Tuesday 12 April 2016

துன்முகி ஆண்டில் தீராத நோய்க்கு சிகிச்சை எடுக்க உகந்த நாட்கள்

துன்முகி வருஷத்தின் நோயை தீர்க்கஉத்ரயோகங்கள்
அன்பு ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்இந்தியவேத ஜோதிடம் பல பிரிவுகளை கொண்ட அமைப்பு ஆகும்!!!
நான்கு வேதத்தில் உட்பிரிவாககல்பம்” [மருத்துவம்] “ஜோதிஷ்” [ஜோதிடம்] கொண்ட தளம் நம் வேதங்கள்நோய்க்கு தீர்வு ஜோதிடத்தில் பண்டய காலத்திலேயே எழுதப்பட்டு இருக்கிறது என்பதை பற்றிய பதிவு இது!!
[இன்று பல்கலைகழகத்தில் எடுக்கும் மருத்துவ ஜோதிட படிப்பில் இவை இருக்கிறதா என்பது நான் அறியவில்லை இருந்தால் சந்தோசமே இல்லையெனில் இனி இதையும் சேர்த்து படியுங்கள் ]
கடந்த வாரத்தில்காலப்ரகாசிகை
[ புத்தக அன்பளிப்பு  தஞ்சை பவளக்கண்ணன் ]
எனும் ஜோதிடநூலில் இருந்த சில நுட்பங்களை எம்முடைய கோணத்தில் 
பதியப்பட்டது அதன் சாராம்சம்

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகள் பல எடுத்தும் பயனில்லை என்று சொல்வோர்களை தான் இப்போதெல்லாம் அதிகமாக காண முடிகிறது !!!!!மருந்துகள் சரியில்லையா ????*?*மருத்துவர் சரியில்லையா ???****நோய் தீரும் எனும் நம்பிக்கை இல்லாமல் போகும் காரணம் தான் என்ன எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கவலையோடு இருப்போர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும் பதிவு இது !!!!

காப்பாற்ற முடியாது கடினம் என மருத்துவர்கள் கை விட்ட நோயாளிக்கு சிகிச்சை செய்ய உகந்த நாட்களின் பட்டியலை காணுங்கள் ..
(நாள் செய்யாதை நல்லாரும் செய்யார் )காலப்ரகாசிகை எனும் அற்புதமான நூலை புரட்டிய போது சிக்கிய தகவல்களை கொஞ்சம் நீங்களும் வாசியுங்கள் !!!!!

"உக்ர யோகங்கள் " (தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள் )


திருதியை அல்லது அஷ்டமி உடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் நாள் !!!

சதுர்த்தி அல்லது அஷ்டமி உடன் கூடிய உத்திர நட்சத்திரம் நாள்


பஞ்சமி திதியும் திருவோணம் கூடிய நாள்


சஷ்டி திதியுடன் மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள்


சப்தமி திதியுடன் ரேவதி நட்சத்திரம் கூடிய நாள்


நவமி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாள்


தசமி திதியுடன் பூசம் நட்சத்திரம் கூடிய நாள்


திருதியை அல்லது துவாதசி திதியுடன் அனுஷம் நட்சத்திரம் கூடிய நாள்


ஏகாதசி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் அல்லது மகம் நட்சத்திரம் கூடிய நாள்


தசமி திதியுடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாள்


திரயோதசி திதியுடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய நாள்


போன்றவை "உக்ர யோகங்கள் "என்ற பெயரில் அழைக்கப்படுகிறது !!!

"உக்ர யோகங்கள் "நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள் எடுத்தால் 
"
நோய் தீரும் "என்கிறது 
"
காலப்ரகாசிகை "ஜோதிட நூல் 
எதை செய்தாலும் முதலில் அதன்மேல் நம்பிக்கையை வைத்து முயற்சி செய்யுங்கள் !!!
"
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் """
எல்லோரும் இன்புற்று இருக்க !!!!!!
எல்லாம் வல்ல "தன்வந்திரி பகவான் "அருள்புரியட்டும் !!!!!!” “”
வரும் துன்முகி  ஆண்டு தீராத நோய்க்கு சிகிச்சைகள் எடுத்து நோய் தீர்த்து வாழ சில நாட்கள் எம்முடைய தேடலில் சிக்கியது அதன் பட்டியல் பின்வருமாறு::----

1 ]  16-04-2016 அன்று இரவு 11-19 முதல் மறுநாள் இரவு 7.32 வரை 20மணிநேரம் 13 நிமிஷம் [ ஏகாதசி-மகம்]


2 ]  24-04-2016 அன்று மாலை 3-36 முதல் 25-04-2016  மாலை 3-39 வரை 24மணிநேரம் 03நிமிடங்கள் [திருதியை-அனுஷம்]


3 ] 08-05-2016 அன்று மாலை 5-51 முதல் மறுநாள் 09/06/2015 அதிகாலை 2-06வரை 8 மணிநேரம் 15 நிமிடங்கள். [திருதியை  ரோகிணி  ]


4 ] 28/05/2016 அன்று 03-16 முதல் நள்ளிரவு 3-32 வரை காலை 7-28 மணி வரை 3 மணிநேரம் 56நிமிஷம் [ பஞ்சமி-திருவோணம் ]


5 ] 12-06-2016  அன்று காலை 11-36 முதல் மறுநாள் அதிகாலைகாலை 02-39 வரை 15 மணிநேரம் 03 நிமிஷம் [ அஷ்டமி- உத்திரம் ]


6 ] 02-07-2016 அன்று நள்ளிரவு 2-00  முதல் அதிகாலை 03-14  வரை 1 மணிநேரம் 14 நிமிஷம் [ ஏகாதசி- கிருத்திகை ]


7 ] 16-07-2016 அன்று நள்ளிரவு 02-08 முதல்  அன்று 11-56 வரை 9மணிநேரம் 48நிமிஷம் [ துவாதசி- அனுஷம் ]


8 ] 25-07-2016 அன்று இரவு 7-45 முதல் மறுநாள் 26-07-2016 அன்று காலைன்11-06வரை 15 மணிநேரம் 21 நிமிஷம் [ சப்தமி-ரோகிணி ]


9 ] 6-8-2016 அன்று அதிகாலை 4-26  முதல் 7-8-2016 அதிகாலை 4-05 வரை 23 மணிநேரம் 49 நிமிஷம் [ சதுர்த்தி-உத்திரம் ]


10 ] 25-08-2016 அன்று மதியம் 12-05 முதல்  இரவு 8-08 வரை 8 மணிநேரம் 3 நிமிஷம் [அஷ்டமி- ரோஹிணி ]


11 ] 25-09-2016  அன்று மதியம் 02-38 முதல் 26-09-2016 அன்று அதிகாலை  1-03 வரை 10 மணிநேரம் 15 நிமிஷம் [தசமி- பூசம் ]


12 ] 20-10-2016 அன்று மாலை 4-47 முதல் இரவு 10-14 வரை 5 மணிநேரம் 27 நிமிஷம் [ சஷ்டி - மிருகசீரிடம்]


13] 25-10-2016 அன்று மதியம் 01-13  முதல் இரவு 11-02  வரை 9 மணிநேரம் 49 நிமிஷம் [ எகாதசி- மகம் ]


14] 27-10-2016 அன்று மாலை 04-16 முதல் 28-10-2016 அன்று அதிகாலை 03-29 வரை 11 மணிநேரம் 11 நிமிஷம் [திரயோதசி -உத்ரம் ]


15 ] 04-11-2016 அன்று காலை 09-08 முதல் 05-11-2016 அதிகாலை  2-26 வரை 17 மணிநேரம் 18 நிமிஷம் [ பஞ்சமி- திருவோணம்  ]


16 ] 20-12-2016 அன்று மாலை 06-45 முதல் 21-12-2016 அன்று மாலை 04-11 வரை 21 மணிநேரம் 26 நிமிஷம் [ திருதியை ரோஹிணி ]


17 ] 04-01-2017 அன்று இரவு 08-45 முதல் 04-01-2017 அன்று மாலை 05-07 வரை 20 மணிநேரம் 22 நிமிஷம் [ நவமி கிருத்திகை ]


18 ] 14-02-2017 அன்று அதிகாலை 04-57 முதல் காலை 09-56 வரை 4 மணிநேரம் 59 நிமிஷம் [ சதுர்த்தி  உத்ரம் ]


19 ] 05-02-2017 அன்று அதிகாலை 06-07 முதல் இரவு 09-00 வரை 14 மணிநேரம் 53 நிமிஷம் [ அஷ்டமி -ரோகிணி ]

20 ] 01-04-2017 அன்று அதிகாலை 02-53 முதல் மாலை 03-16 வரை 12 மணிநேரம் 23 நிமிஷம் [சஷ்டி - மிருகசீர்ஷம் ]


21 ] 05-04-2017 அன்று காலை 10-05 முதல் இரவு 10-52 வரை 12 மணிநேரம் 47 நிமிஷம் [ தசமி -பூசம் ]


22 ] 06-04-2017 அன்று இரவு 11-01 முதல் 07-04-2017 காலை 08-55 வரை 9 மணிநேரம் 04 நிமிஷம் [ ஏகாதசி மகம் ]


23 ] 09-04-2017  அன்று நள்ளிரவு 12-32 முதல் காலை 09-30 வரை அதாவது 8 மணிநேரம் 58 நிமிஷம் மட்டுமே [ திரயோதசி உத்ரம் ]

ஆக துன்முகி ஆண்டில் இந்த 23 நாளும் அதில் இருக்கும் நேரமும் தீராத வியாதிக்கு உகந்த சிகிச்சைகள் செய்ய உகந்த நேரம் ஆகும்..
இந்த நாடகள் எல்லாம் தீராத வியாதி என கருதுவதற்க்கு சிகிச்சை எடுக்க உகந்த நாட்கள் ஆகும்..
இவையெல்லாம் சாத்தியமா என கருத வேண்டாம்
மகாபாரதம் அறிவீர் அதில் கெளரவர்கள் “ 100 பேர் கருக்கலைந்தபோது 100 குடுவையில் பிடிக்கப்பட்டு 100 சகோதர்கள் உருவானார்கள் ..முதல் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது விநாயகப்பெருமானுக்கு நடந்த்து.. இன்று மருத்துவத்தில் அதையெல்லாம் சாத்தியம் ஆக்கி இருக்கிறது….
உத்ரயோகம்இனி வரும் காலகட்டத்தில் ஒவ்வொரு மருத்துவரும் சிகிச்சை பலன் அளிக்காத நோயாளிகளுக்கு சோதித்து பார்த்துஅதில் மருத்துவ வெற்றிஅடைய அதிக நாட்கள் இல்லை !!!
``````````````````இதோ துன்முகி  ஆண்டு நெருங்கி விட்ட்து!!!
மக்களின் நலன் கருதி வெளியிடுவது!!!
என்றும் ஜோதிடப்பணியில்!!!
Astro Senthil Kumar
 ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்
புதுபஸ் நிலையம் பின்புறம்
 பெருந்துறை   -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார் 
செல்: +91 98427 69404
             +91 98434 69404    


4 comments:

  1. அட்டகாசம் போங்கள் தொடருட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  2. அட்டகாசம் போங்கள் தொடருட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  3. தொடருட்டும் உங்கள் பணி

    A.chandrasekaran Kotagiri
    Nilgiris

    ReplyDelete
  4. இந்த ஆண்டிலும் எழுதுகிறேன்

    ReplyDelete