Thursday 21 November 2013

ஜோதிடம் யாருக்கு அதிகமாக பலன் தந்தது?

ஜோதிடத்தில் பலன் காண நாம் அனைவரும் நவகிரஹத்தை மட்டும் வைத்து பலன் கண்டபோது இடையே ஒரு மூன்று கிரஹங்கள் வந்தது ,
அவை முறையே 

1]புளூட்டோ 2]நெப்ட்யூன்3]யுரோனஸ்

புளூட்டோ என்பது ஒருராசியில் குறைந்தது  15 ஆண்டும் அதிகளவு 32 ஆண்டும் என இருக்கும்
நெப்ட்யூன் என்பது குறைந்தது  ஒருராசியில் 14 ஆண்டுகள் இருக்கும்,
யுரோனஸ் என்பது ஒருராசியில் குறைந்தது 7 ஆண்டுகள் இருக்கும் இதை ஆங்கிலேயர்கள் நமது ஜோதிடத்தின் இடையே புகுத்தினர், நம்மில் பலருக்கும் அதில் அந்நிய மோகம் கொண்டு அதை பற்றியும் சற்று படிக்க முயற்சி செய்தனர் [ எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல] அதை பற்றி  1]புளூட்டோ &2]நெப்ட்யூன்3]யுரோனஸ் பலவிதமான ஜோதிட நூல்கள் எழுதப்பட்டு அதையும் நம்ம ஜோதிடர்களால் வாங்கி படிக்கப்பட்டு வந்தது, பின்னர் ஒருகால கட்டத்திலே நமது பஞ்சாங்க வெளியீட்டாளர்கள் & மற்றும் நமது தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவில் இருக்கும் அனைத்து ஜோதிடர்களும் கூடி இந்த மூன்றையும் கோள்களாக கணக்கிட கூடாது என முடிவெடுத்து மேலும் விஞ்ஞானிகளும் கூடி இந்த மூன்று கோள்களையும் நீக்கி விட்டனர், அது போல தான் அடிக்கடி ஏதாவது ஒன்று புதியதாய் வரும் பின்னர் காணாமல் போகும், 

ஆனால் எப்போதும் ஜோதிடத்தில் கணக்கிட பழமையான முறையே ஒத்து போகும்,


அதுதான் தொடர்ந்து வரும் முன்னர் எப்படி இந்த புளூட்டோ +நெப்ட்யூன்&யுரோனஸ் காணாமல் போனதோ அதுபோல் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட முறை எனும் பெயரில் நமது ஜோதிடர் வட்டத்தில் பலன் கூற பயிற்சி முறை எனும் பெயரில் தனக்கு தானே பட்டமும் புகழாரமும் சூட்டி கொண்டு பலகுழுமம்   இன்னமும் எந்த எந்த பெயரிலோ பட்டம் வைத்து கொண்டு  அவர்களை முகதுதி பாட தனியாக சிஷ்யர் கூட்டம் அமைத்தும் தமிழகத்தில் பயிற்சிமுகாம் அமைத்து ஜோதிடர்களை குழப்பி கொண்டு தான் இருக்கிறது, அது அவர்கள் பிழைக்க வழியாக வேண்டுமானால் சரியாக இருக்கலாம் 



புதியதாக பயில விரும்பும் ஒரு ஜோதிடர் தன் குரு நாதர்  அவர்களை நம்பி சென்று படிப்பதையும் பார்க்கிறோம், ஜோதிடத்தில் சீக்கிரம் பணம் பார்க்க வேண்டும் எனும் வேகம் இப்படி சொல்லி கொடுப்பவரிடமும் இருக்கிறது, கற்று கொள்ள செல்பவர்களிடமும் இருக்கிறது, ஆனால் நமது பாரம்பரியமான ஜோதிட அணுகுமுறை பற்றி கற்று கொடுப்பவருக்கும் தெரியாது, கற்று கொள்ள சென்றவரிடமும் இருக்காது, அதனால் முறையான ஜோதிடம் புதியதாக படிப்பவருக்கு தெரியாமல் போய்விடுகிறது, இவர்களுக்கு தேவை சீக்கிரமாக “ஜோதிடராக” பணம் சம்பாதிக்கணும் அவ்வளவே எண்ணம் .. இது எல்லாமே மூன்று வாரத்தில் கருவா பொண்ணு சிகப்பழகி ஆக்குகிறேன் எனும் விளம்பரம் செய்யும் “முகசாயம் வியாபாரிகளே!! எப்படியோ கொஞ்சம் காலத்தில் இவர்களை நம்பி போகும் சிஷ்யர்களுக்கும் “முகத்தில் பூசுவார்கள் “””

பின்னர் இந்தமுறையும் ஒருகாலத்தில் புறக்கணிக்கப்படும்,ஆனால் வாக்கியமோ திருக்கணிதமோ அதை பின் பற்றி கணிதம் போட்டு பயிற்சி முறையாக படிபடியாக அனுபவம் வர குறைந்தது 1 முதல் 3 ஆண்டுகள் வரை கற்று கொள்பவரின் ஆர்வம் பொருத்து காலதாமதம் ஆகலாம், தாமதம் ஆனால் தான் என்ன முறையே கற்று கொள்ளலாமே?பின்னால் பலன் தரும்  இல்லை எனில் புதியாதாய் புதுமுறையை கற்று தருகிறேன்  என்பவர்களுக்கு மட்டுமே ஜோதிடம் அதிக லாபம் தரும் என்பதே மறுக்க முடியாத உண்மை இதை நான் எப்போதோ சொல்லியது திரும்ப சொல்ல வேண்டிய சூழல்கள் இன்றும் இருக்கிறது 

4 comments:

  1. புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட முறை எனும் பெயரில் நமது ஜோதிடர் வட்டத்தில் பலன் கூற பயிற்சி முறை எனும் பெயரில் தனக்கு தானே பட்டமும் புகழாரமும் சூட்டி கொண்டு பலகுழுமம் ஸ்ரீல ஸ்ரீ ----------அய்யா இன்னமும் எந்த எந்த பெயரிலோ பட்டம் வைத்து கொண்டு அவர்களை முகதுதி பாட தனியாக சிஷ்யர் கூட்டம் அமைத்தும் தமிழகத்தில் பயிற்சிமுகாம் அமைத்து ஜோதிடர்களை குழப்பி கொண்டு தான் இருக்கிறது, // இந்த வார்த்தை எந்த முறையை எந்த ஆசிரியரை எந்த ஜோதிட முறையை மனதில் வைத்து சொன்னீர்கள்

    ReplyDelete
  2. // பலன் கூற பயிற்சி முறை எனும் பெயரில் தனக்கு தானே பட்டமும் புகழாரமும் சூட்டி கொண்டு பலகுழுமம் ஸ்ரீல ஸ்ரீ ----------அய்யா இன்னமும் எந்த எந்த பெயரிலோ பட்டம் வைத்து கொண்டு அவர்களை முகதுதி பாட தனியாக சிஷ்யர் கூட்டம் அமைத்தும் தமிழகத்தில் பயிற்சிமுகாம் அமைத்து ஜோதிடர்களை குழப்பி கொண்டு தான் இருக்கிறது, // Yes ,Mr.senthilkumar,Please tell the resan for this word

    ReplyDelete
  3. ////அடிக்கடி ஏதாவது ஒன்று புதியதாய் வரும் பின்னர் காணாமல் போகும், ஆனால் எப்போதும் ஜோதிடத்தில் கணக்கிட பழமையான முறையே ஒத்து போகும்,அதுதான் தொடர்ந்து வரும்/// ஜோதிட கநிதம் என்பது வேறு ,பலன் சொல்லுதல் என்பது வேறு புதியதாய் வருபவை சொல்லும் அனைத்தையும் பழைமை என்று தங்களால் சொல்லப்படும் முறை மூலமாக பதில் பெற முடியுமா?முடியும் எனில் உடனே என் ஜாதக பலனை அறிய சித்தமாய் உள்ளேன்,

    ReplyDelete