுமை புரிதல் சிற்றின்பத்தில் நாட்டம் காதல் உறவால் தன்னை பால் வடித்துக்கொள்ளுங்கள்..




8ம் பாவம்:-


 கல்வித்துறையில் அறிவாற்றல் குறைபாடு திறமையின்மை நுண்ணிய அறிவாற்றல் குறைபாடு வேதனை குணங்கள் நண்பர்களும் விரோதி ஆவது பகுத்தறியும் தன்மை இல்லாமை பேச்சுக்களால் பிரச்சினையை சந்தித்தல் கோரிக்கை எழுத்து ஆவணங்கள் தயாரிக்கும் ஈடுபாடு தாய்மாமன் உறவு பாதிப்பு மரண பயங்கள் கைகள் தோள்பட்டை போன்ற இடங்களில் நரம்பு பாதிப்பு உடலில் காற்று நரம்புமண்டலம் தொல்லைகள்



9ம் பாவம்:-

 மாமன் வழி நன்மைகள் மதிப்பு மரியாதை கௌரவம் வரைதல் உயர்கல்வி வழிகள் உங்கள் பதவிகள் பெறுதல் உறவுகளை மதித்தல் மகிழ்ச்சியான வாழ்க்கை தரம் தெளிவான பேச்சு அழகான கையெழுத்து புத்தி கூர்மை சமயோசித புத்தி புத்தக ஆய்வாளராக இருத்தல் பாண்டியன் எனும் புலமை நல்ல கருத்து கூறும் உபன்யாசங்கள் அவள் ஆன்மீக நாணத்தோடு விமர்சனமாக இருப்பது கல்வி அயல் நாட்டுத் தூதுவர்கள் வியாபாரிகள் உயர்நிலை பகிர்தல் ஆப்டிகல் உயர் கல்வி பயிலுதல் கமிஷன் வழி உபரி வருமானம் காற்றில் பயணம் விமான வசதி கல்வி வழி சேவை புரிதல் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவர் கல்வி நிறுவனங்கள் நிர்மாணித்தல்



10ம் பாவம்:-

 தெளிவான பேச்சாற்றல் புத்திகூர்மை சார்ந்த தொழில் பிறருக்கு ஆலோசனை வழங்குதல் கடன் சீட்டு வசூல் செய்யும் தொழில் பணப்புழக்கம் கல்வி புகட்டுதல் ஆசிரியர் பணி கலைத்துறையில் தொடர்பு கலைத்துறை சார்ந்த தொழில் கமிஷன் கலந்ததாக துறையில் கணித ஜோதிடம் சார்ந்த தொழில் கணக்காளர் தணிக்கையாளர் ஜோதிடராக ஜோதிட புத்தகங்கள் எழுதுதல் ஒப்பந்த பங்குதாரர்கள் கணிப்பொறி சார்ந்த தொழில் பத்திரிகை எழுத்தாளர் பத்திர விற்பனையாளர் இடைத்தரகர் புரோகிதம் போன்றவை



11ம் பாவம் 


ஞாபக சக்தி புத்தி கூர்மை வலிமை பெறுதல் கருத்துக்களை ஆழ்ந்து உள்வாங்கும் திறன் கலை நுணுக்க செயல்வழி நன்மை பெறுதல் பேச்சு எழுத்து கணித புலமை வெற்றி பெறுதல் கழுவேற்றுதல் ஒப்பந்த வகையில் நன்மை பெறுதல் கல்வி வெற்றி பெறுதல்



 12ம் பாவம் 

மாமன் வழி உறவுகள் பயனற்றது தேவையற்ற பேச்சுக்கள் பேசுதல் பயனற்ற கல்விநிலை குறைந்த கல்வி கற்றல் கல்வி அறிவின்மை சமயோகித சாதிய குறைபாடு வியாபார வழியில் நஷ்டங்கள் அடைதல் வாழ்நாள் கடனாளி கேலிக்கு எண்ணங்களால் காலம் பொருள் இழப்பு அயல்நாடு சென்று வருவார்கள் அயல் நாட்டில் வாழ்ந்தாலும் கடனாளி யாகவே இருப்பது போன்றவை






ஜோதிட பயிற்சி தளம் 8 ல் பேசுவோம் எல்லாம் ஒரு நோட்டில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள்..

மேலும் தொழில் முறை ஜோதிடர்கள் ஆக தனி பயிற்சி உண்டு வாட்ஸ் அப் எண் 9843469404 மூலமாக அணுகவும்..

தனி நபர் ஜாதக ஆலோசனைகள் பெற

What's App 9843469404 

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 

பெருந்துறை
Astro Senthil Kumar.



No comments:

Post a Comment