Sunday 27 April 2014

ராசிசக்ரத்தில் புதனின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]

புதன் பற்றிய பல குறிப்பை பலராலும் எழுதப்பட்ட விஷயம் தான் இருந்து ஜோதிட பலாபலனை கவனிக்க சற்று உன்னிப்பாக கவனித்து பலன் சொல்ல எம்மால் ஆன சிறு முயற்சி 

புதன் அஸ்தமனத்தில் இருந்து வெளிப்படும் போது பலவான் ஆகிறார்.

புதன் தனுசு ராசியில் பலவான் ஆகிறார்.

புதன் தன் சொந்த வீட்டில்  பலவான் ஆகிறார்.

புதன் சுய நவாம்சத்தில் பலவான் ஆகிறார்.

புதன் வக்கிரமாக இருக்கும் போதும் பலவான் ஆகிறார்.

புதன் பகல் இரவு பொழுது இரண்டிலும் பலவான் ஆகிறார்.

புதன் தன் புதன்கிழமையில் பலவான் ஆகிறார்.

புதன் தன் திரேகாணம் மற்றும் மிதுனத்தில் இருக்க பலவான் ஆகிறார்.

புதன் மகரம் -சிம்மம்-விருட்சிகம்- இவைகள் லக்னமாகி அதிலேயே புதன் இருக்க பலவான் ஆகிறார்.

புதன் தனுசு நான்காம் வீடு ஆகி அதிலேயே புதன் இருக்க பலவான் ஆகிறார்.

புதன் ரிஷபம் ஏழாம் இடம் ஆகி அதில் இருக்க பலவான் ஆகிறார்.

புதன் மீனம் பத்தாம் இடம் ஆகி அதிலே இருக்க  பலம் பெற்று பலவான் ஆகிறார்.

புதன் ஒருராசியின் ஆரம்பத்தில் 10 டிகிரிக்குள் சாதாரண பலம் உடையவர் ஆகிறார்.

புதன் ஒருராசியின் மத்தியில் 10 முதல் 20 டிகிரிவரை பூர்ண பலம் கொண்ட பலவான் ஆகிறார்.

புதன் ஒருராசியின் கடைசி பாகத்தில் 20 முதல் 30 டிகிரிவரை பலஹீனம் அடைகிறார்.
அஸ்தங்கமாக இருக்கும் காலகட்டத்தில் புதன் பலஹீனம் அடைகிறார்.


இது போன்ற எண்ணற்ற ஜோதிட சூட்சுமங்கள் பழமையான மூல நூல்களில் பொதிந்து கிடக்கிறது!!!எமது அடுத்த பதிவில் வரிசை கிரமமாக அனைத்து நவநாயகர்களின்பல நிர்ணயம் குறித்து வரிசையாக தரவுள்ளேன்.இங்கே படிக்கும் நண்பர்கள் சற்று கருத்தை பதிவு செய்து சென்றால் சற்று ஆறுதலாக இருக்கும், 15,000 நபர்கள் பார்வையிட்டும் 150 கருத்துக்கள் கூட நண்பர்கள் பதியவில்லையே?? ஊக்கம் தருவதே எம்மை அதிகமாக எழுத வைக்கும்.நன்றி!!

என்றும் ஜோதிட பணியில்!!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்.பெருந்துறை.
செல்:- +91 98427 69404
செல்;- +91 98434 69404

No comments:

Post a Comment