Saturday 11 April 2020

ஜோதிட பயணம் [ பகுதி-9]

ஜோதிட பிரயாணம் பாகம்-9

சந்திரன் நின்ற ராசிக்கு ஜென்மத்தில் குரு வரும்போது வாழ்க்கையில் மிகவும் துன்பம் நோய் பிடிக்கும் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும் பண விரயம் வீண் கவலை வீண் அலைச்சல் முதலியவை ஏற்படும் ஆனால் மனைவி மக்கள் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் உதவியும் தக்க தருணத்தில் உதவியும் கிடைக்கும் செய்தொழிலில் மாற்றம் ஏற்படும் குரு அடுத்த வீட்டிற்கு மாறும் சமயம் எல்லா நன்மைகளும் உண்டாகும் கவலைகளும் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும்

குரு 2-ஆம் இடத்திற்கு வரும்போது உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும் புதிய ஜீவன் ஒன்று குடும்பத்தில் தோன்றும் பொருள் வரவு செய்தொழிலில் மனநிம்மதியும் முன்னேற்றமும் உண்டாகும் கோயில்களுக்கு செல்லும் பாக்கியம் கிட்டும் மனைவி மக்கள் மகிழ்ச்சி உண்டாகும் நண்பர்கள் உதவி செய்வார்கள் விரோதிகளின் சூழ்ச்சியால் மாயமாய் மறையும் மேலதிகாரிகள் ஆதரவு உற்சாகம் அழிப்பார்கள் பதவி உயர்வு ஏற்படும் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும்

குரு மூன்றாம் இடத்திற்கு வரும்போது உறவினர் நண்பர் இடையே விரோதம் ஏற்படும் பணத்தட்டுப்பாடு தலைக்கு மேல் போகும் பொருள் வரவில் தடை ஏற்படும் செய்தொழிலில் தடங்களும் வீன் கெட்ட பெயரும் உண்டாக்கும் மேலதிகாரிகள் ஆதரவாக இருக்க மாட்டார்கள் வெளியூர் பிரயாணங்கள் இருக்கும் வீண் அலைச்சல் மனக்கவலை வேலைக்கு உணவு உண்ண முடியாத நிலை ஆகியவை ஏற்படும் மனைவி மக்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும் அவர்கள் உதவியும் ஆதரவும் இருக்கும்

குருபகவான் நான்காம் இடத்திற்கு வரும்போது மனம் ஒரு நிலையில் இருக்காது செய்தொழிலில் ஆதாயம் தராது மேலதிகாரிகள் ஓரளவே உதவி புரிவார்கலக ஆக இருப்பார்கள் உடல் நிலையும் பாதிக்கப்படலாம் குடும்பத்தில் நெருங்கிய உறவினர் ஒருவரின் உடல் நிலை மிக மோசமாக மருத்துவச் செலவு அளவுக்கு மீறிப் போகும் வெளியூர் பிரயாணம் இருக்கும் கல்வி சம்பந்தமாக நல்ல முடிவுகள் ஏற்படும் மேற்படிப்புக்கு வசதி உண்டாகும் மனைவி கணவன் உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் மக்களால் நன்மை உண்டாகும்


குரு பகவான் ஐந்தாம் இடத்திற்கு வரும்போது ஜாதகருக்கு அதுவரை திருமணம் ஆகாத இருந்தால் திருமணம் நடைபெறும் மக்கட்பெரு ஏற்படும் பொருளாதார நிலையில் அபிவிருத்தி ஏற்பட்டு புதுமனை பயிர் நிலம் ஆகியவை வாங்கலாம் புதுமனை புகும் சந்தர்ப்பம் ஏற்படும் கடந்த ஆண்டு பட்ட துன்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு ஏற்பட்டுவிடும் நண்பர் உறவினர் மேல் அதிகாரிகள் ஆகியோர் ஆதரவும் உதவியும் இருக்கும் பதவி உயர்வு கிடைக்கும் வெளியூர் உரையாடல்களில் நல்ல பலன் ஏற்படும் பெற்றோர் நிலை நல்ல நிலையில் இருந்து வரும் கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி அளிக்கும்


குரு பகவான் 6-ஆம் இடத்திற்கு வரும்போது தொல்லைகள் அதிகரிக்கும் மனது எப்பொழுதும் வாட்டி வரும் குடும்பத்தில் நோய் பரவும் செய்தொழிலில் கடன்கள் உண்டாகும் பொருள் நஷ்டம் ஏற்படும் மிகவும் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நண்பர்கள் உறவினர்களிடம் விரோதம் ஏற்படும் துன்பங்களுக்கு உள்ளாக நேரிடும் மனைவி மக்கள் மாத்திரம் ஆதரவு காட்டாவிட்டால் இல்லத்திலேயே துறந்து வெளியூர் அல்லது தூரம் பிரயாணம் செய்வதற்கு மணம் துணிந்து விடும்


குரு பகவான் ஏழாம் இடத்திற்கு வரும்போது அரசாங்க ஆதரவு கிடைக்கும் பெரியோர்கள் சந்திப்பு ஏற்படும் சமூகத்தில் கவுரவம் அதிகரிக்கும் ஆரோக்கிய முன்னேற்றமடையும் மணமாகாதவர்களுக்கு மணமாகும் ஏற்கனவே திருமணம் நடைபெற்று பிரிவு அல்லது மனைவி கணவன் மரணம் ஏற்பட்டு இருந்தால் இரண்டாவது திருமணம் நடக்கும் செய்தொழிலில் நல்ல ஆதாயம் உற்சாகமும் உண்டாகும் மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும் பதவி உயர்வு ஊதியம் அதிகரிப்பு இருக்கும் கணவன் மனைவி உறவு நேர்மையுடன் விளங்கும் மக்கள் துணை புரிவார்கள்


குருபகவான் 8-ம் இடத்திற்கு வரும்போது தீமையே பெரும்பாலும் செய்வார் என்றாலே சொல்லவேண்டும் எட்டாம் இடம் என்பது அவருக்கு தீய எண்ணத்தை ஏற்படுத்தும் தீ விபத்து ஆயுதங்களால் காயம் எதிர்பாராத செலவினங்கள் முதலியவற்றை ஏற்படுத்தும் இந்த நாட்களில் எச்சரிக்கையுடன் பொறுமையுடனும் இல்லாவிட்டால் மனைவி மக்கள் உறவினர் நண்பர்கள் ஆகியோருக்கு விரோதம் ஏற்படும் கணவன் மனைவி உறவு ஏதோ பட்டும் படாதது போல் இருக்கும்


குரு பகவான் 9-ஆம் இடத்துக்கு வரும்போது நல்ல பண்புகளும் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும் எடுத்த காரியங்கள் வெற்றியுடன் முடிவடையும் தியானங்களில் அனுகூலங்கள் ஏற்படும் ஆதாயமும் கிடைக்கும் குடும்பத்தில் ஒரு புதிய ஜீவன் உதயமாகும் மணமாகாதவர்களுக்கு மணமாகும் கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் சமூகத்தில் கவுரவம் நினைக்கும் அத்தனை நாட்களாக இருந்த கடன் தொல்லைகள் கவலைகள் அனைத்தும் அகலும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்..


குரு பகவான் பத்தாம் இடத்திற்கு வரும்போது ஜாதகர் அதுவரையில் செய்து வந்த தொழில் கடும் நஷ்டம் ஏற்படும் அரசாங்கம் மேலதிகாரிகளிடம் பணிபுரிபவர்கள் ஆக இருந்தால் உத்தியோகம் பறிக்கப்படலாம் அல்லது தகுதியும் குறைக்கப்பட்டு நிலையை அடைய வேண்டிய நேரத்தில் குரு வந்ததுமே பதவி பறிக்கப்படலாம் அதன் பிறகு நிலையில் அபிவிருத்தி ஏற்படும் உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும் கணவன் மனைவி உறவு சிறப்புடன் விளங்கும் நண்பர்கள் உறவினர்கள் உதவியும் ஆதரவும் அளிக்கும்


குரு பகவான் 11-ஆம் இடத்திற்கு வரும்போது விரோதிகள் பணிவார்கள் குடும்பத்தில் நிலவிய மனஸ்தாபங்களும் அதுவரை பிடித்திருந்த நோய் வறுமை மறையும் செல்வம் செல்வாக்கு கௌரவம் புகழ் அந்தஸ்து அதிகரிக்கும் எடுத்த காரியங்கள் வெற்றி உண்டாகும் நினைத்தவை நடைபெறும் லாட்டரி பந்தயம் ஆகியவற்றில் நல்ல ஆதாயம் கிடைக்கும் செயலுக்கு ஊக்கமும் ஆதரவும் கிடைக்கும் மேலதிகாரிகள் உதவி புரிந்து பதவி உயர்வு ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் கணவன் மனைவி உறவு இன்பமாக இருக்கும் மக்கள் உறவினர் உதவியுடன் ஆதரவு பெருகும்


குரு பகவான் 12-ஆம் இடத்திற்கு வரும்போது மங்களகரமான காரியங்கள் செலவுகள் ஏற்படும் வரவுக்கு மேல் செலவு அதிகரிக்கும் மேலதிகாரிகள் நல்ல விதமாக நடந்து கொள்ள மாட்டார்கள் வெளியூர் செய்திகள் மூலம் மன அமைதி இருக்காது பந்தயம் லாட்டரி ஆகியவை நஷ்டம் அளிக்கும் ஆனால் வெளியூர் பிரயாணங்கள் சிலருக்கு நல்ல பலன்களை கொடுக்கும் மறைமுகமான விஷயங்களை நீங்கள் கையில் எடுத்துக் கொள்வது கூடாது ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நல்லவிதமாக இருக்கும்
ஜோதிட பிரயாணம் தொடரும்


என்றும் உங்கள் அன்புடன்
ஜோதிட கலைஞானி

No comments:

Post a Comment