Friday 28 March 2014

திசைகளின் பலம்

வக்ரம் அடைந்த திசையின் பலன்கள்:-

செல்வநிலையில் நல்லமுன்னேற்றம் தரும், ம்திப்பும் மரியாதையும் கூடி வரும், (6/8) சஷ்டாஷ்டகமாய் அமையாமல் சுபமாய் கேந்திரபலம் அடைய அந்த திசை ராஜ்ஜியம் பதவிபோன்றது கிட்டும்,

நீசமும் சத்ரு ஸ்தானமும் அடைந்த கிரஹத்தின் திசையில்:-

துன்பபலனும் ,கெட்டசகவாசமும், உறவுகளால் துக்கப்படுவதும்,பிறரிடம் அடிமையாக [முன்பணம் பெற்று] சிரமப்படுவதும் போன்ற துர்பலனும் அடைவார் ஜாதகர்,

ராகு இருகிரஹங்களுக்கு மத்தியில் சிக்க:-

ராகுவின் திசையில் இந்த இருகிரஹ புக்திகள் வரும் காலகட்டத்தில் ஜாதகர் சொன்னமுடியாத சிரமத்திற்க்குள் ஆவார். 

இவ்விருதிசையும் புக்தியும் ஒருவருக்கு ஒருவர் சத்ருக்களாய் இருக்க சொந்தத்தில் நோய் நொடியும் & கர்மகார்யம் போன்ற துர்பலனே ஏற்ப்படும்.

ஜென்மராசிக்கும் ஜென்மலக்னத்துக்கும் சத்ருவான கிரஹத்தின் திசையில் &புக்தியில் வெளிதேச சஞ்சாரமும் அவமானமும் , எதிரிகளைக்கண்டு அஞ்சி வாழ்வதும் நீதிமன்ற தண்டனைக்கு ஆட்படுதலும் நிகழும்.

எட்டாம் அதிபதி கேந்திர பலம் அடைய அவரது திசை ஜாதகனுக்கு நற்பலனே தரும் ,பாதகம் வராது.

லக்னாதிபதி எட்டாம் இடத்தில் மறைய அவரது திசை ஆனது ஜாதகனுக்கு “மாரகத்தையே தரும்” 

ஒருகிரஹம் உச்சத்தில் இருந்தோ ஆட்சியில் இருந்தோ அந்த கிரஹத்தின் திசையில் புக்திநாதன் கேந்திரமோ விசேஷமாக பத்தில் இருந்தோ அல்லது திசாநாதனுக்கு பதினொன்றில் அமர்ந்தோ [ சுமார் 60 பாகைக்குள்] அந்த திசையும் புக்தியும் ஜாதகருக்கும் குடும்பத்துக்கும் மிகுந்த விசேஷ நற்பலனையே தரும், 

பஜாரில் கைக்கு கிடைக்கும் சில ஜோதிட நூல்களை வாங்கி படித்து விட்டு “ஜோதிட அனுபவம்” சரிவர இல்லாமல் ஆராய்வை செய்வதை விட “ஆசான்கள்” மூலமும் “ஜோதிட பயிற்சி மையம்” மூலமும் படிக்காமல் சொல்லும் பலன் நற்பலன் ஆகிவிடாது, அதனால் பலன்காணவரும் பயனாளி “ ஜோதிடத்தை” நம்பாமல் போகும் நிலையே ஏற்ப்படும், கிரஹங்களின் பாதசாரம் இருக்கும் நிலை ஸ்தானபலனை கண்டே பலனுறைத்தல் வேண்டும்!!

என்றும் ஜோதிடபணியில்!!

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம். பெருந்துறை - 638 052.                                                      


No comments:

Post a Comment