Friday 27 March 2020

ஜோதிட பயணம் [ பகுதி-1]



ஜோதிட பயணம் 1

நடத்துனர்:-பூ.சி. பெரியசாமி ஜோதிடர்கோவை9842616578


ஜோதிடக் கலை என்பது சமுத்திரத்தை போன்றது அதை பெரியோர்களும் ரிஷிகளும் ஆராய்ந்து பல நூல்கள் எழுதி உள்ளனர் எல்லோரும் எல்லாவற்றையும் கற்று உணர்ந்து கொள்வது என்பது இயலாத காரியம்

சோதிட பயணம் என்ற இந்த தலைப்பில் ஜோதிடம் பார்ப்பது எப்படி என்ற முறையில் எழுதுகிறேன்தொழில்முறை ஜோதிடர்களுக்கும் இது ஆரம்ப கால ஜோதிடர்களுக்கும் ஜோதிடம் கற்பவர்களுக்கு உண்டான ஜோதிட பயணம் ஜோதிடத்தில் நன்கு தெரிந்த ஜோதிட மேதைகளுக்கு இங்கு இடம் இல்லை

ஜோதிட பயணத்தில் நம்முடன் சேர்ந்து பயணிக்கக்கூடிய அனைத்து ஜோதிடர்களும் நன்றியை தெரிவித்துக் கொண்டு இந்த ஜோதிட பயணத்தில் கலந்துகொண்டவர்கள் ஓரளவு தெரிந்து கொண்டு மேலும் ஆர்வமுடன் பல நூல்களைப் படித்து அறிய இது முன்னோடியாக இருக்கும்ஜாதகம் எழுதும் முறையும் கோச்சார பலன்கள் பலனும் கிரகங்களின் தன்மை நட்சத்திரங்களின் தன்மையும் ராசிகளின் தன்மை மிக நன்றாக விளக்கி கூறப்படும்இந்த ஜோதிட பயணத்தில் விவாகப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறதுஉங்கள் ஜாதகங்கள் கிரகங்கள் எப்படி அமைந்தால் நல்லது என்பது பற்றியும் எந்த தன்மையில் இருக்கும் என்பது பற்றியும் ஜோதிட பயணத்தில் நாம் சிறிது சிறிதாக தெரிந்துகொள்ளலாம்எனக்கு கிடைத்து இருக்கக்கூடிய இந்த இருபது நாட்களுக்குள் என்னால் எவ்வளவு எழுத முடியுமோ அத்தனையும் எழுதலாம் என்று இருக்கிறேன் நீங்கள் விருப்பமுள்ளவர்கள் பின் தொடரலாம்ஜோதிட விஷயங்களை முழுவதுமாக கூறவேண்டுமானால் இதைப்போல பல ஜோதிட பிரயாணம் நீங்கள் செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியும்அனைவரும் வாருங்கள் மகிழ்ச்சியாக நாம் 20 நாட்கள் ஜோதிட பயணம் செய்வோம்ஜாதகர் பிறந்த லக்னத்தையும் அக்காலத்தில் அமைந்துள்ள கிரக நிலையையும் நவாம்ச நிலையையும் அறிந்து ஜனன காலத்தில் இந்த திசையில் எவ்வளவு இருப்பு என கண்டறிந்து கொள்வதே ஜாதகத்தில் ஆரம்ப நிலை ஆகும்ஜாதகம் எழுதுவது எப்படி என்ற அத்தியாயத்தில் ஜாதகம் எழுதும் முறை கூறப்பட்டுள்ளது ஜாதகம் பார்க்கத் துவங்கும் போது முதலில் அந்த காலங்களில் தசாபுத்தி என்ன நடக்கிறது என அறிந்து கொள்ள வேண்டும் ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடத்திற்கு ராசி என்று பெயர் சந்திரன் நின்ற வீட்டிலிருந்து கிரகங்கள் தற்போது இருக்கும் இடங்களை அறிந்து கொள்வது கோட்சாரப் பலன் ஆகும் தசாபுத்தி ரீதியாக நடைபெறும் பலன்களையும் கோச்சார ரீதியாக உள்ள பலன்களையும் அறிந்தால்தான் ஜாதகரின் பலன்களை பூரணமாக அறியமுடியும் சந்திரன் நின்ற வீட்டிலிருந்து தற்கால கிரக நிலை மாறுதல்களையும் கோச்சார பலனை ஓரளவு அறிய முடியும் தசாபுத்திகள் நல்ல முறையில் இருந்தால் கோட்சார ஏற்படவிருக்கும் கெடுதல்கள் ஜாதகரை அதிகமாக பாதிப்பு இல்லைபலாபலன்களை அறிய முதலில் கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் எவ்வளவு காலம் தங்கி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும் கிரகங்களிலேயே சந்திரன் ஒன்றுதான் 12 ராசிகளையும் 30 நாட்கள் சுற்றி வருகிறார் அவர் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை நாட்கள் தங்கியிருப்பார் சந்திரனுக்கு அடுத்தபடியாக சூரியனை கூறலாம் அவர் 12 ராசிகளையும் ஓராண்டில் சுற்றி வருகிறார் அதாவது ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் தங்கி இருக்கிறார்சுக்கிரபகவான் புதபகவான் செவ்வாய் பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றரை ஆண்டுகளில் 12 ராசிகளையும் கடக்கின்றார்கள் இவை ஒவ்வொரு ராசியில் சராசரி 45 நாட்கள் தங்கி இருக்கின்றனர் ஆனால் செவ்வாய் மாத்திரம் சில சமயங்களில் ஒரு ராசியில் ஆறு மாதம் கூட தங்கியிருக்கும் இது எப்போதாவது தான் நிகழும் அவ்விதம் செவ்வாய் ஒரு ராசியில் தங்கியிருந்தால் அந்த ஆண்டு உலகத்தில் பல அதிசயங்கள் நடைபெறும் சில சமயங்களில் பெரிய தீமைகளும் நிகழும் அது செவ்வாய் நின்ற ராசியின் தன்மையை பொறுத்து அமையும்

கன்னியா ராசியில் செவ்வாய் அளவுக்கு மீறிய காலம் தங்கினாள் நாட்டில் மழை பொழியாது பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடும் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் போய்விடும் கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும் என்று ஒரு பழமொழி உண்டு
அடுத்து குரு பகவான் 12 ராசிகளை கடந்து செல்வதற்கு இவர் 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார் ஒரு ராசியை கடப்பதற்கு ஓராண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்
ராகு கேது இரு கிரகங்களும் 18 ஆண்டுகளில் 12 ராசிகளை கடக்கின்றனர் இவர்கள் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் வீதம் தங்கியிருப்பார்


மிகவும் மந்தமான நிலையில் செல்லக்கூடிய கிரகம் சனிபகவான் தான் இவர் 12 ராசிகளையும் கடந்து வர 30 ஆண்டுகள் பிடிக்கின்றன ஒரு ராசியில் இவர் இரண்டரை ஆண்டுகள் பிரயாணம் செய்வார்
ராகு கேதுக்களை தவிர மற்ற கிரகங்கள் முறைப்படி 12 ராசிகளையும் வலம் வருகின்றன ராகு-கேது மாற்றும் எதிர்திசையில் செல்கின்றன மேலும் இரண்டு கிரகங்களும் ஒரே சமயத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்கின்றன இதுபோல் மற்ற கிரகங்கள் சேர்ந்து செல்வது இல்லை எப்பொழுதும் ராகுவும் கேதுவும் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் ஒருவருக்கு ஒருவர் ஏழாம் இடத்திலும் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள் இதில் எவ்வித மாறுதலும் ஏற்படாது பலனை பார்க்கும்போது கிரகங்கள் அப்போது தங்கியிருக்கும் ராசிகளை மாத்திரம் வைத்து பல அறிய முற்படக்கூடாது அந்தந்த ராசியில் அந்தந்த கிரகங்களுக்கு சாதகமாக அமைகின்றன பாதகமாக அமைகிறது அதை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் முதலில் ஒவ்வொரு ராசிக்குரிய சொந்த வீடுகளை அறிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்வோம்


ஒன்பது கிரகங்களில் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கு சொந்த வீடுகள் ராசிகள் உண்டு ராகுவுக்கும் கேதுவுக்கும் சொந்தமாக எந்த இடமும் ராசிக்கும் இல்லை அவர்கள் எந்த ராசியில் தங்கி இருக்கிறார்களோ அதையே அவருடைய சொந்த வீடாக கருதவேண்டும்


மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ஆகிய 12 ராசிகளாகும்


மேஷம் விருச்சிக ராசிக்கு செவ்வாய் பகவானுக்கு சொந்தமானவை
ரிஷப ராசிக்கும் துலா ராசிக்கும் சுக்கிர பகவானுக்கு சொந்தமானவை
மிதுன ராசிக்கும் கன்னி ராசிக்கும் புத பகவானுக்கு சொந்தமானவை
தனுசு ராசிக்கும் மீன ராசிக்கும் குரு பகவானுக்கு சொந்தமானவை
மகர ராசிக்கும் கும்ப ராசிக்கும் சனி பகவானுக்கு சொந்தமான ராசி வீடுகள் ஆகும்கும் சொந்தமான ராசிகளாகும்


கடக ராசிக்கு சந்திர பகவானும்
சிம்ம ராசிக்கு சூரிய பகவான்
இக் கிரகங்கள் தங்கி இருப்பதையே சொந்த இடங்களில் தங்கி இருக்கிறார்கள் என்று கூற வேண்டும்
ஒன்பது கிரகங்களும் ஒன்றுக்கு மற்றொன்று நட்பாகவும் பகையாகவும் சமமானதாக இருக்கும் பலனை அறிய இவற்றைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும் ஜனன காலத்தில் கிரகங்கள் நின்ற ராசிகளை ஆராய்ந்து அவை சொந்த வீட்டில் இருக்கின்றனவா நட்பு வீட்டில் இருக்கின்றனவா பகை வீட்டில் அமர்ந்து இருக்கின்றனவா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் பிறகு கோச்சாரத்தில் அவை எப்படி இருக்கின்றன என்பதையும் அறிந்து பலனை ஆராய வேண்டும் நட்பு கிரகங்கள் நட்பு வீட்டில் இருந்தால் பலன் நல்லதாக அமையும் பகை வீட்டில் இருந்தால் பலன் மாறுபடும் அதுவே இயற்கையில் பகை கிரகமாக இருந்து பகை வீட்டில் அமர்ந்து இருந்தால் பலன் அடியோடு மாறிவிடும் பெரும்பாலும் இவை நல்ல பலனை ராஜயோகத்தை கூட அளிக்கும்


இப்போது கிரகங்களின் தன்மைகளைப் பற்றி அறிவோம் கிரகங்கள் தங்கும் ராசிகள் அவற்றிற்கு நட்பானது பகையான சமமானது என்பதை பார்ப்போம்


சூரியனுக்கும் சந்திரன் குரு செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் நட்பான வை புதன் சமமானது சுக்கிரன் சனி ராகு கேது ஆகிய கிரகங்கள் பகையானவை


செவ்வாய்க்கு சூரியன் சந்திரன் குரு ஆகிய மூன்று கிரகங்களும் நட்பான வை சுக்கிரனும் சனியும் சமமானவை புதன் ராகு கேது ஆகியவை பகையானவை


புதனுக்கு சூரியன் சுக்கிரனும் நட்பான வை குரு செவ்வாய் சனி ராகு கேது ஆகியவை சமமானவை சந்திரன் மட்டுமே பகையானது


. குருவுக்கு சந்திரன் சூரியன் செவ்வாய் ஆகியவை நட்பான வை சனி ராகு-கேது சமமானவை புதன் சுக்கிரன் இரண்டும் பகை பகையானவை


சுக்கிரனுக்கு புதன் சனி ராகு கேது ஆகியவை நட்பு கிரகங்களான குரு செவ்வாய் இரண்டும் சமமானவை சூரியன் சந்திரன் இரண்டும் பகை கிரகங்கள் ஆகும்


சனிக்கு புதன் சுக்கிரன் ராகு கேது ஆகிய கிரகங்கள் நட்புறவை குரு சமமான கிரகமாகும் சூரியன் சந்திரன் செவ்வாய் இம்மூன்றும் பகைக் கிரகங்கள் ஆகும்


ராகு-கேது இருவருக்கும் சனி சுக்கிரனும் நட்பு கிரகங்கள் புதன் குருவும் சமக் கிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய் இம்மூன்றும் பகைக் கிரகங்கள்
என்றும் உங்கள் அன்பு ஜோதிடர் பூச்சியூர் பெரியசாமி

ஜோதிட பயணம் தொடரும்

No comments:

Post a Comment