Thursday 23 April 2020

ஜோதிட பயிற்சி [ பகுதி -10]

குருவின் தன்மைகள் ஜோதிட பயிற்சி தளம் பகுதி [9]

அனைவருக்கும் வணக்கம் நான் பெருந்துறையில் இருந்து Ask எனும்
Astro Senthil Kumar எழுதுகிறேன்.

அடிப்படையில் ஜோதிடத்தில் ஒன்றும் தெரியாது என்பவர்களுக்கு என இந்த தளம் 
https://www.youtube.com/channel/UCgkT8E50F8EbZfT0yOIT45A?view_as=subscriber
யூடியூப்பில் எனது சேனல் லிங்கில் உங்களுக்கு என ஜோதிட பதிவுகளை பதிகிறேன்.. அதையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்...







குரு

ஆட்சி:- தனுசு- மீனம் 



மூலத்திரிகோணம் :- தனுசு


உச்சம்:- கடகம்

நீசம்:- மகரம்



நிறம் :-மஞ்சள் 



குணம் :-சத்துவம்



மலர் :- முல்லை



ரத்தினம் :-புஷ்பராகம்



மரம் :-அரசு



கிழமை :-வியாழன்



தேவதை :இந்திரன் - நான்முகன்



கிழக்கு :-வடக்கு 



ஆசன வடிவம் :-செவ்வக வடிவம் 



வாகனம் :-யானை



தானியம் :- கடலை



உலோகம் :- தங்கம்



நோய் :-வாய்வு



சுவை :-இனிப்பு



பால் :-ஆண்



கால் :-இரண்டு கால்



ஜாதி  :-பிராமிணர்



இயக்கம் :-நடக்கும் 



மச்சம் பலன்கள் :-வலது



தழும்பு :தோல்



இடம் :-கோயில்கள்



தாது :-  ஜீவன் உபயம் 



தாவரம் :- பயிர்  



தாவரத்தின் ஆளுமை :-பழம்



பஞ்சபூதம் :-மண்



திசை :-வடகிழக்கு 



உறுப்பு :- வயிறு



ஆளுமை :- கரம்பை மண் பரப்பு 



தோற்றம் :- அமைதி



உடலில் :-கொழுப்பு



செயல் :-கெளரவம்



ஸ்தலம் :-திருச்செந்தூர்



குருவின் மாற்று பெயர்கள்:-

அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகண்டிதன், சீலம், சுரம், தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி,பீதகன் , பொன், பொன்னவன், மறையோன், வேந்தன், வியாழன் போன்ற பெயர்கள் 


குருவை குறித்த இதர தகவல்கள் :-  

சூர்யமண்டலத்தில் சூரியனுக்கு அடுத்த பெரியகோள் குரு ஆகும்..
தன்னை தானே ஒரு முறை சுற்றி கொள்ள 9மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகிறது..


குரு சூர்யனை ஒரு முறை சுற்றி வர 12 ஆண்டுகள் எடுத்து கொள்கிறது..
இதை ஒரு குரு வட்டம் என்பர்..


ஜோதிடத்தில் குரு எனும் கிரகத்தின் மூலமாக ஜாதகர் வாழ்க்கையில் சந்தோஷங்களை பெறுகிறார்..


அவ்வாறு ஜாதகர் பெறும் பல்வேறுபட்ட ஆத்ம சந்தோஷங்களுக்கு குருவே காரணம் ஆகிறார்..


மற்ற கிரகங்கள் மூலமாக ஏற்படும் தோஷங்களை ஜாதகர்களுக்கு தன் பார்வையால் நிவர்த்தி செய்கிறார்.. 


ரிஷபம்- துலாம் ராசிக்கு லக்னங்களுக்கு குரு பார்வை கடும் தோஷத்தை தரும் என்பதை நினைவில் கொள்க..


இக்கோள் சூர்யனுக்கு ஐந்தாவது வட்டத்தில் உள்ளது..
சூர்யனுக்கு சுமார் 48,00,00,030 மைல் தொலைவுக்கு அப்பால் இருந்து கொண்டு 12 ஆண்களில் சூர்யனை சுற்றி வருகிறது..


தன்னை தானே சுற்றி வர 9மணி நேரம் 55 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது..


இதன் குறுக்களவு சுமார் 56,500 மைகல் ஆகும்..



குரு குணங்கள்:-

சாந்தம், தெய்வீக நம்பிக்கை, மதிப்பு, மரியாதை, கடமை, கண்ணியம் ,
கட்டுப்பாடு, நேர்மை, மனித நேயம், ஒழுக்கம், பக்தி, 



காரகத்துவம்:- 
புத்திகாரகன், ஜீவன் கோயில், தத்துவம், உயர்குலம் .நீதி, நேர்மை, நாணயம், தேன், ஞானி, ரிஷி, தெய்வம், பூஜை அறை, மூக்கு, பசு, மாங்கல்ய பலம், கர்ப்பம், குழந்தைகள், பாதங்கள், தொடைகள், உடல்சதை, கொழுப்பு, புத்தி, கூர்மை, ஞானம், பாரம்பரியம், மாளிகை வீடு, விருந்தோம்பல், புனித நீராடுதல், சமூக சடங்குகள்,.



1ம் பாவ தொடர்பு :-
பெருந்தன்மையான குணங்கள், உண்மையாக இருத்தல், சத்தியவானாக வாழ்தல், தெய்வ வழிபாட்டில் நாட்டம், கெளரவமான  வாழ்க்கைத்தரம், பெரிய மனித தோரணை 


2ம் பாவம் 

சந்தோஷம் நிறைந்த குடும்பம், நல்வாழ்க்கை அமைதல், பொறுமையான பெருந்தன்மையை கொண்ட குணம், பெரிய மனித பக்குவத்துடன் செயல்படுதல், தோரணையான பேச்சு, சபையில் பேசும் திறன் நேர்மையான விதத்தில் பொருள் ஈட்டுதல், சாஸ்திர சம்பிரதாய நம்பிக்கை, பெருநலன் மிக்க செயல்களை செய்தல், ஆன்மீக துறை மூலமாக ஆதாயம், குழந்தைகள் மூலம் ஆதாயங்கள், சமுதாயத்தில் செல்வாக்கு சத்தியத்துடன் பேசுதல், ஆத்மார்த்தமான நிம்மதி, 

3ம் பாவம் 

ஆத்மார்த்தமான இறைநம்பிக்கை, ஆழமான நம்பிக்கை, பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம், பிறருக்கு ஆலோசனைகள் தரும் வல்லமை, கம்பீரமான பேசுதல், கெளரவக்குறிய செயல்களை செய்தல், ஆன்மீக பயணங்களில் விருப்பம், பெருந்தன்மையான குணம், மனிதாபிமானம் ,


4ம் பாவம் 

சாஸ்திர சம்பிரதாயங்களை மதித்து நடத்தல், அரண்மனை வீடுகளில் குடியிருத்தல், பொருளாதரா கல்வி பயிலுதல், இதிகாச புராணங்களை பிரசங்கம் செய்யும் ஆற்றல், குழந்தைகள் மூலமாக வாகன வசதி பெறுதல், சமூக பொறுப்புகளை ஏற்று நடத்துதல், ஒழுக்கத்துடன் வாழ்தல், தாயை தெய்வமாக மதித்தல், அகமகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்தல், ஆன்மீக துறையில் ஈடுபாடு, 


5ம் பாவம் 


குழந்தைகளால் கெளரவமடைதல், பாரம்பரிய கெளவரங்கள் நன்மதிப்பு மரியாதை பெறுதல், ஆன்மீக சிந்தனை மேலோங்கி இருத்தல் , ஜாதகரின் ஒழுக்கம் மிக்க சிந்தனைகள், சமூகம் சார்ந்த பொதுநலன் மிக்க செயல்பாடு, ஆன்மீக உபாசன எண்ணம், சமூகம் சார்ந்த பொதுநல மிக்க செயல்பாடுகள், இதிகாச புராணங்களில் ஈடுபாடு,,


6ம் பாவம் 

உடலில் கொழுப்பு  நோய்கள், பொருளாதார நெருக்கடிகள், பண பரிவர்த்தனையால் பிரச்சனைகளில் சிக்குதல், வயிற்றில் செரிமான கோளாறு, குழந்தைகள் சம்பந்தமான பிரச்சனைகள், கெளரவ இழுக்கு அடைதல், ஊனம் மறைக்கப்படுதல், நம்பிக்கை பாழ்படுதல், அவநம்பிக்கை உடையவராக இருத்தல் , சட்ட விரோத செயல்களில் மாட்டி கொள்ளுதல், புத்திர வழி சண்டை சச்சரவுகள், பனம் சேமிப்பு இல்லாத சூழல்



7ம் பாவம்

 நம்பிக்கைக்குறிய நண்பர்கள், களத்திர உறவு திருமணத்திற்க்கு பின்னர் மேன்மையான வாழ்க்கை தரம், களத்திர ஆதாயங்களை அடைதல், கெளரவமான பண்புகள் , தெய்வீக பாலியல் தன்மை, தன்னை கட்டுப்படுத்தி கொள்ளும் திறன், சிறந்த ஞாபக சக்தி, சமூகத்தில் உயர்ந்த மதிப்பும் மரியாதையும் அடைதல், தெய்வீக வழிபாட்டில் அதிகமான ஈடுபாடுகள், ஆத்ம நிம்மதியான வாழ்க்கை தரம்., சட்டத்திற்க்கு உட்பட்டு நடத்தல், பெருந்தன்மை குணம், சத்தியவானாக வாழ்தல், இறையருள் பெறுதல்,,



8ம் பாவம் 

குழந்தைகளால் பிரச்சனை, அவமானங்கள், எதிலும் திருப்தியின்மை, புத்திர தடைகள் ,மொத்தமான பொருளாதார இழப்புகள், தங்க ஆபரண சேர்க்கை இயலாமை,முன்னோர்  சேர்த்த தான் சேர்த்த சொத்துக்களை இழத்தல், நல்லவைகளை தெரியாத புத்தி, தெளிவின்மை, பெண்களுக்கு மாங்கல்ய குறைபாடுகள், சாஸ்திர சம்பிரதாயங்களில் நாட்டம் இல்லாமை., ஆன்மீக செயல்களால் தவறான பெயர் எடுத்தல், வாழ்வில் சுபகார்ய குறைபாடு, குடும்பம் மற்றும் குழந்தைகள் புகழ் பாழ்படுதல், உடலில் சொரிமான கோளாறு, உடல் பருத்தல், தைராய்டு போன்ற கொழுப்பு  நோய் உபாதைகள், மூத்தோரின் ஆசீர்வாதம் ஆதரவும் இல்லாமை  



9ம் பாவம் 

பொறுமை, பெருந்தன்மை மற்றும் சமூக பொறுப்புடன் நடத்தல், உண்மையான நம்பிக்கை, நாணயத்துடன் இருத்தல், சமூக தலைவராக ஆலோசனைகள் வழங்கும் தன்மை, அரண்மனை போன்ற வீட்டில் வசித்தல், தெய்வீக வழிபாட்டில் விருப்பம், பெருந்தொகையை வருமானம் அடைதல், கெளரவரத்துடன் வாழ்தல், சட்ட திட்டங்களுக்கு உட்படுதல், கல்விக்கூடங்கள் கோயில்கள் நிறுவுதல், மூத்தோருக்கு மரியாதை அளித்தல், ஆத்ம சந்தோஷம் நிறைந்த வாழ்க்கையை அடைதல், நல்லோர் இணக்கம் பெறுதல், 


10ம் பாவம்

நேர்மையான மதிப்பான கெளரவம் நிறைந்த தொழில் முறை வாழ்க்கை, நம்பிக்கை நாணயம் கடமை உணர்வு கட்டுப்பாடான செயல்கள் மூலம் முன்னேற்றம் , நல்வழிநடத்தும் ஆன்மீக உபன்யாசம் பயிற்சிகள் நடத்துதல், பயிற்சிகள் ஆலோசனைகள் நீதி நேர்மை கொண்ட நீதிபதிகள் போல நடத்தல், நன்மை தீமைகளை பாகுபடுத்தி பார்க்கும் பார்க்கக்கூடிய நடுவர்கள், தனி தன்மையான பணிகள், ஆன்மீக தலைவர் அல்லது பொறுப்பில் இருப்பவர், மடாதிபதி, ஆலய நிர்வாகி, கோயில் குருக்கள், ஆலயப்பணி, ஜோதிட பணி, இடை தரகர்கள், 




11ம் பாவம்


குழந்தைகள் பார்மபரிய வழி வெற்றி அடைதல், புகழ் பெறுதல், தெய்வீக அனுகிரகம், தான தர்ம வழி நடத்தல், புகழ் அடைதல், சிந்தனை திறன், தன்னம்பிக்கை குறிக்கோளுடன்  செயல்படுதல், நல்ல குழந்தைகள், பாரம்பரிய சொத்துக்களை அடைதல், தெய்வாம்சம் பொருந்திய மனைவி அமைதல், களத்திர உறவு வழி மேன்மை அடைதல், 




12ம் பாவம்



புத்திர இழப்பு, சந்ததி விருத்தி இல்லாமை, குழந்தைகள் இருந்தும் பயனற்ற நிலை , குழந்தைகள் வழி மன உளைச்சல் , தொல்லைகள், ஆத்ம சந்தோஷங்களை இழத்தல், தொல்லைகள், தர்ம சிந்தனை குறைபாடுகள், தர்மத்தின் வழி செல்லாமை, பெரிய பொருளாதார இழப்பு, கடன் வாங்கி அல்லது கொடுத்து பொருளாதார இழப்பு, கொழுப்பு நோய்கள், 




ஜோதிட பயிற்சி தளம் 11 ல் பேசுவோம் எல்லாம் ஒரு நோட்டில் குறிப்பு எடுத்து கொள்ளுங்கள்..

மேலும் தொழில் முறை ஜோதிடர்கள் ஆக தனி பயிற்சி உண்டு வாட்ஸ் அப் எண் 9843469404 மூலமாக அணுகவும்..

தனி நபர் ஜாதக ஆலோசனைகள் பெற

What's App 9843469404 

ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம் 

பெருந்துறை
Astro Senthil Kumar.


No comments:

Post a Comment