Sunday 22 December 2013

முன்னோர் கர்ம வினை நிச்சயமாக பாதிப்பு தரும்

எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் அண்ணனுக்கு 3 மகன்கள்.
தம்பிக்கு 3 மகள்கள். அதில் தம்பி 3 மகளுக்கும் திருமணம் செய்து 7 பேரக்குழந்தைகள். ஆனால் மூத்தவ்ர் வீட்டில் ஒருவருக்கும் திருமணம் இல்லை. முதல் பையன் 37 வயது, 2 வது பையன் 35 வயது, 3-வது பையன் 30 வயது, ஆனால் இன்னமும் ஒருவருக்கும் திருமணம் இல்லை. முதல் பையன் மூலம் அதுவும் ஹனுமன் ஜெயந்தியில் பிறந்தவர், எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக மிக பெரிய சந்தேகம் , இவர்கள் குடும்பம் “பிரம்மசாரி சாபம்” இருக்குமோ என்று. பின்னிட்டு அவர்களிடமும் கேட்க முடியாது தயக்கம், ஒரு நாள் அவர்கள் ஊர்காரர் வயதான பெரியவர் ஒருவர் ஜாதகம் பார்க்க வந்தார், அவருக்கு பலன் சொல்லி யாரும் காத்திருப்பில் இல்லாமல் இருக்க நான் அவர்கிட்டே கொஞ்சமாக பேச்சு இந்த திருமணம் இல்லாத பையனை பற்றி திருப்பி பேசினேன், “அவரும் என்ன செய்ய ஒருத்தனுக்கும் கல்யாணம்” அமையவில்லையே? என வருத்தப்பட்டார், நானும் அவரிடம் எனக்கு என்னமோ அவர்கள் குடும்பம் “பிரம்மசாரி சாபம்” பெற்று இருக்குமோ? என சந்தேகம் எனக்கு இருப்பதை சொன்னேன், அவர் என்னை ஆழமாகப்பார்த்தார், பின் உங்க கிட்ட யாராவது சொன்னார்கள? என கேட்டார், நான் இல்லை முதல் பையன் மார்கழி அமாவாஸை அதுவும் இல்லாமல் ஹனுமன் ஜெயந்தியில் பிறந்து இருக்கிறார். அதனால் நான் ஜோதிட ரீதியாக சொன்னேன் என்றேன், பின்னர் அவர் சொன்ன தகவல் அதிர்ச்சி அடைய வைத்தது,
அவர் சொன்னதகவல்:-
இந்த பையனின் தாத்தா அந்த ஏரியா மிராசுதார், அவருக்கு ஒருதம்பி , சுமார் 50 ஏக்கர் பூமி அந்தக்காலத்தில் இருந்துள்ளது, இந்த பையனின் சின்ன தாத்தா
[ தாத்தாவின் தம்பி] சிறந்த முருகு பகதர், அவர் விவசாய வேலையை எதுவும் பார்க்காமல் அடிக்கடி முருகர் தரிசனம் காண “அறுபடை” பயணம் , அல்லது மருதமலை பழனி மலை என சென்று விடுவார், திருமணம் வேண்டாம் என சொன்னது அண்ணனுக்கு மிகுந்த சந்தோசம் [ பங்கு தர வேண்டியதில்லையே],தம்பியின் பயணத்திற்க்கு எந்த தடையும் விதிப்பதில்லை. செலவுக்கும் பணம் தந்து மயக்கி வைத்து இருந்தார், சில நாட்களில் தம்பி அண்ணனிடம் “சொத்து பிரித்து தா” நான் பழனிமுருகனுக்கு என் பங்கு சொத்தை எழுதிவைக்கணும் என்றார், அண்ணன் தனக்கு இரு மகன்கள் அவர்கள் உனக்கு மண்தள்ள வெண்டும் தானே? அதனால் உன்பங்கை அவர்களுக்கு விட்டு விடு”பழனிமுருகனுக்கு என்ன சொத்தா இல்லை” என மறுத்து விட்டார், ஆனால் தம்பி ஊர்பஞ்சாயத்தை கூட்டி விட்டார்,
[ அப்போது யாரும் நீதிமனறம் சென்றதில்லை ] ஊர்பஞ்சாயத்தில் அண்ணன் இப்போ அறுவடை இருக்கு அது முடிந்ததும் வேண்டுமால் பஞ்சாயத்தார் வந்து “யாருக்கு எந்த பங்கு என பிரித்து தரட்டும்”என சொல்லி விட்டார், பஞ்சாயத்தாரும் அறுவடை முடியட்டும் தம்பி என சொல்லி விட்டனர், ஆனால் அறுவடை முடியும் முன்னர் தம்பி கிணற்றில் தவறி இறந்து விட்டார், அப்போது அவர் உடலில் ஒருபெரியகல் கட்டபட்டு இருந்ததாம், அப்போதே “ அவர் அண்ணனால் அவர்கொலைதான் செய்யப்பட்டார்” என்பது ஊருக்கே தெரியுமாம் ,ஆனால் மிராசுதாரை அப்போது எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது, ஆனால் அந்த “பிரம்மசாரி” இறந்தது, சரியாக மார்கழி மாதம் அமாவாஸையாம் , அதாவது “ஹனுமன் ஜெயந்தி” அன்று, அதனால் தான் இன்னமும் அந்த குடும்பத்தில் திருமண வாய்ப்பு வரவில்லை என அந்த ஊர்காரரான பெரியவர் சொன்னார், அப்போது தான் எனக்கும் என மனதில் பட்ட “பிரம்மசாரி சாபம்” இருக்குமோ எனும் ஐய்யம் சரியானது எனப்பட்டது, ஆனாலும் இன்னமும் அந்த குடும்பத்தில் திருமணம் அமையவில்லை, “உங்க பையன்களுக்கு கல்யாணம் ஆகணும்’ என்றால் “முருகனுக்கு பாதி சொத்தை எழுதிவைக்க” சொல்ல அவர்களிடம் யார் சென்று சொல்வது ? நீங்களே சொல்லுங்க ?அவர்களிடம் யார் சென்று சொல்வது ?

2 comments:

  1. ஐயா வணக்கம் ,
    நீங்கள் சொன்னது //எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் அண்ணனுக்கு 3 மகன்கள்.
    தம்பிக்கு 3 மகள்கள்.//--------// முதல் பையன் மூலம் அதுவும் ஹனுமன் ஜெயந்தியில் பிறந்தவர், எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக மிக பெரிய சந்தேகம் , இவர்கள் குடும்பம் “பிரம்மசாரி சாபம்” இருக்குமோ ///-------------------//இந்த பையனின் தாத்தா அந்த ஏரியா மிராசுதார், அவருக்கு ஒருதம்பி ,//// இப்ப என் கேள்வி என்னன்னா இந்த மூன்று பையன்களுக்கும் அவர் தாத்தான்னா ,அந்த மூன்று பெண்களுக்கும் அவர் தாத்தா தானே .அப்ப சின்ன தாத்தாவை பெரிய தாத்தா கொன்ற பாவம் ,அந்த பெரிய தாத்தாவின் ஒரு மகனின் வாரிசை மட்டுமே எப்படி தாக்கும்? அந்த பெரிய தாத்தாவின் மற்றொரு மகனின் வாரிசுக்கு அந்த பாவம் வராதா ? இங்க லாஜிக் இடிக்குதே .
    பிரம்மச்சாரி சாபம் என்றால் என்ன ?ஜோதிட ரீதியான விளக்கம் அளிக்கமுடிந்தால் சொல்லுங்க ,உங்களுக்கு விருப்பம் இல்லன்னா வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. brahmachari ad brahmacharini , difference exists

      Delete