Friday 22 November 2013

ஜோதிடத்தில் எதை பின்பற்றுவது?

நமது ஜோதிட சித்தாந்தத்தை மிகவும் நுணுக்கமாய் ஆராய்ந்து நமக்கு பல அறிய தகவலை தந்தது ஆர்யபட்டர்,பின்னிட்டு வாராகமிகிரர்,வருஷ ஜாதகமுறைய    [தஜகநீலகண்டீயம்] உலகுக்கு தந்த நீலகண்டர் , யவனர், போன்றோர்கள் மிகவும் நுணுக்கமான பல வழிமுறைகளை தந்துள்ளனர், நிலை அப்படி இருக்க நம்முன்னோர்கள் விட்டு விட்டு சென்ற அனைத்தையும் விட்டு தள்ளு புதியதாக நான் சொல்லி தருகிறேன் ஜோதிடம் என்பது சற்று வியப்பை அளிக்கிறது, முகநூலில் கூட பல ஜோதிடர்கள் நான் சொல்லி வந்த கருத்தை ஏற்று கொண்டு கெளரவிப்பது எனக்கு மகிழ்ச்சியே! 
ஆனாலும் விதிமுறைக்கு புறம்பாக சில விஷயம் சொல்வதை யாரும் ஏற்று கொள்வதில்லை,
தற்போது, ஜோதிடத்தில் முன்னரே இருக்கும் பழமையான வாக்கிய பஞ்சாங்கம் , C.G.ராஜனால் [ 1921 முதல் 1942 வரை நவீனபடுத்தப்பட்ட திருக்கணித பஞ்சாங்கம் ஆகியவை தான் தற்போது அனைத்து ஜோதிடர்களாலும் பயன்பாட்டில் உள்ளது, C.G.ராஜனால் இயற்றப்பட்ட பல ஜோதிட நூல்கள் மூலம் ஒரு ஆர்வம் உள்ள நபர் கொஞ்சமாக குருவழி காட்டுதலுடன் நிச்சயமாக நல்ல ஜோதிடராக புகழ் அடைய முடியும் என்பது நிதர்சன உண்மை!
ஆனால் நான் சற்று கருத்தை பதிவது எதனால் என்றால் ஜோதிடம் பாழ்பட்டு போய்விடக்கூடாது அதுவும் நமது ஜோதிடரால் என்பதே ஐய்யப்பாடு!

திருக்கணிதம் ,வாக்கியம்,  நாடியில் திருமணப்பொருத்தம் 
கே.பி.ஸிஸ்டம் ,ஜாமக்கோள் ஆருடம், பிரச்சன்ன சூட்சுமம் ,சந்திர நாடி கற்று கொள்ளவது சரியானது,

இதை தவிர வேறுவிதமாய்
  “கால் கட்டை விரலுக்கும், அஞ்சனா வசிய மூலிகை   தருகிறேன் ,அஸ்டதித்திக்கு தேவதா செய்து தருகிறேன் உனக்கு வாக்கு பலிதம்ஆகும் மற்றும்
தாந்திரீக பயிற்சி எனும் பெயரில்
நல்ல வருமானம் தரும் வாங்கி கொள் என ஜோதிடர்களிடம் வியாபாரம் செய்யும் முறையும் 
வாக்கு பலிதம் அடைய  வாங்கிக்கொள் என்பதும் அதை வாங்கி வைத்தால் மட்டும் சொல்லும் அனைத்தும் நடந்து விடுமா?
இந்தக்கூற்று எப்படி சாத்தியம் ஆகும்? சொல்லுங்க ? ”

இடையே ஆறுமாதத்தில் ஜோதிடம் பயின்று ஜோதிடர் ஆகலாம் என விளம்பரம் பயிற்சி கட்டணம் எனும் பெயரில் சில ஆயிரம் பின்னர் ஆஞ்சனா மை வாங்கி கொள் என சில ஆயிரம் எதேனும் ஒருபட்டம் “ ஜோதிட பூஷன் .ஜோதிடரத்னா, ஜோதிஸ்சிரோண்மணி ‘ என பெயருக்கு முன்னால்  ஒரு பட்டம் , அப்படி பட்டம் வாங்கியவரால் சரியான பலன்  சொல்ல முடியுமா? முகநூலில் கூட நான் மூலநட்சத்திர பெண்ணும் மகநட்சத்திர ஆணும் திருமணம் செய்ததை பற்றி எழுதினேன், நண்பர் தீர்த்தகிரி வெங்கடேஷன் அவர்கள் கூட அதை ஆதரித்தார், ஆனால் பெரும்பாலான ஜோதிடர்கள் அதை லைக் கூட செய்யவில்லை.காரணம் அவர்களுக்கு அதை பற்றி தெரியாது என்பதே உண்மை ஆகும், தவிர ஒரே திசை நடந்தால் அதை திசாசந்திப்பு எனவும் பழமையான ஆரோகண அவரோகணத்தை ஏற்று கொள்ள மறுப்பது, அதே போல் வேறு ஜோதிடரிடம் முன்னரே திருமணப்பொருத்தம் பார்த்து விட்டு வந்தாலும் நாடி முறையில் சரியில்லை சாரப்படி சரியில்லை , ஜாமக்கோள் படி சரியில்லை எனவும் [எண்கணிதப்படி சரியில்லை என்பதும் ] ஆள் ஆளுக்கு ஒருமுறையில் பயணம் செய்ய சொன்னால் பலன் காண வரும் நபர் பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு தான் போகணும், ஆசான் என கூறிக்கொண்டு இருக்கும் பலருக்கு நான் வாரசூலையை பற்றி கேட்க யாருக்கும்ட் தெரியவில்லை ஆனால் தேடிபிடித்தேன் படித்தேன் பதிந்தேன் முகந்நூலில், அதைக்கூட பிராமணர் பக்கம் ஷேர் செய்து ஆதரித்தது, 
நான் யாரையும் குற்றம் கூறவரவில்லை , ஆனால் 10 பொருத்ததை போட்டு குழப்பாதீர்கள்!
நன்றாக பலனை அறிய வேண்டும் எனில் முதலில் ஜோதிடத்தையும் கணிதத்தையும் அடிப்படையில் இருந்து பயில வேண்டும் என பதிந்து நண்பர்களிடம் பகையை தேடி வைத்து விட்டதோ என எண்ணத்தோன்றல் வருகிறது, 

வாக்கியம் கோவில் வழிபாட்டுக்கு மட்டும் தான்,  திருக்கணிதம் மனித குல ஜாதக கணிப்பிற்க்கு  என்பதை மனதில் கொள்ளவும்

பழமையான பலமூல நூல்களை பாடல்களை தேடிப்பிடித்து ஜோதிஸ் ஜாம்பவான்கள் தற்க்கால நடைமுறைக்கு ஏற்ப்ப புதுபித்தால் போதும் ஜோதிடம் நன்கு வளரும் அதை விட்டு தான் நடத்தும் ஆறுமாத ஜோதிட பயிற்சி என்பது ஜோதிடத்தை வளர்த்தாது அதை நடத்தும் நபர்களை வேண்டுமானால் வளர்த்தும் 
அப்படி ஆறுமாதத்தில் படித்து விட்டு என்னைக்காண வந்த ஒருநபருக்கு ராசிகட்டமும் அம்ஷ நிலையும் கூட கணிக்க தெரியாமல் திணறிப்போனார், 
ஜோதிடக்கலை வளரவும் இனி வருங்கால ஜோதிடர்களை வளப்படுத்தவும் பழைய மூலநூல்களை மிகசிறந்தது ,இந்த ஆறுமாத பயிற்சி அல்ல!
பலமுனை கேள்விகள் வரலாம் ஆனால் மனதில் பட்டதை சொல்லிதானே தீரணும்?

3 comments:

  1. அருமையான பதிவு. ஜோதிடம் கற்பதற்கு நிறையபேர் வருகின்றனர். அவர்களுக்கு கற்றுத்தருவதற்கு நிறைய மையங்கள் உள்ளன. ஆனால் ஜோதிடம் கற்பதற்கு உள்ளார்ந்த ஒரு அறிவு தேவை. புதன் நல்ல நிலையில் இருக்க வேண்டும். 2மிடம், 5மிடம் கெடாமல் இருக்க வேண்டும். குருவின் நிலைமையும் நல்ல இடத்தில் இருக்க வேண்டும். பெரிய ஜோதிடர்களாக உள்ளவர்களின் முன்னொர்கள் எப்படியும் ஜோதிடத்துடன் தொடர்பு உள்ளவர்களாகவே உள்ளனர். மற்றபடி யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம், கற்றதை வைத்து, ஜோதிடரை குழப்பவும் செய்யலாம்.

    ReplyDelete
  2. வரவேற்கவேண்டிய ஒரு அம்சமான கருத்து.

    ReplyDelete
  3. ஆட்சிநல் உச்சத் தோடே
    அருள்குரு பார்வை பெற்று
    மாட்சிமை உடைய வாக்கில்
    மாபுதன் நிற்பா ராகில்
    சூட்சும புத்தியோடே
    சோதிடக் கலைகள் கற்றே
    பேச்சினில் ஞானம் சொட்டும்
    பெரும்புகழ் சோதிடன் காண்!

    இராசி குண்டலியில் வாக்கு ஸ்தானம் எனும் இரண்டாம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று, புதன் இருக்க, அவரை குரு பார்ப்பாரேயானால், ஜாதகர் புகழ் பெற்ற ஜோதிடக் கலை கற்ற மேதையாக விளங்குவர். புதன் 2-ஆம் வீட்டில் தங்க அந்த வீட்டதிபர் அவரைப் பார்ப்பாராயினும் புதன் பலப்பட்டவராகவே கருதப் படுவார்.

    ReplyDelete