Monday 17 November 2014

சாமுத்திரிகா லக்ஷ்ணம் 5

சாமுத்திரிகா லக்ஷ்ணம் பகுதி 5

உள்ளங்கை ரேகை லக்ஷ்ணம்
உள்ளங்கை ரேகை அற்பமாய் சிவந்து சிறுத்து இருக்கப்பெற்றவர் செல்வமும் ஆயுளும் உடையவர் .
ரேகை கனத்து இருக்க பெற்றவர் துக்கமுடையவர்
வலதுகையில் சங்கு சக்கரம் போல இருக்கப்பெற்றவர் மிகுந்த திரவியம் தன்னிடம் வைத்து இல்லையென கேட்போர்களுக்கு அள்ளிதரும் வள்ளல்.
மச்சரேகை அமைப்பை பெற்றவர் மிகுந்த செல்வம் உடையவர் ஆவர்
உள்ளங்கைரேகை குடைபோல இருக்கப்பெற்றவர் தயாளகுணவான்
தமரகம் போல இருக்கப்பெற்றவர் பேரும் புகழும் உடையவர்
வாள்போல இருக்கப்பெற்றவர் வீரியகுணம் கொண்டவர்
கும்பம் போல இருக்கப்பெற்றவர் மிகுந்த பொறுமைசாலி
சந்திரன் போல இருக்கப்பெற்றவர் வித்தைகள் அதிகம் கற்றவர்
வெண்சாமரம் போல இருக்கப்பெற்றவர் வெகுஜன ஆதரவுடன் வாழ்வார்
 தாமரைபுஷ்பம் போல இருக்கப்பெற்றவர் எந்நாளும் லக்ஷ்மிகடாஷ்சம் நிறைந்தவர்
மாலைபோல இருக்கப்பெற்றவர் போகபாக்கியம் பெற்றவர்
வேல்போல இருக்கப்பெற்றவர் எடுத்தகார்ய வெற்றியாளர் ஆவர்
லிங்கம் போல இருக்கப்பெற்றவர் சிவபக்தன் ஆவர்
ரிஷபம் போல இருக்கப்பெற்றவர் வாகன விருத்தி உடையவர்
மணிக்கட்டு முதல் நடுவிரல் நுனி வரை ஒரேரேகை இருக்கப்பெற்றவர் ஞானி ஆவார்
அந்த ரேகை நடுவிரல் அடியுடன் நிற்கப்பெற்றவர் வித்தைகள் பல கற்றவர்
அது ஆட்காட்டி விரல் அடிவரை வந்து இருக்கப்பெற்றவர் செல்வநிலை அதிகம் உடையவர்
அந்த ரேகை மோதிரவிரல் வடிவரை வந்து இருக்கப்பெற்றவர் ஆபரணமும் அணிகலனும் அதிகம் பெற்றவர் ஆவர்
அந்த ரேகை சுண்டுவிரல் அடி வரை வந்து இருக்கப்பெற்றவர் கிராம அதிகாரி & தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் போன்ற பொறுப்புக்கு செல்வார்கள்
பெருவிரல் வரை வந்திருக்கப் பெற்றவர் பலமாதரை அணைவார்
உள்ளங்கையில் நிற்கப்பெற்றவர் செல்வமும் புத்ரபாக்யமும் உடையவர்
அந்த ரேகை அமையப் பெறாதவர் உடல் ஊனம் அடையக்கூடும்
உள்ளங்கை ரேகை பறுத்து இருக்கப் பெற்றவர் மகாபாவ செயல்களை மனசாட்சி இல்லாமல் செய்யும் நபராக இருப்பார்.
விரல்களின் கீரல்கள் லக்ஷ்ணம்
பெறுவிரல் கீரலில் சங்கிலி போல ஒருரேகை இருக்கப்பெற்றவர் பலராலும் வணங்கப் பெறுவார்.
நடுகீரல் பிளவாய் இருக்கப்பெற்றவர் வெகுதான்ய சம்பத்து அடையப் பெற்றவர்
நடுகீரல் ஒன்றாக இருக்கப் பெற்றவர் அலைச்சல் உடையவர்
நடுகீரல் பலபலவிதமாக அமையப்பெற்றவர் கபடுநாடகதாரி ஆவர்
வலதுகை பெருவிரலில் கீரலுக்கு மேலே வலஞ்சுழி இருக்கப் பெற்றவர் வெகுவிதமான செல்வங்கள் உடையவர்
இந்த இடத்தில் இடசுழி இருக்கப் பெற்றவர் ஆயுள்விருத்தி உடையவர்
மடிப்புகள் இருக்கப் பெற்றவர் வறுமைநிலையே ஜீவனமாக இருக்கும்
சுண்டுவிரலில் அடிக்கீரல் ஒன்று இருக்கப்பெற்றவர் வறுமை இருக்கப்பெற்றவர்
சுண்டுவிரலில் அடிக்கீரல் பலவாறாக கீரல் இருக்கப்பெற்றவர் எடுத்த கார்ய வெற்றியாளர் ஆவர்
சுண்டுவிரலில் நடுக்கீரல் நடுகீரல் ஒன்றாக இருக்கப் பெற்றவர் சிக்கனம் நிறைந்தவர்
பலவாறாக இருக்கப் பெற்றவர் கபடநாடகதாரி ஆவர்
சுண்டுவிரலில் மேல்கீரலுக்கு மேலே வலசுழி இருக்கப் பெற்றவர் அதிக சம்பத்துக்கள் நிறைந்தவர்
இடசுழி இருக்கப் பெற்றவர் நல்லபுத்திசாலி ஆவர்
மடிப்புகள் இருக்கப் பெற்றவர் வீண்செலவுகளை உடையவர் ஆவார்
நடுவிரலில் ஒர்ரேகை இருக்கப் பெற்றவர் சிக்கனம் உள்ளவர்
மேலேபலரேகை இருக்கப் பெற்றவர் தாராளகுணவான்
மேலே ஒரே ரேகை இருக்கப் பெற்றவர் வித்தைகள் நிறைந்தவர்
மேலே பலவாறாக இருக்கப் பெற்றவர் கபடநாடகதாரி ஆவர்
மேல்கீரலுக்கு மேலே வலசுழி இருக்கப் பெற்றவர் மந்திரிஆகும் அமைப்புள்ளவர்
மேல்கீரலுக்கு மேலே இடசுழி இருக்கப் பெற்றவர் புத்திமான்
வலதுகை நடுவிரலில் அடியில் ஒரு கீரல் இருக்கப் பெற்றவர் செல்வநிலை உடையவர்
வலதுகை நடுவிரலில் அடியில் பலவாறாக கீரல் இருக்கப் பெற்றவர் துன்பமுடையவர்
நடுவிரல் நடுகீரல் ஒன்றாக இருக்கப் பெற்றவர் வித்தைகள் பலகற்றவர்
நடுவிரல் நடுகீரல் பலவாறாக இருக்கப் பெற்றவர் அதிக ஸ்திரி போகம் உடையவர்
நடுவிரல் நடுகீரல் ஒன்றி இருக்க பெற்றவர் அற்பபோகம் உடையவர்
நடுவிரல் மேல்கீரலுக்கு மேலே வலசுழி இருக்கப் பெற்றவர் சகல போஜன வசதி உடையவர்
நடுவிரல் மேல்கீரலுக்கு மேலே இடசுழி இருக்கப் பெற்றவர் சுகபோஜனம் கிடைக்காத நிலையில் இருப்பார்.
நடுவிரல் மேல்கீரலுக்கு மேலே மடிப்பாக இருக்கப் பெற்றவர் வீண்செலவாளி
வலதுகை அணிவிரல் அடியிறை ஒன்றை இருக்கப் பெற்றவர் நல்ல போகம் உள்ளவர் .
இரண்டு அடியிறை கீரல் இருக்கப்பெற்றவர் வெகு பூசணம் இருக்கப்பெற்றவர்
நடுயிறை ஒன்றை இருக்கப்பெற்றவர் அலைந்து திரிபவர்
பலவாறாக இருக்கப்பெற்றவர் உறவுகளை ஆதரிப்பவர்
மேலிறை கீரல் ஒன்றை இருக்கப் பெற்றவர் தேசாந்திரியும் காமுகனும் ஆவர்
அணிவிரல் மேலிறை கீரல் மேல் வலசுழி இருக்கப் பெற்றவர் பலரிடம் விபசாரம் கொள்வர் [குறிப்பு சாமுத்திரிகா லக்ஷ்ணம் ஆண்களுக்கு மட்டுமே பெண்களுக்கு பொருந்தாது]
இட சுழி இருக்கப்பெற்றவர் அதிகமான வார்த்தைகள் வீசுபவர்
மடிப்பாக இருக்கப் பெற்றவர் மனம் ஒருநிலை இல்லாதவர்
வலதுகை சுண்டுவிரல் அடியிறை ஒன்றாக பெற்றவர் கபடநாடகதாரி.
ஆனால் பலவான் ஆவர். வேடிக்கையாக பேசும் ஆசாமி ஆவர்.
நடு இறை ஒன்றாக இருக்கப்பெற்றவர் அழகுடையவர் பலவான் ஆயுள்தீர்க்கவான்.
மேல் இறை ஒன்றாக இருக்கப் பெற்றவர் எடுத்த கார்யத்தை முடிப்பதும் பலவானாகவும் ஏழையாகவும் இருப்பார்கள்
மேல் இறை மேல் வலசுழி இருக்கப்பெற்றவர் தீர்க்க ஆயுள்வான் ஆவர்!!
இடசுழியாக இருக்கப்பெற்றவர் பலவான் ஆக இருப்பார்.
மடிப்பாக இருக்கப்பெற்றவர் வெகுசெலவாளி ஆவர்.
ஆணுக்கு இடது கையும் பெண்ணுக்கு வலது கையும் வைத்து பலாபலனை பார்க்க கூடாது!!!






  

No comments:

Post a Comment