Monday 28 October 2013

மாந்தியும் சனியும்

மாந்தியிடம் முதலில் அறிமுகம் ஆகி கொள்வோம்! 

மாந்தியை சனியின் மகனாக குறிப்பிட்டு உள்ளனர்,சனிதான் வலிமை குன்றிய கிரஹம் ஆனால் சனியை கண்டு நடுங்காதவர்கள் இல்லை எனலாம், இலங்கை அதிபன் ராவணன் முதல் நளமஹராஜா வரை சனியின் உபத்திரவத்துக்கு ஆட்பட்டவர்எத்தனைபேர்?

சனியின் பார்வை மிக கொடிது! இராவணன் நவக்கிரஹங்களை குப்புற கவிழ்த்து அரியணை ஏறியபோது . நம்ம நாரதமுனிவர் “ முதுகில் ஏறுவது வீரனுக்கு அழகில்லை, அதனால் மார்பில் ஏறி நட” என சொல்லி உசுப்பேற்றி நவக்கிரஹங்களை மல்லாக்க போட்டு ஏறி நடந்தான் இராவணன். சூரியன்,சந்திரன்.செவ்வாய்.புதன்,குரு,சுக்கிரன் மீது கால் வைக்க எதுவும் ஆகவில்லை,ஆனால் சனிபகவானின் மீது கால் வைக்கும்போது சனியின் பார்வை பட்ட்து, அதனால் வலிமை குன்றினான் இராவணன். பின்னாளில் ராமனிடம் தோற்றான்.

இப்படிபட்ட சனி இராவணன் மிகவலுவாக இருந்த நேரத்தில் அவனுக்கு பிறக்கும் குழந்தை இந்திரஜித்தால் உலகம் அழிவைத்தேடும் அனைவரும் அழிவர் என அதைதடுக்கும் பொருட்டு சிறையில் நவக்கிரஹங்கள் அடைக்கப்பட்டு இருந்தநேரத்தில் சனிபகவான் தன் உடலில் உள்ள அழுக்கை எல்லாம் திரட்டி [குளிகை] வெளியே போட அது இந்திரஜித் ஜாதகத்தில் லக்னத்தில் விழுந்தது, அதனால் இந்திரஜித் தலை சிதறி இறந்து போனான், இந்தமாந்தி எங்கு நிற்க்கிறதோ[ ஜெனன ஜாதகத்தில் ] அந்த இடம் காராகோபவ நாஸ்தி என பொருள் கொள்க! அழிவிற்காக தோற்று விக்கப்பட்ட்து மாந்தி அதனால் மாந்தியால் நற்பலன் ஏற்பட வாய்ப்பு இல்லை, 

குருவிற்க்கும் சனிக்கும் நாரதர் சண்டை ஏற்படுத்தி அதில் கீழே சனிபகவான் விழுந்ததால் ஏற்ப்பட்ட ரத்தத்தில் உருவானவன் மாந்தி எனவும் புராணகதை உண்டு!

கூண்டோடு மரணம் அமைவது கூட இந்த மாந்தியால் தான் [ சுனாமி& பூகம்பம் போன்றது ] விபத்தில் இப்படி மரணம் அடைந்தால் அந்த ஆவி 60 வயது வரை அலைந்து பின் மோர்சம் அடையும் என முனிவர்கள் சொல்லியுள்ளனர். விபத்தால் இறப்பவர்கள் ஒருசிலரின் ஜாதக அமைப்பு பலரை உடன் அழைத்து செல்கின்றனர். 

அதை பற்றி சர்வார்த்த சிந்தாமணி ஜோதிட நூலில் விளக்கம் உள்ளது!

இதர கிரஹங்களுக்கு இஷ்ட்தெய்வம் உள்ளது போல மாந்திக்கும் இஷ்டதெய்வம் துர் ஆவிகள் என முன்னோர்களால் குறிப்பிடபட்டுள்ளது! 


சூரியனுக்கும் சனிக்கும் இடைப்பட்ட தூரம் 148.8 கோடி கிலோ மீட்டர் ஆகு
ம். 

சனி சூரியனை சுற்றி வர எடுத்து கொள்ளும் கால அளவு 29 ½ ஆண்டுகள் ஆகும். சனி பூமியை விட 700 மடங்கு பெரியதாக இருந்தாலும் கனத்தில் 100 மடங்கு தான் உள்ளது. சனிகிரஹத்தை அம்மோனியா, மீதேன். ஹைட்ரஜன் ஆகியவை சூழ்துந்துள்ளது! கருநீலமான சனியை சுற்றி 9 உபகிரஹங்கள் உள்ளது! அதில் 8 கிரஹங்கள் அப்பிரதட்சிணமாகவும் ஒருகிரஹம் மட்டும் பிரதட்சிணமாகவும் சுற்றிவருகிறது! அந்த கிரஹம் பெயர் டைட்டன் [ titan] எனும் கிரஹம் பெயரிட்டு அழைக்கப்படுகிறது! வ இது மற்ற கிரஹத்தை விட அதிக தூரத்தில் உள்ளது! 7/10/2001 அன்று சனிக்கிரஹணம் ஏற்ப்பட்ட்து. அப்போது சனியின் துணை கிரஹம் ஆன டைட்டனுகும் கிரஹணம் ஏற்பட்ட்து! மாந்தியும் டைட்டனும் ஒன்றா என வரும் காலம் சொல்லும் நண்பர்களே!


1 comment: