Friday 21 November 2014

சாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 6]

வலதுகையில் ஆறுவிரல் இருக்கப்பெற்றவர் மிகுந்த செல்வநிலையில் இருப்பார்கள்இடதுகையில் ஆறுவிரல் இருக்கப்பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள்
சிறுவிரலில் கையோரத்தில் ஒரு ரேகை இருக்கப்பெற்றவர் ஒரு விவாஹம் அமையப்பெற்றவர்
இரண்டு ரேகை இருக்கப்பெற்றவர் இருவிவாஹம் அமையப்பெற்றவர்மூன்று ரேகை இருக்கப்பெற்றவர் மூன்றுவிவாஹம் அமையப்பெற்றவர்நான்கு ரேகை இருக்கப்பெற்றவர் நான்குவிவாஹம் அமையப்பெற்றவர்இதுபோல எத்தனை ரேகை அமைகிறதோ அத்தனை மனைவியை அடைவார்கள்மணிக்கட்டுக்கு அருகில் கட்டைவிரலுக்கு எதிர்புறமாக எத்தனை ரேகை இருக்கிறதோ அத்தனை புத்திர ப்ராப்தி அமையப்பெற்றவர் ஆவர்புறங்கை மிருதுவாக இருக்கப் பெற்றவர் செல்வமும் அழகும் அமையப் பெற்றவர்புறங்கையில் நரம்புகள் எழ பெற்றவர் வறுமையை அனுபவித்து வாழ்வார்
ரோமங்கள் அமையப் பெற்றவர் தான தர்ம குணம் அமையப் பெற்றவர்
கை நகம் லக்ஷ்ணம்            
கையில் நகம் மிருதுவாக இருக்கப் பெற்றவர் செல்வநிலையை அடைவார்கள்
உரமாக இருக்கப் பெற்றவர் காமவிகாரம் கொண்டவர்சிவந்து இருக்கப் பெற்றவர் செல்வநிலையில் இருப்பார்கள்வெளுத்து இருக்கப் பெற்றவர் வறுமையில் இருப்பார்கள்விரல்கள் மெலிதாக இருக்கப் பெற்றவர் அழகும் ஆயுள்விருத்தியும் கொண்டவர் ஆவர்விரல்கல் பருத்து இருக்கப் பெற்றவர் திடமான மனநிலையில் இருப்பார்.விரல்கள் நீண்டு இருக்கப் பெற்றவர் குணவான் ஆவர்.விரல்கள் குறுகி இருக்கப் பெற்றவர் வறுமை நிலையில் இருப்பார்கள்
முழங்கை லக்ஷ்ணம்
முழங்கை பறுத்து இருக்கப் பெற்றவர் செல்வநிலையும் கபடும் உடையவர்சிறுத்து இருக்கப் பெற்றவர் வறுமை உடையவர்
நரம்பு தோன்றி இருக்க பெற்றவர் துக்கம் நிறைந்தவர்எலும்பு எழ பெற்றவர் வறுமை உடையவர்முழங்கை சந்தில் வலசுழி இருக்கப் பெற்றவர் தயாள குணவான்
இடசுழி இருக்க பெற்றவர் கஞ்சதனம் நிறைந்தவர்முழங்கை சிறுத்து கறுத்து இருக்க பெற்றவர் எந்நேரமும் பெண் போகம் எண்ணம் கொண்டவர்முழங்கை சிவந்து இருக்க பெற்றவர் வறுமை உடையவர்முழங்கை பறுத்து இருக்க பெற்றவர் பலவான்
முழங்கைக்கு மேலே தோள் வரை மயிர் இல்லா அமைப்பு பெற்றவர் அழகுடையவர்முழங்கைக்கு மேலே தோள்வரை மயிர் இருக்க பெற்றவர் வறுமையும் தயாள குணமும் கொண்டவர்மார்பு லக்ஷ்ணம்
மார்பு தன்கையால் 24 அங்குலம் அளக்க பெற்றவர் செல்வமுடையவர்மார்பில் குறுக்கே ஒரே ஒரு ரேகை இருக்கப் பெற்றவர் எல்லோராலும் வணங்க தக்க நிலையில் இருப்பார்கள்ஒருவர் மேல் பிரகாரம் அதற்க்குறிய லக்ஷ்ணம் அறியவும்உள்ளங்கால் லக்ஷ்ணம்
உள்ளங்கால் சிவந்து இருக்கப் பெற்றவர் செல்வமுடையவர்
உள்ளங்கால் கறுத்து இருக்கப் பெற்றவர் வறுமையுடையவர்குதிகால் தொடுத்து நடுவிரல் நுனிவிரல் மட்டும் ஒரே ரேகை இருக்கப் பெற்றவர் எங்கே போனாலும் செல்வநிலை செல்வம் ஈட்டுவார்.குறுக்கே ஒரே ரேகை எங்கே போனாலும் செல்வம் சேர்க்க வழி அமையாதுஉள்ளங்கால் ரேகை இருதுண்டாக இருக்கப் பெற்றவர்கள் முகத்திலும் விழிக்கக்கூடாது
உள்ளங்கால் கட்டில் கால் போல நான்கு ரேகை இருக்கப்பெற்றவர் வெகுஜனங்களை ஆதரிப்பார்கள்கால் விரல் லக்ஷ்ணம்
இரண்டு காலுக்கும் பெரிய விரலுக்கு அடுத்த விரலுக்கும் நன்கு நீண்டு இருக்கப் பெற்றவர் சொல்வாக்கு உடையவர்சிறுவிரலுக்கு அடுத்த விரலும் நீண்டு இருக்கப் பெற்றவர் பழிசுமந்து வாழ்வார்கால்விரல்கள் அனைத்தும் நெருக்கமாக இருக்கப் பெற்றவர் உறவுகள் அனைத்தும் சேர அனுசரித்து வாழ்வார்கள்
கால்விரல்கள் வரிசையாக இருக்கப் பெறாதவர் உறவுகளை இழந்து வாழ்வார்வலதுகாலில் ஆறுவிரல் இருக்கப் பெற்றவர் செல்வநிலை அதிகம் உடையவர்இடதுகாலில் ஆறுவிரல் இருக்கப் பெற்றவர் அலைச்சல் மிகுந்தவர்
கால்விரல்களில் மயிர் அதிகமாக இருக்கப் பெற்றவர் அதிக சொத்துக்களை சேர்ப்பவர்
கால்விரல்கள் ஒன்றின் மேல் ஒன்று ஏறி இருக்கப் பெற்றவர் வறுமைநிலையில் இருப்பார்கள்பெருவிரலுக்கு அடுத்த விரல் பெருவிரலை விட நீண்டு இருக்கப் பெற்றவர்
வெகு சொத்துக்களை அடைந்து பிரபலமாக வாழ்வார்கள்
நடுவிரல் நீண்டு இருக்கப் பெற்றவர் நீண்ட ஆயுள் தீர்க்கவான்கால்விரல்கள் சுருண்டு இருக்கப் பெற்றவர் செல்வநிலை உடையவர்
வலதுகாலில் பெருவிரலில் மச்சம் இருக்கப் பெற்றவர் அதிக சொத்துக்களை உடையவர்
இடதுகாலில் பெருவிரலில் மச்சம் இருக்கப் பெற்றவர் ஒரளவு சொத்துக்களை உடையவர்இதுபோக வேறு விரல்களில் மச்சம் இருக்கப் பெற்றவர் வறுமை நிலை உடையவர்
வலதுபெருவிரலில் மயிர் ஆவது மச்சமாவது சுழி மச்சம்  அல்லது வலசுழியாவது இடசுழியாவது இருக்கப் பெற்றவர் அதிகமான செல்வநிலை உடையவர் வலதுகாலில் மற்றவிரல்களில் வலசுழி இருக்கப் பெற்றவர் செல்வநிலை இருப்பவர்.  இடசுழி இருக்கப் பெற்றவர் வாழ்க்கையில் கடும்போராட்டம் மூலமாக பொருள் சேர்ப்பார்கள்
இடதுகாலில் பெருவிரலில் இடசுழி இருக்கப் பெற்றவர் எடுத்த கார்யம் முடிப்பார்

 

No comments:

Post a Comment