Wednesday 30 October 2013

ஜோதிடத்தின் ஆதிமூலம் நான்கு வேதங்களே

1, ரிக்வேதம் 
2, யஜூர்வேதம். 
3, சாமவேதம். 
4அதர்வண வேதம். இதை உள்ளடங்கி செல்வது என்ன ? 
மனிதனுக்கு உடல் உறுப்பு போல வேத்திற்க்கும் ஆறு உறுப்பு உள்ளது! அவை என்ன? 
1, சிட்சை:-இது வேதம்,வேதாங்கம், தர்க்கம், மீமாம்சை,அரசியல், மனுநீதி முதலியது இதில் 
அடக்கம் [ படிப்பியல்] 

2, கல்பம்:- மந்திரப்பிரயோகம், மருத்துவம் சார்ந்தது ஆகும். 

3,நிருக்தம்:- இது மொழியியல் ஆகும் பேசும் பாஸை பயிலும் மொழி முதலியது, 

4, வியாகரணம்:- இது இலக்கண முறை தமிழ், ஆங்கிலம் B.A.LIT போன்றது, 

5, சந்தஸ்:- இது நாட்டியம் ,நாடகம் , நடிப்பு பயிற்சி, 
[ பாஸையின் நடை ] போன்றது! 

6, ஜோதிஷம்:- [ கண்கள்] 1200 ஆண்டுக்கு முன்பு இதைபற்றி பாஸ்கராச்சாரியார்,சாஸ்த்திரத்தின் ”சப்த சாஸ்த்திரம் முகம், ஜ்யோதிஷம் சஷுஷி, சீரோத்ர முக்தம், நிருக்தம்,,கல்பஹகரெள, யாதுராஸ்யவேதஸ்ய,ஸாநாஸிகா, பாதபத்ம த்வ்யச்சந்த ஆத்யெளபுதைஹி” என்றார். 
அதன் பொருள்;- வேதம் புருஷனின் முகம், இலக்கணம், கண்கள் ஜோதிஷம் [ ஓளி] , செவிகள் நிருத்தம், கைகள் கல்பம் , சிட்சை:-[படிப்பு] அவனது மூக்கு, மற்றும் சந்தஸ் அதின் பாதம் ஆகும், ஆக மனிதனுக்கு கண்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் வேதத்திற்க்கு கண்கள் ஜோதிடம் அவ்வளவு முக்கியம், அதை சற்று திறம் பட படித்து ஜோதிடம் பார்ப்பவர்கள் தான் காலம் கடந்தும் பேசப்படுவார்கள், 
இதை படிக்கும் ஜோதிடம் பயிலும் நண்பர்கள் தேர்ந்த ஆசான் கொண்டு படிப்பதும் பின் ஜோதித்தின் மூலம் புகழ் அடைவது நல்லது! எதேனும் ஒரு கலைமன்றம் “ ஜோதிஸ்சிரோன்மணி” ஜோதிடரத்னா- ஜோதிடகலாமணி -என பட்டம் பணம் கொடுத்து வாங்குவதை விட மக்கள் ”இவர் மிக நல்ல ஜோதிடர்” என புகழ் தருவதே சிறந்தது, 

8 ஆண்டு முன் எனக்கும் தன் சபாமூலம் சென்னையில் பட்டம் தருகிறேன் எனவும் அதற்க்கு கலைமன்ற நன்கொடையாக பணமும் கேட்டனர் ,” நான்.எனக்கு அது தேவை இல்லை என சொல்லி விட்டேன்.” 
பட்டயத்தால் அதை ஆபீஸ்ல மாட்ட்டுவதால் ஒரு ஜோதிடன் புகழ் ஓங்காது! படிக்கணும்! படிக்கணும்! படிக்கணும்! படிக்கணும்! ”ஜோதிடத்தை சாக மட்டும் ”படிக்கணும்!

No comments:

Post a Comment