Sunday 22 November 2015

சஷ்டி விரதம் குழந்தை அமையும்

எந்த வினையானாலும்,                                                                              கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.  முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?


கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். (இந்த வருடம் 6.11.2010 முதல் 11.11.2010 வரை.) சூரசம்ஹார தினத்தன்று (11.11.2010) அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.


சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம:  குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம், அங்கு உஷத் காலத்தில் பெருமானின் கலைகள் எல்லாம் எல்லாத் தலங்களுக்கும் சென்று தெய்வப் பொலிவூட்டுகின்றன என்றும், அர்த்தஜாம காலத்தில் ஆயிரம் கலைகளும் பெருமானிடம் ஒடுங்குகின்றன என்றும், எனவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசிக்கும் புண்ணியத்தை, சிதம்பரத்தில் அர்த்தஜாமத்தில் வழிபடுவதால் பெற முடியும் என்று சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடப்படுகிறது. சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் என்னும் பாராயண நூலில், 25-வது மந்திரம் ஓம் சஷ்டி பதயே நமோ நம என்பதாகும், சஷ்டி தேவியின் நாயகனாக விளங்கும் சண்முகப் பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள். சஷ்டிதேவி, தேவசேனைப் பிராட்டியாரின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். அதனால் தேவசேனைக்குரிய சஹஸ்ரநாமத்தில் - ஓம் ஷஷ்ட்யை நம, ஓம் ஷஷ்டீச்வர்யை நம், ஓம் ஷஷ்டி தேவ்யை நம. எனும் மந்திரங்கள் வருகின்றன. ஆறில் ஓர் அம்சமாகத் தோன்றியதால், இவள் சஷ்டிதேவி என்று அழைக்கப்பெறுகிறாள். பெற்ற தாய் கவனிக்காதிருக்கும் காலத்தும், பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான். திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவி, தேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள், பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்வரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும், அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறி, அந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி, எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள், யோகசித்தி மிக்கவள். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஆறாம் நாளிலும், இருபத்தோராம் நாளிலும் சஷ்டிதேவியை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஐப்பசி மாதத்தில் வரும் மஹா ஸ்கந்த சஷ்டியைப் போன்று, ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியை குமார சஷ்டி என்று அழைப்பர்.  அதைப் போல கார்த்திகை மாதத்து வளர்பிறை சஷ்டியை சம்பக சஷ்டி என்றும், சுப்ரமண்ய சஷ்டி என்றும் கூறுவார்கள். இந்த சம்பக சஷ்டியை அனந்தசுப்ரமண்ய விரதம் என்றும் அழைப்பர். குழந்தைப்பேறு அளிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகன் ஆவார். செகமாயை என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில், முருகனையே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்வோர்க்கு, நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும் என்று வள்ளிமலை சச்சிதானந்தா சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். தென்காசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்று ஊரில் குமார சஷ்டி விழா ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனை தாரக ஹர குமார சஷ்டி என்று அழைக்கிறார்கள். இவ்விழாவில்  படிப் பாயாசம் வழங்குவது விசேஷமானது.சரவணபவ தத்துவம்சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின் மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோமுக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6  ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம் வைகாசி மாத - விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).மு  - முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு - ருத்ரன் என்கிற சிவன்
க - கமலத்தில் உதித்த பிரம்மன்.
ரு - ருத்ரன் என்கிற சிவன்க - கமலத்தில் உதித்த பிரம்மன்.ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன். காஞ்சி குமரப் பெருமானால் அடி எடுத்துக் கொடுக்கப்பட்டு கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் முருகன் அவதாரத்தை இவ்வாறு கூறுவார்:அருவமும் உருவமாகிஅநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்பிரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம்பதோர் மேனியாகிக்கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டும் கொண்டேஒரு திருமுருகன் வந்து ஆங்குஉதித்தனன் உ<லகம் உய்ய!இந்தப் பாடலை உள்ளன்புடன் ஓதினால் குழந்தைப் பேறு பெறலாம். - நாரதர் பழம் ஒன்றை சிவனிடம் வழங்க கணபதி சிவபார்வதியை வலம் வந்து பழத்தைப் பெற, கோபம் கொண்ட பாலன் தண்டம், கௌபீனம் அணிந்து பழனி ஆண்டியானான்.தலம் பழனி (3-ஆம் படை வீடு) - கந்தனைப் புறக்கணித்து சிவனைத் தரிசிக்க பிரம்மா செல்ல, பிரணவத்திற்குப் பொருள் அறியாமல் அவர் சிறைப்பட, சிவனுக்கு பிரணவப் பொருள் உரைத்ததால் கந்தன், சிவகுருநாதன், சுவாமிநாதன் என்று போற்றப்பட்டான். இது நடந்த தினம் ஆடிப்பௌர்ணமி, குருபௌர்ணமி என்றும் கூறுவர். (தலம் - சுவாமிமலை 4-ஆம் படைவீடு). குருவருள் பெற உகந்த தினம். முருகன் தம் அவதாரக் காரணம் நிறைவேற குருவும் நாரதரும் புகன்றிட, திருச்செந்தூரில் தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகப் பதவியேற்றார். வீரபாஹுவைத் தூது அனுப்பினார். முடிவில் தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன், சூரபத்மாதியரையும் அழித்து வெற்றியை நிலைநாட்டினார்.கந்தனின் ஆயுதம் - பராசக்தியின் மறு உருவமான வேல். சூரபத்மன் கடைசியில் மாமரமாக நின்றான். அதை வேலால் துளைக்க. ஒரு பாதி மயிலாகி வாகனம் ஆனான். மறு பாதி கொடியில் சேவலாக மாறினான். ராவண வதம், கம்ஸ வதம் என்பர், ஆனால் இங்கு மட்டும் சூரசம்ஹாரம் என்பர். வேறு எந்த தெய்வ அவதாரத்திலும் நிகழாத சம்பவம், அது தான் கந்தன் கருணை.  இது நடந்த தினம் கந்த சஷ்டி - தீபாவளி - அமாவாசைக்குப் பிறகு வரும் ஆறாவது நாள். இது நடந்த இடம் திருச்செந்தூர் ஜயந்திபுரம் (2 ஆம் படை வீடு) வெற்றி தினம் கந்த சஷ்டி தினம். மாத சுக்ல சஷ்டியும் கந்தனுக்கு ஒரு விசேஷ தினமாக அமைகிறது. சஷ்டியில் விரதம் இருந்தால் சகல நலன்களும் பெறலாம். தேவேந்திரன் கந்தனுக்குத் தனது பெண் தெய்வயானையை மணம் புரிவித்தான். சப்தமி தினம் இது நடந்த இடம் திருப்பரங்குன்றம் - (முதல் படைவீடு) - (திருப்பரங்குன்றத்தில் தெய்வயானை கல்யாணம் பங்குனி உத்திரம் அன்றே.) வேடன் நம்பிராஜன் மகளாக வள்ளி (மாதவன் மகாலஷ்மி நோக்கால் தைப்பூசத்தில் உதித்தவள்) வள்ளி மலையில் வளர்க்கப்பட்டாள். நாரதர் நினைவூட்ட, கந்தன், வேடனாக, வேங்கை மரமாக, கிழவனாக வள்ளியை நாடி, சாடி, தேனும் தினையும் உண்டு, பணிந்து சுயதரிசனம் தந்து, போரும் புரிந்து, வள்ளியை மணந்து கொண்டான். இது நடந்த இடம் வள்ளிமலையில். திருத்தணிகையில் (5-ம் படைவீடு), வள்ளித் திருமணம், தைப்பூசம், மாசி பூசம், பங்குனி உத்திரத் தினங்களில் நடக்கின்றன. சிறுவனாக தோன்றி, ஒளவைக்குச் சுட்ட பழத்தைக் கொடுத்து, பாட வைத்துத் தரிசனம் தந்தான் பழமுதிர்ச் சோலையில் (6-ஆம் படைவீடு).ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ?ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.
இரு முகம் - அக்னிக்கு,மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,நான்முகம் - பிரம்மனுக்கு,ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்குஆறு முகம் - கந்தனுக்கு.நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம், 2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம், 3. வேள்விகளைக் காக்க ஒரு முகம், 4. உபதேசம் புரிய ஒரு முகம், 5. தீயோரை அழிக்க ஒரு முகம், 6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.குமரகுருபரர் - தமது கந்தன் வரலாறான கந்தர் கலிவெண்பாவில் இவ்வாறு கூறுவார்:(ஊமை பக்தருக்கு திருச்செந்தூர் முருகன் அடி எடுத்துக் கொடுக்கப் பாடியது.)சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்முக்தி அளிக்க ஒரு முகம்ஞானம் அருள ஒரு முகம்அக்ஞானம் அழிக்க ஒரு முகம்சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.உயிரை மாய்த்துக் கொள்ள, கோபுரத்தினிற்று விழுந்தவரை ஏற்று, முத்தைத் தரு....... என்று பதம் எடுத்துக் கொடுத்த முருகன் அருளால் அருணகிரிநாதர் இவ்வாறு பாடுவார்:ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றேஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றேகூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றேகுன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றேமாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றேவள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றேஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!திருச்செந்தூர் புராணம் ஷண்முகனை இவ்வாறு கூறுவார்:ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜேஷடரிம் - காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் என்ற ஆறு அவகுணங்களை போக்குபவன் கந்தன். ஷட்விகாரம் - உண்டாக்குதல், இருத்தல், வளர்த்தல், மாற்றமடைதல், குறைதல், அழித்தல், என்ற ஆறு செயல்கள் அற்றவன்.
ஷட்கோசம் - அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன். ஷட்ரசம் - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன். ஷட்ஸூத்ரம் - ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன். ஷண்மதம் - காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக, ஷண்முகனை வணங்குதல் ஷண்மத ஈடுபாட்டுக்குச் சமம். என்னே ஷண்முகப் பெருமை ! ஷட்வேதாங்கம் - சிக்ஷõ, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன்.
ஷண்முகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன்.
ஷட்கோசம் - அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன். ஷட்ரசம் - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன். ஷட்ஸூத்ரம் - ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன். ஷண்மதம் - காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக, ஷண்முகனை வணங்குதல் ஷண்மத ஈடுபாட்டுக்குச் சமம். என்னே ஷண்முகப் பெருமை ! ஷட்வேதாங்கம் - சிக்ஷõ, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன்.ஷண்முகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன்.ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன ?ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்ர - ஸரஸ்வதி கடாக்ஷம்வ - போகம் - மோக்ஷம்ண - சத்ருஜயம்ப - ம்ருத்யுஜயம்வ - நோயற்ற வாழ்வுஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம் (8 எழுத்து) ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.ஓம் நம: ஸரவணபவாய என்பது குஹ தசாக்ஷரம் (10 எழுத்து).ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12 எழுத்து).வடமொழியில் பீஜாக்ஷர மந்திரத்தில் அக்ஷரம் இரண்டு தடவை வரக் கூடாது என்பர். ஆகவே வடமொழியில் சரவணபவ என்பது ஷடாக்ஷரம். ஆறுபடை வீடுகளும் ஆறு  குண்டலினிகளாக விளங்குகின்றன.திருப்பரங்குன்றம் - மூலாதாரம்திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்பழனி - மணிபூரகம்சுவாமிமலை - அனாஹதம்திருத்தணிகை - விசுத்திபழமுதிர்சோலை - ஆக்ஞை.ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்.

இதில் சில செய்திகள் இணையத்தில் இருந்தும் கிடைக்கப்பெற்றமையால் வேறு எங்கும் கூட வாசிக்க இயலும்  என்றும் ஆன்மீக பணியில் 

Astro Senthil Kumar

11 -ல் இருந்தாலும் அது செவ்வாய் தோசத்தை தரும்

"இரு தார யோகமும் பதினொன்றாம் பாவமும் "இந்த தலைப்பில் மதுரையில் பேச நினைத்தேன் ....

அதிகமான பேச்சாளர்கள் இருந்தமையால் வாய்ப்பு விட்டு கொடுத்தேன் ...அதையேதான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன் ..


பொதுவாக அனைத்துவிதமான ஜோதிட நண்பர்கள் ஜாதக கட்டத்தில் கவனிக்கின்றபோது திருமண பொருத்தமும் இருபாலருக்கும் குருபலம் லக்னத்தை கொண்டு கவனிக்கின்றனர் ...

ஆஹா ஓகோ ஜாதகம் அற்புதமா இருக்கு கல்யாணத்தை முடியுங்கள் என்று சொல்லி விடுகிறோம் (நான் உட்பட )


இருதார யோகத்தை கொடுப்பதில் செவ்வாய் பகவானுக்கு அதிகமான பங்களிப்பு இருக்கிறது ....விஷயத்திற்கு வருவோம் ...செவ்வாய் லக்னத்தில் இருந்து "இரண்டு ""நான்கு ""ஏழு ""எட்டு ""பன்னிரண்டு "ஆகிய ஸ்தானத்தில் இருந்தால் அது "செவ்வாய் "தோசமே !!!இது பண்டைக்காலத்தில் இருந்ததையும் விட இப்போது புதிய புதிய வழிமுறைகளை கொண்டு கவனிக்கும் "நான்கு வார "பயிற்சி ஜோதிடர்கள் மட்டுமன்றி ஜாதகர் -ஜாதகி குடும்பமும் சேர எண்ணி எண்ணி எண்ணி எண்ணி வாழ்க்கையை தொலைக்கிறார்கள் ...


இந்த விதமாக பார்த்தால் அது தவறிப்போய் விடுகிறது ...நம்முடைய கண் பார்வைக்கு செவ்வாய் தோசத்தை தருகின்ற ஜாதகத்தில் இருக்கும் "செவ்வாய் "சிலருக்கு தோசத்தை தருவதில்லை ..

அதே நேரத்தில் "செவ்வாய் "தோசமே இல்லாத ஜாதகத்திலும் கூட செவ்வாய் ஒரு ஆட்டு ஆட்டி விடுகிறாரே ____விஷயமும் இது தான் .


லக்னத்தை வைத்து பார்க்கும்போது சில ஜாதகங்களில் செவ்வாய் தோசமே இல்லாமல் இருக்கும் ஆனால் அந்த ஜாதகத்தில் செவ்வாய் "இருதார யோகத்தை "கொடுத்து விடுகிறார் ..


விதி ஒன்று ;-லக்னத்தை வைத்து செவ்வாய் இருக்கும் இடத்தை பார்ப்பதை விட செவ்வாய் பார்வை எந்த எந்த ஸ்தானத்திற்கு விழுகிறது என்பதை பார்ப்பதே இல்லை ..உதாரணமாக செவ்வாய் லக்னத்தில் இருந்து ஏழாம் அதிபர் ஆறில் அல்லது எட்டில் இருந்தால் இங்கே முறையே களத்திர காரகனுக்கு எட்டு செவ்வாய் அடுத்தப்படியாக லக்ன செவ்வாய் எட்டில் இருக்கும் களத்திர காரகன் மீது பார்வை செலுத்துகிறது இது நிச்சயமாக இருதார யோகத்தை தரும் 


(பல்வேறு ஜாதகங்களை ஒப்பீடு செய்த பின்னர் தான் இதைப்பற்றி பேசுகிறேன் )விதி இரண்டு ;-


செவ்வாய் சந்திரனுக்கு எட்டில் இருப்பதை செவ்வாய் சுக்கிரனுக்கு எட்டில் இருப்பதை செவ்வாய் சந்திரனுக்கு நான்கில் இருப்பதை செவ்வாய் சுக்கிரனுக்கு நான்கில் இருப்பதை இப்போதைய ஜோதிட பயிற்சி ஆசிரியர்கள் ஒப்புக்கொள்வதாக இல்லை ...ஆனால் உண்மையில் இதுபோன்ற அமைப்பில் இருக்கும் ஜாதக ஜாதகர்கள் வாழ்வாதாரத்தை கவனியுங்கள் நிச்சயமாக "இருதார யோகத்தை "செய்து இருக்கும் ..


"சந்திர காவியம் ""ஜாதக சந்திரிகா "போன்ற மூலநூல்களில் இருக்கும் கருத்தின்படி "செவ்வாய் "பார்வையில் "நான்காம் "பார்வையும் "எட்டாம் "பார்வையும் கடும் தோசத்திற்கு ஆளாகிறது என்பதே ஆனால் அதை இன்றைய ஜோதிட போதனைகள் கொடுக்கும் ஆசிரியர்கள் ஒப்புக்கொள்வதாக இல்லை ..


"அதெல்லாம் இல்லை என்னுடைய புத்தகத்தில் வாசியுங்கள் எல்லாம் புரியும்" என்று வகுப்பின்போது முற்றுப்புள்ளி வைத்து விடுவார்களே தவிர "மூலநூலின் சாராம்சம் "பற்றி ஒப்புக்கொள்வதில்லை ...


((என்ன செய்ய ,,,,எங்களுக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டோமா ??என்பது அவர்கள் மைண்ட் வாய்ஸ் !!!சரி அதை இன்னொரு பதிவில் பேசுவோம் ))


சிம்மலக்ன கும்பலக்ன ஜாதகத்தில்பதினொன்றாம் பாவத்தில் இருந்த செவ்வாய் "இருதார யோகத்தை "பல்வேறு ஜாதகி ஜாதகருக்கு செய்து இருக்கிறது ..(ஆய்வின் ஜாதகங்களை எல்லாம் என்னுடைய அலுவலகத்தில் வைத்து இருக்கிறேன் ..வாதிட விரும்புவோர் அங்கே வரவும் )11 அதிபர் வலுவாக இருப்பதும் 11 அதிபர் இரண்டில் 2ம் அதிபர் உடன் கூடுவதும் 2ம் அதிபர் 11ல் பரிவர்த்தனை பெறுவது அல்லது 11 ம் அதிபர் உடன் 11ல் கூடுவதும் செவ்வாய் 11ம் அதிபர் 7 அதிபர் மீது தன்னுடைய பலம்வாய்ந்த "நான்காம் ""எட்டாம் "பார்வையை செலுத்துவது போன்றவை "இருதார யோகத்தை "செய்கிறது ..செவ்வாய் 11ல் இருந்தாலும் பாதிப்பு கொடுக்கிறது ....எப்படி ???எனும் கேள்விகள் வரலாம் ....செவ்வாய் நான்காம் பார்வை எந்த வீட்டின் மீது செலுத்துகிறார் ???இரண்டாம் வீட்டை பாதிக்கும் அல்லவா ???அப்போது இரண்டாம் மற்றும் பதினொன்றாம் அதிபர்கள் பாவர்கள் பார்வையில் அல்லது சேர்க்கையில் பாவர்கள் மத்தியில் சிக்குண்டு இருந்தால் அது ஒருவித செவ்வாய் தோசமே !!ஒரு பெண்ணுக்கு (மேஷ லக்னம் &மகர லக்னம் ) லக்னத்தில் இருந்து ஆறில் செவ்வாய் லக்னத்தில் இருந்து 12ல் சந்திரன் &சுக்கிரனும் இருக்க செவ்வாய் (மேஷ லக்ன களத்திர காரகன் சுக்கிரன் மீதும் சுகஸ்தான சந்திரன் மீதும் தன் சித்திரை நட்சத்திர சாரத்தில் இருந்து பார்ப்பதும் மகர லக்னமாக கொண்ட ஜாதகிக்கு களத்திர காரகன் சந்திரன் மீதும் சுக்கிரன் மீதும் தன் மிருகசீரிடம் சாரத்தில் பார்வையை செலுத்துவது பாதிப்பு கொடுத்து இருக்கிறது )செவ்வாய் ஆறில் மறையும்போது பாதிப்பு தருமா ???என்றால் மேஷலக்னமாக அமைந்துள்ள ஜாதகத்திற்கு பாதக கிரகம் 11ம் அதிபர் சனிபகவான் தன் வீட்டில் அல்லது சாரத்தில் வலுப்படுத்தும் போது 
மகரலக்ன ஜாதகத்திற்கு 11ம் அதிபர் செவ்வாய் ஆறில் மறைந்தாலும் தன் சாரத்தில் (மிருகசீரிடம் ) அல்லது 3&12 க்குடைய குரு சாரத்தில் (புனர்பூசம் )சாரத்தில் வலுப்படுத்தல் போன்றவை "இருதார யோகம் "செய்விக்கும் ...

பொதுவாக 11ம் அதிபர் பலம்வாய்ந்த தன்மையை அடையும்போது "ஜோதிடர்கள் "ஆகிய (என்னையும் சேர்ந்து தான் )சொல்வது என்ன ???"ஜாதகருக்கு ஒன்றுக்கும் வாகனங்கள் யோகம் உண்டு ""ஜாதகருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அமையும் ""ஜாதகருக்கு வாடகை வரவு வட்டி வரவு போன்றவை வரும் "என்பதே ...அதேநேரத்தில் அந்தளவிற்கு பல்வேறு வருமானத்தை கொடுக்கும் "11"அதிபர் பலம்வாய்ந்த தன்மையுள்ள ஜாதகத்தில் செவ்வாயின் பார்வைக்கு 7 & 11 அதிபர்கள் மற்றும் சுக்கிரன் சிக்குண்டு இருக்கும் நிலையிலிருக்கும் எந்தவொரு ஜாதகமும் "இருதார யோகம் "தான் ..


குறிப்பு ;- "தாமதமாக திருமணம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் " என்று "நமக்கு நாமே "சொல்லி சமாதானம் செய்யக்கூடாது ...30 ஐ தாண்டிய பல்வேறுபட்ட ஜாதகங்களில் "இருதாரம் "அமைந்துள்ளன ...(அனைத்து விஷயங்களுக்கு ஆதாரங்கள் இருக்கிறது ....அது எங்கும் இல்லை உங்கள் இடத்தில் இருக்கும் "பழமையான "சந்திர காவியம் ""ஜாதக சந்திரிகா "போன்றவைகளை படியுங்கள் ...அல்லது உதாரணமாக "இருதாரம் "அமைந்த உங்களுக்கு தெரிந்த வாடிக்கையாளர் ஜாதகங்களை வாங்கி ஆய்வுகளை செய்யுங்கள் ...) 


நீங்கள் எத்தனை ஆண்டு அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் ஆகினும் உங்களுக்கே "ஜோதிடம் புதியதாக தெரியும் "என்றும் ஜோதிடப்பணியில் !!பெருந்துறை ஶ்ரீவீரபத்ர ஜோதிட மையம் ..Astro Senthil Kumar ....

Monday 7 September 2015

ஆயுள் முடியும் நிலையில் இருப்போர் எப்படி இருப்பார்கள் ???

காலத்தை முடித்து கைலாயம் செல்ல இருப்போர் எப்படி இருப்பார்களோ என்று கொஞ்சம் யோசித்தேன் ...


ஜோதிடத்தால் எல்லாம் கணிக்கிட இயலும் என்பதை எடுத்துரைக்கும் "குமாரசாமியம் "தன்னுடைய 50வது படலத்தில் சொல்லி இருக்கும் பாடல்களை கொஞ்சம் கவனிப்போமே ...


"கால்கரந்தெப் புண்ணனையா தொருதரநீர் குளிக்கில் கண்ணாடி யில்சிரகா ணாதுநுதல் கவித்து மேலெதிர் பார்த்திடன் மணிக்கை பருக்குமொடு விரலில் விளக்கடங்கா தொளிரு நடு விரல் மடக்க மிகுந்த நால்விரலில் அணிவிரல் மேல் எழும்புமித ழெயிறு நாக்கறுக்கும் கண் செவி நாசிகை குளிர் பஞ்சணைதல் போல் வெளிரி நொய்தூறும் வாய் புகையுமலம் கழியும் போது புலால் வெடிநாறும் திதித்தினம் பொன்றுதற்கே """----குமாரசாமியம் பாடல் எண் ;-409


"ஒருதரம் நீரில் குளித்து எழுதிருக்கில் உள்ளங்கை ,கால் ,தொப்புள் நனையாது இருக்கிலும் ..(ஆற்றில் குளிப்பதை சொல்லி இருக்கிறது என்பதே பொருள் )கண்ணாடி பார்க்கில் தன் சிரசு தனக்கு காணாமல் இருக்கிலும் ..(முகத்தை பார்க்க கையில் கண்ணாடி கொண்டு பார்ப்பதில் சொல்லி இருக்கிறது என்றே பொருள் )புருவ மத்தியில் மணிக்கையை வைத்து தன் கண்ணால் மேலாக பார்க்கில் அடிக்கை சிறுத்து மணிக்கை பெரியதாக இருக்கும்போதும் ஒருவிரலில் விளக்கு அடங்காது ஒளிரிலும் நடுவிரல் பூமியில் மடக்க நின்ற நான்கு விரலில் அணிவிரல் மேல் எழுப்பினாலும் இதழ் வயிறு நாக்கு கறுத்தாலும் கண் செவி நாசி இவை குளிர்ந்து பஞ்சணைந்து மிருதுவாய் வெளிரினும் வாய் புகையினும் மலம் கழியும் போது புலால் வெடி நாறுகினும் ஒரு பட்சத்தில் மரணம் என்று பொருள் ...(முடியாத நிலையில் வயோதிகர் சில இல்லங்களில் இருப்பார்களே அவர்களை கவனித்து பராமரித்து வரும் குடும்பத்தினர் இதை நிச்சயமாக உணரலாம் )


அடுத்தப்படியாக இன்னும் இரு பாடல்கள் இதே "காலம் அறிதல் படலம் "சொல்லி இருக்கிறது அடுத்த பாடலில் சொல்லப்பட்ட சூட்சுமம் 


"நற்குணம்பே தித்தல் பருத் தல்விளைத்த லிதுவ தாதல்பெறு நாட்கடந்தப் பாற்றனையர் காண இற்பெறுதல் வெகுகாலம் பாழடைந்த இடத்தில் இளமையிழந் தவறைமண மேற்றன் மனம் இசையாள் கற்புடைமை அழித்தலுப காரமறந் தவர்கட் காகுலம்செய் திடலான்ம வதைக்காதல் பெரியோர் சொற்குரமேற் றல்புலால் மறுத்து வெகுநாட்பின் தூய்த்தலவ்வாண் டலதிரண்டில் பொன்றுதல் சொல்லுகவே "--------குமாரசாமியம் 50வது படலத்தில் பாடல் எண் 410..


பொருள் ;-


தன்னுடைய சுயநினைவு பேதிக்கும் போதும் ..குண்டாக இருந்தவர் திடீரென்று இளைத்து போவதும் ..இளைத்து இருப்பவர் திடீரென்று உடல் பெருத்து போவதும் ...பேறுகாலம் கடந்து வயோதிகத்தில் குழந்தை பெறுவதும் ....வெகுநாட்களாக பாழடைந்த இடத்தில் மனை எடுத்தலும் ...இளைமை தப்பின வயோதிக பெண்ணை மணப்பதும் ...மனநிலை சரியில்லாத பெண்ணை கற்பழிப்பு செய்வதும் ..ஒருவர் செய்த உபகாரம் மறந்து அவருக்கே எதிராக அபகாரம் செய்வதிலும் ...ஆன்ம வதம் செய்வதிலும் ...பெரியோர்களை மனம் நோக செய்து அவர்களின் குரூர வசனத்தில் சாபத்தை பெறுவதும் ....வெகுநாட்களாக புலால் (மாமிசம் )உண்ணாமல் வாழ்ந்து மேம்போக்காக வாழ்ந்து பின்னர் திடீரென்று புலால் (மாமிசம் )உண்பதும் செய்தால்இதுபோன்ற இழிச்செயல் செய்தோர்களை அந்த ஆண்டும் அல்லது அதற்கு அடுத்த ஆண்டிலும் மரணம் தப்பாமல் நடக்கும் என்பர் ....இந்த பாடல்களில் சொல்லியபடி உணர்ந்து எழுதி இருக்கிறார்கள் ...மேற்சொன்ன விஷயங்களில் எல்லா தவறையும் யாரும் செய்யமாட்டார்கள் ....ஆனால் சிலர் மாமிசம் புசிக்காமல் இடையில் கை விட்டவர்கள் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து புசித்தால் அவர்களை விரைவாக காலதேவன் அழைக்கிறார் என்றே பொருள் ....

இந்த "காலம் அறிதல் படலம் "இன்னொரு பாடலையும் சொல்லி இருக்கிறது..அந்த பாடல் படியுங்கள் ..


"பொன்றுதலோர் புறத்தொரு நாள் காண்டயனம் உபய போதெனின் முத்தினம் தினமாய்ப் புகல்வர் சரமாகி நின்றவன் மெய் அசையாமல் நிழலசையில் திதியாம் நீருமிழ்வான் வின்மறைந்தே திரோடினி லத்தில் ஒன்றிய கால் சுவட்டுருவம் பாதியுறில் செவிக்கு ஓசையறில் ருசிபிறழின் நயனவிழிப் பொளிக்கில் தென்திசை யுற்றிடற் குளநாள் தெசமாகும் இதன்மேல் திரிமல்லி வினோத வியல் குள்ளதும் செப்புதலே """"

குமாரசாமியம் 50வது படலத்தில் பாடல் எண் 411

(காலம் அறிதல் படலம் )பொருள் ;-


ஒருநாள் முழுவதும் ஒரு பக்கமாக சரம் (மூக்கின் மூச்சுக்காற்று )ஓடில் ஒரு ஆண்டில் அச்சாதகர் மரணத்தை அடைவார் ..இருநாள் தொடர்ந்து ஒருபுறம் சரம் ஓடில் ஒரு அயனத்தில் மரணம் ....(உத்தராயணம்/ தட்சிணாயனம் ) ஆறுமாதம் ...மூன்று நாட்கள் சுவாசம் ஒரு சரமாக ஓடில் சந்திரன் ஒரு சுற்று (27 நாட்களில் )வருமுன் மரணமே ....சரீரம் அசையாமல் இருக்கும்போது நிழல் மட்டுமே அசையும் பட்சத்தில் பதினைந்து நாட்களில் மரணம் நிச்சயமாக ஏற்படும் ...வாய் நீர் உமிழும் போது வானவில் போலும் பஞ்ச நிறமும் வளைதல் இல்லாமல் நேர் ஓடுவதும் ,நிலத்தில் காணிலும் ,செவிக்குள் ஓசை வரும் அறிகுறிகள் ஏற்படுவதும் ருசி பேதிக்கிலும் நயன விழிப்பு ஒளிக்கிலும் பத்துநாளில் மரணம் ......


சிறுகுறிப்பு ;- எனக்கு நேரில் முன் வாழ்ந்த சில ஜோதிடர்களாக வாழ்ந்த சில ஆசான்கள் தனக்கு இந்த மாதத்திற்கு மேலே இருக்க மாட்டான் இறைவன் அழைக்கிறார் என்று சொல்லி அதுபடியே சரியாக மரணத்தை அடைந்து இருக்கிறார்கள் ...நானும் கொஞ்சம் வியந்து இருக்கிறேன் ..(நீங்களும் கூட இதுபோன்ற ஆசான்களே சொல்லக்கேட்டு அதுபோலவே நடந்து இருப்பதை அறிந்து இருப்பீர்கள் என்றே நம்புகிறேன் )
எப்படி சாத்தியம் ஜோதிடத்தால் முடியுமான்னு யோசித்தால் 
"நிச்சயமாக எல்லாம் சாத்தியம் தான் "


என்பதற்கு இந்த மூன்று செய்யுள்களை மூன்று பாடலையும் வாசித்து இப்போது அறிந்து இருப்பீர்கள் என்றே நம்புகிறேன் ..


இனி அடுத்தபடியாக வேறு ஒரு படலத்தை ஆய்வுகள் செய்வோமே ...நன்றி வணக்கம் ..என்றும் ஜோதிடப்பணியில் !!தொடர்புகொள்ளஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம், புதுபஸ் நிலையம் பின்புறம் பெருந்துறை   -638 052ஜோதிடர்A .செந்தில் குமார் செல்: +91 98427 69404             +91 98434 69404    
astrosenthilkumar@gmail.com 

Monday 27 July 2015

காலசக்ர திசை -1

காலசக்ரம் ஜோதிடத்தில் மிக தொன்மையானது என்பதை சுட்டிக்காடும் பதிவு இது
ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொக்கிஷம்
ஜோதிடம் மஹரிஷி பராசர முனிவரால் மக்களுக்கு வகைப்படுத்தி கொடுக்கப்பட்டது..
பிரபஞ்சம் தோன்றி இரவும் பகலும் மாறி மாறி வந்ததின் விளைவாக சித்தர்கள் பொழுதை உணர்ந்தனர்..
சூர்யனின் ஓட்டத்தை 360 பாகை சுற்றி வருவதை அறிந்தனர்..
அதில் மூன்று பிரித்து ஒவ்வொரு 120 பாகைக்குள் 4 ராசிகளை அதன் தன்மையை [ நெருப்பு நிலம் காற்று நீர் ] என வகைபடுத்தினர்..அவர்கள் சிந்தையில் ஞானத்தால் யோகித்தது அனைத்தும் இன்றைய விஞ்ஞானிகள் ஏற்று கொண்டே தீர வேண்டிய அளவிற்க்கு அன்றே கணித்தனர்..
விஷயத்துக்குள் செல்வோம்..
 “அருக்கன் வீதிஇது முன்னோர்கள் கண்டறிந்தது..இதையே இன்று ஆங்கிலத்தில் Milky way என்றும் தமிழில்பால்வீதிஎன்றும் அழைக்கிறோம்..
அந்த வீதியில் மூன்று பாகங்களை கொண்ட 120 பாகைகளை பாராசர முனிவர் 120 ஆண்டுகள் என ஒரு மனிதனுக்கு கணித்து எடுத்தார்கள்..அதை சந்திரன் ஸ்புடகலை ரீதியாக சுற்றி வரும் கணக்கில் முதல் 13.20 அல்லது 800 கலைகள் கேதுவின் 7 ஆண்டுகள்..
அடுத்த 13.20 அல்லது 800 கலைகள் சுக்கிரனின் 20 ஆண்டுகள்
அடுத்த 13.20 அல்லது 800 கலைகள் சூர்யனின் 6 ஆண்டுகள் என முதல் 120 ஆண்டினை கணக்கிட்டு 9 நடசத்திரங்களை கொண்டு 120 ஆண்டுகள் பூர்த்தி செய்து   அடுத்தடுத்த மறு இரு சுற்றும் அதேபோல கணக்கிட்டார் .. ஆக 360 பாகைக்கு சரியான விகிதாசாரத்தை கொண்டே அவைகள் நிர்ணயம் செய்யப்பட்டது
இதை விம்சோத்ரி திசை எனும் மஹாதிசை எனும் நட்சத்திர அடிப்படையானது.. இதுவரை அப்படி தான் இனி நாளைக்கு யாரேனும்நவீன பராசரர்கள்வந்து மாற்றுவார்களா என்பது எனக்கு தெரியாது..
பராசரரால் வகைப்படுத்திய இக்கணிதமே உலக அளவில் தற்போது நடைமுறையில் இருக்கிறது..ஜோதிடம் அறிந்த அனைவரும் ஒப்புக்கொள்ளும் விஷயம் தான் இது..
சென்ற நூற்றாண்டில் இதில் அதிமதி நுட்பமாக காலம்சென்ற கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 120 பாகைக்கு 120 ஆண்டாக கணக்கிட்டதை மிக நுட்பமாக ஆய்வுகள் செய்து 13.20 எனும் 800 கலைக்கு [ ஒரு நட்சத்திரம் உள்ளே ] வைத்து செய்த கணக்கு அவருடைய ஆய்வில் மிகச்சரியான பலாபலனை அறிந்தார்..அதில் உருவானது தான்கிருஷ்ணமூர்த்தி பத்ததிஇந்த வகை ஆருடம் என்பதுஜோதிடம் பார்க்க வந்தவர்கள் என்ன குணாதிசயம் வந்தவர் ஜோதிடம் பார்க்க வந்த எண்ணம் ஈடேறுமா??இல்லையா??என்பதை மட்டுமே சொல்கிறதே தவிர இப்போதையகிருஷ்ணமூர்த்தி பத்ததிஎனும் K.P.சிஸ்டத்தில் எந்தவொரு இடத்திலும் பராசரர் வகுத்த திசாபுக்தியை பற்றிய விமர்சனம் செய்யவில்லை..அதில் இருந்து மாறுபட்ட திசையை கொண்ட கணிதம் எதையும் உட்புகுத்தவில்லை..மாறாக கே.பி.க்கு என தனிப்பட்ட அயனாம்சம் தயார் ஆனது [ சரி சரி எத்தனை எத்தனை அயனாம்சம் இதுவும் இருக்கட்டும் கொஞ்சம் ஓரமாகவே ] உடனே கே.பி தான் மிக நுண்ணிய கணக்கு என்று கருத வேண்டாம்..
உலகிற்க்கு மஹாதிசை அறிமுகம் செய்த பராசரர்கிருஷ்ணமூர்த்தி பத்ததிஎனும் அதிமதி நுட்பத்தையும் விட மிக மிக அதி மதி நுட்பமாக ஒரு கணக்கியல் செய்தார் அதுவே நாம் இங்கே அறிந்து கொள்ள வேண்டிய முதன்மை விஷயம் .
இதையெல்லாம் வைத்து ஜோதிட பலாபலனை எடுத்து சொல்லும் ஜோதிடருக்கு பண்டையகால சொல்வழக்குகர்ம தலைவன்என்றே அழைக்கப்பட்டனர் .. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கர்மாவை சரியாக செய்ய மக்களுக்கு நல்வழி காட்ட அவ்வாறு அழைக்கப்பட்டனர்..
ஆனால் இன்றைய ஜோதிடர்கள் கண்டபார்முலாவைத்து மக்கள் செய்ய இருக்கும் கர்மாக்களை தடுக்கும் வண்ணம் அல்லவா? செயல்படுகிறார்கள்..
பழைமையான சூடாமணி உள்ளமுடையான் எனும் ஜோதிட நூல் இருக்கிறது ..அது இல்லாதவர்கள் கொஞ்சம் வாங்கி படியுங்கள்..
அதில் ஒரு பாடலை இங்கே கவனிப்போம் ..
பரகித கணிதம்
பொன்னவன் அனைய முன்னோர் பொருந்திய நவகோள் எண்ணம் பண்ணிய வடநூலால் செய்த பரஹித பனுவல் தன்னை பண்ணிய தமிழினாலே மண்ணிய நோக்கறியும் வண்ணம் அன்னமின் நடையினாய்-உரைசெய்வன் அழிவில்லாமல்
சூடாமணி உள்ளம் உடையான் செய்யுள் எண் :-371 இவ்வாறு சொல்கிறது..
இதன் அர்த்தம் சரியாக பிரகஸ்பதி முதலிய ஏனைய ஜோதிட முன்னோர் வித்துவான்கள் நவகோள் நிலையை அறிந்து வடமொழியில் சொல்லப்பட்டதை எல்லாம் தமிழினால்  ஜோதிடத்தில் பற்று உள்ள அனைவரும் கொஞ்சம் அறியும் வண்ணம் எடுத்து செய்து ஜோதிடத்தை அழிவில்லாமல் காப்பாற்று என சொல்கிறது இச்செய்யுள்.. இதை சரியாக செய்வதே பரகித கணிதம் ஆகும்..இதை செவ்வென செய்வோன் கர்ம தலைவன் ஆவர் ..அதாவதுசரியான ஜோதிடர்ஆவர்..ஒவ்வொரு மூலநூலில் தேடி பாருங்கள் இதுவரை அறியாத பல்வேறுசூட்சுமங்களைஉள்வாங்கி இருக்கிறது .. அதுவேஜோதிடம்இது பெரிய யானை தான் பாவம் நாலு குருடனிடத்தில் சிக்கி கொண்டு படும்பாடு இருக்கேஇந்த ஜோதிட யானைக்குவாய் இருந்தால் அழுது இருக்கும் சரி அதை அப்புறம் பேசுவோம்..
இன்றைய நாடி ஆகட்டும் .K.P. அல்லது நிமித்தம் ,ஆருடம், சாமுத்திரிகா லக்ஷ்ணம் ஆகட்டும்  எல்லாம் பாரம்பரிய ஜோதிடத்தில் இருந்து வந்தவை தான்.. அதை யாராலும் மறுக்க முடியாது ..இல்லை மறுத்து தான் பாருங்களேன்.
ஒரு ஜோதிடன் ஒரு ஆசானிடம் சில ஆண்டு மட்டுமே பயின்று தன்னுடைய ஆசான் 60 ஆண்டு அனுபவம் மிக்கவன் .அதை எல்லாம் தனக்கு போதனை செய்து விடார் என்று தன்னை பிரபலம் செய்து கொள்வதை விட முட்டாள்தனம் வேறில்லை ..தன்னிடம் என்ன திறமை தன்னுள் முடங்கி இருக்கிறது என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும்..அதுவே சிறந்த ஜோதிடனுக்கு அழகு ..
காசிப முனிவர் மகன் தான் சூர்யன் எனில் அவர் மனைவி எப்படி அத்தனை உஷ்ணம் வயிற்றில் தாங்கினார்,,..??
முனிவர் மனைவிகள் இல்லற சேர்க்கையில் ஈடுபட்டார்கள் என்றால் இன்று நித்தியானந்தாவை நிந்திப்பது ஏன்??
என்னவோ ஜோதிடமே என்னால் தான் வளர்கிறது என்பவர் கொஞ்சம் ஓரமாக செல்லவும் ..காரணம் ஜோதிடத்தை வைத்து தான் நீங்கள் வாழ்கிறீகளே தவிர ஜோதிடத்தை நீங்கள் வாழவைக்கவில்லை ..அதை உங்களால் வாழவைக்க முடியாது அந்த தகுதியை இழந்து விட்டீர்கள் என்றே சொல்ல முடியும்
அடுத்த பதிவில் எம் பராசரர் எமக்கு அருளிய காலசக்ர திசையை கணிக்கும் முறை பற்றி பேசுவோம்


இன்னும் பதிவுகள் வரும் …..தொடரும் -2