Thursday 21 November 2013

திசாபுக்தி துரிதமாக கணிக்க எளிய முறை

இப்போது எல்லாம் ஜோதிடம் புதியதாக பயில்வோர் மட்டும் அல்ல 
அனுபவமாக ஜோதிடம் பார்ப்பவர்களும் சில நேரம் திசா புக்தியை கணிக்க தடுமாறியதை கண்டு இருக்கிறேன். எளிய முறையில் திசாபுக்தி கணிக்க கால்குலேட்டர் அவசியம் 
முதலில் சூர்ய திசையை காண்போம், 
சூர்யதிசை ஆனது 6 ஆண்டு அதன் ஆரம்பம் சூர்ய புக்தி கணக்கிடுவது 
திசாநாதன் 6 புக்தி நாதன் 6 [அதாவது திசையின் கால அளவிட] 
6x6= 36 விடை  ஆகிறதா? அதில் 3 க்கும் 6 க்கும் இடையே ஒருபுள்ளி வைக்கவும். சரி இப்போது கணக்கிடுவோம் முன்னால் இருப்பது 3 மாதம் அதாவது சூர்யதிசை சூர்யபுக்திக்கு பின்னால் இருக்கும் 6 இருக்கிறதா? அதை 6 X3 பெருக்கவும் அது 18 ஆகமாறும் சரியா ? இப்போது அந்த முன்புறம் இருக்கும் 3 மாதத்துடன் இந்த 18 நாட்களை இணைக்க இப்6 Xபோது சூர்யதிசை சூர்யபுக்தி 3 மாதம் 18 நாட்கள் ஆகும், அடுத்தது சந்திரபுக்தி வரும் அல்லவா/?
இப்போது சூர்யதிசை 6-யை சந்திரபுக்தி 10 பெருக்க வேண்டும் அதன் விடை 6 X10 = விடை 60 ஆகிறது முன்புறம் இருப்பது மாதம் பின்புறம் நாட்கள் இல்லை இப்போது சூர்யதிசை சந்திர புக்தி 6 மாதம் ,
அடுத்தது செவ்வாய் புக்தி அதற்க்கு 6 X 7 [ செவ்வாயின் 7 வருஷத்தால் பெருக்க வேண்டும் ]
6 X7 = 42 விடையாகும் 4க்கும் 2 க்கும் இடையே புள்ளி வைத்து முன்புறம் இருப்பது மாதம் பின்னால் இருக்கும் 2-யை 3ல் பெருக்க வருவது நாட்கள் ஆகும், ஆக சூர்யதிசை செவ்வாய் புக்தி 4 மாதம் 6 நாட்கள் 
சூர்யதிசை 6 ராகுபுக்தி 18  அதை  6 X 18 = 108 விடை ஆகும் முன்னால் இருப்பது10 மாதம் பின்னாலிருக்கும் 8 யை 3ல் பெருக்கி வருவது நாட்கள் = 24 ஆகும் ஆக 
சூர்யதிசை ராகுபுக்தி 10 மாதம் 24 நாட்கள் ஆகும், 
6 X6= 36
6 X10=60
6 X7=42
6 X18=108
6 X16=96
6 X19=114 
6 X17=102 
6X7=42
6X20=120 
அடுத்தது சந்திரதிசை அல்லவா?
10x10=100
10x7=70
10x18=180
10x16=160
10x19=190
10x17=170
10x7=70
10x20=200 இதில் நாட்கள் அமையாது அனைத்தும் மாதமே அடுத்தது செவ்வாய் திசை அதை திசாநாதனும் புக்திநாதனும் கொண்டு கணக்கிட
7x7=49 
7x18=126
7x16=112
7x19=133 
7x17=119
7x7=49 
7x20=140
7x6=42
7x10= 70
இதில் பின்புறம் வரும் எண்களை நாட்களாக கணக்கிட 3 ல் பெருக்கி கணக்கிடவும் ஆக 
சூர்யதிசை ஆறு வருஷம் 
சந்திரதிசை பத்து வருஷம்
செவ்வாய்திசை எழுவருஷம் என கணக்கீடு சரியாகவரும் இதைபோல இனி வரும் திசைகளை கணக்கிட்டு கொள்ளவும் 


             
  



 

4 comments:

  1. திசையும், புக்தியும் சரி. ஆனால் இது குறுக்கு வழி. விளக்கமில்லாத வழி. அப்படியானால் புக்தியையும், புக்தியையும் பெருக்கி அவ்வாறு புள்ளி வைத்து கடைசி இலக்கத்தை 3 ஆல் பெருக்கினால் அந்தரம் சரியாக வந்து விடுமா?தசாவருடத்தின் புக்திகளை கூட்டினால் தசாவருடம் சரி. புக்திகாலத்தின் அந்தரகாலத்தை கூட்டினால் புக்தி சரியாய் வருமா? சரியான வழியை காட்டுங்கள். by saami

    ReplyDelete