Wednesday 30 October 2013

லக்னகணிதம் சுலபமாக பழக சிறுகணக்கு

பொதுவாக லக்னம் கணிக்க இப்போது ஜோதிடம் கற்பவர்களுக்கு நாழிகை அளவீடு செய்ய தடுமாற்றம் கொள்கிறார்கள், அது மிகவும் சுலபமானதே! 
அது எப்படி எனில் உதாரணமாக ஒருகுழந்தை மதுரையில் இரவு 9 மணி 55 நிமிஷத்திற்க்கு பிறக்கிறது எனவைத்து கொண்டு கணிக்கிடுவோம், நல்லிரவு முதல் ரயில்வே மணிப்படிகணிக்கிட இரவு 9.55 p.m. ஆனது சரியான மணி 21 மணி 55 நிமிஷம் ஆகிறது, அதில்உதாரணமாக மதுரையில் சூர்ய உதயம் காலை 6 மணி 09 நிமிஷம் அதை கழியுங்கள் .விடை மீதி 15 மணி 44 நிமிஷம் வரும், சரியா? அதில் 15 மணியை நிமிஷமாக்கவும் கால்குலேட்டரில் 15x60 = 900 விடை அத்துடன் மீதி 44 நிமிஷத்தை கூட்டிக்கொள்ளவும் விடை900+44= 944 அதை கால்குலேட்டரில் ஒருநாழிகை என்பது 24 நிமிஷம் அல்லவா? அதனால் 24 ல் வகுத்து பாருங்கள் விடை என்ன வரும் ? 39.33 அல்லவா? இப்போது முன்புறம் இருக்கும் 39 என்பது நாழிகை பின்புறமாக இருப்பது 33 சதம் அதை 60 விநாழிகை கொண்டது 1 நாழிகை என்பதால் 33 சதம் என்பது 20 விநாழிகை ஆக்கி கொள்ளவும் . இப்போது அந்த குழந்தை பிறந்தது சூர்ய உதயாதி தொடங்கி 39 நாழிகை 20விநாழிகையில் குழந்தை சுபஜெனனம் என்பதே சரியான நாழிகை கணிக்கீடு ஆகும்,சூர்ய உதயம் வரை சென்ற மணிதுளிகளை நாம் 00.00 மணி முதல் கணக்கிட்டு பின்னர் குழந்தை  பிறந்த நேரம் வரை கணக்கிட்டு மணிகளை நிமிஷங்களாக்கி மீதி நிமிஷத்துடன் கூட்டி அதை வகுத்தல் 24 ல் செய்து பார்க்க முன்னிட்டு வருவது நாழிகை பின்னிட்டு வருவது விடையை 100 யை 60 ல் வகுத்து வருவது போல கணக்கிடவும் 10 எனில் 6 விநாழிகை எனில் 33 எனில் 20 விநாழிகை 66 எனில் 40 விநாழிகை எனும் முறையில் கணக்கிடலாம்

4 comments:

  1. தலைப்பிற்கும், தகவலுக்கும் துளிகூட சம்மந்தம் இல்லை.

    "சாதாரண கால்குலேட்டரில் எப்படி மணி, நிமி(நா, வி) கணக்கிடுவது" என்று தலைப்பு இருப்பின் பொருத்தமானதாகும்.

    ReplyDelete
  2. அருமையான விஷயம்

    ReplyDelete
  3. அருமையான விஷயம்

    ReplyDelete