சந்திரனை பற்றிய பலரின் கருத்துக்கள் பலவிதமாக சொல்லப்பட்டு வந்தாலும் மிக நுட்பமாக ஆராயாமல் போனால் பலாபலன் குறைபட்டுப்போகும் கவனமாக பலன் அறிய இது உதவும்,
சந்திரன் ரிஷபராசியில் பலவான் ஆகிறார்.
சந்திரன் தட்சிணாயனத்தில் பலவான் ஆகிறார்.
சந்திரன் தன் சுயவீட்டில் பலவான் ஆகிறார்.
சந்திரன் தன் ஹோரையில் பலவான் ஆகிறார்.
சந்திரன் தன் திரேகாணத்தில் பலவான் ஆகிறார்.
சந்திரன் தன் வாரத்தில் பலவான் ஆகிறார்.
சந்திரன் தன் இரவுப்பொழுதில் பலவான் ஆகிறார்.
சந்திரன் தன் நவாம்சத்தில் பலவான் ஆகிறார்.
சந்திரன் அனைத்து கிரஹங்களுக்கு வடக்கில் நிற்க பலவான்ஆகிறார்.
சந்திரன் கிரஹங்களை பிரதட்சிணமாக சுற்றிப்போயின் பலவான் ஆகிறார்.
சந்திரன் எல்லாகிரஹமும் பார்க்கப்பெற பலவான் ஆகிறார்.சந்திரன் பூர்ணசந்திரனாக எல்லாவீட்டிலும் பலவான் ஆகிறார்.
சந்திரன் மிதுன தனுசு முதல்பாதியில் [முதல் 15 டிகிரிக்குள்]பலவான் ஆகிறார்.
சந்திரன் மிதுனம்- கன்னி-தனுசு-மீனம் ஆகிய ராசிகளில் ஒன்று லக்னமாகி ஏழில் சந்திரன் அமைய பலவான் ஆகிறார்.சந்திரன் மிதுனம்-கன்னி லக்னம் ஆகி அதில் நிற்க பலவான் ஆகிறார்.
சந்திரன் ரிஷபம்-தனுசு ஏழாம் இடமோ பத்தாம் இடமோ ஆகி பிற்ப்பாதி [ 15 டிகிரிக்கு மேல் ] பலவான் ஆகிறார்.சந்திரன் மிதுனம்-கடகம் நான்காம் இடமாகி நிற்க பலவான் ஆகிறார்
.
சந்திரன் சுக்கில பட்ச தசமி வரை மத்திம பலனை தான் தருவார்.
சந்திரன் கிருஷ்ணபட்ச சஷ்டி முதல் அமாவாஸை வரை பலஹீனமாகிறார்.
சந்திரன் ஒருராசியில் பிரவேஷிக்கும் காலகட்டத்தில் பலஹீனமாகிறார்.சந்திரன் கிரஹகண காலத்தில் பலஹீனமாகிறார்.
இது போன்ற எண்ணற்ற ஜோதிட சூட்சுமங்கள் பழமையான மூல நூல்களில் பொதிந்து கிடக்கிறது!!!எமது அடுத்த பதிவில் வரிசை கிரமமாக அனைத்து நவநாயகர்களின்பல நிர்ணயம் குறித்து வரிசையாக தரவுள்ளேன்.இங்கே படிக்கும் நண்பர்கள் சற்று கருத்தை பதிவு செய்து சென்றால் சற்று ஆறுதலாக இருக்கும், 15,000 நபர்கள் பார்வையிட்டும் 150 கருத்துக்கள் கூட நண்பர்கள் பதியவில்லையே?? ஊக்கம் தருவதே எம்மை அதிகமாக எழுத வைக்கும்.நன்றி!!
என்றும் ஜோதிட பணியில்!!
Nanri.
ReplyDeleteMIKA ARUMAI. ITHUVARAI ITHU PONDRU YARUM PATHIVITTATHAAKA THERIYAVILLAI. ITHAI THAAN NAAN VEKU NAATKKALAAKA ETHIRPAARTHEN. EMATHU VAAZHTHUKKAL. VAAZHKA VALAMUDAN. VAAZHKA UM THONDU.
ReplyDeleteமிக்க நன்றாக உள்ளன உங்கள் சேவைகளை தொடர்ந்து எதிர் பார்க்கிறோம்
ReplyDelete