Wednesday, 19 April 2017

K.P.ஜோதிடம் ஒரு பாரம்பரியமே

K.P.ஜோதிடம் ஒரு பாரம்பரிய ஜோதிடமே......

ஜோதிடத்துறை
இதில் பல்வேறுபட்ட ஜோதிடநிலை
பாரம்பரியம்
அதில் வாக்கியம் மற்றும் திருக்கணிதம் என இரண்டு முறைகள்
அதுபோக இப்போது
KP
KB மற்றும்
சாரஜோதிடம்
பஞ்சபட்ஷியை கொண்டு
ஜாமக்கோள் கொண்டு
நிமித்தங்கள் கொண்டு என்று பல்வேறு ஆசான்கள் தனக்கென ஒரு பாதை இட்டு அதில் தனக்கும் கீழ் சீடர்களை ஏற்படுத்தி கொண்டு ஒரு மாறுப்பட்ட விதமாக
"தன்னை மட்டுமே "முன்னிலை படுத்தி செல்கிறார்கள் !!!!!

சமீபத்தில் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கீடு செய்து K.P.ஜோதிடத்தால் எப்படி கேள்வியாளர் வரும்போது நிகழும் மற்றும் கிரகங்கள் இருக்கும் நிலையை கண்டு பலாபலனை அறிவதெப்படி என்ற கருத்துக்களை உள்வாங்கும் முயற்சியில் இருக்கிறேன் !!!!!

அப்படி படிக்கும்போது அதில் சொல்லபட்ட விஷயங்களை எல்லாம் முன்னரே ஶ்ரீகுமாரசாமி சுவாமிகள் இயற்றிய
"குமாரசாமியம் "ஜோதிடநூலில் எழுதப்பட்ட  விஷயங்களில் 54 படலத்தில் ஒரு படலம் 47வதாக வரும்
"சிந்தனாபல படலம் " (சிந்தனை நேரத்தில் நிகழும் கிரகநிலைகள் )என்பதில் 18 ஆண்டுகள் ஆழ்ந்த ஆராய்ச்சி காரணமாக  இருக்கவும் நாம ரெடி கிருஷ்ணமூர்த்தி பத்ததி எனும் KP System உருவாகி இருக்கிறது என்பது நன்றாக புலப்பட்டது !!
அதைபற்றி கொஞ்சம் குமாரசாமியம் நூலில் என்னதான் இருக்கிறது என்பதை கொஞ்சம் விவரிக்க இப்பதிவு !!!!

"சிந்தனையுற் றவனுதயம் செடத்துதய மாயத்
தினகிரகர் முற்கிரகத் திரத்தினில்வைத் திதனால் எந்தவினம் எந்தவகை எப்பலம் சொல்லா விதையமுள ததற்குதய மேடாதி எதுவோ வந்தவிடத் தும் இறைமே அவ்விடத்தும் உளாக ரகப்பெயரில் அதிபலப்பேர் அறைகுவரா லசியம் வந்தவனுக்குக் குயதமாக பத்தலமாய் விழித்தன் மற்றவரா இறைபெலக்கின் மரணமின்மற் றதற்கே """"
-------++குமாரசாமியம் பாடல் எண் 389 ......

பொருள் விளக்கம் ;-
கேள்வியாளர் குறிப்பிட்ட சிந்தனையாக ஜோதிடரை காண வந்த நேரத்தில் கண்ட உதயராசி லக்னமாக கொண்டு அன்றைய தினத்தின் அதிபதி தாற்கால கிரகமாக வைத்து (ஜெனன கால ) அந்த ஜாதகர் முதலாக குடும்பத்துக்கு எல்லாம் பலன்களை சொல்லபடுவன ஆதலால் அந்த ஜாதக கேள்வியாளர் நினைத்து வந்த சிந்தனை பற்றி பலாபலனை சொல்ல வேண்டில் உதய லக்னம் மேடாதிக்கு எவ்விடம் என்று அறிந்து உதய லக்னாதிபதி இருந்த இடம் எவ்விடத்தில் என்று அறிந்து இந்த இடங்களுக்கு உண்டாகும் காரகத்தன்மை வைத்து பலமுள்ள இடங்களுக்கு காரக பெயர்களை கொண்டு பலனை அறிந்து சொல்லுதல் வேண்டும் பிணியுடன் இருப்போர் பற்றிய கேள்வியாகில் உதய பாவ கிரக ராசியாகவும் அந்த உதயத்தை சுபர்கள் நோக்கவும் நோயில் இருந்து மீள்வார் என்ற பலாபலனை சொல்லி அனுப்பலாம் !!!
மாறாக சுபகிரகம் சுபராசி உதயமாகி பாவர்கள் பார்வைக்கு சிக்கினால் மாரகம் எனும் மரணமே உண்டு என அறியலாம். ...அதற்கு அடுத்தபடியான 390 வது பாடலில் இன்னும் அற்புதமான கருத்துக்களை கொண்டதாக அமைந்துள்ளது !!!
அது
"தற்கமொரு வர்க்கொருவர் உற்றிடில்வெல் பராகில் சாற்றெனுமுன் மனையோனி தங்களில் சத்துருவாய் நிற்குமிதற் கடலுள நாளொரு பாத முதனேர் நெருப்பளவாய் எலிமுயறோ லரவிவை நேர்க்குதளாம் சொற்குளவத் திசைக்குளதும் பஞ்சபட்ஷிக் குளதும் சொற்றிடு நாமத்துளதும் சுடர் முதலெண் டிசைப்போர் மற்குளது மற்றதுவும் கண்டுறைத்திடு வரிதுவெவ் வளவு நாள்கெனிலதிபர்க் குளது வகுப்பதுவே """""
------------### குமாரசாமியம் பாடல் எண் 390
இச்செய்யுள் சொல்வது ;-
ஒரு விஷயத்துக்கு ஜோதிடரிடம்
வெற்றி கிடைக்குமா ?***
தோல்வி கிடைக்குமா ??**என்று கேள்வியாளர் கேட்கும்போது
கிரகங்களின் யோனியாக

1)கீழ்திசை (நேர்கிழக்கு இந்திர மூலை) கருடனாகவும்

2)தென்கிழக்கு (அக்னிமூலை ) பூனையாகவும்
3) தெற்கு (யமமூலை ) சிங்கமாகவும்

4) தென்மேற்கு (நிருதி மூலை )நாயாகவும்

5)மேற்கு (வருணமூலை ) சர்ப்பம் எனும் பாம்பாகவும்

6) வடமேற்கு (வாயுமூலை ) எலியாகவும்

7) வடக்கு (குபேரமூலை ) யானையாகவும்

8) வடகிழக்கு (ஈசான்ய மூலை ) முயல் ஆகவும்
திசைகளுக்கு யோனியை நிர்ணயம் செய்து அந்த திசைக்கு இருக்கும் பகை யோனியை கண்டு வெற்றியை வகுத்து சொல்லலாம் என்கிறது பாடல்
அதன்படி
சித்திரை முதல் ஆனி வரை எலி பூனையை வென்று விடும் !!!
ஆடி முதல் புரட்டாசி வரை முயல் நாயை வென்று விடும் !!
ஐப்பசி முதல் மார்கழி வரை யானை சிங்கத்தை வென்று விடும் !!!!
தை முதல் பங்குனி வரை சர்ப்பம் கருடனை வென்று விடும் இப்படி பலம்வாய்ந்த மிருகங்களை பலம் குறைந்த மிருகங்கள் வெல்லும் என்பதை அந்த ஜாதகர் வருகைப் பொருத்து அமைந்த உதயலக்னம் கொண்டும் பஞ்சபட்ஷி பலனும்
நாம நட்சத்திரம் பலனும் (கோட்சாரத்தில் சந்திரன்
நடப்பு திசை புக்தி அறிந்து இவைகள் முதலானவைக்கு தக்கதொரு பலாபலனை சொல்ல பலன் தப்பாது நடக்கும் என்பதும் அது எத்தனை நாட்களில் என்பதை  பலவானுக்கு சொன்ன விதம் (வேறு ஒரு பாடலில் ) கணித்து சொல்லவும் என்கிறது குமாரசாமியம் ஜோதிடநூல் .......

படலம் எனும் தொகுதி 54
செய்யுள் மொத்தமாக 425 கொண்டது குமாரசாமியம்
வெறும் இரண்டு பாடலை எடுத்து பார்த்தாலே இவ்வளவு விஷயங்களை பிடிக்க முடிகிறது என்றால் மொத்தமாக இருக்கும் செய்யுள் உள்ளே எவ்வளவு விஷயங்கள் பொதிந்து இருக்கிறது என்பதை வரும்கால ஜோதிடராக திகழப்போகும் ஜோதிட ஆர்வலர்கள் எல்லாம் சிந்தனை செய்து பாருங்கள் !!!
மிக அற்புதமான விஷயங்களை எல்லாம் சின்ன சின்ன செய்யுள் உள்ளே வைத்து இருக்கிறார்கள் காலஞ்சென்ற சித்தர்கள் !!!
சிறந்த ஜோதிட நூல் ஆன இந்த குமாரசாமியம் ஜோதிடத்துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும் .....

(எங்க ஸார் கிளம்பீட்டிங்க ஓ குமாரசாமியம் வாங்கவா ம்ம்ம்ம் வாங்குங்க வாங்குங்க அற்புதமாக வாசியுங்கள் )

பெருந்துறையில் இருந்து
*Astro Senthil Kumar*
Wats App
9843469404

No comments:

Post a Comment