Wednesday 5 April 2017

கிழமைகள் பிறந்த கணக்கு

ஜோதிட ஆர்வலர்கள் அனைவரும் எம் வணக்கங்கள்...

இன்று கிழமைகள் பிறந்த அளவீடுகள் எவ்வாறு அமைகிறது என்ற ஆய்வுகள் செய்வோம்.....

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
என ஏழு நாட்கள் கொண்டது
ஒரு வாரம்
சரி
ஒரு வாரம் ஓகே.....

ஒரு கிழமை என்பன எப்படி ஆரம்பித்து செல்கிறது

உதாரணத்திற்கு
சனிக்கு பின் ஞாயிறு ஏன் வந்துச்சு
ஏன்
புதன் வந்து இருக்கலாமே
இல்லை
வியாழன் வந்து இருக்கலாமே
ஏன் ஞாயிறு வந்துச்சு ..
இதை எந்தவொரு குறிப்பிட்ட கால அளவில் ஜோதிடம் பார்க்கும் எம் ஜோதிட நண்பர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் மட்டுமின்றி
பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வர இந்த பதிவு.....

முக்கிய கோரிக்கையை முன் வைக்கிறேன் படித்தவுடன் உங்கள் டைம்லைனில் ஷேர் செய்யுங்கள்..
அது எனக்கு நீங்கள் தரும் தட்சிணையாக கருதுகிறேன்.....

சித்தர்கள் கண்ட கோள்களின் வகைகள் பற்றிய ஆய்வு செய்த பின்னர் தினத்தை மிகவும் துல்லியமாக கணித்து இவ்வுலகிற்கு கொடுத்தனர்.....

விபரங்கள் காண்போம்....
பூமியை நெருங்கி வரும் கோள்களின் பட்டியலில்
வெகுதூரத்தில் இருக்கும் கோள் முதல் ஆரம்பத்து

சனி -(30ஆண்டுகள்)
குரு- (12 ஆண்டுகள்)
செவ்வாய்-(ஒன்றரை ஆண்டுகள்)
சூர்யன்- (ஒரு ஆண்டு)
சுக்கிரன்-(சுமார் 1 ஆண்டு)
புதன்-(சுமார் 1 ஆண்டு)
சந்திரன் (27 நாட்கள்)
இவைகள் பூமியை நெருங்கிய தூரத்தின் அளவு அல்லது சுற்றும் அளவு என வைத்து கொள்வோம்...
இவைகளை ஒரே நேர்க்கோட்டில் ஒரு பேப்பரில் எழுதி கொள்ளுங்கள்...

இங்கே ஹோரைகள் எனும் ஹவர் என்கிற மணி நேர அடிப்படையில்
சனிக்கிழமை சூர்ய உதயத்தின் போது


சனி ஹோரை காலை 6-7 (1)
குரு ஹோரை காலை 7-8 (2)
செவ்வாய் ஹோரை 8-9 (3)
சூர்ய ஹோரை 9-10 (4)
சுக்கிரன் ஹோரை 10-11(5)
புதன் ஹோரை 11-12(6)
சந்திரன் ஹோரை 12-1 (7)
இங்கே முதல் வரிசை நிறைவு அடையும்
பின்னர் அடுத்த இரண்டாம் வரிசையில் கிரகங்களின் பெயருக்கு
கீழே இவ்வாறு எழுதி வாருங்கள்..

மதியம்

சனி ஹோரை 1-2(8)
குரு ஹோரை 2-3(9)
செவ்வாய் ஹோரை 3-4(10)
சூர்ய ஹோரை 4-5(11)
சுக்கிரன் ஹோரை 5-6(12)
புதன் ஹோரை 6-7(13)
சந்திரன் ஹோரை 7-8(14)

அடுத்த மூன்றாம் வரிசையில்
இரவில்

சனி ஹோரை 8-9(15)
குரு ஹோரை 9-10(16)
செவ்வாய் ஹோரை 10-11(17)
சூர்ய ஹோரை 11-12(நள்ளிரவு)(18)
சுக்கிரன் ஹோரை 12-1(19)
புதன் ஹோரை 1-2(20)
சந்திரன் ஹோரை 2-3(அதிகாலை)(21)

அடுத்தபடியாக நான்காவது வரிசையில்
சனி ஹோரை 3-4(அதிகாலை)(22)
குரு ஹோரை 4-5(23)
செவ்வாய் ஹோரை 5-6(24)
இங்கே 24 மணி நேரம் வரை ஒரு தினம் முழுமையாக பூர்த்தி அடைந்து
25வது மணி நேரமாக அமைந்தது தான்
சூர்ய ஹோரை அது அடுத்த நாள் ஆகிய
#ஞாயிறுக்கிழமை ஆகும்...
இங்கே இருந்து பயணிக்கும் ஹோரை கணிதம்
25மணி நேரத்தில் சந்திரனின் திங்கட்கிழமை பிறப்பு
அதிலே இருந்து அடுத்த 25மணி நேரம் செவ்வாயின் பிறப்பு
அதிலே இருந்து அடுத்தபடியாக அமையும்
25வது மணி
புதன்கிழமை பிறப்பு அடுத்த 25மணி நேர குருவின் வியாழன் பிறப்பு
அடுத்த 25மணி நேர சுக்கிரன் ஹோரை யில் வெள்ளிக்கிழமை பிறப்பு
அடுத்த 25வது மணி நேரத்தில்
சனி ஹோரையில்
சனிக்கிழமை பிறப்பு என வரிசைப்படி கிழமைகள் பிரிக்கப்பட்டு சித்தர்கள் நமக்கு செதுக்கி உருவாக்கிய சூத்திரம் இது...
ஆகவே
சூர்ய உதயத்தில் இருந்து தான் கிழமைகளும் பிறக்கின்றன???
இதிலே எங்க பாஸ் நள்ளிரவில் நாட்கள் பிறக்கிறது?????
முக்கியமான ஜோதிட விஷயத்தை
ரகசியமாக  சொல்கிறேன் கொஞ்சம் காதை கொடுங்க...
இந்த ஹோரா என்பது சமஸ்கிருதத்தில் மட்டுமே பயன்படுத்தி வந்த வார்த்தை ஆகும் ..
இந்த ஹோரா (மணி) என்பதை தான் ஆங்கிலேயர்
Hour's (ஹவர்ஸ்)
என்று பெயரை சூட்டி கொண்டார்கள்...

அப்புறம் பாஸ் கொஞ்சம் வேலை இருக்கு நாளைக்கு ஒரு ஜோதிட ரகசியத்தை பற்றி பேசுவோம்..
நாளைக்கும் கொஞ்சம் காதை கொடுங்க...
இன்னிக்கு கொஞ்சம் காதை கொடுத்து
இதை எல்லா இடத்திலும்
ஷேர் செய்யுங்கள்...

என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
Wats App 9843469404

No comments:

Post a Comment