Sunday 13 January 2019

நட்சத்திரமும் திதியும் அதன் தன்மையும்

அனைவருக்கும் வணக்கம் நான் 

பெருந்துறையில் இருந்து Astro Senthil Kumar எழுதுகிறேன் .. கடந்த இரு வாரங்களில் நான் உங்கள் உடன் ஜோதிடக்கருத்துக்களை பறிமாற்றம் செய்து கொள்ள இயலாது போனது 

இன்று ஒரு ஜோதிட கருத்துடன் பயணிப்போம் ..                          அது நட்சத்திரமும் திதியும் அதன் தன்மையும் எனும் தலைப்பில் ஆய்வில் போவோம் ..

இதுவரை யாரும் சொல்லாத “சூட்சுமத்தை” எதையும் இங்கே சொல்ல வரவில்லை.. இருந்தும் இது உங்கள் சிந்தனைக்கு ஒரு விருந்தாக அமைந்தால் அது எமக்கும் சந்தோஷம் தான் ..

ஒரு நாளில் மனிதன் ஜெனனிக்கும் போது அந்த மனிதனுக்கு “சூர்யனில்” இருந்து புறப்பட்ட “லக்ன புள்ளி” வேலை செய்கிறது .. அந்த மனிதனின் ஜெனனத்தை வைத்து தான் நாம் அவருடைய லக்னம் மற்றும் ராசி அந்த ராசிக்குள் இருக்கும் “நட்சத்திரம்” என்ன என தீர்மானம் செய்து அந்த நட்சத்திர ஆதியந்த பரமாயுள் கொண்டு “ஜெனன கால திசை இருப்பை அதனுள் இருக்கும் நடக்கும் புக்திகளை” எல்லாம் ஆய்வில் கொண்டு நாம் அந்த மனிதனின் ஆயுள் பலத்தை “ஜோதிட ரீதியாக கணிக்கிறோ” 

அதே மனிதனின் ஆயுள் என்பது முடியும் நேரத்தை வைத்து இறந்த பின்னர் நாம் அந்த காலம் சென்ற மனிதனுக்கு “திதியும்” தருகிறோம்..

ஏன் இந்த பிறப்பில் “நட்சத்திரம்” அதன் பங்கை வகிக்கிறது அதே போல இறப்பில் “திதி” மட்டுமே வேலை செய்யும் ஏன்?????

பிறப்பில் ஒரு மனிதனை எவ்வாறு அவர் பிறந்த லக்னமும் ராசியும் நட்சத்திரமும் அந்த மனிதனின் வாழ்நாளில் பயணிக்க வைக்கிறதோ அதே போல இறப்புக்கு பின்னர் ஒரு மனிதனை அந்த மனிதன் இறந்த “திதி” பயணிக்க வைக்கிறது ...இதில் கூட இன்னொரு புறண்பாடு உண்டு ..அது 

ஆகாய தத்துவத்தில் இருக்கும் ஐந்து நட்சத்திரங்கள் முறையே “அவிட்டம்- சதயம்- பூரட்டாதி-உத்திரட்டாதி-ரேவதி” ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் யார் இறந்தாலும் “ஆறு மாதம் காலாஷ்டமி” எனும் ”அடைப்பு” இந்நாளில் இறந்தால் அவர்கள் வீட்டை ஒரு காலத்தில் முட்கள் அடைப்பார்கள் .. ஆறு மாதம் போன பின்னர் அதை “ஐய்யரை” வைத்து “புண்ணிய தனம்” செய்வார்கள் .. ஆனால் அது “ஊருக்கு மட்டுமே உபதேசம்” ஆகும்..

காரணம் “அடைப்பு” கவனித்து சொல்லும் “ஐய்யர்கள்” வீட்டில் “16” மட்டுமே கணக்கு ஆகும்.. அந்த பதினாறு முடிந்த பின்னர் அவர்கள் கோயிலில் “பூஜைகள்” செய்வார்கள்.. காரணம் ஊருக்கு என வாழும் “பிராமிணர்கள்” இந்த “காலாஷ்டமி” கவனித்தால் “ஊரே இருட்டு ஆகி விடும்” 

வீர சைவர்கள் எனும் ஒரு பகுதி உண்டு.. அவர்கள் வீட்டில் எல்லாம் “சோம வாரம்” எனும் “திங்கட்கிழமை” உடன் அவர்கள் “தீட்டு முடியும்” [காரணம் பின்னர் பதிகிறேன்]

விஷயத்துள் வருவோம்.. பிறப்பை எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை சமன் செய்கிறதோ?? அதே போல தான் திதியும்  ஒரு மனிதனின் இறப்புக்கு பின்னரும் அவனுடைய அடுத்த பிறப்பை தீர்மானம் செய்கிறது ..

பிறப்பில் நட்சத்திரமும் இறப்பில் திதியை கொண்டு மனிதனுக்கு மட்டுமே அல்ல இந்த “பிரபஞ்சத்துக்கும்” கவனித்து பார்த்தால் சரியாக வரும் ..

தினம் பிறக்கும் பொழுது “நட்சத்திரமும்” [உதயத்தில்] தினம் முடியும் பொழுது “திதி” யும் [அஸ்தமனத்தில்] கவனியுங்கள் .. கிழமையின் பிறப்பும் மனிதனின் பிறப்பும் ஒன்றே தான்.. 


பெருந்துறையில் இருந்து Astro Senthil Kumar 

Wats App:+91 9843469404


5 comments: