Sunday, 14 May 2017

41 வயது வரை காக்க வைத்த குரு [ யோகர் ]

ஜோதிடத்தில் நீங்க அவ்வளவு உங்களுக்கு உங்க லைப் முடிஞ்சு போச்சு என சொல்லும் ஜோதிடர்களை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்..


வரும் 25-05-2017 அன்று திருமணம் எனும் வாழ்க்கையில் திருப்புமுனையை அடையும்  07-02-1977 காலை 4-55 நிமிடங்களுக்கு ஈரோட்டில் பிறந்த  எம் வாடிக்கையாளர் அவர்களின் வயது இன்று 40 வயது 4 மாதம் ஆகிறது..


பொதுவாக இரண்டாம் இடத்தின் [ இவர் தனுசு 2க்குறிய சனி 8ல்  ] அதிபர் ஆகியவர் 8ல் மறையும் போதும் ..

அது பகை பெறும் போதும் ஒருவருக்கு காமம் எனும் விஷயம் சிறு வயதில் கிடைக்காது…..இவருக்கும் பொருந்து போனது..

பொதுவாக 5ல் ராகு 5ல் குரு எனும் போது இங்கே புத்திர தோஷம் தருகிறது [ காமமே இல்லை இங்கே புத்திரம் எங்கே??] அதே போல 11க்குறிய சுக்கிரன் இங்கே உச்சம் [ 11க்குறியவன் உச்சம் பெற இருதார யோகம் அல்லது இரண்டாம் தார யோகம் ]
ராசி சந்தி என்பதும் இவருக்கு பிரச்சனைகளை தந்தது


என் இடத்தில் இருப்பது salem ics software ஆகும்..அது இவருக்கு காட்டும் ஸ்புடம் midile lamp[ ஆரம்ப சூர்ய பிம்பம் ] எனும் போது
சந்திர ஸ்புடம் 150-06-01 ஆகும் ..  [கன்னி ராசி]என் இடத்தில் இருப்பது salem ics software ஆகும்..அது இவருக்கு காட்டும் ஸ்புடம் upper  lamp[ மத்திய  சூர்ய பிம்பம் ] எனும் போது
சந்திர ஸ்புடம் 150-03-23 ஆகும்..[கன்னி ராசி]


இதே வேறு சில சாப்ட்வேரில் கொடுக்கும் போது அங்கே 149-59-05  [சிம்ம ராசி]எனும் சிலது 149-59-58 எனும் காட்டி [ சிம்ம ராசி] பல ஜோதிட மேதைகளை குழப்பம் செய்வதே இந்த கணிப்பின் தனமை
[ நான் அடிப்படையில் ஸ்புடகலை கணிதம் செய்தமையாலும் கொஞ்சம் ஏதோ ஜோதிட மதி நுட்பம் கொண்டதாலும் இவரை அடியேன் கன்னி ராசி நபர் என்றே பாவித்து கணிதம் செய்து பலன் சொல்வேன் ]


இங்கே ஒரு கருத்தை சொல்கிறேன் ..


ராசி சந்தி  லக்ன சந்தி நட்சத்திர சந்தியில் பிறந்த ஜாதகர்களுக்கு வாழ்க்கையில் கொஞ்சம் போராடி தான் மேலே வர இயலும்..சுக்கிரன் உச்சத்தில் ஆதலால் ஜவுளிக்கு போனார்..பின் இவர் தனக்கு தன்  நண்பர்கள் சொன்ன் விதத்தில் LIC போனார் சரி.. இவர் அவர் வீட்டில் செல்லப்பிள்ளை… ஆம் ஒரே பிள்ளை …இவரை சீராட்டி பால் ஊட்டி  வளர்த்த தாய் “கண்ணீர்”’’மல்கினார்..காரணம்.தன் மகனுக்கு திருமணம்  இதுவரை கைகூடவில்லை எனும் வேதனை இவர் குடும்பம் மட்டுமே இன்றி இவர் சமுதாயமே கவலை கொண்டது…சொன்னால் உங்களுக்கு புரியாது..7ம் அதிபர் பகை [ 8ல் சனி பகை]2ல் ஒரு அதிபர் [2ல் சூர்யன் பகை]ஆனாலும் ஒருவர் திருமணம் தாமதம் ஆகும் …சிலருக்கு நடக்காமல் கூட போகும்….;[முன்னோர் ஜென்ம கர்மவினை] எல்லாம் காரணம் தான் ….


இதிலே ஒரு ஜோதிட பாடம்   எந்த ஜாதகத்தில் எல்லாம் இரண்டாம் அதிபர் எட்டில் பகை பட்டு நிற்க்கிறாரோ அங்கே அந்த ஜாதகரின் வயதை இந்த வயதில் தான் திருமணம் என அடித்து சொல்ல இயலாது…


கடகம் சிம்மம் விருட்சிகம் தனுசு மகரம் ஆகிய லக்னத்திற்க்கு இது பொருந்தும்..


அதே போல குரு லக்னாதிபதி ஆகினும் 5ம் பாவத்தில் அமரும் போது தாமதமான புத்திர விருத்தியை தரக்கூடியவர் ஆகிறார்..அதேபோல 7ம் அதிபர் புதனுக்கு  வீடு கொடுத்த அதிபர் சனி பகை பெறும் போது மனைவி மற்றும் அவரால் கிடைக்கும் காமம் ஆகியவை கால தாமதம் செய்கிறார்..பொதுவாக 5ம் அதிபர் செவ்வாய் நின்ற 

வீட்டின் அதிபர் பகை பெற்றாலும் புத்திர விருத்தியை தாமதப்படுத்தி விடுகிறார்…


9ம் அதிபர் உடன் 10 அதிபர் கூடும்போது இங்கே தர்ம கர்மாபதி யோகம் தருகிறது..


11ல் இருந்த ராகு மாந்தி உடன் இணைவு பெற்ற காரணத்தால் இங்கே ராகு திசை இவருக்கு ஆன்மீகப்பாதையை கொடுத்ததே தவிர இல்லற வாழ்க்கையை தர இயலவில்லை..


பிறக்கும் போது
சூர்ய திசை 4 வருடம் 5 மாதம் 13 நாள்சந்திர திசை 10செவ்வாய் திசை 7
ராகு திசை வரும் போது ஜாதகருக்கு 21 வயது
ராகு திசையில் குரு புக்தியில் தேடி வந்த ஒரு வரன்..பையனுக்கு 24 வயதுதானே ஆகிறது ..வசதியான ஒரே பையன் பெண் கிடைக்காமலா போய் விடும் என கொஞ்சம் பெற்றோர்கள் அசால்ட்டாக விட வாழ்க்கையை புரட்டி போட்டு 24க்கு பதிலாக தற்போது 41ம் வயதில் இந்த ஜாதகருக்கு திருமணம் உறுதி ஆகி உள்ளது…


இங்கே குரு கொடுப்பதை எவராலும் தடுக்க இயலாது..ஆம்


இந்த ஜாதகர்க்கு குருதிசையில் குரு புக்தியில் புதன் அந்திரம் நாளில்வரும் வைகாசி 15ல் திருமணம் நடக்கிறது


[குறிப்பு :- இது ஜாதகர் ஒப்புதல் உடன் தான் போஸ்ட் செய்யப்படுகிறது என்பதால் சில சில்வண்டுகள் கொஞ்சம் அடக்கி வாசிக்கவும்]
ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் கர்மவினை படியே வாழ்க்கை அமையும் ..


ஏதோ கொஞ்சம் ஜோதிடம் அறிந்தோம் என சிலரை
“உன் வாழ்க்கை அவ்வளவு தான்”
“நீ அவுட் “ என விமர்சனம் செய்வதை முதலில்வகுப்பறை ஜோதிடர்கள் கொஞ்சம் குறைத்து கொள்வது நல்லது..பெருந்துறையில் இருந்து
Astro Senthil KumarWats App 9843469404

No comments:

Post a Comment