Sunday 27 October 2013

திருமண முறிவு ஏன் ?

அடிக்கடி இப்போது திருமணம் பல மணமுறிவை சந்திக்கிறது!
பெண்களிடம் ஆணுக்கு அடங்கி செல்லும் சுபாவம் இல்லை!
தான் வேலை செய்யும் ஊருக்கு பையன் மாற்றல் வாங்கி வந்தால் திருமணம் என கட்டளை இடும் பெண்களும் அதிகம்,
" அந்த காலத்தில் சீதைக்கு ராமன் இருக்கும் இடம் அயோத்தி" என சொல்லப்பட்டது,ஆனால் இப்போ ?
சரி அதுபோக அப்போது எல்லாம் பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்ப பயப்பட்டனர், ஆனால் இப்போ தன் பெண்பிள்ளை வெளியூரில் வேலை பார்ப்பதை தான் பெருமையாக சொல்லி கொள்கிறார்கள் பெற்றோர் என்ன செய்ய கலிமுத்தி விட்டது,
என்னை பொருத்தவரை பெற்றோர்கள் தன் பிள்ளை [பெண்குழந்தை] கட்டி கொடுத்து கணவன் வீடு செல்லும் வரை வயதுக்கு வந்த பெண்களை எந்த பெற்றோர் தன் கண்காணிப்பில் வளர்த்துகிறார்களோ? அவர்களே தன் பிள்ளையின் நலனும் & பால் அன்புகொண்டோர்,
உதாரணத்திற்க்கு
தர்மபுரியில் இன்று ஒரு பெண் தன் தகப்பன் இறந்த தகவலை சொல்லி "கர்மகார்யம் செய்ய வீட்டுக்கு வா" என அழைத்தும் நீங்கள் என் காதலை பிரிக்க சதி செய்கிறீர்கள் நான் உங்களோடு வரமாட்டேன் காதலனோடு தான் செல்வேன் என்று காப்பகத்தில் இருந்தவள். 6 நாள் கழித்து நீதிமன்ற உத்திரவு செய்து போலீஸ் காவலில் எடுத்து தான் அவளின் தகப்பன் இறந்து போனபின் வீடுவருகிறாள். உண்மையிலே தன் தகப்பன் தான் ஒடிப்போனதை கண்டு தற்கொலை [அவள்தானே கொன்றாள்?] செய்து கொண்டது கண்டு "அய்யோ! தப்பு பண்ணிட்டேன்" என கதறுகிறாள், அவளும் வீட்டை விட்டு மகளீர் காப்பகம் வரமாட்டேன் என போலீஸிடம் கேட்க போலீஸ் நீதிமன்ற உத்திரவு படி " நீ எங்களோடு வா- காப்பகத்தில் விட்டு விடுகிறோம், பின்னர் கோர்ட் மூலம் நீ வீடுவரலாம் என சொல்லி விட்டனர் காவல் அதிகாரிகள், இனி வீடு வந்தால் தான் எப்படி அந்த பெண் தன் அம்மாவோடும் தம்பியோடும் வாழ்க்கை நடத்துவாள். என்னை பொருத்தவரை அந்த பெண்ணை சொல்லி குற்றம் இல்லை, அவளை செல்லம் கொடுத்து வளர்த்த பெற்றோரே இந்நிலைக்கு காரணம், பையனை தட்டி வளர்க்கணும் , பெண்ணை பொத்தி வளர்க்கணும் என சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள்?
இதை எல்லாம் பார்க்கும் போது ஒருபலமொழி ஞாபகம் வருகிறது
"சும்மா கிடந்த சிட்டுக்கு குருவிக்கு சோற்றை போடுவானேன்?
அது கொண்டையை கொண்டையை ஆட்டிகிட்டு கொத்த வருவானேன்? "

No comments:

Post a Comment