Saturday 8 November 2014

சாமுத்திரிகா லக்ஷ்ணம் பகுதி 4

சாமுத்திரிகா லக்ஷ்ணம் பகுதி 4வாயின் சுழி ல்க்ஷ்ணம்வாயில் வலம்புரிசுழி இருக்கப்பெற்றவர் தைரியவார்த்தை உடையவர் ஆவர்.இடம்புரியாக சுழிய இருக்கப்பெற்றவர் வறுமையுடனே வாழ்க்கை அமையும்.பற்கள்  லக்ஷ்ணம்பற்கள் சிவந்து இருக்கப்பெற்றவர் அழகுடையவர்
பற்கள் விலகி இருக்கும் அமைப்பை பெற்றவர் காமம் நிறைந்தவர்
பற்கள் பருத்திருக்க பெற்றவர் தரித்திரவான்
தெத்துபற்க்கள் அமையப்பெற்றவர் முன்னே சொத்துக்களை உண்டாக்கி பின்னர் உடனே அழிக்கும் வித்தைவான்மேற்பல் கீழ்பல் நடுப்பல் ஆகியவைகளோடு சிறுபல் அமையப்பெற்றவர் செல்வந்தர் ஆகினும் சுயபுக்தியை இல்லாதவர் ஆக இருப்பார்கள்உதடு சிறுத்திருக்க பெற்றவர் செல்வந்தர்
கன்னம் நெடுகி இருக்க பெற்றவர் சகல சகல சம்பத்து நிறைந்தவர்
கன்னம் தாழ்வாய் பருத்தாற்போல இரண்டாக  இருக்கப்பெற்றவர் கபட நாடகதாரி.கன்னம் ஒன்றி இருக்கப்பெற்றவர் செல்வமுடையவர்.கன்னத்தின் தாழ்வாயில் வலசுழி இருக்கப்பெற்றவர் நல்ல உணவை உண்டுவாழ்வார்கன்னம் இடசுழி இருக்கப்பெற்றவர் எந்நாளும் வறுமை உடையவர் 
காது லக்ஷ்ணம்
காதின் மேல் செவி இடமாக இருக்கப்பெற்றவர் முன்கோபம் கொண்டவர்
 காது குறுகி இருக்கப்பெற்றவர் செல்வமுடையவர்காது உள்ளே மேல்செவி மடங்கி இருக்கப்பெற்றவர் கபடுநாடகதாரி.நடுவில் காது பறுத்து இருக்கப்பெற்றவர் வறுமை உடையவர்
காது உள்செவி வலம்புரிசுழியாக இருக்கப்பெற்றவர் சகலசம்பத்து உடையவர்காது உள்செவி இடம்புரிசுழியாக இருக்கப்பெற்றவர் வறுமை உடையோர்காதில் முடி பருத்து கறுத்து மேல் நோக்கி இருக்கப்பெற்றவர் செளக்கர்யம் உடையவர்காதில் முடி பருத்து கறுத்து கீழ் நோக்கி இருக்கப்பெற்றவர் பஞ்சம் உடையவர்கழுத்தின் லக்ஷ்ணம்
கழுத்தில் தன்கையால் நான்கு அங்குலமும் பாடும்போது நரம்புகள் எழாமல் பிறழாமல்  இருக்கப்பெற்றவர் அழகும் ஆயுளும் உடையவர்
நரம்புகள் காணப்பெற்றவர் நோய்நொடி உடையவர்கழுத்து ஒடுங்கி இருக்கப்பெற்றவர் வறுமையும் கபடும் உடையவர்
கழுத்தில் நான்குபிறை கீரல் இருக்கப்பெற்றவர் தீர்க்க ஆயுள்வான்
கழுத்தில் இருபிறை கீரல் இருக்கப்பெற்றவர் கபடதாரி.கழுத்தில் ஒருபிறை கீரல் இருக்கப்பெற்றவர் நினைத்த கார்யத்தை முடிக்கும் வல்லவன் ஆவர்ஒருபிறை கீரல்கூட இல்லாதவர் மனோவியாதி உடையோன் பிடரி லக்ஷ்ணம்
பிடரியில் இரண்டு கீரல் இருக்கப்பெற்றவர் சுகபோசனம் உடையவர்
பிடரி உயர்ந்து இருக்கப்பெற்றவர் செல்வமுடையவர்
பிடரி எந்நாளும் உலர்ந்து இருக்கப்பெற்றவர் சதாவறுமை உடையவர்தோள்கள் லக்ஷ்ணம்
தோள்கள் இரண்டும் உயர்ந்து இருக்கப்பெற்றவர் செல்வமுடையவர்தோள்கள் தாழ்ந்து இருக்கப்பெற்றவர் தீர்க்க ஆயுள்வான்தோள்கள் சரிவாக இருக்கப்பெற்றவர் மிகுந்த அறிவாளி
இருதோள்களில் அதிகமான மயிர் இருக்கப்பெற்றவர் நினைத்த கார்யத்தை முடிப்பதில் வல்லவன்அக்குகள் லக்ஷ்ணம்
அக்குகள் உயர்ந்து மயிர் சிறுத்து கருத்து இருக்கப்பெற்றவர் தூக்கம் இழந்தவர் நல்ல செல்வநிலை உடையவர்அக்குகள் கற்றாழை நாற்றத்துடன் இருப்பவர் அதிகமான காமவிகாரி ஆக இருப்பார்கள்
அக்குகள் சுண்ணாம்பு நாற்றம் உடையவர் நோய்நொடியுடன் இருப்பார்கள்
அக்குகள் யானைமூத்திர நாற்றத்துடன் இருப்பவர்களுக்கு குறிபிட்ட நேரத்தில் உண்ண முடியாத அற்பபோகி ஆவர்அக்குகள் இளநீரை போன்ற வாசனை உடையவர் தீர்க்கபோகி ஆவர்அக்குகள் தாமரைமலரின் வாசனை கொண்டவர் அனேக பெண்களை அணைவார்அக்குகள் ஒருமயிர் இல்லாது இருக்கப்பெற்றவர் கோழிபோக உடையவர்
அக்குகள் மயிர் நெருங்கி தாழ்வாக இருக்கப்பெற்றவர் வறுமைநிலை உடையவர்
கைகள் லக்ஷ்ணம்
கைகள் முழங்கையின் கீழ்வரை நீண்டு இருக்கப்பெற்றவர் லக்ஷ்மி கடாஷம் கொண்டு அதிக செல்வமும் தீர்க்க ஆயுளும் இருப்பவர்.
முழங்க்கால் மட்டும் இருக்கப்பெற்றவர் செல்வம் மட்டுமே உடையவர். முழங்காலுக்கு ஒரு விரல் அளவு மேலே இருக்கப்பெற்றவர் நல்ல போஜனம் உடையவர்.முழங்காலுக்கு இருவிரல் மேலே இருக்கப்பெற்றவர் சொல்வாக்கு காப்பாற்றும் எண்ணம் உள்ளவர்.மூன்றுவிரல் மேலே இருக்கப்பெற்றவர் அழகும் ஐஸ்வர்யம் உடையவர்.முழங்காலுக்கு மேலே நான்குவிரல் அளவு இருக்கப்பெற்றவர் அற்பசெல்வம் உடையவர்.முழங்காலுக்கு மேலே ஐந்து விரல் அளவுக்கு இருக்கப்பெற்றவர் சதா வறுமையும் கஷ்டமும் நிறைந்தவர்.கைகள் திரண்டு மிருதுவாக இருக்கப்பெற்றவர் அழகும் ஆயுளும் உடையவர்,கைகள் கரடியை போல இருக்கப்பெற்றவர் சூது நிறைந்தவர்.கைகள் மிகப்பருத்து இருக்கப்பெற்றவர் கிலேசமுடையவர்.மூக்கு சிறுத்து இருக்கப்பெற்றவர் வறுமை உடையவர்.கை விரல் அமைப்பு
கையின் சிறுவிரல் [சுண்டுவிரல்] மோதிர விரல் அளவு இருக்கப்பெற்றவர் 100 ஆண்டு வாழும் ஆயுள் தீர்க்கம் உள்ளவர்.மோதிரவிரல் நடுவிரல் அளவுக்கு இருக்கப்பெற்றவர் ஆயுள் 60 ஆகும்
சுண்டுவிரல் மோதிரவிரலின் மேல் இறைக்கு சரியாக இருக்கப்பெற்றவர் ஆயுள் 80 ஆகும்.சுண்டுவிரல் மோதிரவிரலின் மேல் இறைக்கு சற்றே குறைவாக  இருக்கப்பெற்றவர் ஆயுள் 75 ஆகும்.சுண்டுவிரல் மோதிரவிரலின் மேல் இறைக்கும் கீழிறைக்கும் நடுவில்  சற்று மேலே இருக்கப்பெற்றவர் ஆயுள் 70 ஆகும்.சுண்டுவிரல் மோதிரவிரலின் மேல் இறைக்கும் கீழிறைக்கும்  சரியாக நடுவில் இருக்கப்பெற்றவர் ஆயுள் 60 ஆகும்.சுண்டுவிரல் மோதிரவிரலின் மேல் இறைக்கும் கீழிறைக்கும்  சரியாக நடுவில் கொஞ்சம் கீழாக இருக்கப்பெற்றவர் ஆயுள் 40 ஆகும்.இதற்கும் கீழாக அமைப்பில் இருப்போர்கள் எல்லாம் அற்பாயுள் என அறிக.          

No comments:

Post a Comment