Wednesday 22 October 2014

சாமுத்திகா லக்ஷ்ணம் பகுதி 3

சாமுத்திரிகா லக்ஷ்ணம் பகுதி 3
நெற்றியில் ஐந்து  கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 100 வயது வாழ்வார்கள்.
நெற்றியில் நான்கு கீறல் இருக்கப்பெற்றவர் 80 வயது வாழ்வார்கள்
நெற்றியில் மூன்று கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 90 வயது வாழ்வார்கள்.
நெற்றியில் இரு கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 40 வயது வாழ்வார்கள்.
நெற்றியில் ஒரு கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 20 வயது வாழ்வார்கள்.
நெற்றியின் நடுவே ஒருநரம்பு குறுக்காக எழும்பி இருக்கப்பெற்றவர் நல்ல குணவானாகவும் செல்வ அதிபதியாகவும் இருப்பார்கள்
நெற்றியில் வெகுநரம்புகள் புடைக்க இருக்கப்பெற்றவர்கள் சதா வறுமையும் வியாதியும் கூடியவராக இருப்பார்கள்.நெற்றியில் மயிரே இல்லாத அமைப்பில் இருக்கப்பெற்றவர் தற்பெருமை நிறைந்த ஆசாமியாக இருப்பார்கள்
               புருவத்தின் லக்ஷ்ணம்
புருவத்தின் கடைமயிர் சாய்த்து கறுத்து மிருதுவாக இருக்கப்பெற்றவர் சகலசம்பத்து நிறைந்தவர்
புருவத்தின் மயிர் பருத்து இருக்கப்பெற்றவர் பலவான்
கீழ்நோக்கிய அமைப்பில் இருக்கப்பெற்றவர் வறுமைநிலையில் இருப்பார்
இருபுருவமும் கூடி இருக்க பெற்றவர் தன் தாய் தந்தையை விரைவில் இழக்கும் நிலையை ஏற்படுத்தும்
            கண்கள் லக்ஷ்ணம்
கண் இடமாய் சரியாக செதுக்கியதுபோல கடைகண் சிவந்து இருக்கப்பெற்றவர் அதிக செல்வம் உடையவர் ஆவர்
இமை மயிர்கள் அதிகமாக அடர்த்தியாக இருக்கப்பெற்றவர் செல்வநிலையில் இருப்பார்கள்
கண்கள் ஒன்று சிறுத்தும் ஒன்று பெறுத்தும் இருக்கப்பெற்றவர் வியாதியுடையர் ஆக இருப்பர்
சிமிட்டும் கண் இருக்கப்பெற்றவர் கபடியாக இருப்பார்
மறுகண் இருக்கப்பெற்றவர் கபடியாக பொய்யனும் வறுமையுடையனும் ஆக இருப்பார்கள்
சிறுவிழியாக இருக்கப்பெற்றவர்கள் ஆயுள் விருத்தி அதிகமாக கொண்டவராக இருப்பார்கள்
விழிகள் கறுத்து இருக்கப்பெற்றவர்கள் வெகு பெண்களை சேர்ந்து இன்புறும் போகியாக இருப்பார்கள்
விழிகள் தேன்நிறமாக இருக்கப்பெற்றவர்கள் காமியாகவும் கபடியாகவும் இருப்பார்கள்
வெண்மையாக இருக்கப்பெற்றவர்கள் கபடியாக இருப்பார்கள்
             கண்களின் மச்ச லக்ஷ்ணம்
வலதுகண்ணில் வெள்ளை விழியில் மச்சம் இருக்கப்பெற்றவர்கள் புக்திகூர்மை இருக்கப்பெற்றவர்கள்
இடதுகண்ணில் வெள்ளைவிழியில் மச்சம் இருக்கப்பெற்றவர்கள் காமவிகாரியாக இருப்பார்கள்
பிறவிக்குருடனாக இருக்கப்பெற்றவர் பரவிய மனக்குறை இருக்கப்பெற்றவர்
விழிக்குருடன் ஆனால் மிச்சிய புக்திசாலியாக இருப்பார்கள்
            மூக்கு லக்ஷ்ணம்
மூக்கு தன் கையால் மூன்று அளவு இருக்கப்பெற்றவர் ஆயுளும் செல்வநிலையும் இருக்கப்பெற்றவர் .அதற்க்கும் மேலே இருக்கப்பெற்றவர்கள் கடின போகம் உடையவர் .அளவு குறைய இருக்கப்பெற்றவர் அற்ப போகி உடையவர்.
மூக்கு பறுத்து இருக்கப்பெற்றவர்கள் செல்வந்தனாக இருப்பார்கள்
மூக்கு ஒருபுறம் சிறுத்து இருக்கப்பெற்றவர்கள் சதா வியாதியுடன் இருப்பவர்
மூக்கு நடுத்தரமாக இருக்கப்பெற்றவர்கள் கபடமும் வறுமையும் கூடியவரும் ஆக இருப்பார்கள்
        மூக்கின் மச்ச லக்ஷ்ணம்
மூக்கின் நுனியில் மச்சம் இருக்கப்பெற்றவர் சொற்ப செலவுகள் உடையவர்
மூக்கின் வலபுறம் மச்சம் இருக்கப்பெற்றவர் செல்வநிலையை உடையவர்கள்
மூக்கின் இடபுறம் மச்சம் இருக்கபெற்றவர் வறுமைநிலையை உடையவர்கள் 
        வாய் லக்ஷ்ணம்
வாய் சிறுத்து இருக்கப்பெற்றவர் செல்வநிலை உடையவர்
வாய் சிவந்து இருக்கப்பெற்றவர் அழகு உடையவர்
வாய் கறுத்து இருக்கப்பெற்றவர் மிடுக்கானவர் வார்த்தையில் வலுஇருப்பவர்
முன்கோபமும் கபடில்லாத தன்மையும் உடையவர்
வாய் மிருதுவாக இருக்கப்பெற்றவர் கபடும் நற்குணமும் உடையவனாக இருப்பார்
பிறவி முதல் ஊமையாக இருக்கப்பெற்றவர் வெகுபாவியாகவும் கபடியாகவும் இருப்பார்
           வாயில் ரேகை லக்ஷ்ணம்
வாய்க்குள்ளே சங்கு சக்ரம் போலிருக்க பெற்றவர் அதிகமான சம்பத்து உள்ளவர்
வேலாயுதம் போல் இருக்க பெற்றவர் நல்ல ஞானம் இருக்க பெற்றவர்
கமலம் (தாமரை) போல இருக்க பெற்றவர் வித்தை உடையவர்
சாமரம் போல் இருக்க பெற்றவர் நீண்ட ஆயுளும் செல்வமும் இருக்க பெற்றவர்
அங்குசம் போல இருக்க பெற்றவர் வெற்றியை அடைபவராக இருப்பார்கள்
குடைபோல இருக்க பெற்றவர் செல்வநிலையை உடையவர்

பாம்பு போல இருக்க பெற்றவர் கபடும் உடையவர்  

No comments:

Post a Comment